யாருக்கும் வேண்டாம் ஒழுக்கம் எல்லோருக்கும் வேண்டும் மனஅமைதி

ஒரு மனிதன் வாழ்வதற்காக  வாழ்க்கைமுறையில் கடைபிடிக்க வேண்டிய குறைத்தபட்ட்ச நெறி முறைகளையாவது கடிபிடிக்க படுகிறதா என்று நாம் பார்த்தோமேயானால் நூற்றுக்கு ஒருவர் கூட தேறுவது கடினம். ஏன் நாம் முறையாக வாழ முடியவில்லைஎன்று என்றைக்காவது நாம் சிந்தித்ததுண்டா, அதற்காக நமக்கு நாமேவாவது வருந்தியதுண்டா,நம்மால் வாழ்கையின் விழிப்பிற்கு விரட்டபட்டவர்களை நாம் எண்ணி வருந்தியதுண்டா கிடையாது ஆனால் நமக்கு நேரும் போது  மட்டும் இந்த உலகை எண்ணி வருந்துகிறோம்.எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற எண்ணம் வந்த பின்னால். நமக்கு ஏற்படுகின்ற  பினடைவுகளும் இதைப்போல் வாழுகின்ற ஒருவரால் தான் ஏற்படுகிறது என்பதை நாம் உணர்வது கிடையாது. இபோதுள்ள வாழ்கை சூழலில் வளைந்து  கொடுத்துதான் போகவேண்டும் என்று  சொன்னாலும் அதற்க்கென்று  ஒரு எல்லையை வகுத்து கொள்ளவேண்டாமா? அப்படி எல்லையை வகுத்து கொள்ளாமல் வாழ்வது என்பது மிருக வாழ்க்கைக்கு சமமாததல்லவா.இதை நாம் ஏன் சிறிது கூட சிந்தித்து பார்க்க மறுக்கிறோம். இப்படி ஒரு வரை முறை இல்லா வாழ்கை  என்பது  நமக்கு நாமே செய்கின்ற தூரோகம் இல்லையா. வாழ்கையை ஒரு வரைமுறைக்குள் வைத்து கொள்ளாமல். நாம் எப்படிவாழ்க்கையில்  அமைதியை தேடி அலைய முடியும் அந்த அமைதி  எப்படி நமக்கு சாத்தியமாகும். அமைதிஎன்பது நாம் கடை பிடிக்கும் வாழ்கை நெறி முறைகளில்தான் மறைந்திருக்கிறது என்பது தெரிந்திருந்தும் யாரும் அதை கண்டு கொள்ளுவதாகவே  தெரியவில்லை.அமைதியை நாடி எங்கும் அலைய வேண்டியதில்லை அது நாம் வாழும் வாழ்கை நெறி முறைகளில்தான்  அமைத்திருக்கிறது.  குறைந்தபட்சம் நாம் கடைபிடிக்க கூடிய,கடை பிடிக்க முடிந்த  வாழ்கை ஒழுக்க  முறைகளை கடைப்பிடித்து வாழ்த்தாலே நாம் நிமதியாகவும் அமைதியாகவும் வாழமுடியும் என்பதை நாம் உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நாம் நெறி படுத்தி கொண்டால் நம்முடைய வாழ்வு மட்டு மல்லாது நம்முடைய எதி கால சந்ததியினறது வாழ்வும் முறைப்பாடும்.இதை சரிபடுத்தாமல் நாட்டில் எவ்வளுவு பெரிய மாற்றங்கள் வந்தாலும் அது எதற்கும் உதவாது.  யாருக்கும் வேண்டாம் ஒழுக்கம் எல்லோருக்கும் வேண்டும் மனஅமைதி 

»

ப.ஜ.க வை சேர்ந்த H.ராஜா தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்று விடக்கூடாது

யார் வெற்றி பெற்றாலும் பரவா இல்லை ஆனால் ப.ஜ.க வை சேர்ந்த H.ராஜா தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்று விடக்கூடாது.இப்பொது மட்டுமல்ல எப்போதுமே !. தமிழ் நாட்டில் இருந்த சாதீய பாகுபாட்டையும் பெண் சுதந்திரத்தையும் பெற்று தந்த தலைவர் பெரியார். அவரின் அரசியல் நோக்கமில்லாத பதவி பற்றில்லாத போராட்டங்களும் பிரச்சரங்களுமே  தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் அடிமை விலகலும்  பெண்களின் முனேற்றமும். அப்படி பட்ட தலைவரை செருப்பால் அடித்திருக்க  வேண்டும் என்று சொன்னவரை தேர்தலில் அவருடைய காப்பு தொகையை கூட வாங்க விடாமல் செய்தால் தான். நாம் அனைவரும்  பெரியாருக்கு செய்யும் நன்றி கடனாக இருக்கும். தமிழனை எந்த அளவிற்கு தரம் தாழ்த்து நினைத்திருந்தால் இப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டு அதே தமிழகத்தில் வாக்குகள் கேட்டு வருகிறார் இந்த H. ராஜா? அவரை நாம் நிச்சயமாக புறம் தள்ள வேண்டும் குறிப்பாக பெண்கள் ஒரு ஒட்டு கூட அவருக்காக வாக்களிக்க கூடாது.பெண்களின் இன்றைய முன்னேற்றத்திற்கு நிச்சயமாக பெரியார்தான் மிக பெரிய தூண்டுதலாக இருந்து முடித்து காட்டினார்.இபோது இருக்கும்  தலைவர்களை போல் அல்லாமல் எந்தவிதமான  எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தகைய சாதனைகளை செய்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராஜா சொன்ன இந்த வாக்கியங்களை சிவகங்கை தொகுதியின் ஒவ்வரு வாக்காளர்களின் காதுகளுக்கு  கொண்டு செல்ல வேண்டிய கடமை பெரியாரின் உண்மை தொண்டர்களுக்கு இருக்கிறது உண்மை தொண்டர்களுக்கு மட்டுமல்ல இந்த உண்மை தெரிந்த அனைவருக்கும் இருக்கிறது. பெரியாரின் போராட்டங்கள் மூலம் பலனடைந்த அனைவரும் இதை ஒரு தவமாக எண்ணி செய்ய வேண்டும்.தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் இல்லை என்பதை இதன் மூலம் நிருபிக்க வேண்டும்  

»

சீமானுக்கு நன்றி

சீமானுக்கு நன்றி தமிழை தாய்  மொழியாக கொண்டு வாழும் தமிழர்கள் அனைவரும் நிச்சயமாக சீமானுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.ஒரு தமிழ் கலைஞன் வடிவேலுவிற்கு தமிழ் மண்ணிலேயே மிரட்டல் விடுக்கும் போலி தமிழர்களின் எச்சரிக்கைக்கு எதிராகவும் . வடிவேலுவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்ததிற்காக இந்த நன்றியை சேர்க்க செய்வோம். இன்று அரசியலிலும் சரி அதிகார வர்கத்திலும் வேற்றுமொழியை தாய் மொழியாக கொண்ட இந்த போலி தமிழர்கள் தான் அதிகமாக  ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கிறார்கள். இன்று  உச்சகட்டமாக ஒரு தெலுங்கு மன்னன்னை கேலி செய்து விட்டார் என்பதற்காக  தமிழ் கலைஞன் வடிவேலுவை தாக்குவதற்கு துணிந்த இத்தகைய செயலை யாருமே கண்டுகொள்ள வில்லை, வடிவேலு தனித்து விடப்பட்ட நிலையில்தான் சீமான் அவர்கள் இந்த ஆதரவை தெரிவித்திருக்கிறார். எதற்க்காக தெரிவித்தார் என்று ஆராயாமல் அவருக்கு நன்றி தெரிவிக்கலாம் . தமிழ் நாட்டில் இருக்கும் தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழர்கள் ஆதரவற்றுத்தான் இருக்கிறார்கள். இதற்க்கு விரைவில் ஒரு தீர்வை கொண்டுவாருங்கள் தமிழர்களே.சுருக்க மாக சொல்ல  வேண்டும் என்றால் இங்கேயும் ஒரு அடிமைத்தனம் தான் தலை தூக்கி  இருக்கிறது இதை மாற்றுவதற்காக ஒரு தலைமை வரவேண்டும்.கிருஷ்ண  தேவராயரை கேலிசெய்து வரும் ஒரு திரை படத்திற்கே இவர்களுக்கு கோபம் வருகிறது என்றால் இவர்களின் ரத்தத்தில் துளியேனும் தமிழ் உணர்வு இல்லை என்பதுதான் நமக்கு தெரிகிறது. போலி தமிழர்கள் மிரட்டும் அளவிற்கு  வளர்ந்து விட்டார்கள் நாம் இன்னமும் தூக்கத்திலேயே இருந்தால்,ஏவல்  அடிமை ஆவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.சகோதரனாக பழகி விட்டோம் என்று நெகிழாமல் நம்மை அவன் சக  மனிதனாக கூட மதிக்க வில்லை என்பதை உணர்ந்து செயல்பட்டால் ஒழிய தமிழன் என்ற இனம் ஏட்டளவில் தான் வீர தீரத்துடன் இருக்கும்.

»

தனி ஈழம் கிடையாது ப.ஜ.க கூட்டணி , வைகோ நிலைமை

வைகோவின்  முன் முதற் கொள்கையாக அவர்   சொல்லிகொல்லுவது தனி ஈழம் என்பதை தான். ஆனால் அவருடைய கூட்டணி கட்சி தலைமை தனி ஈழம் என்பது கிடையாது என்பதை அடித்து ஆணித்தனமாக தெளிவாக  கூறிவிட்டது. இப்போது வைகோ என்ன செய்ய போகிறார் என்று தமிழ் நாட்டில் யாரும் உற்று நோக்கவில்லை. காரணம் அவர் எவ்வளவு கொடுத்தாலும் தாங்ககூடியவர் என்பது மக்களுக்கு தெரியும்.ஒரு திரை படத்தில் தவறாக ஈழத்தை சித்தரித்தால் வீறு கொண்டு எழும் வைகோ தனி ஈழம் எல்லாம் கிடையாது என்று ப.ஜ.க தெளிவாக சொன்ன  பினாலும் வீறுகொண்டு எழவில்லை அவர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டு இருக்கிறார் என்றால் என்ன பொருள் என்று விளங்கவில்லை.தமிழகத்தில் மிகப்பெரிய சமுதாய எழுச்சியை கொண்டுவத்த பெரியார் அவர்களை செருப்பால் அடித்திருக்க வேண்டும் என்று சொன்ன போது, (பெரியார் செருப்பு வீசப்பட்டாலும்  கவலை படாமல் சமுதாய முன்னேற்றத்திற்க்காக  போராடியவர் என்பது வேறு விஷயம்) என்ன்ன நிலைப்பாடு எடுத்தாரோ அதைதான் இப்போது எடுத்திருப்பார் என்று நாம் அனுமானித்து கொள்ளவேண்டியதுதான். தன்னுடைய வாழ்நாள் கனவு திட்டம் என்று சேது சமுத்திர திட்டத்தை சொல்லிகொள்ளும் வைகோ  அது என்னால் தான் கொண்டுவரப்பட்டது, வாஜ்பாயை சந்தித்து நான்தான் வாதாடி,போராடி பெற்றதாக சொல்லிகொள்ளும் வைகோ இன்று அதே சேதுசமுத்திர திட்டம் முழுவதுமாக முடக்க நினைக்கும் ப.ஜ.க வோடுதான் கூட்டணி அடுத்தட ஆட்சி ப.ஜ.க தான் 300 இடக்களிற்கு மேல்  வெற்றி பெரும் என்று  வீதி வீதியாக முழங்குவது அவர்  அரசியல்  எந்தகையது  என்பதற்கு உதாரணம்.பொருளாதார ரீதியாகத்தான் இடஒதுக்கீடுவேண்டும் என்று முழங்கும் ப.ஜ.க உடன் பெரியாரின்   வழிதோன்றல் என்று தன்னை கூறிகொள்ளும் வைகோ கூட்டடணி வைத்ததை அவர் கட்சியில் இருக்கும் இடஒதுக்கிகீட்டு பட்டியலில் இருப்பவர்கள் எப்படி பார்ப்பார்கள் என்பது நமக்கு தெரியவில்லை.அந்த கருப்பு வேற  இந்த கருப்பு  வேற என்று ஏதேதோ சொல்லி கண்கலங்குவார்களோ புரியவில்லை . விஜயகாந்த் வந்து பரப்புரை செய்யகூடிய சூழ்நிலையில் தள்ளப்பட்ட வைகோ தன்  எதிரியை விழ்த்த  ப.ஜ.க யுடன் என்ன ராஜபக்சேயுடன் கூட கூட்டணி வைப்பார்.

»

வாழ்கை சுவாரஷ்யங்கள் இப்போது இல்லை

சுவாரஷ்யங்களால்  பிணைய  பட்டதுதான்  நமது வாழ்க்கை. நமது வாழ்கையில் நாம் எத்தைனையோ சுவாரஸ்யங்களை உணர்ந்து  அனுபவத்திருக்கிறோம் .அப்படி  நாம் அனுபவித்த பல சுவாரஷ்ய  நிகழ்வுகள் மீண்டும் நமக்கு அதைப்போல் ஒரு   உணர்வை தருவதில்லை. எந்த ஒன்றும் மறைந்திருக்கும் வரை,  அரிதாக  இருக்கும் வரைதான்  நமக்கு  சுவாரஷ்ய உணர்வை கொடுக்கின்றது. அது   விட்டாலோ அல்லது எளிதாகிவிட்டாலோ அதனால் நாம் அனுபவித்த அந்த சுவாரஷ்யத்தை குதூக்கலத்தை நமக்கு கொடுப்பதில்லை. நம் கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கலால் நமக்கு கிடைத்த அந்த சந்தோசம்  இப்போது கிடைகிறதா, அனுபவிக்க முடிகிறதா என்றால்  இல்லை என்பதுதான் நம்முடைய விடையாக இருக்கிறது. காரணம் நமக்கு வருடத்திருக்கு ஒருமுறை  அரிதாக காண கிடைத்த அந்த திருவிழாக்கள் இப்போது நம்மருகே எளிதாக தினம் ஒன்றாக காணமுடிகிறது என்பதுதான். அரங்கத்திற்குள் அரங்கேறிய திரைப்பட படபிடிப்புகள், தெருவோரம் நடப்பதை காணும் பொழுது நமக்கிருந்த அந்த திரைப்பட சுவாரஷ்ய உணர்வுகள் இப்போது வருவதில்லை.வாரத்திற்கு ஒருநாள் மட்டும்  நமக்கு கிடைத்த  ஒளியும் ஒலியும்  என்ற அரிதான நிகழ்வு ஒன்று மிக மிக எளிதானதால்  முன்பு  கிடைத்த அந்த சொல்ல முடியாத சுவாரஷ்ய உணர்வு என்று நம்மை விட்டு வெகுதொலைவில் சென்று விட்டது. இதைபோல்தான் நம்முடைய வாழ்கையில் எளிதாக மாற மாற வாழ்கையில் சுவாரஷ்யங்கள் மறைந்து விடுகின்றது. சாரில்லாத கரும்பை போல் நமது வழக்கை  சுவாரஷ்யம் இல்லாத வெறும் சக்கையான வாழ்வாக மாறிவிடுகிறது. வாழ்கையில் எந்த ஒரு சுவரஷ்யமும் இல்லாது வாழ்த்து முடிக்கத்தான் நம்மால் முடிகிறது.    

»

ஊடகங்கள் ஜனநாயக்கத்தின் தூண்களில் ஒன்றா?

ஜனநாயக்கத்தின் தூண்களில் ஒன்றாக  கருத படுகின்ற உடகங்கள் தங்களுடைய கடமையை சரியாக செய்கின்றனவா?நம் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை சரியான பாதையில் ஏற்படுத்தி கொடுப்பதற்கு இந்த ஊடகங்கள் தவறி விட்டன. தனிமனித வழிபாட்டையும் மீறி அரசியல் என்பது நமக்கும் நாட்டிற்கும் எந்தவகையில் முக்கியம்ன் என்று எடுத்து கூறி,வேட்பாலர்கலையோ அல்லது கூட்டடணி கட்சிகளையோ சீர்தூக்கி பார்க்கும் அளவிற்கு இந்த மக்களை இந்தனை வருடங்களில்  இந்த ஊடகங்கள் செய்திருக்கின்றனவா, அரசியல் வாதிகளை குறை கூறுவதிலேயே தங்களுடைய வருவாயை பெருக்குவதிலேயும்தான் இவர்கள் குறியாக இருக்கிறார்கள்.அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கங்கள் தாங்கி வருகின்ற நிகழ்சிகள் இருக்கின்றதா, மக்கள் அரசியலை எப்படி பார்க்கவேண்டும் என்ற பார்வைகொண்ட நிகழ்சிகள் ஏதேனும் வருகிறதா.  பிறரை குறை கூறுகின்ற இந்த ஊடகங்கள் தங்களின் பணி இந்த மக்களுக்கு பயன் படும் வகையில் சரியாக இருக்கின்றதா என்று தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்கின்றனவா. இன்றைய நிலை யில் இன்னமும் மோசமாகி மக்கச்ளை குழப்பும் விதமாக செய்திகளை வெளியிடுவதில்தான் ஆர்வம் காட்டுகின்றனவே தவிற  ஒரு சுயகட்டுபட்டுட்டன் தமக்கு உண்டான பொறுப்புணர்ச்சியுடன் எந்த ஊடகமும் இங்கே செயல் படுவது கிடையாது.இவர்கள் தரும் இந்த செய்திகளை நம்பி மக்கள் தங்கள் பணத்தை கொடுத்து குப்பைகளை வாங்கி படிக்கிறார்கள் அதை நம்பி வாக்குகளை வழங்குகிறார்கள். இந்த ஊடகங்கள் தங்களின் மனசாட்சிபடி நடப்பது கடினம் தான் பணத்துக்காக இல்லாமல் உண்மைக்காகவும் கொஞ்சம் செய்யல பட்டால் அப்போதுதான்   அது ஜனநாயகத்தின் தூணாக இருக்கும் இல்லை என்றால்  அவைகள் தூண்கள் அல்ல பெருக்கி வெளிஎன்றவேண்டிய குப்பைகள்  

»

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதுதான் முக்கியமாக நாம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் சிந்திக்க வேண்டும்.அதனை செயல் வடிவம் கொடுக்க வேண்டும். தன்னிச்சையாக செயல் படகூடிய கட்சியை, தான்தான் என்று ஆணவமாக இருக்கிற மனிதர்களை கொண்ட கட்சியை, தன்னை முன்னிலை படுத்துவதற்க்காக எதைவேடுமானாலும் உண்மை என்று மக்களை நம்மவைக்ககூடிய கட்சியை,தன்னை நிலை நிருத்துவதர்க்காக நம்முடைய அரசியல் முன்னோர்களை தூற்றும் கட்சியை, நாம் நிச்சயமாக புறம் தள்ளவேண்டும்.ஆணவத்தோடு நடந்துகொள்ளும் நமது அண்டை நாட்டின் அதிபர்களை  பார்த்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது இதைத்தான். யார் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்ககூடியவர்களுக்கு நல்லவர் வல்லவர் என்று பத்திரிக்கை எழுதியதன் விழைவாக அதிபர் ஆக்கியவர் அந்த பத்திரிக்கை சுதந்திரத்தை எப்படி காலில் போட்டு மிதித்தார் என்பதும் நமக்கு தெரியும்.பத்திரிக்கைகளே சுதந்திரமாக செயல் பட முடியாத  சூழ்நிலையில் தான் நம்முடைய அண்டை நாடு இருக்கின்றது என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். அதை போல் ஒரு சூழ் நிலை இந்தியாவிற்கு வரவும் கூடாது  வரவும்  விடக்  கூடாது என்பதை மக்கள் மனதில் நிலை நிறுத்தி வாக்களிக்க வேண்டும்.சர்வாதிகரிபோல் செயல் பட கூடிய ஆட்சியாளர்கள் நமக்கு தேவை இல்லை. ஜனநாயகத்தில் சர்வாதிகாரி போல் அட்சி செய்ய நினைபவர்களை நாம் புறம் தள்ள வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் அதை நினைவில் வைத்துதான் வாக்கு சாவடிக்கு செல்லவேண்டும்.தன்னுடைய  தேவைகளுக்கு ஏற்றவாறு  சட்டத்தை மாற்ற நினைக்கும் கூட்டத்தை சிறிது கூட  இடம் கொடுக்காமல் விலக்க வேண்டும்.நல்லவர்களை போல் நடிப்பவனை விட பிறர் மீது புழுதிவாரி அவதுருகளை இறைத்து தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ள நினைப்பவன் மிகவும் ஆபத்தானவன். தமிழ் நாட்டை பொருத்தவரையில் நாம் இந்த மக்களவை தேர்தலில் மிகவும் நுணுக்கமாக சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.மாநிலங்களை  போல் அல்லாமல் நம்முடைய மாநிலத்தில் வடநாட்டவர்களின் அரசியல் ஆதிக்கம் என்பது மிக மிக குறைவு, அதற்க்கு மொழி ஒரு காரணம். அது தடையாக இல்லை என்றால் அரசியலில் கூட நாம் ஆதிக்கம் செலுத்தமுடியாத சூழ் நிலை உருவாக்கி இருக்கும். அரசியலில்  நமக்கு மாநிலத்தில் இருக்கு ஆதிக்கத்தை விட்டு கொடுக்காமல் பார்த்து கொள்ளுவது என்பது மிக மிக முக்கியம்.தமிழகத்தின் முன்னாள் முக்கிய அரசியல் மற்றும் சமுக தலைவர்களை அவதூறாக பேசுவதும் அவர்களின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதும் தான் இன்றைக்கு சில தேசிய கட்சிகளுக்கு வழமையாக இருக்கிறது. நமுடைய அரசியல் முன்னோடிகள் யாரும் இவர்களுக்கு எந்த விதத்திலும் குறைத்தவர்கள் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்  எனவே யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவர்களை தவிர்த்து மீதமுள்ளவர்களில் யாருக்கு வாக்களிக்க விருபுகிறீர்களோ அவர்களுக்கு வாக்களித்து கொள்ளுங்கள்.தமிழகத்தில் அரசியல் மூக்கணாம்  கயிறு தமிழர்களின் கையில் வைத்து கொள்ளவேண்டும் என்பதை புரிந்து கொண்டு வாக்களிப்பது இந்த தேர்தலில் மிக மிக முக்கியம்.பெரியார் மிக மீறிய போராட்டங்களின் மூலம் நமக்கு பெற்றுதந்த சமூக நீதியை காப்பதர்க்கான தருணமாக இதைகருதவேண்டும்.  வடநாட்டவர்களின் ஆதிக்கம் தமிழகத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும் அது நமது அரசியலிலும் இருக்க கூடாது என்பதை புரிந்து கொண்டு கட்சி ஜாதி பாகுபாடின்றி சிந்தாமல் சிதறாமல் வாக்களியுங்கள் அது நமுடைய வருங்கால சந்ததியர்களுக்கு நல்லது.நாம் கொடுக்கின்ற வரம் நமக்கே ஆபத்தாக முடியாமல் பார்த்து வாக்களிக்க வேண்டும்

»

சீமான் ஏன் ஒரு ஈழத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வில்லை

நம் தமிழ்  நாட்டில் இருக்கின்ற ஈழத்து குடும்பங்களின் மன உளச்சல்களில்  ஒன்று அவர்கள் வீட்டு பெண் பிள்ளைகளின் திருமணம் என்பதை உணர்ந்தபோது , சீமான் ஏன் ஒரு ஈழத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வில்லை என்ற ஒரு வினா எழுகிறது .தமிழர்களுக்காக அதுவும்   ஈழத்து தமிழர்களுக்க இயக்கம் நடத்திவரும் சீமான் நம்மிடம்  அகதிகளாக தஞ்சம் அடைந்த ஈழத்து தமிழ் பெண் ஒருத்தியை  திருமணம் செய்திருக்க கூடாது.  குறைந்த பட்சம் புலம் பெயர்ந்த ஈழதமிழர்களின் குடும்பங்களில் இருந்தாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கலாமே.அப்படி செய்திருக்கும் பட்சத்தில் அது ஒரு முன் உதாரணமாகி அவரை சார்தவர்களும் செயல்படுத்தி இருப்பார்கள் இங்கே தமிழகத்தில் ஈழத்து அகதிகளில் பலபேர் கல்யாண வயதை தாண்டி முதிர் கன்னிகளாக வேதனையுடன் வாழ்கின்ற பெண்களுக்கும் கல்யாண வாழ்கை என்ற ஒன்றே நமக்கு இல்லை என்ற எண்ணத்தில் இருக்கின்ற நமது ஈழத்து  தமிழ் சொந்தங்களின் குடும்பத்தில் இருக்கின்ற பெண்களுக்கும் சீமான் போன்றோர்களும் அவரை பின்பற்றுகிற தமிழ் தோழர்களும் ஏன் ஒரு வெளிச்சத்தை,வாழ்வில் கொடுக்க  கூடாது அனைவரும் இதை செய்யவேண்டும் என்பதல்ல ஒரு சிலராவது செய்திருக்கலாம் என்பது நமது எண்ணம்  ஈழத்து தமிழ் சொந்தங்கள் என்று நாம் கூறிக்கொண்டு இருக்கின்ரோம் ஆனால் அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள தனியார்  கட்டுமான துறையில்  தினக்கூலியாக கூட வேலை வாய்ப்பு மறுக்க படுகிறது என்பது உண்மை . எங்கிருத்தோ வருகின்ற வாடா நாட்டை சேர்ந்த அன்பர்களுக்கு வேண்டி விருப்பி வேலை வழங்கபடுகிறது ஆனால் இங்கேயே இருக்கின்ற இவர்களுக்கு மறுக்க படுகிறது.இதை மனதில் வைத்து செயல் படுத்தல் நல்லது 

»

தமிழகத்தில் தமிழனை நிம்மதியாக வாழ விட கூடாது

தமிழகத்தில் தமிழனை நிம்மதியாக  வாழ விட கூடாது என்று கங்கணம் கட்டி கொண்டு சில அப்பைபுகள் தொடர்ந்து செயல் பட்டு கொண்டு வருகிறது அவர்கள் அணித்திருக்கும் முக மூடி தமிழர் பாதுகாப்பு என்ற உணர்ச்சி சாயம் மூசிய முகமூடிகள் இவர்கள் தமிழர் களுக்காக என்ன செய்தார்கள் என்று பட்டியலிட்டு பார்த்தால் வெறும் கையை மூடி கொண்டு உள்ளே நிறைய இருக்கிறது என்ற மாயா தோற்றத்தை உருவாகியதாகத்தான் இருக்கும். அமைதியான வாழ்க்கைக்கு வழி செய்ய கூடிய தமிழ் தமிழர் பற்றாளர்கள்  இங்கு இல்லை. தன்னலமற்ற தன்னுடைய முயற்சியால் அடிமையாக இருந்த ஒடுக்க பட்ட சமுதாயத்தை எந்த விதமான கலோபரமும் இல்லாமல் சமுகத்தில் அவர்களுக்கும் அந்தஸ்தை பெற்றுதந்த,இன்று பெண்கள் இந்த அளவிற்கு மிக  பெரிய வளர்ச்சி கண்டிருப்பதற்கு காரணமாக இருந்த  தந்தை பெரியார் அவர்களை போல் ஒரு மனிதர் இந்த தமிழ் சமுதாயத்தை பாதுகாப்பதற்கு இன்று உருவாக்கி இருக்கிறார்களா என்று பார்த்தால் இல்லை. ஏதாவது அதிரடியாக செய்து தங்களை முன்னிறுத்தி கொள்ளத்தான் முயற்சிகளை செய்கிறார்கள்.அதனால் யார் பாதிக்க பட்டாலும் அதைப்பற்றி கவலை  இல்லை என்ற கொள்கைகளைத்தான் கொண்டிருக்குறார்கள் .இதைப்போல் தனிச்சையாக செயல்படுகின்ற தமிழ் அமைப்புகளை கண்டு கொண்டு புறம் தள்ளுவதுதான் எதிர்கால தமிழர்களுக்கு நல்லது இல்லை என்றால் நம் சொந்த மண்ணில் நாம் அகதிகளை போல் சுற்றி திரியும் நிலைதான் ஏற்படும். ஒரு சில காரியத்தை கருத்தில் கொண்டு அதை முன்னிறுத்தி செயல் பட்டால் தான் அவர்கள் தமிழர் அமைப்புகள் என்று ஒரு தவறான என்னத்தை இங்கே உருவாக்கி விட்டார்கள் எனவே தான் இந்த அமைப்புக்கள் அதை சுற்றியே செயல் படுகின்றன. தமிழகத்தில் சமுதாயமற்றத்திர்க்கு வித்திட்டவர்களில் முதல்வராக இருந்த தந்தை பெரியார் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில்  தைரியமாக பேசும் அளவிற்கு தமிழர் பற்று வேறு திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.எதிர்கால தமிழர்கள் நலமுடன் வாழ்வதற்கு போலி யான இந்த தமிழர் பற்றாளர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

»

தேமு தி க கட்சி யாருடன் கூட்டணி

தேமு தி க கட்சி யாருடன் கூட்டணி அமைக்க விருக்கிறது என்றுதான் என்றைக்கு தமிழகத்தில் சிலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.ஆனால் அந்த கட்சியுகட்சியுடைய தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு தன்னுடைய கட்சியில் இருப்பவர்களை டெல்லிக்கு அனுப்புவதில் அவ்வளவாக ஆர்வமில்லை. இந்த தேர்தலில் எவ்வளவு பணம் நாம் பார்க்க முடியும் என்பதுதான் அவர்ருடைய எண்ணம்.கட்சியில் உறுப்பினராக இல்லாதவராக இருந்தாலும் அவருக்கு தேமுதிக சார்பாக போட்டி இடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் தலைவர் எதிர் பார்த்த தொகையை செலுத்தி விட்டால் அவர் யாராக இருந்தாலும் பரவாஇல்லை போட்டி இடுவதற்கு வாய்ப்பு  கிடைக்கும். அதை போல் எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் அவருக்கு சேரவேண்டிய தொகையை செலுத்தி விட்டால் அந்த கட்சியுடன் கூட்டணி  இறுதி செய்யப்படும். தேமுதிக வை பொருத்தவரையில். தனக்குள்ள சந்தை நிலவரத்தை வைத்து பணம் பண்ண வேண்டும் என்பது தான் அதை தவிர வேறு இல்லை. மக்கள் மனம் மாறுவதற்குள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்து கொண்டு செயல் படுகிறார்.

»

இனி மெய் மெல்ல சாகும்

இன்று நாம் வாழுகின்ற சூழ்நிலை என்பது ஒரு பாதுகாப்பானதா என்று சிந்தித்தோமேயானால் நாம் ஒரு திரிசங்கு நிலையில்தான் வாழ்கிறோம்.பொய்களை புனைந்து உண்மைக்கு எதிரானதொரு நிலையை வெற்றிகரமாக மாற்றுகின்ற   ஒரு அபாயகரமான சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம்.உண்மையை உண்மை என்று நிருபிப்பதர்க்குகூட நாம் நீண்ட நெடிய உழப்பை தரவேண்டி இருக்கிறது. அதே சமயம் பொய்கள் எந்த விதமான கடினமும் இல்லாமல் வெற்றிகரமாக உலாவந்து கொண்டிருக்கிறது.சில சமயங்களில் உண்மையை நாம் ஏன் நிருபிக்க வேண்டும் நாமும் பொய்யுடனே ஒத்து போய்  விடுவோம் என்ற  உச்சகட்டமான எண்ணம் நம்பிடையே வருகிறது,அப்படி ஒத்து போனவர்கள் பலபேர் நம்மிடையே இருக்கிறார்கள்.எப்பொருள் யார் யார் வை கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்று நம் அனைவருக்குமே தெரிந்தாலும் நாம் சிந்திப்பதே இல்லை.கன்னல் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய் என்று உனர்திருந்தாலும் எதையும் நாம் நிதானத்துடன் கவனமுடன் கையாள்வதில்லை.நம்முடைய காதுகளில் வருகின்ற செய்திகள் உண்மை உள்ளவையா என்று நாம் சிந்திப்பதே இல்லை எனவே தான் இந்த உண்மைகளை விட பலமடங்கு சக்தி வாந்ததாக பொய் திகழ்கிறது.பொய் சொல்ல பயந்த காலங்கள் எல்லாம் இன்று மறைந்து போய். சர்வ சாதாரணமாக நடப்புலகில் பொய்கள் உலாவருகின்றன. அது உண்மையை கிழே தள்ளி அதன் மீது ஏறி சவாரி செய்து கொண்டு இருக்கிறது.கீழ் நிலை மேல் நிலை என்று பாரபட்சம் பார்க்காமல் இந்த பொய்யால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அப்படி பாதிக்க பட்ட பிறகும் இவர்கள் உண்மையை நோக்கி செல்லவது இல்லை . சமர்தியமில்லமல் சொன்ன பொய்யால்தான் மாட்டிகொண்டதாக கருதுகிறார்களே தவிர நாம் உண்மையை மறைத்தால் சிக்கி கொண்டதாக கருதுவது இல்லை இவர்கள் மனசாட்சி கூட அவ்வாறு நினைப்பது இல்லை.இதனால் தான்  பல குழப்பங்களும்  நிலையும் இன்று நம்மிடையே இருக்கிறது என்பது நிசர்தனம். இனி உண்மை மெல்ல சாகும் என்பதே  உண்மை.

»

வைகோ பாரதிய ஜனதா கட்சி பெரியார்

 வைகோ பாரதிய ஜனதா கட்சியுடனான பேச்சிவார்த்தையை  தொடக்கி விட்டார் ஆனால் அவர் அடிக்கடி அரசியல்  ஆசான்  என்று சொல்லும்  பெரியாரை இழிவாக பேசுகின்ற ஒரு கட்சியுடன் கூட்டணி என்று தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.பெரியாரை பல்வேறுவிதமாக உடகங்களில் வசைபாடுகிற ஒரு கூட்டத்துடன் கைகோர்ப்பது என்பது அவருடைய விருப்பமாக இருக்காலாம்  வேறு யாரும் இவரை கூட்டணிக்கு அழைப்பதாக இல்லை,  என்ன காரணம் என்று நமக்கு தெரியவில்லை.மற்றவர்களை பார்த்து  பெரியாரின் வழி நடப்பவர்கள் இதை செய்யலாமா, அதை  செய்யலாமா, அது  தவறல்லவா   என்று அறிவுரை சொல்லும்  இவர் பெரியாரை நேரிடையாக வசைபாடுகிற கூட்டத்துடன் கைகோர்ப்பது என்பது இவர் வெளியே பெரியாரின் தொண்டராகவும் உள்ளே மோடியின்  விசிவாசியுமாக இருக்கத்தான் விரும்புகிறார் தன்னுடைய அரசியல் ஆசானை  தரம்  தாழ்த்தி  பேசும்போது  குறைந்தபட்சம்  தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டாமா? அவர் யாருடன் வேண்டுமானாலும் கைகோர்த்து அரசியல் செய்யட்டும் ஆனால் தமிழகத்தில் இன்றைக்கு இருக்கிற சமத்துவ சமுதாயத்திற்கு அடிகோலியவர்களில்  பெரியாரும் ஒரு காரணமல்லவா,இந்த சமுதாய மாற்றத்திற்கு காரணமான அவரை ஒருவர் அவதுறாக பேசும் போது குறைதபட்சம் கண்டனத்தை பதிவு செய்யாமல் கண்டும் காணமல் போவதுதான் பெரியாரின் வழித்தோன்றல் செய்யும் செயலா? அவருக்கு இந்த சமுதாயம் பெரும் நன்றிகடன் பட்டிருக்கிறது.அதிலும் அவர் பெயரை வைத்து அரசியல் செய்யும் இவர் முதல் நபராக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தால் இவருடைய பெரியாரின் பற்று அரசியலுக்கு மட்டுமல்ல ஆத்மாத்தமானதுதான்  என்பதை உணரலாம்.

»

அழகிரியை கட்சியை விட்டு நீக்கியது பின்னடைவுதான்

அழகிரியை கட்சியை விட்டு நீக்கியது  திமுக விற்கு நிச்சயமாக பினடைவு ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வுதான்.  இது நாடகமாக இருந்தாலும் வரும் நாடுளுமன்ற தேர்தலில் திமுக விற்கு பின்னடைவை ஏற்படுத்த கூடிய நிகழ்வுதான் இது அமையும் . தேமுதிக, திமுக கூட்டணியில் வந்தாலும், விஜயகாந்தை மாற்றுசக்தியாக பார்த்து வாக்களித்த மக்கள் இந்த முறை கூட்டணி மாறிவிட்டதை கருத்தில் கொண்டு தான் வாக்களிப்பார்கள் அவருக்க முன் கிடைத்த வாக்கு சதவிகிதம் குறைவதற்கான வாய்புகள் தான் அதிகமாக இருக்கிறது. அழகிரி கூற்றுப்படி தேமுதிக கூட்டணி என்பது எல்லா வகையிலும் திமுகாவிற்கு பாதிப்பைதான் ஏற்படுத்தும். வேலியில் பேகிற ஓணானை இழுத்தகதையாகத்தான் அமையுமே தவிர மிக பெரிய பலனை தராது.தேமுதிக தனித்து நிற்கும் பட்சத்தில் தான் திமுக விற்கு நன்மையே தவிர அதனுடன் கூட்டணி சேர்வதில் பயன் ஏதும் இல்லை. தேமுதிக தனிமையில் இருக்கிறது எனவே அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதுதான் சிறந்த வழி.காங்கிரஸ் சொல்லுவதைத்தான் தேமுதிக கேட்டு செயல்படும். தனியாக எதையுமே செய்வதில்லை அப்படியான ஒரு வழி முறையைத்தான் தேமுதிக தலைமை எடுத்துவருகிறது எனவே தேமுதிகாவுடனான கூட்டணிக்கு  அதிகமான ஆசையுடன் செல்வது என்பது ஆபத்துதான் என்பதை திமுக புரிந்து கொள்ள வேண்டும். யானைக்கும் அடிசறுக்கும் என்பதை திமுக தன்னுடைய கூட்டணி அமைப்பதன்  மூலம் ஏற்கனவே  நிருபித்திருக்கிறது எனவே தேமுதிக உடனான கூட்டணி என்பது அத்தி பழம் போலத்தான்.  

»

அரவிந்த் கேஜ்ரிவால் புறிந்து கொண்டுவிட்டார்

 லைவலியும் காச்சலும்  தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்லுவதுண்டு. அதைப்போல் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல்  கொண்டு வியாக்கியானம்  திரிந்த அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு இப்போது புரிகிறது அதனுடைய வலி.தன்னுடைய வீட்டிற்கு யார் எப்போது வந்தாலும் தன்னை சந்திக்காலாம் அதைப்போல் நான் முதல்வரானாலும் அப்படித்தான் இருப்ப்பேன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தார். ஆனால் பதவி ஏற்ற சில நாட்களிலேயே அது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல,வெறும் பேச்சிக்கு மட்டுமே உதவும் என்பதை புரிந்து கொண்டுவிட்டதால் தான் தன்னுடைய வீட்டிற்கு பாதுகாப்பை பலபடுத்தி கொண்டுவிட்டார், அதுவும் இல்லாமல் அங்கெ வரும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்திய பின் தான் முதல்வரை சந்திக்க அனுமதிக்க படுகிறார்கள் முதல்வர் பதவியில் இருப்பவர்கள் இப்படிதான் இருக்கமுடியும் என்பதை இபோது கேஜ்ரிவால் உணர்த்து கொண்டுவிட்டார், அது மட்டுமல்ல தன்னுடைய வீட்டையும் மாற்றுவதற்கான வேலையை துவங்கிவிட்டார்.எந்த ஒரு நிகழ்வும் அதன் பார்வையை கொண்டு பார்த்தால்தான் அதில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியும். வெளியில் இருந்து எதுவேண்டுமானாலும் பேசமுடியும் காரணம் அது வெறும் கரண்டி எப்படி வேண்டுமானாலும் சுழட்டலாம் ஆட்சி அதிகாரத்தினுள்ளே வரும்போது அப்படி எடுத்தோம் கவுத்தோம் என்று செய்துவிட முடியாது காரணம் அது என்னை நிரம்பிய கரண்டி விருப்பம்போல் சுழற்ற முடியாது எதையும் அதனுடைய இடத்தில் இருந்து பார்த்தல் தான் புரியும். தலைவலி இல்லாமல் இருக்கும் போது  அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு தலைவலியின் வேதனை புரியாது இபோது தலைவலி அரவிந்த் கெஜ்ரிவலுக்கு. இப்போது புரியும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வெளியேயும் உள்ளேயும்
 

»

அண்ணா ஹசாரே டு அரவிந்த் கேஜ்ரிவால்

எதையும் சரி தவறு  இதனால் பிறர் பாதிக்க படுவார்களே என்று கொஞ்சமும் வெட்கபடாமல்  யாருடைய உழைப்பையாவது நாம் எடுத்து, நாம் நம்முடைய வாழ்கையில் கொண்ட குறிக்கோளை அடைய வேண்டும் என்பதைத்தான் அண்ணா ஹசாரே அவர்களால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் கேஜ்ரிவால். மக்களிடம் கருத்து கேட்பு, இது மக்களுக்கான கட்சி என்று, ஆட்டை எடுத்து குட்டியில் போட்டு குட்டியை எடுத்து  ஆட்டில் போட்டு ,யாருடனும் கூட்டணி இல்லை என்று குழப்பி இன்று டெல்லி யில்  முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட்டார். இது அரவிந்த் கெஜ்ரிவால்  என்ற மனிதருக்கு கிடைத்ததா, இல்லை இதற்க்கு முந்தைய ஆட்சியின் மீது மக்கள் கொண்ட கோபத்தின் விழைவா என்று பார்ப்பதை விட அண்ணா ஹசாரேவிற்கு கிடைத்த ஆதரவை தனதாக்கி கொண்டு தன் வழியை சரியான திட்டமிடுதலின் படி தனதாக்கி கொண்டதன் பலன்தான் இப்போது அரவிந்த் கேஜ்ரிவால் கிடைத்த முதர்வர் என்னும் பம்பர் பரிசு.அடுத்தவரின் உழைப்பில் கிடைத்த ஆதரவை வைத்து தான் இந்த பதவி என்பதை மறந்து தான் ஒரு கை தேர்ந்த அரசியல் வாதி என்பதை இவர் நிருபித்து விட்டார்.நல்ல சமயமாக குழப்பத்தை எதையும் உருவாக்காமல் ஆட்சியை அமைத்து விட்டார்.இதற்க்கு  வழிவகை செய்து கொடுத்த அண்ணா அவர்களுக்குதான் கேஜ்ரிவால் மற்றும் அவர்களின் கூட்டம் நன்றி சொல்ல வேண்டும். அடுத்தவரின் உழப்பை தனதாக்கி கொள்வது என்பது இங்கே ஒன்றும் புதிதில்லை தெடரட்டும் கேஜ்ரிவாலின் பணி

»

பெண்களும் பாலியல் தொந்தரவும்

பெண்களின் பாதுகாப்பிற்கா உருவாக்க பட்ட சட்டங்கள் இன்று திசைமாறி எதற்கெல்லாமோ பயன் பட தொடக்கி விட்ட து. சமுதாயத்தில் உயர் பதவியில் இருக்க கூடியவர்கள் மீது அவர்களின் பெண் உதவியாளர்கள் சுமத்தும் இத்தகைய பாலியல் குற்றங்கள் சரியானவைதானா இல்லை அந்த அதிகாரிகளுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் புனையபட்டவையா என்பது  நமக்கு புரிவதில்லை.பலமுறை இதை  போல் என்னிடம் நடந்தது கொண்டார் என்றுதான் பாலியல் குற்றம் சாட்டும் பெண்கள் சொல்லுகிறார்கள்.பலமுறை தொந்தரவு கொடுத்த ஒரு அதிகாரியை இப்போது மட்டும் ஏன்  புகார் கொடுக்க வேண்டும் அதன் காரணம் என்ன? இது வரை அவர் கொடுத்தா பாலியல் தொந்தரவிர்க்கான காரியங்கள் முடிக்க பட்டு விட்டனவா,இப்பொது காரியங்கள் முடிக்காமல் இருப்பதால் தான் புகார்  கொடுக்க பட்டதா என்பதையும் நாம் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.சாதாரணமான வாழ்கை வாழக்கூடிய பெண்கள் கூட தன்னுடைய அதிகாரி தன்மீது அத்து மீறும் போது உடனடியாக நடவடிக்கையை எடுத்து விடுகிறார் அது அவர் அந்த நிறுவனத்தை விட்டு விலகுவதாக கூட இருக்கலாம் அது சரியா தவறா என்பது ஒருபுறம் இருந்தாலும் ஒரு முடிவை எடுக்க கூடிய நிலைக்கு வந்து விடுகிறாள், ஆனால் இந்த புகார்  கொடுக்க கூடிய பெண்கள் வாழ்கை சூழ் நிலையை அறிந்தவர்கள்  சட்டத்தின் பாதுகாப்பையும் அறிவார்கள் இவர்கள் அதிகாரி வரம்பு மீறும் போதே அந்த குற்றத்தை வெளிகொண்டுவருவதில்லை.தன்னுடைய அதிகாரியின் மூலம் காரியங்களை சாதித்து கொள்ளும்வரை இருந்து விட்டு எப்போது அது முடியாது என்று வருகிறதோ அப்போதான் இவர்களுக்கு வேகம் வருகிறது புகார் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. தனுடைய மேல் அதிகாரியை தன்வயபடுத்துவதர்க்கு அவருக்கு கீழ் பணிபுற்பவர்கள், அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எதாவது செய்து அவர்களுக்கு நெருக்க மாணவர்களை போல் காட்டி கொள்ளுவார்கள் அது அவர்களுக்கு பல விதங்களில் உதவியாக இருக்கும்.அந்த அதிகாரி மோதிக்கொள்ளும் சூழ் நிலை வரும்போது ஆண் ஊழல் புகாரை கொடுக்கிறான் பெண்களோ இதை போல் ஒரு களங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.சமுதாயத்தில் அந்த அதிகாரியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த கூட அவருக்கு பிடிக்காத சில  விஷமிகள் இதை செய்வதற்கு துணியலாம். பாலியல் குற்ற வலைக்குள் ஒரு ஆண் அவனே விழுகிறானா அல்லது அந்த வலைக்குள் ஒரு பெண்ணால் விழவைக்க படுகிறானா, குற்றம் உண்மையில் நடந்ததாக கூட இருக்கலாம் ஆனால் அதை செய்ய தூண்டியது அவன் மட்டுமே உணர்சியின் பிடியில் செய்தானா  அல்லது உணர்ச்சியை தூண்டிவிட்டு அந்த குற்றத்தை செய்ய வைப்பது பெண்களா என்பதை நாம் உணரவேண்டும்.எப்படியாயினும் இந்த சட்டத்தால் சாதாரண பெண்களுக்கு கிடைக்கக கூடிய பாதுகாப்பு தொடரத்தான் வேண்டும். பாலியல் குற்றத்தை செய்யவில்லை என்று ஒரு ஆண்  மகன் நிரூபித்தாலும் அதன் வலியை அவன் இந்த சமுதாயம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கும் அதிலிருந்து விடுபட வெகுநாட்கள் ஆகும் என்பதே உண்மை.

»

நிறை குடம் தளும்ப கூடாதா?

நிறை குடம் தளும்ப கூடாதா, நிறை குடம் தழும்பாது என்ற வாக்கியத்தை உருவாக்கி விஷயம் தெரிந்தவர்களை வாய்மூடி மௌனியாக்கி விட்டு, ஒன்றும் தெரியாத அரை குறைகள் ஆட்டம் போட்டு கொண்டு திரிகின்றன,குதுகுளிப்பதர்காகவே இந்தகைய வாக்கியத்தை உருவாக்கி இருக்க வேண்டும். நிறை குடம் செய்த வெற்றிகரமான காரியத்தை குறை குடம் செய்ததாக குறிகொண்டு வெற்றிகளிப்பில் பங்கெடுக்கும் போது அதை உண்மையில் அந்த காரியத்தை செய்து முடித்தவர் எது தெரியாதவர் போல் இருக்க வேண்டும்  காரணம் அவர் நிறை குடம் அல்லவா அது தலும்பலாமா, இப்படி மௌனியாக இந்த நிறைகுடங்கள் எல்லாம்  இருந்ததால்தான் இன்றைக்கு அரை குறை குறை  குடங்கள் எங்கு  பார்த்தாலும், அனைத்து மட்டத்திலும் உயர் நிலை யில் இருக்கின்றன. இத்தகைய மனிதர்களுக்கு அவர்கள் வகிக்கின்ற பதவிக்கு உண்டன எத்தகைய தகுதியும் இல்லாமலேயே, பிறருடைய உழைப்பின் வேர்வையில் வாழ்த்து கொண்டு இருக்கிறார்கள். எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் கிடைத்திருக்கும் இந்த வெற்றிக்கு யார் காரணம் என்ற உண்மையை அறிவதற்கு முனைவதில்லை, வேலை முடிந்தது என்று மட்டில் முடித்து கொள்கிறார்கள் என்னவேதான்,நல்ல திறமைசாலிகள் எல்லாம் உலகத்தின் பார்வையில் ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். "யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே  அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் தெரியலே" என்று கவிஞர் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது.எந்த பதவியில் யாரை வைக்க வேண்டும் என்ற ஒரு விசாலமான பார்வை நம்மில் பலருக்கு தெரியவில்லை என்னவேதான் இந்த நிறை குடங்கள் தலும்பவேண்டும் அப்போதுதான் இந்த உலகத்திற்கு தெரியும் அசல் எது நகல் எது என்று. அது எந்த இடமாக இருந்தாலும் நாம் செய்த வேலையின் வெற்றியை, உழைப்பின் பலனை நாம் தான் அடைய வேண்டும், அதை அண்டங் காக்கைகள் அனுபவிக்க இடம் தரலாகாது,எனவே இதற்காகவாவது நிறை குடன்களே தயவு செய்து தலும்புங்கள் வளமான எதிர்காலத்திர்க்காகவாவது நிறை குடங்களே நீங்கள் தளும்புங்கள்.

»

பணம்

ணம் என்பது மனிதவாழ்க்கைக்கு தேவையான ஒன்று என்பதை நாம் மறுக்க முடியாது.அதற்காக ஏமாற்றுவதும்,மற்றவர்களை எமாற்றுகாரர்கலாக சித்தரிப்பதும் சரியா என்பது நமக்கு முன் நிற்கும் ஆட்சரியதரவைக்கும் ஒரு கேள்வி? இதற்கான பதிலை நாம் யாரும் சொல்ல முடிவதில்லை, நமக்கு வந்தால் ரத்தம்தான் என்று  ஆணிதனமாகவும் அடுத்தவருக்கு வரும் போது தக்காளி சட்டினியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளப்புவதும் தான் இன்றைக்கு அனைவரிடமும் அதிகமாக இருக்கிறது. நாம் நமக்கு சிந்தனையில் என்ன தோன்றுகிறதோ அதைதான் சரியாக அமையவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதும் அதற்கு வலு சேர்பதற்காக பிறர் மீது சேற்றை வாரி இறைப்பாதும் இன்றைக்கு வழக்கை முறையின் ஒரு அங்கமாக இருக்கிறது.இவை அனைத்தும் பணத்துக்காகத்தான் அன்றி வேறெதற்கும் இல்லை. பணம் என்பது இன்றைய  மக்களுக்கு முக்கியமானதாக ஆகிவிட்டபடியால் எதை செய்தாவது பணத்தை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்பது தான்  முக்கிய முதல் காரணியாக இருக்கிறது.பணம் ஒன்றுதான் இன்றைக்கு இந்த உலகத்தை நம்மை நிலை நிலைநிறுத்தி கொள்ளுவதற்கான ஒரே வழி யாக மக்கள் நினைக்கிறார்கள் அது ஓரளவிற்கு உண்மை என்பதை நாம் ஒத்துகொள்ளத்தான் வேண்டும்.பிறர் வாழ்வை கெடுத்ததுதான் தன்னுடைய பணத்தேவையை தன்னிறைவு செய்து கொள்ளும் நிலை சரியானதா? சிந்திக்கும் போது ஒரு உண்மை நமக்கு உணர்கிறது நாம் ஈட்டும் பணம் யாருக்காக என்பதை நாம் மறக்கிறோம்,  மனிதர்கள் உறவுகளை கூட மறந்து பணத்தில் பின்னல் செல்கிறார்கள் என்பது யாருக்கும் புரிவதில்ல இந்த நிலை என்பது இப்போது வந்தது இல்லை தொடக்க காலம் தொட்டே இருந்து வருகிறது. அதன் வீட்சு இப்போது அதிகரித்து விட்டது,அப்படி அதிகரித்து விட்ட இந்த நிலை பணம் நம்மை ஆள்வதற்கு தொடக்கி விட்டதா? பணத்திற்காக மனித உயிர்களை பறிப்பது  என்பது இன்றைக்கு சாதாரணமாகிவிட்டது. ஒரு அரசாங்கத்தினால் கூட ஒரு மனிதனின் உயிரை பறிக்க கூடாது என்று வாதிடுகிறார்கள் ஆனால் இந்த பணம் கொண்டே அவ்வாறு செய்து விடமுடியும் என்ற ஒரு வெட்ககேடான நிலையின்நூடே தான் நாம் நாம் இந்த பணத்தேடலில் விரைந்து செல்கின்றோம்.பணத்தாசையை அதிகபடுத்துவது நம்முடைய வாழ்கை முறையில் வந்து விட்ட ஆசை பற்றுதான் காரணம். பணம் பண்ணுவது ஒரு கட்டுக்குள் இல்லை என்றால் வாழ்வு நிலை சிதறிப்போகும் இதை எல்லோரும் உணர்ந்திருந்தும் நடைமுறைபடுத்துவதில்லை அது நடைமுறைக்கு வரும் போதுதான் நிமதியான ஒரு வழக்கை கிடைக்கும் அதுவரை போராட்டம் தான்.

»

டெல்லியில் ஆம் ஆத்தி கட்சி....

டெல்லியில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது .யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்றமையால் யாரும் ஆட்சியமைக்க முன்வரவில்லை.மக்கள் தங்களுடைய கடமையை நிறைவேற்றிவிட்டார்கள் யார் ஆட்சி நடத்துவது என்று இனிமேல் தீர்மானிக்க வேண்டியது  வெற்றிபெற்ற வேட்பாளர்கள்தான் அது அவர்களின் கடமை. மீண்டும் தேர்தலை சந்தித்து யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்க வில்லை என்றால் மீண்டும் தொடங்கிய நிலைக்கேதான் வரவேண்டும் எனவே மீண்டும் தேர்தல் என்பது தேவை இல்லதாவேலை.நம் அரசியல் சாசன முறைப்படி தேர்தல் நடந்து மக்களும் தங்களுடைய தொகுதிக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து விட்டார்கள் எனவே வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஒன்று கூடி ஆட்சி அமைப்பதுதான் முறை அதை தவிர்த்து தங்களுடைய பொறுப்பை தட்டி கழிப்பது என்பது சரியாக முடிவாக இருக்காது. ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் துணையுடன் ஆட்சி அமைக்கலாம்.இவர்களுக்கு இடையுறு செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி செயல் படுமாயின் அப்போது  ஆட்சியை  கலைத்து விட்டு மக்கள் மன்றத்தை சந்தித்தால் அறுதி பெரும்பான்மை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவை வாக்காளர்கள் எடுப்பார்கள். அறுதி பெரும்பான்மை கொடுத்தால்தான் நான் ஆட்சி அமைக்க முயற்சி செய்வோம் என்று சொல்லுவது சரியா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.மக்களால் தேர்தெடுத்த பிரதிநிதிகள் ஒன்று கூடி ஒரு தலைவரை தேர்தெடுத்து ஆட்சி செய்ய வேண்டும் என்பது தானே நமது தேர்தல் முறை அதை இவர்கள் ஏன் செயல் படுத்த தயங்குகிறார்கள்.மக்கள் எல்லோரையும் திருப்பதி படித்தவேண்டும் என்பது மிகக்கடினம் ஒரு சாரார் எப்போதும் குறை கூறு பவர்கலாகத்தான் இருக்கிறார்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் குற்றமில்லாத மனிதன் யாரும் இல்லை.  

»

கோவில் தொழில் நல்ல வருமானம்

கோவில்களை கட்டி பராமரித்துவருவதுதான் இன்றைக்கு சிரமமில்லாத நல்ல தொழிலாக இருக்கிறது.பரவலாக ஆங்காங்கே திடீர் என்று கோவில்கள் முளைப்பது இதைத்தான் நமக்கு காட்டுகிறது.கோவில் இல்லாத ஊரில் குடி இருக்காதே என்று சொன்னதையே கருத்தாக கொண்டு கோவில்களுக்கு மத்தியில்தான் இன்று நாம் வாழும் சூழ் நிலையை உருவாக்கி இருக்கிறோம். தடுக்கி விழுந்தால் ஒரு கோவில் என்ற நிலையை நாம் இன்றைக்கு கண்கூடாக பார்க்கிறோம் இந்த கீழ்மட்டம் மேல் மட்டம் என்ற பிரிவினை எல்லாம் கிடையாது எல்லமட்டதிலும் அவரவர் சக்திக்கு உட்பட்டு இந்த தொழிலை தொடங்கும் நிலை உருவாகிவிட்டது. கோவில் கட்டுவதில் இருந்தே இந்த வசூல் ஆரம்பித்து விடுகின்றது.கோவில் கட்டி முடித்தவுடன் யாரவது ஒரு பெரியவரை அழைத்து பெரிய விழாவாக கும்பாபிஷேகத்தை முடித்துவிட்டால் அன்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கி விடுகின்றது. கோவில்கள் தொழில் முறை ஆனபின் அந்த தொழில் வளர்வதற்கான அத்தனை  வரைவுகளையும் ஆராய்ந்து செயல்படுத்த தொடங்கிவிடுகின்றனர். ஜோதிட நண்பர்கள் மூலம் ஆள் சேர்ப்பது.ஆன்மீக சுற்றுலா செல்கின்ற பேருந்து,சிருந்து வாடகை மகிழுந்து அத்துணை ஓட்டுநர்களையும் ஒருங்கிணைத்து இந்த கோவில்களுக்கு  அவர்கள் வாகனத்தை அழைத்துவருவது. அப்படி அழைத்துவருவதற்காக  ஓட்டுனர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பது, இதுபோன்ற அடிப்படையில் கோவிலை பிரசித்தி படுத்தி கொள்வதற்கும் தொழிலை வளர்த்து கொள்வதற்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதுபோல் வளர்ந்த எந்தனையோ கோவில்கள் நாம் கண்கூடாக பார்கிறோம்.  அது அவர்களுக்கு கைமேல் பலன் தருகிறது. இது போதாது என்று ஊடகத்தின் வாயிலாக விளம்பரபடுத்துவது, தேவையில்லாத வதந்திகளை பரப்பிவிடுவது என்று எதாவது ஒருமுறையில் இவர்கள் தங்களுடைய கோவில் தொழிலுக்கு நன்றாக அடித்தளம் அமைத்து கொள்கிறார்கள். அடித்தளம் அமைந்த பின்னால் இவர்களுக்கு எந்தவிதமான விளம்பரமும் தேவை இல்லை காரணம் அங்கு செல்லும் மக்களே மிக பெரிய விளம்பர ஊடகமாக மாறிவிடுகிறார்கள். கோவில் தொடக்கம் முதல் இன்றுவரை செல்லும் பக்தர்களின் நிலை பொருள் ரீதியாக அப்படியீதான் இருக்கிறது ஆனால் அதை தொடங்கியவர்கள் எங்கோ உயர்ந்துவிட்டார்கள் என்பதை காணமுடிகிறது. அன்றைய மன்னர் காலத்தில் கோவில்கள் எதற்காக தோற்றுவிக்க பட்டது என்பது விவாதத்திற்குரியது ஆனால்  அதைவைத்து பணம் மண்ணும் நோக்கம் இருக்காது என்பதை நம்பலாம்.ஆனால் இன்றைக்கு காவி உடை தரித்து மரத்தின் கீழ் அமர்ந்தால் அங்கே யார் என்ன என்தற்காக என்ற கேள்வி இல்லாமல் மக்கள் கூடிவிடுகிறார்கள்.  தங்கழுடைய வாழும் வீட்டையே கோவிலாக பாவித்து பணம் பண்ணும் நபர்களும் நம்மிடையே உலவுகிறார்கள் . இப்படி பலதரப்பட்ட கோவில்களுக்கு ஆட்களை  கொண்டுவருவதற்கு இடைத்தரகர்கழும் இப்போது முளைத்துவிட்டார்கள். மன அமைதியை தேடித்தான் கோவில்களுக்கு செல்வதாக கூறுகிறோம் ஆனால் நாம் அங்கு சென்று மன அமைதியுடன்  இருக்கிறோமா என்றால் அது ஒரு கேள்விக்குறிதான். அச்சு ஊடகங்களில் திடீர் திடீர் என்று முழுபக்கத்திற்க்கு சாமியார் விளம்பரங்களும் கோவில் விளம்பரங்களும் நம்மை திக்கு முக்கட வைத்து  விடுகின்றன.கோவில்களும் தெய்வங்களும் நம்மை செழுமை படுத்தத்தான் கோவில் தொழில் நடத்துபவர்களை செழுமை படுத்த அல்ல என்பதை எளியவர்கள் புறிந்து கொள்ளவேண்டும்.      

»

கேரளமாநில அட்டபடி கிராம தமிழர்களின் நிலை என்ன

கேரளா மாநில எல்லையில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள  அட்டப்பாடி  என்ற கிராமத்தில் வசிக்கின்ற தமிழர்களை உடனடியாக காலி செய்யும் படி கேரளா அரசாங்கம் வற்புறுத்துவதாக செய்திகள் வெளியாகிறது. இது நீண்ட கால பிரச்சனையாக இருந்தாலும் இப்போது அங்கே கால காலமாக  குடி இருக்கின்ற தமிழர்களை விரட்டுவதில் கேரளா அரசாங்கம் குறியாக இருக்கிறது என்பது நமக்கு தெளிவாகிறது. கேரளா அரசாங்கத்தினுடைய அனைத்து ஆவணங்களும் வைத்திருந்தும் உடனடியாக அந்த இடத்தை விட்டு அகலும்படி கேரளா அரசாங்கம் சொல்லுகிறது என்றால் அதனுடைய நோக்கத்தை புரிந்து கொண்டு தமிழர்கள் உடனடியாக செயல்பட தொடங்க வேண்டும்.தமிழ் தேசியம்  பேசுபவர்கலானாலும்   திராவிடம் பேசுபவர்கலானாலும்  குரல் கொடுக்க வேண்டும் இதனை வளரவிட்டு விட்டு போராடாமல் முளைக்கும் போதே எதிர்ப்பை வலுவாக்கிட வேண்டும். தமிழ் நாட்டில் இருக்கின்ற பிற மாநிலத்தவர்களை கட்டுக்குள் வைத்தாலே தமிழன் வெளியே எங்கும் சென்று பொருள் இட்ட தேவை இல்லை.இங்கே இருக்கும் உள்ளூர் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டி போராடவேண்டிய சூழ்நிலைகளை உருவாக்கி விடாதீர்கள் அட்டப்பாடி கிராம தமிழர்களுக்கு நாம் கொடுக்க கூடிய அதரவு நம்முடைய வலிமையை காட்ட கூடியதாக இருக்க வேண்டும்.அவர்களின் வாழ்வாதாரத்தை பெற்றுதரகூடியதாக மாறவேண்டும் தேன்கூட்டில் கைவைத்தால் என்ன நடக்கும் என்பதை ஊர் அறிய செய்ய வேண்டும்.உளூரில் இருக்கும் பொருளீட்டும் வாய்ப்பை எல்லாம்  மாற்றான்களுக்கு தந்து விட்டு வெறுமனே வீதியில் திரிகின்ற நிலையை மாற்றவேண்டும் அதற்க்கு இது ஒரு முன் முயற்சியாக  இருக்கவேண்டும்.

»

பெண்கள் பாதுகாப்பு சட்டத்தில் ஆண்களின் நிலை

பெண்கள் சுமத்தும் குற்றசாட்டுகள் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுகொள்ளுவது நியாயமானதா. மகளீர்காவல் நிலையத்தில் பெண்கள் கொடுக்கின்ற தன்னுடைய கணவன் மீது மற்றும் அவரை சார்ந்த கணவனின் தந்தை மீதும் இவர்கள் கொடுக்கின்ற புகார்களை  பார்த்தோமேயானால் மிகவும் தரம் தாழ்த்து இருப்பதை காணமுடிகிறது. இதை போல் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற ஐயப்பாடும் நமக்கு எழுகிறது, என்கணவன் அவரின் தாயாருடன் ஒரு அறையில் தனியாக இருந்ததாகவும் அதை நான் பார்த்ததாகவும் சொல்லுவதும், இன்னும் பல அபாண்டமான குற்றசாட்டுகள் பல இருக்கின்றன,இதைபோல் பெண்களின் குற்றசாட்டுக்கு உள்ளாகும் ஆண்கள் பல பேர்  இந்த சமுதாயத்தை நேர்கொண்டு காணமுடியாமல் தவிக்கிறார்கள் தங்களையே அழித்து கொண்டுவிடுகிறார்கள்.பெண்களுக்கு பாதுகாப்பிற்காக இயற்றிய சட்டங்கள் இன்று ஆண்களை மிரட்டுவதற்காக பயன்படுவது  போல்தான் தெரிகிறது. என்னை என்னுடைய மாமனார் தவறாக செயலுக்கு அழைகிறார் என்கின்ற போது அதில் இருக்கும் உண்மை எதுவாக இருக்கிறது என்று புரிவதற்குள் இந்த சமுதாயம் அந்த மாமனாரை நார் நாராக கிழித்து விடுகிறது காரணம் முதன்மை  செய்திக்கு தான்  முக்கியத்துவம் என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம் வழக்கு முடிந்தபின் மாமனார் நல்லவராக இருந்தாலும் அதை யாரும் கண்டுகொல்லுவது இல்லை  அவருக்கு சமுதாயத்தில் கிடைப்பது அவப்பெயர்தான்.சில நேரங்களில் பெண் குற்றம் சாட்டும் குடும்பமே தற்கொலை செய்து கொண்டு தங்களின் நியாயத்தை சமுதாயத்திற்கு உணர்த்த நினைத்தாலும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் அவர்களுக்கு அவப்பெயர் கிடைகிறது. மகளீர் காவல் நிலையத்தில் ஒரு பெண் சென்று புகார் கொடுத்தால் அங்கே ஒரு ஆணுக்கு நடக்கும் நிகழ்வை நினைத்து கூட பார்க்கமுடியாது.இங்கே பெண்களுக்கு மட்டும் தான் கொடுமைகள் நடப்பதாக நமக்கு அறிய தருகிறார்கள் ஆனால் வெளியே சொல்லமுடியாத பல மன அழுத்தத்தில் தான் ஆண்கள் பல பேர் இந்த உலகில்  வாழ்த்து கொண்டிருக்கிறார்கள்.குடும்பம் நல்லநிலைக்கு வருவதானால் அதில் பங்கு பெறுவதற்கு அனைவரும் வருவார்கள் ஆனால் அதே நேரம் நேர் எதிமறை நிகழ்வாக இருந்தால் அது ஆணைதான் சாரும். அணுக்கும் ஓர் மனம் இருக்கிறது என்று இங்கே யாரும் நினைப்பதில்லை பெண் புகார் கொடுத்து விட்டாலே  அவர்களுக்கு சார்பு நிலை எடுப்பதற்காகவே பல அமைப்புகள் இருக்கின்றது அனால் ஒரு ஆணின் சார்பு நிலையை எடுப்பதற்கு யாரும் இல்லை என்பதுதான் இயல்புநிலை இந்த பெண் சாதக சட்டத்தை முழுவதுமாக ஆகற்றவேண்டியது இல்லை.பெண்கள் கொடுக்கும் புகார்களின் உண்மைத்தன்மையை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். காரணம் இது வெறும் காகித சட்டம் மட்டுமல்ல பல  ஆண்டுகாலம் காத்துவருகின்ற நம்முடைய பாரம்பரிய கலாசாரமும் அதில் கலந்திருக்கிறது ரத்தத்தோடு கலந்து விட்ட இத்தகைய நிகழ்வுகளில் குடும்பம் என்ற சங்கிலி தொடரும் அடங்கி இருக்கிறது எனவேதான் வெள்ளை காகிதத்தில் எழுதித்தரும் ஒரு  புகாரை மட்டுமே வைத்து கொண்டு அந்த பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் சிதைத்துவிடும் செயல்களை செய்வதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை. கொடுக்கும் புகார்களில் உண்மை இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை தேவையான ஒன்றுதான் ஆனால் அதையே தங்களின் சுயலாபத்திற்காக செயல் படுத்தும் பட்சத்தில் பாதிக்கபடுவது ஆண்சார்த்த குடும்பம் தான். பெண் புரட்சி பெண்ணாகி விடுகிறாள். உணர்சிவயப்படுவதை விட்டு சிறிது நிதானமாக செயல் படுவது நல்லது . அது நல்ல பெண்ணிய எதிர்காலத்தை உருவாக்கும்.

»

சங்கராச்சாரியார் விடுதலை மக்கள் கற்றுக்கொண்ட பாடம்

சங்கராச்சாரியார் உட்பட அனைத்து நபர்களையும்  சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.இது வழக்கு தமிழ்நாடு  முழுவதும் உன்னிப்ப்பக கவனித்த ஒரு வழக்கு.இந்த வழக்கு தீர்ப்பின் மூலம் மக்களுக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பினை வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.தன்னிலை உணர்ந்து போகிற போக்கில் வாழ கற்று கொள்ளவேண்டும் என்ற உன்னதமான உண்மையை உணர்த்துகிறது. இவர்கள் தான் சங்கர் ராமன் கொலைக்கு காரணமானவர்கள் என்று இதுவரை யாரையும் அடையாளம் காண முடியவில்லை.இந்த வழக்கில் சங்கர் ராமனின் மனைவியே பிறழ் சாட்சியம் அளித்துள்ளதாக அறிய வருகிறது .கொலையுண்டவரின் மனைவியே சொன்ன சாட்சியத்தை மாற்றி சொல்லுகிறார் என்னும் பொழுது அவர் எந்த சூழ்நிலையில் ஏன்  மாற்றி சாட்சியம் சொல்லுகிறார் என்று நீதிமன்றம்  அறியவரவில்லை . எதையும் மாற்றமுடியும் அதில் நீதியும் அடக்கம் என்று நினைப்பு மக்களுக்கு வருவதற்கு முன் இவர்கள் இல்லை என்றால்  யார் செய்தார்கள் என்று இந்த உலகத்திற்கு தெளிவு படுத்தவேண்டிய கடமை இந்த நீதி துறைக்கும் காவல்  துறைக்கும் இருக்கிறது. சூரா பத்மனை சம்ஹாரம் செய்த கடவுளின் பெர்யர் கொண்ட நீதிபதி தான் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார்.மக்களுக்கு நீதி மன்றங்களின் மீதிருக்கும் மதிப்பை காப்பாற்றி கொள்ளவேண்டிய மிகப்பெரிய சவால் இன்றைக்கு சட்டத்துறைக்கு இருக்கிறது.சாதாரண மனிதன் அடங்கி ஒடிங்கிதான்  வாழவேண்டும் என்ற நிலை இன்று நேற்றல்ல காலங்காலமாய் தெடர்கிறது. திரைப்படங்களில்  காட்டுவதைப்போல காட்சிகள் இன்று மக்கள் மன்றத்தில் அரங்கேற தொடக்கி விட்டன என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.இத்தனை ஆண்டுகள் கழித்து தீர்ப்பு சொல்லும் போது இந்த கொலைக்கான காரண காரியங்களை தீர்ப்பில் சுட்டி காட்டி  இருக்கும் பட்சத்தில் மக்களுக்கு நீதியின் மீது ஒரு மன ஆறுதலாவது வந்திருக்கும்.எல்லாமே ஒரு வட்டம் தான் மீண்டும் நீதி தொடக்க நிலைக்கு திரும்பும் என்ற சாமாதனத்துடந்தான் வாழவேண்டி உள்ளது. இன்றைய சூழ்நிலையில் கொலைகள் சாதாரணமாகிவிட்ட படியால் இன்னும் சிறிது காலத்தில் இது எல்லாம் மறந்து விடும் என்பது தான் உண்மை ஆனால் காலம் எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டுதான் இருக்கும் அதன் பிடியில் யாரும் தப்ப முடியாது!

»

பெங்களூர் ஏ டி எம் கொள்ளையும் அரசின் நடவடிக்கையும்

பெங்களூர் ஏ டி எம் ஒன்றில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்திருக்கும்.இந்தனை சுலபமாக ஒரு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றும் அளவிற்கு நாடு ஒரு மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றால்.அதன் நீட்சியாக  பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக கூறி  250 திற்கும்    மேல்பட்ட மையங்களை மூடியது இது மிகவும் கொடுமையான ஒரு நிகழ்வு பாதுகாப்பு கொடுக்கவேண்டியது அரசின் கடமை. அதை சரியாக செய்வதற்கான வழிமுறைகளை நடவடிக்கைகளை துரிதபடுத்தவேண்டுமே தவிர இதைமோல் ஏ டி எம் மையங்களை மூடுவதன் மூலமாக சாதாரண பொது மக்களுக்கு தொல்லை கொடுப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.இது எப்படி இருக்கிறது என்று பார்த்தல் மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல் உள்ளது.வீடு புகுந்து மனிதர்களை தாக்கி விட்டு தினம் ஒரு கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது அதற்காக வீடுகளே இல்லாமல் வாழ்ந்து விட முடியுமா என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.மூடிய ஏ டி எம் மையங்கள் இது வரை பாதுகாப்பாக இல்லாமல் இருந்தது என்பதை அவர்கள் ஒத்து கொள்ளுகிறார்களா ஆம் என்றால்.அங்கே வைத்திருக்கும் பணத்தை பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லையா அல்லது வேறு காரணங்களா? இதுவரை இவர்கள் அசட்டையாக இருப்பதற்கு என்ன காரணம் அதை கவனிக்க கூடிய அலுவலர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்.இந்த மையங்களை பாடுகாப்பதற்க்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் பாதுகாப்பு அமைப்புகள் செயல் படுகின்றனவா அல்லது அவர்களின் மாத வருவாயை பெற்றுக்கொண்டு பாதுகாப்பு அலுவலர்களை பனியாமர்த்துவது இல்லையா? ஒரு நிகழ்வு நடந்தவுடன் வேகம் காட்டுவதும், பிறகு எப்போதும் போல் அசட்டையாக இருப்பதும் நம் நாட்டில் சர்வசாதாரணமாகி விட்டது.இந்த நிலை என்று மாறும் காலத்தில் கையில்தான் இருக்கிறது.மனித உயிர் இன்று மதிப்பில்லாமல் போய் விட்டது என்பது தான்  இதைபோல் சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. கேவலம் பணத்திற்கு கொடுக்கும் மரியாதை கூட மனிதர்களுக்கு சமுதாயத்தில் இல்லை என்பதன் ஒரு பகுதிதான் இதை போன்ற கொலை கொள்ளை சம்பவங்கள்.

»

சென்னை நகரம் உழலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது

சென்னை நகரம் உழலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்ற செய்தி நமக்கு ஒன்றும் புதிய செய்தியாக இருக்காது காரணம் நாம் அன்றாடம் சந்திக்கும் நினைவுகளே நமக்கு சொல்லும் பாடம்தான் என்றாலும் நம்முடைய மாநிலத்தின் தலை நகரம் உழலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று தெரியவரும் போது நாம் விழிப்புடன் இருக்கவேண்டிய ஒரு சூழ்நிலை  இருக்கிறது.இதற்க்கு என்ன காரணம் ஊழல் செய்பவரை விட ஊழல் செய்ய தூண்டுபவர்கள்தான் இன்று அதிகபடியாக இருக்கிறார்கள். மற்றும் நம்சொந்தங்களில் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் வாழக்கூடிய மனிதர்களுக்கு யாரவது மரியாதை தந்திருக்கிறோமா என்று சிந்தித்து பாருங்கள். ஊழல் செய்து பணத்தை சேர்த்துவைத்திருக்கும் நபருக்குத்தான் நாம் எந்த இடத்திலும் மரியாதை செய்கின்றோம்.நம் உறவுகளாக இருந்தாலும் அவர்களை திருத்துவதற்கு முயற்சி எடுத்திருக்கிறோமா குறைந்த பட்சம் அவர்களை நம் வாழ்வில் தவிர்த்திருக்கிறோமா இல்லவே  இல்லை அவர்களுக்குதான் இங்கே திருமனவிழாவாக இருந்தாலும்,இறப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும்  முதல் மரியாதை முக்கியத்துவம் எல்லாம்,  உறவுகளிடையே இதை போல் அங்கீகாரம் கிடைத்து விட்ட பிறகு, தான் செய்யும் ஊழல் நிச்சயமாக தவராகவேதெரியாது அது மேலும் மேலும் வளரத்தான் செய்யும். ஊழல் செய்பவரை அண்ணாந்து அசிங்கத்துடன்  பார்த்த பார்வை போய் பிழைக்க தெரிந்தவன் என்ற ஆச்சரியத்துடன் பார்பதற்கு சமுதாயம் பழகிவிட்ட பிறகு, யாரொருவர் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும்   ஊழல் செய்யாத  பாவப்பட்ட மனிதரை தான் இன்று அண்ணாந்து அசிங்கத்துடன் பார்க்கிறோம். பிழைக்க தெரியாதவன்என்ற அடைமொழியாலே வசைபாடுகிறோம்.  தன்னுடைய மனைவி இடமே அவப்பெயர் வாங்கி தன்னுடைய தள்ளாத காலத்தை தவிப்புடன் வழக்கை வாழ்கிறார்கள்.தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஊழல் செய்தவர்கள் எந்தவித குழப்பப்மும், குற்ற உணர்வும்  இல்லாமல் நிமதியாக தன்னுடைய முதுமையை கழிக்கிறார்கள். இதுதான் எதார்த்தம் என்று சொல்லியே எல்லோரும் ஊழலின் வலியோடு வாழபழகிவிட்டோம். அது இல்லாமல் வாழ்வதுதான் கடினம் என்ற சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். உண்மையான வாழ்கை போராட்டத்தை உணர்ந்து கொண்டாலொழிய இந்த ஊழல் ஒழியாது அது நிழலை போல் நம்முடனே இருந்து கொண்டே இருக்கும்.

»

நடிகர் விஜயின் ஜில்லா பொங்கல் வெளியீடாக இல்லாமல் இருப்பது நல்லது

டிகர் விஜயின்   ஜில்லா பொங்கல் வெளியீடாக இல்லாமல் இருப்பது நல்லது.அவசர அவசரமாக ஜில்லாவை திரைக்கு கொண்டுவருவது இந்த நேரத்தில் நல்லது இல்லை ரஜினியின் பெயராலேயே சினிமாவில் தன்னை நிலைநிறுத்தி கொண்டவர் விஜய்.அவருடைய ரசிகர்களில் பெரும்பாலனவர்கள் ரஜினிப்பிரியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். விஜயின் தற்போதைய நிலையில் ஒரு உச்சபட்ச வெற்றியை கொடுக்கவேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறார் என்பது உண்மை எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவசரமாக களம் இறக்குவது என்பது ஆபத்தான விளையாட்டு துணிந்தபின் துயரம் கொள்ளவதை விட நிதானமான வெற்றி சிகரமே சிறந்தது என்பதை நமக்கு இந்த சினிமாதுறையே நன்றாக விளக்கி இருக்கிறது என்பதை விஜயும் படத்தின்  தயாரிப்பாளரும் மறந்துவிடக்கூடாது. இப்போது விஜய்க்கு மிகவும் நெருக்கடியான சூழ்நிலை இருப்பது உண்மைதான் எனவே விஜய் அவர்களே சிந்தித்து செயல் படுங்கள் அது உங்களுக்கு நல்லது நீங்கள் மனதில் கற்பனை செய்து வைத்திருக்கும் சிகரத்தின் வெற்றிக்கும் நல்லது.

»

தாய் அன்புக்கு சாட்சி

ஒரு தனியார் தொலைக்காட்சி  நடத்திய போட்டி நிகழ்ச்சி ஒன்றில் ஆட்டிசம் என்ற ஒருவகையான மனநோயால் பதிக்க பட்ட 16 வயது மகனை கலந்துகொள்வதர்க்காக அழைத்து வந்திருந்தார்   காட்பாடியை சேர்ந்த  இந்த்ராணி என்ற தாய்.தன் மகன் மீது கொண்டிருந்த  பாசமும் மகனை எப்படியாவது நல்நிலைக்கு உருவாக்கிவிடவேண்டும் என்ற வைராக்கியமும் அந்த  தாயிடம் பார்க்க முடிந்தது. இந்தகைய பாசத்தையும் இத்தகைய உணர்ச்சியையும் தாய் அல்லாத ஒருவரிடமும் நாம் பார்க்க முடியாது என்பது உண்மை. மகன் எந்த நிலையில் இருந்தாலும் தாய்க்கு அவன் மகன்தான்.அந்த தாய் அந்த மகனை 16 வருடங்கள் வளர்பதற்கு  எந்தகைய துன்பங்களை தாங்கி இருப்பார்  அதைவிட  இந்த சமுதாயத்தின் குத்தும் பார்வையை உள்வாங்கி  இருப்பார் என்பதை  நாம் உணரவேண்டும்.இத்தகைய குறைபாடுள்ள ஒரு மனிதனை தன்னுடன் அனைத்து அரவணைத்து செல்வதற்கு தாய் என்ற உறவால் மட்டுமே முடியும்.நிச்சயம் அவர் உற்றார் உறவினர்கள் இந்தகைய மகனை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்துவிடவேண்டும் என்ற வேண்டாத ஆலோசனையை வழங்கி இருப்பார்கள்.அதை தவிர்த்துதான் கடந்த 16 வருடமாக தான் பெற்ற அந்த மகனை தன்னுடன் வைத்திருந்து அந்த குறைபாடை போக்குவதற்காக அன்பு என்னும் வைத்தியத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.திருப்பதி சென்ற பொது ஒருமுறை மகனை வழி தவறவிட்டு விட்டதாகவும் இரண்டு நாட்கள் கழித்து தேடி கண்டுபிடித்ததாகவும் அந்த நிகழ்ச்சியில் அவர் சொல்லும்போது நிச்சயம் இப்படி மனநிலை உள்ள ஒரு மனிதனை தவறவிட்டு விட்டு மீண்டும் தேடி கண்டுபிடிக்கவேண்டும் என்ற மன நிலை ஒரு தாயை தவிர வேறுயாருக்கும் வராது. தாய் பாசம், தாய் அன்பு என்பதற்கு இந்த காட்பாடியை சேர்த்த இந்துராணி போன்றவர்கள் இன்னமும் சாட்சியாக இருக்கிறார்கள். நாகரீகம் என்ற பெயரில் காதலன் தரும் போலி சுகத்திற்க்காக சுற்றித்திரிந்து, குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசி திரியும் பெண்கள் அதிகரித்து விட்ட இந்த கால கட்டத்தில் தாய் அன்பு தாய் பாசம் தாய்மை என்பதெல்லாம் எழுத்தால் யாருக்கும் புரியவைத்து விட  முடியாது  அது உணர்தலின் மூலம் தெரிந்து கொள்ள  கூடிய ஒரு  விஷயம்.வெற்று உடம்பில் ஆண்மை கலந்து கருத்தரித்து குழந்தையை ஜனித்தால் மட்டுமல்ல தாய்.தாய் என்ற சொல்லுக்கு வெறும் குழந்தை பிறப்பு மட்டுமல்ல பொருள் அதையும் தாண்டி ஆயிரம் செய்கைகளும் ஆயிரம் அர்த்தங்களும் பொதிந்ததுதான்  அந்த சொல்.ஒரு பெண் தாய்மையை வெறும் உடல் சம்பாத்த பட்டதாக எண்ணிவிடவேண்டாம் அது உள்ளம் சம்பத்தபட்ட்டது,உயிர் சம்பத்தபட்டது என்பதை உள்வாங்கி உணரவேண்டும்.இந்த காட்பாடி இந்த்ராணியை போல் ஆயரம் ஆயரம் இந்த்ராணி என்ற தாய்மார்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.தாயை போற்றுவோம் தாய்மையை காப்போம்.

»

ஆயுதம் எங்கு கிடைகிறது இவர்களுக்கு

அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய போராட்ட்டம் என்பது எல்லா காலகட்டங்களிலும் இந்த உலகத்தில் இருந்து வந்திருக்கிறது அவர் களின் போராட்டம் என்பது அவர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும் என்பது வேறு ம் பேசுவது நன்றல்ல.ஆனால் இப்படி போராடக்கூடிய    போராளிகளுக்கு அவர்கள் பயன் படுத்தும் ஆயுதம் அவர்களுக்கு எங்கிருத்து கிடைகிறது என்பது நமக்கு புரியாத புதிராகத்தான் இருக்கிறது.இன்னமும் நாம் கவனமாக பார்த்தோமேயானால் இவர்கள்  பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தும் புதுவகையை சேர்ததாகத்தான்  இருக்கிறது அப்படியானால் இவர்களுக்கு நடப்பில் உள்ள ஆயுதங்களை எந்த விதமான தங்குதடையுமில்லாமல் கிடைக்க செய்பவர்கள் யார் என்பது  சாதாரண மனிதனாகிய நமக்கு விடை தெரியாத கேள்வியாகத்தான் இருக்கிறது.இவர்களுடைய போராட்டம் நியாயமானதாக கூட இருக்காலாம் ஆனால் இவர்கள் ஆயுதம் நிச்சயமாக நேர்வழியில் வாங்கிக்கொள்ள முடியாது என்பது உண்மை. அப்படியானால் இவர்கலூடான தொடர்பில் இருப்பவர்கள் யார் யார் அவர்களுக்கு இந்த  போராட்டத்தை ஆதரிக்கும் போராட்டகாரர்களா இல்லை  வெறும் ஆயுத விற்பனையாளராகத்தான் இருக்கிறார்களா? இவர்களின் தொழில் ஆயுதபரிமாற்றம்தானா அல்லது வேறுதொழிலில் உள்ளவர்கள் பலர் கூடி இதை செய்கிறார்களா.நடப்பில் உள்ள புதுவகையான ஆயுதங்கள் எங்கோ தொடர்புகொள்ள முடியாத இடத்தில் பதுங்கி இருக்கும் இவர்களை எப்படி சென்றடைகிறது இதை உன்னிப்பாக கவனித்தால் ஒன்று நமக்கு புலப்படவில்லை ஆயுதங்களை சர்வசாதாரணமாக பெற்றுக்கொள்ள கூடிய தூரத்தில் இருக்கும் இந்த போராட்டக்காரர்களை நாம் பல வருடங்களாக தேடும் முயற்சியில்தான் இருக்கிறோம்.அவர்களின் இயக்கங்களும் வளர்த்து கொண்டேதான் போகிறது.ஆயுத பரிமாற்றத்தை தொழிலாக  செய்ய பல முகமூடியை அணிந்து நாட்டில் இருக்கிறார்கள் இவர்கள்தான்  எங்கோ இருந்து போராடும் போராளிகளை விட  மிக மிக ஆபத்தானவர்கள் போராட்டத்தில் சுவாலையை அணையவிடாமல் பார்த்து கொள்ளுவது தான் இவர்களது தொழிலின் முனேற்றம் எனவே இப்படிப்பட்டவர்களை இனம் கண்டு விலக்குவது தான் இந்த ஆயுதம் ஏந்தி போராடுபவர்களை ஒரு நிலைக்கு கொண்டுவரமுடியும் அவர்களுடனான வாழ்க்கை முறையையும் மாற்றமுடியும்.புலிவாலை பிடித்தைகதையாக பலபேர் இருக்க கூடும் அவர்களை நல்வழிக்கு திருப்பிட முடியும்.

»

தாய் என்ற சொல்

தாய் என்ற சொல் வெறும் உறவை குறிப்பது மட்டுமல்ல அது அன்பு என்னும் சொல்லுக்கு ஒரு அர்த்தத்தை தரக்கூடியது.தாய் அன்பு என்பது ஒரு பெண்மையின் உச்சகட்ட அடையாளம்.தாய்மையை ஒரு பெண் உணரும்போதுதான் அந்த பெண் வாழ்கையில் இயற்க்கை தமக்குதரப்பட்ட இடத்தை உணர்கிறாள்.இந்த தாய் உறவு  தான் கடைசிவரை மாறாதது.
தாய் என்ற ஈரெழுத்து சொல், உச்சரிக்கும்போதே தமக்குள்ள ஒரு அன்பு சுரப்பதை ஒவ்வருவரும் உணர்வார்கள்.தாய் என்பவள் தன்னலம் உணராதவள் உணர்சிவயபடாதவள் நம்மை பிரசவிப்பதால் அவளும் ஒரு கடவுள் தான்.இந்த பிரசவத்தை வெறும் காமமாக பார்க்கும் நான்காம் கட்ட மனநிலைக்கு மனிதன் வந்துவிட்டால் அன்று பிறழ்வுகள் நடக்க துவங்கி விடும். இருக்கும்போது தாயை பெருமையையும்,முக்கியத்துவையும் உணராதவர்கள் அவள் இறந்தபின் அதன் வேதனையை வெளிகாட்டாமல் இருக்க முடியாது.தன்னை  மாய்த்து கொண்டு தன்னுடைய பிள்ளைகள் வாழ்கை முன்னேற்றத்தில் வெற்றிபடிகளாய் நின்றவளும்,அனல் வீசும் வழக்கை சூழலை தான் வாங்கிகொண்டு குளிர்காற்றை தன் சிசுக்களுக்கு கொடுத்து இமயமாய் வளர்ந்த தாயும் உண்டு. தாய் பாசம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல எல்லஉயிரினத்திற்கும் இருக்கிறது என்பதற்கு நம் நடை முறை வாழ்க்கையில் நாம் கண்ட பல காட்சிகளே உதாரணம் .தாய் பாசம் என்பது பெண்ணிடத்தில் மட்டுமல்ல ஆணிடத்திலும் சுரக்ககூடிய ஒரு அற்புத நிகழ்வு.ஒரு சிசுவை பிரசவிப்பதை மூலம் தான் தாய் பாசம் ஆணிடம் இருந்து ஒரு நூலிழை உயர்ந்து பெண் இருக்கிறாகள்  மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியில் தாய் பாசம் என்பது தாய்மை என்பதும் கேள்விகுறியாகிவிட்டது.தாயிடம்  பாசத்தை காட்டுவதற்காக ஒருதினத்தை தேர்தெடுத்த அன்றே நாம் வார்த்தையால் சொல்லமுடியாத இந்த தாய் அன்பை கேலி கூத்தாகிவிட்டோம்.தாய் அன்பு என்பது நமது நினைவுகளை இருந்து அழிக்கமுடியாத ஒன்று அதை நினைத்து பார்க்க ஒருதினத்தை நாம் தெரிவுசெய்ய வேண்டுமா என்ன. அவளை மறந்தவர்கள் நினைப்பதர்க்குதான் இந்த நினைவு தினங்கள் அதன் தொடர்பாகவரும் அனைத்து நிகழ்வுகளும் ஆனால் என்றும் என்னுடன் ரத்தமும் சதையுமாக இருக்கும் அந்த உயிருடன் உலவும் பாசத்திற்கு இதல்லாம் தேவையில்லை. நம்மை ஈன்றபோது அவள் பெற்ற வலியை நாம் மறப்போமா,நாம்மையும் அறியாமல் நம்முள் சுரப்பதுதான் தாயின் மீதான பாசம் நம்மையும் மீறி நம் கட்டுக்கு அடங்காத சில உணர்சிகள் போல்தான் இந்த தாய் பாசம்.எதையும் எதிபார்க்கும் அன்பு அல்ல இந்த தாய் அன்பு அதை விவரிப்பது கடினம் உணர்வதுதான் சுலபம்.அதை ஒருமுறை உணர்ந்தால் அதன் உண்மை புரியும். தாயின் அன்பை உணருங்கள் தாய்மையை போற்றுங்கள்.

»

இலங்கை பொதுநலவாய மாநாடும் இந்திய போராட்டமும்

பொதுநலவாய மாநாட்டில் இந்தியாவின் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்றும், இந்தியாவின் சார்பில் சல்மான் குர்ஷித் கலத்துகொளுவதாக அறிவித்தாகிவிட்டது.இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கூடாது என்று பலர் தமிழ்நாட்டில் போராட்டத்தின் காரணமாகவும் தமிழக காங்கிரஸ் கட்சி பிரமுகர்களின் அழுத்தம் காரணமாகவும், அரசியல் சூழ்நிலையை மனதில் கொண்டும்,ஆளும் மத்திய காங்கிரஸ் அரசு இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது.இந்தியா பிரதமர் கலந்து கொள்ளாமல் போனதால் எந்தவிதமான அழுத்தமோ மாறாக எந்தவிதமான தீர்வோ கிடைத்து விடாது,யாருக்குமே எந்த லாபமோ நஷ்டமோ கிடையாது.இந்த மாநாட்டு பற்றிய  விவாதங்கள், போராட்டங்கள் எல்லாம் மாநாடு முடிந்த கொஞ்ச நாட்களில் அதன் சுவடுகள் தெரியாமல் மறைந்து போகும்.பின் மீண்டும் ஒரு சூழ்நிலை வரும்வரை யாருமே ஈழத் தமிழர்களை நினைப்பதே கிடையாது.இங்கே நடந்துவருகின்ற ஈழ ஆதரவு போராட்டங்கள் எல்லாமே ஒரு தீர்வை நோக்கி செல்லவில்லை. இந்த போராட்டங்கள் எல்லாமே தற்காலிக தீர்விர்கானதகத்தான் இருக்கின்றன.அதிலேயே திருப்பதி அடைகின்ற வகையில்தான் இந்த போராட்டகாரர்களும் இருக்கிறார்கள். பொதுநலவாய மாநாடு இலங்கையில்தான் நடைபெறும் என்பதை அறிவித்துடனேயே அதில் உடன்பாடு இல்லாதவர்கள் அங்கே நடத்தாமல் இருப்பதற்காக என்ன வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அறிந்து அதை செய்வதற்கு முன்வராதது வருத்தம் அளிக்கிறது ஒரு நிகழ்வாகத்தான் இருக்கிறது.ஈழ சம்பத்தப்பட்ட போராட்டத்தில் எப்போதுமே மாணவர்கள் ஈடுபாட்டுடன் போராடவருகிறார்கள்.நம் போராட்டங்கள்  அதன் தீர்வை நோக்கி நம்மை வழிநடத்தும் தலைவர்கள் எடுத்து செல்கிறார்களா என்று என்றுமே  சிந்தித்ததில்லை.மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள கூடாது என்ற ஒற்றை குறிகோளுடன்  போராட்டங்கள் மங்கிவிடுகின்றன.எந்த வித போராட்டத்தையும் அதன் முடிவுரை எழுதும் வரை எடுத்து செல்வது தான் போராட்ட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு அதை  வழி நடத்துபவர்களுக்கு நன்மையை பயக்கும்.போராட்டத்தை சரியான வழியில் நடத்தி வேண்டும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் தேவையில்லாத உணர்சியூட்டல்கள் தனிமனித விரோதங்கள்  தவிர்த்து உண்மையிலே நல்ல தீர்வை நோக்கி மட்டும் செயல்ப்படுமாயின் போராட்டத்தின் நோக்கத்தின்  வெற்றி நம்மை நோக்கி வரும். மாறாக சுய லாப நோக்கிருந்தால் வெற்றி சிதறிவிடும் வெறும்  போராட்டமே மிஞ்சும்.

»

தமிழ் மொழி வரி வடிவத்தில் என்ன குழப்பம்

தமிழ் மொழியின் வரி வடிவத்தை மாற்றவேண்டும் என்ற குரல் இப்போது பரவலாக பலராலும் முன் வைக்க படுகிறது.தமிழ் மொழியை எளிமை படுத்துவதற்காக இதை செய்ய வேண்டும் என்றும். பல முன்னாள் அரசியல், மற்றும் மக்கள் தலைவர்கள் சொன்னதை இவர்களின் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாகவும் இதை முன் எடுக்கிறார்கள்  . தமிழ் மொழியை வளர்பதற்கு இது பயன் படும் என்று இவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது எந்தவகையில் தமிழை வளர்க்கும் என்று தெரியவில்லை. உச்சரிப்பு இனிமை கொண்ட மொழி தமிழ் அதன் வரி வடிவத்தை மாற்றவேண்டியதன் அவசியம் என்ன என்பதை இவர்கள் தெளிவாக சொல்ல வில்லை.ஒரு மொழி உயிரோட்டமாக இருப்பதற்கு அதன் தனித்தன்மைதான் மிகவும் முக்கியம். நம்மிடம், நம்மொழியில் என்ன இல்லை எல்லாம் இருந்தும் அதை வெளிகொண்டுவருவதர்க்கான முயற்சியில் இறங்கவேண்டுமே தவிர இதை போல் அபத்தமான முயற்சியை முன் எடுப்பது ஆபத்தானது.சிலர் செய்யும் சிறுதவறுகளை எழுத்து பிழைகளை திருத்திகொள்வதர்கான செய்கைகளை வளர்க்கவேண்டும் அதை விடுத்து கையை சுட்டு கொண்டால் விரலை வெட்டுவது சரியல்ல  இப்போது உள்ள வரிவடிவத்தில் என்ன குறை இருக்கிறது அதை ஏன் நாம் மாற்றி புது குழப்பத்தை ஏற்படுத்திதரவேண்டும். வேற்று மொழிகளுக்கு நாம் வரிவடிவம் கொடுக்கும் அளவிற்கு நம் மொழியை கொண்டுசெல்வதுதான் நாம் நம் மொழிதைக்கு செய்யும் நன்றிகடன். அதை விடுத்து செய்நன்றி மறப்பது என்பது நமக்கு அழகல்ல. இதை யார் என்ன காரணத்திற்க்காக செய்ய முயல்கிறார்கள் என்று ஆராய்ந்து முன் எடுக்கும்  முன்பே முற்றுபெறவைப்பது நன்று.

»

மங்கள்யான் இந்தியாவின் பெருமையா

மங்கள்யான் வெற்றிகரமாக் விண்ணில் பறந்தது ஆசியாவிலேயே முந்திக்கொண்டு இந்தியா செய்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக  முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளின் மூளையில் உருவானது இந்த விண்கலத்தை பறக்க விட்டிருக்கிறது .இதை பலர் எதிர்த்தாலும், சீன பத்திரிக்கைகள் ஏழைகள் அதிகம் வாழும் நாட்டில் 450 கோடியை இது போன்று செலவு செய்தது சரி இல்லை என்று சீன பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டிருக்கிறது,செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி தோல்வியுற்ற  சீனாதான் இந்த செய்தியை பரப்புகிறது இதுபோல் நிகழ்வை பார்த்துதான் நம் முனோர்கள் சொன்னார்கள்  ஆடுனனைகிறது என்று ஓநாய் அழுகிறது என்று. இதை வைத்து கொண்டு இகேயும் பலர் இதை எதிர்க்கிறார்கள் வீணான செலவு என்கிறார்கள்.தங்களுடைய முயற்சிகள் அனைத்தும் இந்தியாவிற்கு பயன் படவேண்டும் என்று நினைத்து இந்தியாவிலேயே தங்கிவிட்ட விஞ்ஞானிகளுக்கு ஊக்கத்தை  கொடுப்பதற்காக இதைபோல் செய்வது மிகநன்று நிச்சயமாக நமவர்கள் சாதிப்ப்பார்கள்.நாமே நம்மை நம்பாவிட்டால் வேறு யார் செய்வார்கள். நல்லவேளையாக இந்த எதிர்ப்பு பெரிய விளைவுகள் ஒன்றையும் ஏற்படுத்தவில்லை.மங்கள்யான் நம் தேசத்திற்கு பெருமையே ஏற்படுத்துகிறதோ இல்லையோ நாம் நம்ம்மவர்களுக்கு நாம் பெருமை சேர்ப்போம். 

»

தமிழ் மொழி

மாநில மொழிகளை படிக்க, எழுத  தெரிந்தால்தான், மாநில அரசாங்க வேலை என்ற முடிவை எடுத்தாகவேண்டிய சூழ்நிலையில் நம் அரசு இருக்கிறது. தாய் மொழியை காக்கவேண்டிய முழு பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது.எத்தனையோ முன்னோர்களின் கடினமான அர்பனிப்பிர்க்கு பின் நம்முடைய மொழி பல ஆண்டுகள் கழித்தும் தலை நிமிர்ந்து நிற்கிறது வழக்கு மொழியாகவும் பேசும் மொழியாகவும் திகழ்கிறது.இன்று மொழி பற்று என்பது பேச்சளவில் கூட நம்மிடையே இல்லை பின் எப்படி உணர்வு பூர்வமாக நாம் அதை சிந்திக்க போகிறோம்.நம்மில் உள்ள இந்த மொழி ஆர்வம் சிதைந்து போனதற்கு காரணம். நம்முடைய மாநிலத்திலேயே நம்மொழி படித்தவர்களுக்கு  எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்க வில்லை என்பதுதான்.அது வேலை கிடைப்பதாக இருந்தாலும்,வேறு எதுவாக  இருந்தாலும் நம் மொழி பேசி எந்த பயனும் இல்லை என்ற உணர்வை நம்முடைய அரசாங்கங்கள்களும் அதனுடே கூடிய இந்த வெகுஜன முற்போக்கு வாதிகளும் ஏற்படுத்திவிட்டனர்.மற்ற மாநிலங்களில் அவர்களுடைய மொழிகளுக்கு கொடுக்கப்படும் ஒரு அங்கீகாரம் நம் தமிழ் நாட்டில் நாம் கொடுப்பதில்லை மாறாக அதை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருக்கிறோம். இதைபோல்லுள்ள அனைத்து இடையுருகளையும் தாண்டித்தான் தமிழ் தன்னை பாதுகாத்து வருகிறது.தமிழர்களை தமிழ் மொழி துரோகிகாளாக ஆகக்கூடிய ஒரு துணிவு நம்முடைய மாநிலத்தில்தான் முடியும்.சுயநலம் சாராமல் வீடு மறந்து நம் மொழிக்காக பயணப்பட்டவர்கள் பல ஆயிரம் பேர் அவர்களின் ஆன்மாக்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவாவது நம் நடந்து கொள்ளவேண்டாமா.நம் தாயையும் தாய் பாசத்தையும் எப்படி இன்று விவாத பொருலாக்குகிறோமோ  அதை போல்  தான்  இந்த தாய் மொழியையும் நாம் விவாத பொருளாகுகிறோம்.குறைகள் இருப்பினும் அதை நிவர்த்தி செய்ய வழிதேடாமல் நம் மொழியை நாமே குறைத்து பேசித்தான் நம்முடைய  நடுநிலையை  நாம் வளர்க்க வேண்டுமா.நம் மாநிலத்தில் உள்ள பல அன்பர்கள் இன்று தமிழ் மொழிக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் காரணம் அவர்கள் யாரும் மொழியால் உணர்வால் தமிழர்கள் அல்ல அவர்களின் தாய் மொழி வேறு பிழைப்பு மொழிதான் தமிழ் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.நம் தாயை மறந்தாலும் நம்முடைய தாய் மொழியை நாடி நரம்பெல்லாம் உணர்வாக நிரப்பி  நமாக்காக கசங்காமல் நசுங்காமல் தெள்ள தெளிவாக நமக்களித்து சென்றார்கள் நம் முனோர்கள்  நம் வரும்கால சந்ததியினருக்கு அதை போல் ஒரு தெளிவான மொழியை நம் மொழி என்று நாம் வழங்கி செல்ல போகிறோமா இல்லை மொழியில்ல இனம் என்ற பழியை விட்டு செல்ல போகிறோமா.உணர்ந்து செயல் படுங்கள் தமிழர்களே நம்மிடம் உள்ள பிறமொழிகலப்பை தவிர்ப்போம் மொழியை காத்து வரும் கால சந்ததியினருக்கு அளிப்போம் என்ற உறுதிமொழியை செயல் பாட்டிற்கு  கொண்டுவருவோம் .

»

இளமையில் வறுமை வரப்ரசாதம்

இளமையில் வறுமை என்பது மிக கொடுமை என்பது தெரியும் ஒரு மனிதனுக்கு இளமையில் வறுமை வரவே கூடாது என்று எண்ணம் இருந்தாலும் , ஆனால் அதுதான் ஒரு இளைஞனை  செம்மை படுத்த  உதவுகிறது. எவ்வளவு  செலவு செய்தும்  கற்றுக்கொள்ள முடியாத வாழ்வியல் தத்துவத்தை கற்றுத்தர உதவுகிறது.இளமையில் வறுமை தரும் படிப்பினை நம்முடைய எதிர்காலத்தை வளமையாக்கவும்,நமக்கு எதையும் தாங்ககூடிய மனஉறுதியை அளிக்கிறது,இந்த உலகத்தையும் பணத்திற்கான மதிப்பையும் நமக்கு ஒருசேர விளங்க வைக்கிறது.பணபோதையால் கெட்டு சீரழிவதை  தவிர்த்து கல்வி என்ற தேனமுதை நமக்கு வழங்குகின்றது. குடிசுவரை நோக்கி நம் வாழ்வை தள்ளிக்கொண்டு போகாமல் கோபுரத்திற்கு இழுத்து செல்லும் வல்லமை கொண்டுள்ளது,இளமையில் ஏற்படும் வறுமைக்கு நண்பர்கள் தோள்கொடுப்பார்கள் மனம் தொய்வில்லாமல்  பார்த்து கொள்ளுவார்கள்.இதன் மூலம் ஏற்படக்கூடிய படிப்பினை நம் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிகாட்டக்கூடியதாக இருக்கிறது.இளமையில் உணரவேண்டிய ஒரு உணர்வு வறுமை, அது  இயற்கையாகவே அமைவது ஒரு வரப்ரசாதம்தான். சில இளைஞர்களுக்கு பணத்தின் அருமையை புரியவைப்பதற்காக பணபோதையால் தேவையில்லாததை கற்றுக்கொண்டு எதிர்காலத்தை வீணடித்து விடாமல் இருப்பதற்காகவும் பெற்றோர்கள் செயற்கையான ஒரு வறுமையை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பார்கள் அது பல இடங்களில் விபரீதமாக முடியும். எனவே இளமையில் வறுமை  என்பது மனிதனுக்கு கிடைத்த ஒரு அற்புதமான சக்தி அதனை ஏற்றுக்கொண்டு வாழ பழகிகொள்ளுங்கள்.ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்பதை மனதில் கொள்ளுங்கள். இளமையை விட, முதுமையில் வறுமை தான் மிக கொடியது அதை புறம் தள்ள இளமையிலேயே வறுமையை சந்தித்து வைர நெஞ்சோடு வறுமையை வெட்டி வீழ்த்திவிட்டு வீறுகொண்டு வாருங்கள்

»

பணம் வேண்டும் நமக்கும் கிடைக்கும் சிரத்தை இருந்தால்

பணம் வேண்டாம் என்று எந்த மனிதனும் கூறுவதில்லை. அந்த அளவிற்கு பணத்திற்கு வாழ்கையில் முக்கியத்துவம் உண்டு. அது வெறும் காகிதம் தான் இருந்தாலும் அதை மிதித்து விட்டால் அதை தொட்டு வணங்கும் பழக்கம் நம்மில் நிறைய நபர்களுக்கு உண்டு  நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தின் காரணமாகத்தான் இது நடக்கிறது.பணம் வேண்டும் என்று நினைக்கிறோம் ஆனால் அதை தக்கவைத்து கொல்லுவதற்காக எதையும் செய்வதில்லை .இதிலிருந்து நமது வாழ்கையில் பணம்  என்பது முக்கிய பங்கு வகிக்கிறது எனவே நாம் பணத்தேவையை எப்படி பூர்த்திசெய்வது.சாதாரணமாக நாம் யாரும் நமது மாத வருவாய்  எவ்வளவு என்று கணக்கிடுவதில்லை,அதை போல் எவ்வளவு செலவு செய்கிறோம் என்ற கணக்கையும் நாம் செய்வதில்லை, மாத சம்பளத்தை பெற்றவுடன் மனம் போன போக்கில் செலவு செய்வதுதும் மத கடைசியில் பண தேவைக்காக சிந்திப்பதும் வாடிக்கையான ஒன்று.வருவாய் எவ்வளவு என்று சரியாக கணிக்க தெரிந்து கொள்ளுவதுதான் பணம் பண்ணுவதற்கு  மிக முக்கியம், அதை விட  முக்கியமான ஒன்று  நம்முடைய செலவு கணக்கு. போகிறபோக்கில் வாழ்துவிட்டு போவதல்ல வாழ்கை.நம் வாழ்வில் நம்முடன் இருந்த எத்தனையோ நபர்கள்.நம்மை விட்டு வெற்றிபடிகட்டுகளில் ஏறி முன்னேறி கொண்டிருப்பதை தினமும் நினைத்துபாற்பதுண்டு அவர்களை ஏளனம் செய்யாதீர்கள் நம்மிடம் இல்லாதது பண்பு அவர்களிடம் என்ன அதிகபடியாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் வேண்டியதை தயங்காமல் எடுத்து கொள்ளுங்கள்.  ஆனால் ஏன் சிலர் மட்டும் அந்த படிக்கட்டுகளில் ஏற மறுக்கிறார்கள்.காரணம் பிறரை குறை கூறுவதனால்தான். வாழ்கையில்  முதலில் நாம் தவிர்க்க வேண்டியது.தகுதிக்கு மீறிய செலவுகளையும்,பகட்டான வழக்கை முறையும் தான்.நாம் உண்டரவேண்டியது நமக்கு தேவையான வாழ்கை முறை எது  என்பதை  அதை புரிந்து கொண்டு அதற்க்கு தேவையானவற்றை சிரமமாக இருந்தாலும் கடைபிடிக்கவேண்டும்.போலியான தகுதியை நீங்களே கற்பனை செய்து கொள்ளாதீர்கள்,அந்த கற்பனை போர்வையை போர்த்திக்கொண்டு வளம் வராதீர்கள் அது ஆபத்தானது உங்களை வளரவிடாது. உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் உங்களை எந்த அளவுகோலில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாலே உங்களின் வெற்றிபயணம் ஏன் தடை படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.உங்கள் பணத்தை குறிவைத்தே சிலர் உங்களிடம் பழகுவார்கள் அவர்களை சமாளிப்பதே பெரிய சவாலாக எடுத்துகொண்டு செயல் படவேண்டும் இது தான் நீங்கள் பணம் பண்ணுவதற்கான முதல் படி.அவசர காலத்தில் பிறருக்கு உதவுவது தவறல்ல ஆனால் நீங்கள் உதவி செய்யும் நபரின் நிலைத்தன்மையை பொருத்தும்  உங்களுடைய வாழ்க்கை முறையை பொருத்தும் தான் நம்முடைய உதவி இருக்கவேண்டும்.வாழ்கையில் பணம் வருவதற்கான வழியாக இறந்தால் அந்த பாதையில்  உடனடியாக பயன்பட தயாராகுங்கள், நம்மிடம் இருந்து பணம் செல்வதாக இருந்தால் ஆயிரம் முறை சிந்தித்து செயல் படவேண்டும்.நம்முடைய வழக்கை தரம் உயர்வதற்கு இது மிக மிக முக்கியம்.உங்களிடம் இருக்கும் பணம் தான் உங்களின் மன அமைதியின் ஒரு அங்கம் என்பதை நீங்கள் உணரவேண்டும்.உங்கள் கையில் இருந்து பணம் செல்லுவதற்கு காலவரையறை மிக குறைவு, நீங்கள் செலவு செய்த பணத்தை பெறுவதற்கு செலவிடும் காலவரையறை மிக அதிகம் என்பதை மனதளவில் பாடமாக்க வேண்டும்.நாம் இப்போதுள்ள வருவாய் எப்போதும் நமக்கு கிடைக்கும் என்ற அசட்டையான நம்மிக்கையை தவிர்க்க வேண்டும் .சேமிப்பை வார்ப்பதும் அதை முறையாக பராமரிப்பதும் பணம் செய்வதற்கான வழி என்பது உங்களுக்கு தெரியும் ஆனாலும் அதை பெரும்பாலானவர்கள் சரியாக செய்வது இல்லை.நம்மில் பல நபர்களுக்கு வங்கி கணக்கே இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் அதை சரியாக பாராமரிப்பவர்கள் மிகவும் குறைவு.  வங்கி கணக்கு துவங்கி அதை பராமரிப்பது என்பதே சேமிப்பில் மிக பெரிய கலை. அந்த கலையை சரிவரகற்றுக்கொள்ள வேண்டும்.  சேமிப்பதில் முடிந்தவரை பிடிவாதமாக இருங்கள்.பிடிவாதமான சேமிப்பு தான் உங்களை வாழ்கையில் வளர்வதற்கு உதவும்.தேவை இல்லாத செலவு சதவிகிதத்தை புறிந்து கொள்ளுங்கள் அதனை குறைப்பதில் கவனம் செலுத்துங்கள்.மேலும் நாம் சிந்திக்க வேண்டியது ஒன்று அது கடன் வாங்குவது, அவசியம் இல்லாமல் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், அவசியத்துடன் கடன் வாங்குவதை குறைத்து கொள்ளவேண்டும்.ஒவ்வருமதம் நீங்கள் செய்த தேவை இல்லாத செலவுகளை நீங்களே பட்டியல் இட்டு பார்க்க வேண்டும் அது  எந்த எந்த சந்தர்பத்தில் நிகழ்தவை என்று பார்த்து அதை போல் ஒரு சந்தர்பத்தை தவிர்க்கவேண்டும்.உங்களுக்கு நீங்களே கதாநாயகனாக பிறரிடம் காட்டிக்கொள்ள முயற்சிக்க வேண்டாம்,அது உங்களை மிக பெரிய  பாதாளத்தில் தள்ளிவிடும். அவர்களாகவே உங்களை ஏற்றுகொள்ளும் வரை பொறுத்திருங்கள் அது உங்களை உயர்த்திக்கொள்ளும்.அதுதான் உண்மையான வளர்ச்சி அது உங்களை அறியாமலேயே நடந்துவிடும்..

»

நேரம் சரியில்லையா சகோதரா சிந்தியுங்கள்

எனக்கு நேரம் சரியில்லை என்று முடங்கி கிடப்பது என்பது அனைவரது வாழ்கையிலும் வந்து செல்ல கூடிய ஒன்று.  அனைவருக்குமே ஒரே நேரம் தான் இந்த உலகத்தில் கொடுக்கபட்டிருக்கிறது அதை நாம் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதில்தான் நம்முடைய நேரம் சரியானதா அல்லது சரியில்லையா என்ற தீர்மானம் வருகிறது என்றுமே நம்முடன் அல்லது நாம் பழகுகின்ற மனிதர்களை பொருத்துதான் நமது வாழ்கையின் பாதை செல்கிறது நமது நேரமும் நமக்கு சாதகமாக இருக்கிறது. முதலில் நாம் நம்மை பற்றி மனசுத்தியுடன் தெரிந்து கொள்ளவேண்டும்.நாம் வாழ்வின் எந்த நிலையையும் அடைய முடியும் ஆனால் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளவது நாம் நல்ல நேரத்தை நோக்கி பயணிப்பதற்கு உதவியாக இருக்கும். முதலில் தேவையில்லாத நமக்கு  முற்றிலும் ஒவ்வாத செய்கைகளை நினைத்து பார்ப்பது தவிர்க்க வேண்டும்.எதை எப்போது செய்யவேண்டும் என்பதை உணர்ந்து செய்வது தான் நல்லது. நாம் நினைப்பது  செய்வதுதான் சரி என்ற நினைப்பை விட்டு விட்டு நாம் நினைப்பது சரியாக இருந்தாலும் அதை சிந்தித்து பிறகு செயலாக்கத்திற்கு கொண்டுவருவருவது நல்லது.அதிகம் போசுவதை விட அதிகம் கேட்பது நலம் எம்போதுமே எதிலுமே முதன்மையாக கருத்து சொல்லவதை தவிர்க்க வேண்டும்.எந்த ஒரு நிகழ்வையும் முற்றிலும் சரி என்று நினைத்தாலும் நிதானமாக செய்வதுதான் நன்று.நம்முடன் இருப்பவர்கள் அனைவருமே நம் நல்லதிற்காக நம்முடன் பழகுகிறார்கள் என்ற நினைப்பை தவிர்க்கவேண்டும். முக்கியமாக சிந்திக்காமல் கோபபடுவதை முற்றிலுமாக விலக்கவேண்டும்.நம்முடைய கோபம் எபோதுமே நமக்கு நல்லது செய்வது இல்லை.நமுடைய வாழ்வில் ஒரே வகையான  இக்கட்டான சூழ்நிலைகள் திரும்ப திரும்ப நிகழ்வது நம்மில் பலபேர் சந்தித்திருப்போம் ஆனால் நாமில் யாராவது ஏன் மீண்டும் மீண்டும் ஒரே வகையான இக்கட்டான சூழ்நிலைகள் நம்மை ஆட்கொள்கிறது என்று சிந்திக்க மறுக்கிறோம்.தற்காலிகமாக ஒருதீர்வைத்தான் நம்மில் அதிகமானவர்கள் நாடுகின்றோம், இதை போல் சூழ்நிலை மீண்டும் வராமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வை யார் சிந்திக்கிறார்களோ அவர்கள்தான் வாழ்கையில் நல்ல நேரத்தை சந்திக்கின்ற நபர்களாக, வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக திகழ்கிறார்கள், இதைதான் நம் முன்னோர்கள் "நல்ல  மாட்டிற்கு ஒரு சூடு என்று சொல்லுவார்கள்" ஒருமுறை நமக்கு ஏற்பட்ட கசப்பான சூழ்நிலையை மீண்டும் வராமல் பார்துகொள்ளவேண்டும் அதுதான் நமக்கு,நம் முன்னேற்றத்திற்கு நம் வாழ்வின் அமைதிக்கு வழி வகை செய்ய கூடிய நல்ல காரணியாக இருக்கும், மீண்டும் மீண்டும் நாம் வாழ்கையில் சூடு பட்டுக்கொண்டே இருந்தால், வாழ்கை பாடத்தை சரிவர புரித்துகொள்ளமலேயே மன அழுத்தத்திலேயே நாம் வாழ்கையை வாழவேண்டிவரும்.நம்முடைய பலத்தை பொறுத்துதான் நாம் தூக்கும் எடை அமையவேண்டும்,அதிக எடையை  தூக்க நினைப்பது தவறல்ல ஆனால் அதற்க்கு முன் நம் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வரவேண்டும் முதலில் எடையை  தூக்கிவிட்டு பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்ற அசட்டையான துணிச்சலை முதலில் நம்மை விட்டு அகற்றவேண்டும்.எல்லாமே நமக்கு சாதகமாகத்தான் அமையும் என்ற தேவை இல்லாத கற்பனையைநிறுத்திவிட்டு வாழ்ந்து  பாருங்கள் .இதுதான் நல்ல நேரத்தை நோக்கி செல்வதற்கான முதல் படி.அம்பு ஒன்று நம்மை நோக்கிவருகிறது,அதற்கான கவசம் இல்லை  என்றால்அதன் பாதையை விட்டு விலகி எதிர்கொள்ளுவதுதான் நன்மையை தரும். நல்ல நேரத்தை நாம் தேடி செல்வதை விட எல்லா நேரத்தையும் நல்ல நேரமாக மாற்ற சிந்திப்பது உங்கள் வாழ்கையில் நல்லதொரு மாற்றத்தை கொண்டுவரும்.

»

கேரளத்துகாரருக்கு சொந்தமான கப்பல் ஆவணமில்லாமல் ஆயுதத்துடன் தூத்துக்குடியில்

தூத்துக்குடி துறை முகத்தில் அனுமதி இல்லாமல் கடலில் நின்றிருந்த கப்பலில் ஆயுதங்கள் இருந்ததாக கப்பலின் உழியர்கள்   கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் இந்தியாவை சேர்தவர்களும்  அடக்கம்.
இந்த ஆயுதம் தாங்கி வந்த கப்பலின் உரிமையாளரும் ஒரு இந்தியர்தான் கேரளமநிலத்தை சேர்த்தவர் என்று தெரிகிறது. அதிலும் இதில் பிடிபட்ட ஆயுதங்கள் தனிமனிதர்கள் உபயோகிக்க கூடியது   அல்ல என்றும் அது ஒரு அரசாங்கம் வைத்துகொள்ள கூடியதுமான அறிதான ஆயுதங்கள் என்றும் தெரியவருகிறது.அத்தகைய அறிதான ஆயுதங்களை தாங்கிய கப்பல் நம்முடைய கடல் எல்லையில் எந்த விதமான முறையான ஆவணக்களும் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டு இருந்திருக்கிறது அதற்க்கான எரிபொருளும் கரையில் இருந்தே எடுத்து செல்ல பட்டதாக கூறப்படுகிறது.இது ஒரு ஆயுதகடத்தலுக்கான முயற்சி என்ற ஒற்றை வரியில் இதை புறம் தள்ளி விட முடியாது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருவதற்கு முன் கேரளாவின் கொச்சின் துறைமுகத்தில் கப்பலில் எந்த  ஆயுதங்கள் இல்லை என்ற  சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.கப்பலுக்கான ஆவணங்கள் சரிபார்த்த பின்னர் தான் அவர்களுக்கு ஆயுதங்கள் இல்லை என்றசான்றிதழ் வழங்கப்பட்டதா அப்படிஎன்றால் இப்போது அந்த ஆவணங்கள் எங்கே போயின. இந்த கப்பல் எங்கிருந்து எங்கே செல்லுவதற்க்கான அனுமதியை பெற்றிருக்கிறது. இந்த கப்பல் எதற்க்காக, யாரை எதிர்பார்த்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கபட்டிருந்தது என்பது போன்ற சந்தேக கேள்விகள் பல எழுகின்றது. இந்த கப்பல் பாது காப்பு பணிக்காக வந்ததாக இருந்தால் எந்த கப்பலின்  பதுகாபிற்க்காக வந்தது என்றும் அந்த பாதுகாக்கப்படவேண்டிய கப்பல் எங்கே போனது போன்ற கேள்விகள் எழுகின்றான். இன்று அந்த கப்பலுடைய பாதுகாப்பு தலைமை அதிகாரி இலங்கையில் தங்கி இருந்ததாக ஒரு செய்திகள் உடகங்களில் உலா வருகிறது. இலங்கை என்றால் தான் தமிழகத்தில் உணர்ச்சியை தூண்டமுடியும் என்பதற்காகவா   இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும். கொச்சின் துறை முகத்தில் தவறுகள் நடக்கவில்லை என்பதை உறுதிபடுத்துவதற்காக இப்படி ஒரு செய்திகள் கசிகின்றனவா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் தமிழகத்தில் உள்ள தமிழர்கள்  அதிக கவனத்துடன்  விழிப்புணர்வுடனும்  இருக்கவேண்டியதன் அவசியத்தை தான் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

»

பாக்கெட்டில் வருவது பால் தானா

நாம் உபயோகிக்கின்ற பக்கெட் பால் கலப்படமற்றதாக சுத்தமானதாக இருக்கிறதா என்றால் இல்லை.பால் கெட்டுபோகாமல் இருப்பதற்காக உடலுக்கு தீங்குவிளைவிக்கின்ற வேதியியல் பொருள்களை அதனுடன் சேர்த்து அதை பாதுகாத்து கொள்கிறார்கள்.இது மட்டுமல்லாமல் பாலுடைய வென்மைதன்மையை அதிகரித்து  கொளுவதர்க்காக தேவை இல்லாத மனித உடலுக்கு முற்றிலும் ஒவ்வாத வேதி பொருள்களை கலந்து விற்பனைக்கு வருகிறது. இந்த பாலை குழந்தைகளும் அருந்துவார்கள் என்ற உணர்வு இல்லாமல் மனசாட்சியை மறந்து வெறும் பணத்துக்காகவே இத்தகைய முறையில் இந்த பாக்கெட் பாலை இவர்கள் விற்பனைக்கு அனுப்புவதாக நமக்கு தெரியவரும் போது வேதனைதான் மிஞ்சுகிறது. உணவு பொருள்களில் கலப்படம் என்றாலே தர்மத்தின் முன் மனிக்கமுடியாத ஒரு குற்றம் அதிலும் குழந்தைகள் அருந்தகூடிய பாலில் நோய்களை பரப்பக்கூடிய வேதி பொருள் கலப்படம் என்பது எந்த கோணத்திலும் மன்னிக்கமுடியாத குற்றம். சமீபகாலமாக கலப்படம் செய்தவர்கள் கைது செய்ததாக எந்த செய்திகளும் வருவதில்லை ஒருவேளை கலப்படம்  செய்வது குற்றம் என்ற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதா, தேவை இல்லாத செய்திகளை தேவைக்கு அதிகாமாகவே வெளியிடும் இந்த பத்திரிக்கைகள் இதை போன்ற சில செய்திகளை வெளியிட்டு பத்திரிக்கை தர்மத்தை காத்துக்கொள்ள கூடாதா. மக்களும் பால் உபயோகத்தை குறைத்து கொள்ள வேண்டும், வாரத்திற்கு ஒருநாளாவது பால் உபயோகத்தை நிறுத்தி கொள்ளவது நல்லது

»

மாணவர்கள் கட்டுபாடற்ற காற்றாற்று வெள்ளமா

தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்கள்  பேராசிரியர் ஒருவரை தாக்கி  கொலை செய்யும் அளவிற்கு நடந்து  கொண்டார்கள்  என்றால் இந்த மாணவ சமுதாயம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை.இந்த அளவிற்கு மாணவர்கள் உணர்சிவயப்படுவர்களா என்று நினைத்து பார்க்கும் போது எதிர் கால இந்திய இவர்கள் கையில்தான் என்று கூறிவரும் கூற்றை நாம் மறு பரிசீலனை செய்தாகவேண்டும்.கட்டுபாடற்ற மாணவர்கள்  காற்றாற்று வெள்ளம் போல அது எதற்கும் பயன் தராது  அதை முறைபடுத்தி பயன்டுத்தினால் நன்மை அதிகம்.
தன்னுடைய மகனுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கவேண்டும் என்றுதான் எந்த ஒரு தாயும் தந்தையும் எண்ணுவார்கள் அதற்காகத்தான் கட்டுபாடுகள் நிறைந்த கல்லூரிகளிலே கொண்டுபோய்சேர்கிறார்கள்.சரியான முறையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இன்றைய மாணவ சமுதாயம் தன்னையும் சீரழித்து கொண்டு இந்த சமுதாயத்தையும் சீரழிக்கின்ற  வகையில் நடந்து கொள்கிறது. இது வளராமல் இருப்பதற்காக சட்டத்தின் துணை கொண்டு மிகக்கடுமையாக ஒடுக்க படவேண்டும். இல்லை என்றால் இந்த சம்பவம் விரிந்து பரவ தொடங்கிவிடும்.மாணவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுபோடுகள் தான் இதைபோல் செய்கைகளுக்கு காரணம் என்று கனவு கான்பபவர்கள் தினவு எடுத்து வாதிட்டாலும். இந்தகைய செய்கைகள் மன்னிக்க முடியாதவை.மாணவபருவத்திலேயே அதிகாரத்தை கையில் எடுக்கும் பழக்கம் நல்ல ஒரு முன் உதாரணமாக இருக்க முடியாது.இளையவர்களின் சுதந்திரம் என்று கட்டுபாடுகளை உடைத்து எரிய நினைப்பது நல்லதல்ல.இத்தகைய வன்மங்கள் தன் தந்தையின் கட்டுபடுகளின் மீதும் திருப்புவதற்கு வாய்புகள் இருக்கின்றன எனவே இதை மாணவசுதந்திரம் என்ற போர்வையில்  மறைந்து கொள்ளாமல் பார்த்துகொள்ளுவது நல்லது.கண்டிப்புடன் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள்தான் உண்மையிலேயே அக்கறையுடன் நடந்து கொள்ளுகிறார்கள் தனக்களித்த பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பணியை செய்கிறார்கள்  என்று பொருள்.ஏதோ வாங்கும் ஊதியத்திற்கு பணியாற்ற நினைக்கும்,முழு சுதந்திரம் என்றபெயரில் மாணவர்களின் போக்கில் விட்டுவிடும்   நபர்கள்  தான் மாணவர்களுக்கு பிடித்தமான ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இன்றைய மானவசமுதாயம் அரசியலோடு இணைந்தே பயணிக்க தொடக்கி விட்டது இதுவும் கூட புறக்கணிக்க படவேண்டிய ஒன்றுதான். இந்த மாணவர் சமுதாயத்தை நல்வழி படுத்தவும் கல்வி முறையை சீர்படுத்தவும் நல்முயற்சி எடுப்பது தான் இப்போதைய தேவை அதை செய்வதற்கு முன்வந்தால் நல்லது

»

தமிழருவி மணியனின் ப.ஜ.க பாசம்

காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவரும் காமராஜ் மீது மிகுந்த அன்பு கொண்டவருமான மதிப்பிற்குரிய தமிழருவிமணியன்  அவர்கள் பா.ஜ.க.ஆட்சி வரவேண்டும் என்று விருப்புகிறார் என்பதை விட காங்கிரஸ் பழி தீர்க்கவேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக தமிழகத்தில் ப.ஜ.க  க்கு  கூட்டணியை அமைத்து தரும் முயற்சியில் இறங்கி  இருக்கிறார். தமிழகத்தில் கரைந்து கொண்டிருக்கும் வாக்கு வங்கியை பெற்ற ம.தி.மு.க வையும், இம்போதுதான் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியை உருவாக்கி வளர்த்துவரும் தே.மு.தி.க வையும் ப.ஜ.க. கூட்டணியில் கொண்டுவருவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளுகிறார்.ஏன் தமிழருவிமணியன் ப.ஜ.க.வை ஆதரிக்கிறார் என்றால். அவருக்கு காங்கிரசை  பிடிக்காமல் போனதிற்கு காரணம், இவர் ஒரு முன்னாள் காங்கிரஸ் கட்சி தொண்டர் என்பது தான். இந்த முன்னாள் என்ற ஒரு காரணம் போதாதா இவருக்கு காங்கிரஸ் கட்சி பிடிக்காமல் போனதற்கு. தன்னை மதிக்காத கட்சியை எப்பாடுபட்டாவது யாருடன் சேர்ந்தாவது  மண்ணை கவ்வ வைத்து விடவேண்டும் என்ற  கொள்கை பிடிப்போடுதான்  இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் இன்றைக்கு  இவர் கொண்டிருக்கும் இயக்கத்தின்  கொள்கைக்கு கொஞ்சமும்  ஒத்துவராத ப.ஜ.க என்ற கட்சியை இவர் ஆதரிக்கிறார்.பெரியார் உலவிய தமிழகத்தில் வெற்றிக்கனியை பறித்துதர துடிக்கிறார்.

»