ஆபத்தான E-ரீசார்ஜ் வேண்டம் இனிமேல் அடக்கமான top-up அட்டையே போதும்

செல் பேசிகளுக்கு இப்போது e- ரீசார்ஜ் மூலம்தான் அனைவருமே நம் கட்டணங்களை மறு மதிப்பீட்டு கொள்கிறோம் இதில் ஒரு ஆபத்து மறைத்திருக்கிறது .e- ரீசார்ஜ் செய்யும் போது நம்முடைய என்னை ஒரு புத்தகத்திலே எழுத சொல்லுகிறார்கள் அதை பார்த்து நம்முடைய கணக்கிற்கு நாம் சொல்லும் தொகையை நம் எண்ணுக்கு அளிக்கிறார்கள். பெண்கள் e-ரீசார்ஜ் செய்யும் போதும் இதே முறைதான். இதைப்போல் e- ரீசார்ஜ் செய்ய வரும் பெண்களின் எங்களை தனியாக எடுத்து அவர்களுக்கு போன்செய்து தொல்லை கொடுப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது. இரவு வேளைகளில் அழைப்பது போன்ற செயல்களால் கணவனுக்கு மனைவிமேல் தவறான எங்ஙனம் வர வாய்ப்பிருக்கிறது. நமது செல்பேசி என்னை நாமே தெரியாத ஒரு நபருக்கு கொடுக்கும் இந்த e- ரீசார்ஜ் முறையை கைவிட்டு. top-up அட்டையை பயன்படுத்துவது சிறந்தது, பாதுகாப்பானது. இந்த கலியுகத்தில் நாமே ஏன் வினையை விலைகொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

வாக்குவங்கியும் தேர்தல் தோல்வியும்

மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தாகி விட்டது.தோல்வி அடைத்துவிட்ட அதிமுக படுதோல்வி அடைத்த பாமக மற்றும் மதிமுக அனைத்தும் தங்களுடைய வெற்றியை எதிரணியினர் தட்டிப்பரித்துவிடதாகவே நினைத்து அறிக்கைகளை விட்டுகொண்டிருக்கிறார்கள்.பணம் தான் இந்த தேர்தலை நிர்னைத்தது என்று குறை கூரிகொண்டிருக்கிறார்கள் பணம் மட்டுமே தேர்தலின் வெற்றி, தோல்வியை நிர்னைத்துவிட முடியுமா? நிச்சயமாய் முடியாது, இது ஒப்புக்கொள்ள முடியாத உண்மை பணம் வாங்கிய அனைவருமே பணம் கொடுத்தவருக்குதான் ஒட்டு போடவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை இதற்க்கு தேமுதிக,கொங்கு மண்டலத்தின் புதிய வரவு , தென்காசியில் புதியதமிழகம் கிருஷ்ணாசாமி வாங்கிய ஓட்டுக்கள் சாட்சியாக நிற்கின்றன மற்றும் மிகப்பெரிய பணக்கார வேட்ப்பாளர் பிரபுவினுடைய தோல்வி, வெற்றிக்கு பணம் பட்டுமே போதாது என்பதை நிருபிக்கின்றன. மேலேட்டமாக பார்த்தால் அதிமுக கூட்டணி பலம் பொருந்திய அணியாக தோன்றியது என்பது உண்மை உள்ளோட்டமாக பார்த்தால் அதிமுகவின் எம்ஜீஆர் வாக்கு வங்கியில் பிளவுபட்டு பிரிந்து கிடக்கிறது இதில் தேமுதிகாவின் பக்கம் ஒதுங்கியவை அதிகம்,அதைப்போல் பாமகவின் வாக்கு வங்கி என்பது திருமாவளவனையும் உள்ளடைக்கியதாகவே இருக்கின்றது இம்முறை திருமாவளவன் வெளியேற , தேமுதிக விளையாட பாமக தன்னுடைய சுயருபத்தை கட்டியது என்பதுதான் உண்மை. இதை புரிந்து கொண்டு செயல்படுவதுதான் வரும் தேர்தலில் நன்மையை தரும். பணம் கொடுத்து வெற்றிபெற்றார்கள் , மின்னணு வாக்குஎந்திரத்தில் தில்லு முல்லு செய்துவிட்டார்கள் என்று நமக்கு நாமே சொல்லிகொண்டால் வரும் தேர்தலிலும் பெரும் ஏமாற்றமே மிஞ்சும் .

இந்தியா செய்த தமிழ் துரோகம்

ஈழத் தமிழர் விவகாரத்தில் டென்மார்கிற்கு இருக்கின்ற அக்கறையில் சிறிது கூட இந்தியாவுக்கு இல்லை" என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' பிரபல வார இதழிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
"ஈழத் தமிழர்களுக்கு எதிரான வேலையை 1948 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது. அப்போது அங்கு தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்ட்டபோது, 'இலங்கை உள்நாட்டு பிரச்னையில் இந்தியா தலையிடாது' என்று நேரு ஒதுங்கிக் கொண்டார்.
சிறிமாவோவின் ஆட்சியில் தமிழர்கள் இன்னல்பட்டபோது அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோவுடன் ஒப்பந்தம் செய்த லால்பகதூர் சாஸ்திரி இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வழி செய்தார்.
ஈழத் தமிழர்களுக்காக இந்திரா காந்தி அக்கறை காட்டியதும், ராஜீவ் காந்தி நடவடிக்கை எடுக்க முனைந்ததும் மறுக்கமுடியாத உண்மைகள். இந்திரா காந்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக புலிகளை ஆதரித்தது உண்மை. ராஜீவ் காந்தி புலிகளை வற்புறுத்தி ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனவுடன் உருவாக்கினார். அந்த ஒப்பந்தம் இலங்கை அரசிற்கும் ஈழத் தமிழருக்கும் இடையில்தான் நடந்து இருக்கவேண்டும். அதிலேயும் தவறு.போனவையெல்லாம் போகட்டும்.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, ஐந்து மாதங்கள் தமிழ் இனத்தையே முற்றாக ஒழிப்பது என ராஜபக்ச அரசு தன் இராணுவத்தைக் கொண்டு ஒரு ஈவு இரக்கமற்ற போரை நடத்தியபோது மன்மோகன் சிங்கின் இந்திய அரசு அதற்குத் துணை நின்றது. இது எந்த வகையில் நியாயம்?
விடுதலைப் புலிகளுக்காகவோ, பிரபாகரனுக்காகவோ இந்திய அரசு போராடியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு அனைத்துலக போர் விதிகளும் மீறப்பட்டு, அரக்கத்தனமாக ஈழத் தமிழர்களை முற்றாக அழிக்க ராஜபக்ச முனைந்தபோது சோனியா காந்தியோ மன்மோகன் சிங்கோ ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசவில்லை. ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு போரை நிறுத்த வழி செய்யவில்லை.
ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள உகாண்டாவில் வணிகம் செய்யச் சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை நடந்த அடுத்த கணமே இந்திய அரசு துடித்தது. பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசில் வாழும் சீக்கியர்கள் தலைப்பாகைகள் அணியக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் அந்த ஆணையை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
இன்று வியன்னாவில் சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக செய்தி வந்து சேர்ந்த அந்தக் கணமே பஞ்சாப் எரியத் தொடங்கியது. ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்கள் போராட்டக் களமாக மாறின. உடனே பிரதமர் மன்மோகன் சிங் அமைதி காக்க வேண்டுமென்று சீக்கியர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கிறார். புதிதாக வெளிவிவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாக ஒஸ்திரியாவிலிருக்கும் இந்தியத் தூதரகத்தோடு தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை நடத்துகிறார்.
வியன்னாவில் ஒரு உயிர் பறிக்கப்பட்டது. 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அதற்கே மத்திய அரசு துடிதுடிக்கிறது.
ஆனால் தமிழகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இலங்கைத் தீவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உறுப்பு இழந்தார்கள். உறவு இழந்தார்கள். ஈழப் பகுதியே மயானம் ஆகிவிட்டது. எங்கும் தமிழர்களின் பிணக்குவியல். திசையெல்லாம் தமிழர்களின் மரண ஓலம். ஐக்கிய நாடுகளுடைய செயலாளர் பான் கீ மூன் நேரில் சென்று இலங்கை நிலவரங்களைக் கண்டு நெஞ்சம் துடித்தார். இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இன்றி மரணத்தோடு போராடுகிற நிலையையும், வன்னிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதையும் கருத்தில் கொண்டு இலங்கை அரசு போர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் மனித உரிமை அமைப்பின் சிறப்பு விவாதத்தில் கொண்டு வர வேண்டுமென்று பிரித்தானியாவும், டென்மார்க்கும் செயல்பட்டன. இந்த சிறப்பு விவாதத்தைத் தடுப்பதற்காக சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும், கியூபாவும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்கிறது இந்தியா. என்ன அநியாயம்?
நமது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காமல், ராஜபக்ச அரசுக்குத் துதி பாடுகிறது காங்கிரஸ் அரசு. மனித உரிமை சபையில் சிறப்பு விவாதம் நடக்க வேண்டுமென்றால் 16 நாடுகளின் ஆதரவு தேவை. இந்த ஆதரவைத் திரட்டுவதற்கு சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும் மனசாட்சி ஒன்று இருந்தால் காங்கிரஸ்காரர்களுக்கு தமிழ் இனத்தின் மீது பற்றும் பாசமும் இருந்திருந்தால் இந்த ஆதரவை இந்தியா முன்னின்று திரட்டியிருக்கவேண்டும்.
ஆனால், எங்கேயோ இருக்கும் டென்மார்க் தன் சொந்த முயற்சியால் பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டி சிறப்பு விவாதம் நடப்பதற்கு வழிவகுத்து இருக்கிறது. இதைத் தடுக்க இந்தியா எல்லா வகையிலும் பாகிஸ்தானோடு சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகிறது.
பெற்ற தாயாக நினைத்து காங்கிரஸை தமிழர்கள் நேசிக்கின்றனர். ஆனால் மாற்றான் தாயாக தமிழர்களை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது. தமிழக மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்'' என்று ஆவேசமாய் தெரிவித்தார் தமிழருவி மணியன்.

வைகோ ,மதிமுக, தமிழக வாக்காளர்கள்

வை.கோபாலசாமி என திமுக வில் அறியப்பட்ட வைகோ.திமுகவை விட்டு விலகி தனி இயக்கம் கண்டவுடன் இளைஞர் மத்தியில் ஒரு பரபரப்பும் தமிழகத்தில் ஒரு எதிர் பார்ப்பும் உருவானது இது மறுக்க முடியாத உண்மை. அவர் நடத்திய மகாநாடு தமிழ் நாட்டின் இருபெரும் கட்சிகளுக்குமே ஒருவித அச்சத்தையும் தன் தொண்டைகளை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் உண்டு பண்ணியது . அதை சரியாக பயன்படுத்தாமல் காற்றாட்டு வெள்ளம் போல் புறப்பட்டு நல்ல ஒரு மாற்று இயக்கமாக வளர்த்திருக்க வேண்டிய மதிமுக சென்று சேர்த்த இடம் அதிமுக. இதை அப்போதே யாரும் ரசிக்க வில்லை. அங்கே துவங்கியது மதிமுகவின் சரிவு பாதை. அது இன்றுவரை தொடர்கிறது, மற்ற அரசியல் கட்சிகளுக்கெல்லாம் சவால்விடுகிற இயக்கமாக வளர்த்திருக்க வேண்டிய மதிமுக இன்றைய நிலையில் தன்மானத்தை காப்பற்றியகவேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது . தமிழகத்தில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் தமிழகம் எதிர்கொள்ளும் தொலைநோக்கு பிரச்சனைகள் வரை தெரிந்த ஓரிரு தலைவர்களுள் வைகோவும் ஒருவர். தமிழக மக்கள் எதிர் பார்க்கும் நல்ல தலைவர்களின் பட்டியலில் வைகோவிற்க்கும் இடம் இருக்கின்றது. அரசியல் பற்றியே தெரியாத கத்துக்குட்டிகள் எல்லாம் இன்று சவால் விடுகின்றன.எந்த தொகுதியில் என்ன மக்கள் பிரச்சனையை இருக்கிறது அதை எவ்வாறு கையாளவேண்டும் என்ற தெரியாமல் யாராவது எழுதிகொடுத்ததை மேடைகளிலே பேசி என்னால் மட்டுமே தீர்க்க முடியும் என்று சவால்விடும் அளவிற்கு வளர்த்துவிட்ட இந்தகாலத்தில் .அரசியல் அறிவில் யாருக்கும் சற்றும் சளைக்காத வைகோ தொடங்கிய மதிமுக , அரசியலிலே முக்கிய திருப்பு முனையாக அறியப்பட்ட மதிமுக இன்று அடுத்த கட்ட முடிவிற்கு கூட காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் மதிமுக எடுக்க கூடிய முடிவு வருகின்ற சட்டசபை தேர்தலுக்கும் , மதிமுக எதிர்காலத்திற்கும் மிக மிக முக்கியமானது இதை மதிமுக பொது செயலாளர்,கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எவ்வாறு கையாளுகிறார்களோ அதை பின்னோற்றிதான் மதிமுக வின் எதிகாலம் இருக்கும்.தனிமனித எதிர்ப்பை கைவிட்டு மதிமுக எதிர் காலத்தை முன்னிறுத்தி முடிவை அறியப்பட்டால் எதிர் காலத்தில் மதிமுக தவிர்த்து தேர்தலை சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகும், காலம் கனியுமாயின் ஆழுமைதன்மையுடைய அளும்கட்சியாக வரும், மதிமுக விற்கும் அதன் பொது செயலாளர்க்கும் அந்த தகுதி இம்மி அளவும் குறைவில்லை முன்போலவே முடிவுகள் அறியப்பட்டால் மதிமுக பத்தோடு ஒன்றாக ஒரு அரசியல் கட்சியாக வலம் வரும் அதில் யாருக்கும் சந்தேகமில்லை.

லஞ்சம் என்னும் விபச்சாரம்

லஞ்சம் என்னும் வார்த்தை இப்போது எல்லோரிடமும் புகுந்து புறப்பட்டு கொண்டிருக்கிறது.லஞ்சம் வாங்குவது ஒரு அவமானமாக எந்த பணியாளர்களும் கருதுவதில்லை. யார் எப்படி போனால் என்ன தனக்கு ஏதாவது ஒருவழியில் வசதியான வாழ்கை வந்தால் மகிழ்ச்சி என்ற எண்ணத்தில் தான் இவர்கள் சிறிதேனும் கூசாமல்,வெட்கப்படாமல் ,மனசாட்சிக்கு மதிப்பளிக்காமல் தொடர்த்து லஞ்சத்தில் திளைக்கிறார்கள்.தன்னை தானே வருத்திக்கொண்டு பணம் சம்பாதிக்கும் விபச்சாரி இவர்களை விட எவ்வளவோ மேல்.அவள் தன் கற்ப்பை,மாண்பை விலை பேசுகிறாள .இவர்கள் தாய் நாட்டை கற்ப்பை விலை பேசுகிறார்கள்.வெட்கம், மானம்,பண்பு,மாண்பு,கற்ப்பு,இவற்றை விற்று செய்யும் தொழில் விபச்சாரம் என்னும் போது ,லஞ்சம் வாக்குபவர்களும் விபசாரர்கள்தான்.

மேதாவி பிட்சைகாரர்கள்

பிட்சை எடுப்பது தவறா ? இந்த கேள்வி என்னையே நான் பலமுறை கேட்டுகொண்டிருக்கிறேன்,இதன் நீட்சியாக சென்ற வாரம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி பயணமாகி கொண்டிருந்தேன் அப்போது பிட்சை கேட்டு ஒரு முதியவர் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்தார் என் எதிரில் அமர்ந்தவர் ஒரு ரூபாய் நாணயத்தை முதியவரின் கைகளில் கொடுத்தார்.இதை பார்த்த அவர் அருகில் இருந்தவர்,அவரின் நண்பர் என்று நினைக்கின்றேன் அவரை வாங்கு ,வாங்கு என்று திட்டி தீர்த்து விட்டார் எதிரில் இருந்தவரை பார்க்க பாவமாக இருந்தது, ஏன் பிட்சை கொடுப்பது என்ன உலகமாகாதவறா! நம்மில் யார் தான் பிட்சை எடுக்கவில்லை கடனில் வாங்கிய பொருள்களுக்கு தவணை தியதி அன்று பணம் கட்டமுடியவில்லை என்றால் நான்கு நாட்களுக்குள் செலுத்திவிடுகிறேன் என்று காலத்தையே யாசகமாக கேட்கவில்லையா அந்த நான்கு நாட்களும் பிட்சைதானே! தகுதியை மீறி பதவி உயர்விற்காக மேலதிகாரியிடம் பரிந்துரைக்க சொல்லுவதும் பரிந்துரையை பெற்றுக்கொள்வதும் பிட்சைதானே ? யாசகமாக பணம் கேட்டால் ஆயிரம் விளக்கங்களும் வியக்கியானங்களும் ஆனால் அதிகாரத்துடன் கேட்பவர்களுக்கு எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல் கொடுத்து விடுவார்கள் பிட்சை எடுப்பதை விருப்பி யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தான் சம்பாதித்த காலத்தில் நம்பி கெட்டவர்கள் நயவஞ்சக கூடத்தில் வாழ்கையை தொலைத்தவர்கள் இன்று தெருவில் தன்னால் உழைப்பதற்கும் உடம்பில் தெம்பும் இல்லை ஆனால் வயிறு இருக்கிறதே என்ன செய்ய முடியும் யாசகம் தான் ஒரே வழி முடித்தால் உதவி இல்லைஎன்றால் விலகி நிற்பதேமேல்! தங்களின் மேதாவிதனமான வார்த்தைகளால் புன்னகிபோன மனதை ரணமாக்காதீர்கள் தெருவுக்கு வந்தவர்களுக்குள்ளும் மனமிருக்கும் புரிந்து கொள்ளுங்கள்

நாடாளுமன்றம்ன்றத்திர்க்கான தேர்தல் அறிவிக்க பட்டுவிட்டது, இனிமேல் ஆரம்பமாகிவிடும் கூட்டணி பற்றிய பேச்சிவார்த்தைகள், தொகுதி பங்கீடு என்று அரசியல் கட்சிகள் தங்களுடைய பணியை சுறுசுறுப்புடன் தொடக்கி விடுவார்கள். அது மட்டுமா அரசியல் சார அன்பர்கள் கூட்டணியை பற்றி செய்தி தாள்களில் அலசுவார்கள். பழங்காலத்து அரசியல் உதாரணத்துடன் விளக்கி செய்திகள் வெளிவரும் வார, மாத, வாரமிருமுறை இதழ்களில் அதனுடனே கருத்து கணிப்பும் பக்கங்களை நிரப்பும். வாக்காளர்களின் பாடுதான் படுதிண்டட்டம் யாருடையா கருத்தைக்கொண்டு நாம் வாக்களிப்பது, எதை பின்பற்றி யாரை தேர்தெடுப்பது என்று, இம்முறை இலங்கை பிரச்சனையை மையமாக வைத்து தேர்தல் பிரசாரம் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும் இதில் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டியது திருவள்ளுவரின் குறள் "எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் பெய்பொருள் காண்பது அறிவு" இதை பின்பற்றி வாக்களித்தல் நலம் -நன்றி

பாவப்பட்ட தமிழன்

சமீபத்தில் பெங்களூருவில் நடந்த சம்பவம் ஒன்று தமிழன் எந்தளவிற்கு பாதுகாப்பின்றி இருக்கிறன் என்பதை விளக்கும். இலங்கையை சேர்த்தவர்கள் படிப்பதற்காக பெங்களூருவிற்கு வந்த சிங்கள மாணவர்கள் தங்களுடைய சுதந்திர தினத்தை ஒரு அரங்கில் கொண்டாடுவதை தெரிந்து போராட தயாரானார்கள் பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள் இதை அறிந்து சிங்களர்கள் கொண்டாடும் சுதந்திரதின கொண்டாட்ட அரங்கிற்கு கர்நாடக அரசு பாதுகாப்பு கொடுத்தார்கள் அதையும் மீறி அரங்கில் நுழைத்த தமிழர்கள் இங்கே பாதுகாப்பாக உங்களின் சுதந்திரதினத்தை கொண்டாடுகின்றீர்களே உங்களது நாட்டில் எங்களுடைய உறவிற்காக குரல்கொடுக்க கூடாத என்ற கேள்வியை கேட்ட உடன் கேள்விகேட்ட தமிழனை சிங்கள மாணவர்கள் கண்மண் தெரியாமல் தாக்கி இருக்கிறார்கள்.இது வன்மையாக கண்டிக்கமட்டுமிலாமல் நடவடிக்கை எடுக்கவேண்டிய விஷயம் தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள் இல்லைஎன்றல் நாளை நம் நாட்டிலேயே நாம் அடிமையகிவிடவேண்டிய சூழ்நிலை உருவாகும்.இதை சரியாக புரிந்து கொண்டு ஒவொரு தமிழனும் போராடும் மனத்தை பெறவேண்டும்.

1 கருத்துரைகள்: