லஞ்சம் என்னும் விபச்சாரம்

லஞ்சம் என்னும் வார்த்தை இப்போது எல்லோரிடமும் புகுந்து புறப்பட்டு கொண்டிருக்கிறது.லஞ்சம் வாங்குவது ஒரு அவமானமாக எந்த பணியாளர்களும் கருதுவதில்லை. யார் எப்படி போனால் என்ன தனக்கு ஏதாவது ஒருவழியில் வசதியான வாழ்கை வந்தால் மகிழ்ச்சி என்ற எண்ணத்தில் தான் இவர்கள் சிறிதேனும் கூசாமல்,வெட்கப்படாமல் ,மனசாட்சிக்கு மதிப்பளிக்காமல் தொடர்த்து லஞ்சத்தில் திளைக்கிறார்கள்.தன்னை தானே வருத்திக்கொண்டு பணம் சம்பாதிக்கும் விபச்சாரி இவர்களை விட எவ்வளவோ மேல்.அவள் தன் கற்ப்பை,மாண்பை விலை பேசுகிறாள .இவர்கள் தாய் நாட்டை கற்ப்பை விலை பேசுகிறார்கள்.வெட்கம், மானம்,பண்பு,மாண்பு,கற்ப்பு,இவற்றை விற்று செய்யும் தொழில் விபச்சாரம் என்னும் போது ,லஞ்சம் வாக்குபவர்களும் விபசாரர்கள்தான்.

மேதாவி பிட்சைகாரர்கள்

பிட்சை எடுப்பது தவறா ? இந்த கேள்வி என்னையே நான் பலமுறை கேட்டுகொண்டிருக்கிறேன்,இதன் நீட்சியாக சென்ற வாரம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி பயணமாகி கொண்டிருந்தேன் அப்போது பிட்சை கேட்டு ஒரு முதியவர் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்தார் என் எதிரில் அமர்ந்தவர் ஒரு ரூபாய் நாணயத்தை முதியவரின் கைகளில் கொடுத்தார்.இதை பார்த்த அவர் அருகில் இருந்தவர்,அவரின் நண்பர் என்று நினைக்கின்றேன் அவரை வாங்கு ,வாங்கு என்று திட்டி தீர்த்து விட்டார் எதிரில் இருந்தவரை பார்க்க பாவமாக இருந்தது, ஏன் பிட்சை கொடுப்பது என்ன உலகமாகாதவறா! நம்மில் யார் தான் பிட்சை எடுக்கவில்லை கடனில் வாங்கிய பொருள்களுக்கு தவணை தியதி அன்று பணம் கட்டமுடியவில்லை என்றால் நான்கு நாட்களுக்குள் செலுத்திவிடுகிறேன் என்று காலத்தையே யாசகமாக கேட்கவில்லையா அந்த நான்கு நாட்களும் பிட்சைதானே! தகுதியை மீறி பதவி உயர்விற்காக மேலதிகாரியிடம் பரிந்துரைக்க சொல்லுவதும் பரிந்துரையை பெற்றுக்கொள்வதும் பிட்சைதானே ? யாசகமாக பணம் கேட்டால் ஆயிரம் விளக்கங்களும் வியக்கியானங்களும் ஆனால் அதிகாரத்துடன் கேட்பவர்களுக்கு எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல் கொடுத்து விடுவார்கள் பிட்சை எடுப்பதை விருப்பி யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தான் சம்பாதித்த காலத்தில் நம்பி கெட்டவர்கள் நயவஞ்சக கூடத்தில் வாழ்கையை தொலைத்தவர்கள் இன்று தெருவில் தன்னால் உழைப்பதற்கும் உடம்பில் தெம்பும் இல்லை ஆனால் வயிறு இருக்கிறதே என்ன செய்ய முடியும் யாசகம் தான் ஒரே வழி முடித்தால் உதவி இல்லைஎன்றால் விலகி நிற்பதேமேல்! தங்களின் மேதாவிதனமான வார்த்தைகளால் புன்னகிபோன மனதை ரணமாக்காதீர்கள் தெருவுக்கு வந்தவர்களுக்குள்ளும் மனமிருக்கும் புரிந்து கொள்ளுங்கள்

நாடாளுமன்றம்ன்றத்திர்க்கான தேர்தல் அறிவிக்க பட்டுவிட்டது, இனிமேல் ஆரம்பமாகிவிடும் கூட்டணி பற்றிய பேச்சிவார்த்தைகள், தொகுதி பங்கீடு என்று அரசியல் கட்சிகள் தங்களுடைய பணியை சுறுசுறுப்புடன் தொடக்கி விடுவார்கள். அது மட்டுமா அரசியல் சார அன்பர்கள் கூட்டணியை பற்றி செய்தி தாள்களில் அலசுவார்கள். பழங்காலத்து அரசியல் உதாரணத்துடன் விளக்கி செய்திகள் வெளிவரும் வார, மாத, வாரமிருமுறை இதழ்களில் அதனுடனே கருத்து கணிப்பும் பக்கங்களை நிரப்பும். வாக்காளர்களின் பாடுதான் படுதிண்டட்டம் யாருடையா கருத்தைக்கொண்டு நாம் வாக்களிப்பது, எதை பின்பற்றி யாரை தேர்தெடுப்பது என்று, இம்முறை இலங்கை பிரச்சனையை மையமாக வைத்து தேர்தல் பிரசாரம் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும் இதில் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டியது திருவள்ளுவரின் குறள் "எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் பெய்பொருள் காண்பது அறிவு" இதை பின்பற்றி வாக்களித்தல் நலம் -நன்றி