ஆபத்தான E-ரீசார்ஜ் வேண்டம் இனிமேல் அடக்கமான top-up அட்டையே போதும்

செல் பேசிகளுக்கு இப்போது e- ரீசார்ஜ் மூலம்தான் அனைவருமே நம் கட்டணங்களை மறு மதிப்பீட்டு கொள்கிறோம் இதில் ஒரு ஆபத்து மறைத்திருக்கிறது .e- ரீசார்ஜ் செய்யும் போது நம்முடைய என்னை ஒரு புத்தகத்திலே எழுத சொல்லுகிறார்கள் அதை பார்த்து நம்முடைய கணக்கிற்கு நாம் சொல்லும் தொகையை நம் எண்ணுக்கு அளிக்கிறார்கள். பெண்கள் e-ரீசார்ஜ் செய்யும் போதும் இதே முறைதான். இதைப்போல் e- ரீசார்ஜ் செய்ய வரும் பெண்களின் எங்களை தனியாக எடுத்து அவர்களுக்கு போன்செய்து தொல்லை கொடுப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது. இரவு வேளைகளில் அழைப்பது போன்ற செயல்களால் கணவனுக்கு மனைவிமேல் தவறான எங்ஙனம் வர வாய்ப்பிருக்கிறது. நமது செல்பேசி என்னை நாமே தெரியாத ஒரு நபருக்கு கொடுக்கும் இந்த e- ரீசார்ஜ் முறையை கைவிட்டு. top-up அட்டையை பயன்படுத்துவது சிறந்தது, பாதுகாப்பானது. இந்த கலியுகத்தில் நாமே ஏன் வினையை விலைகொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

வாக்குவங்கியும் தேர்தல் தோல்வியும்

மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தாகி விட்டது.தோல்வி அடைத்துவிட்ட அதிமுக படுதோல்வி அடைத்த பாமக மற்றும் மதிமுக அனைத்தும் தங்களுடைய வெற்றியை எதிரணியினர் தட்டிப்பரித்துவிடதாகவே நினைத்து அறிக்கைகளை விட்டுகொண்டிருக்கிறார்கள்.பணம் தான் இந்த தேர்தலை நிர்னைத்தது என்று குறை கூரிகொண்டிருக்கிறார்கள் பணம் மட்டுமே தேர்தலின் வெற்றி, தோல்வியை நிர்னைத்துவிட முடியுமா? நிச்சயமாய் முடியாது, இது ஒப்புக்கொள்ள முடியாத உண்மை பணம் வாங்கிய அனைவருமே பணம் கொடுத்தவருக்குதான் ஒட்டு போடவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை இதற்க்கு தேமுதிக,கொங்கு மண்டலத்தின் புதிய வரவு , தென்காசியில் புதியதமிழகம் கிருஷ்ணாசாமி வாங்கிய ஓட்டுக்கள் சாட்சியாக நிற்கின்றன மற்றும் மிகப்பெரிய பணக்கார வேட்ப்பாளர் பிரபுவினுடைய தோல்வி, வெற்றிக்கு பணம் பட்டுமே போதாது என்பதை நிருபிக்கின்றன. மேலேட்டமாக பார்த்தால் அதிமுக கூட்டணி பலம் பொருந்திய அணியாக தோன்றியது என்பது உண்மை உள்ளோட்டமாக பார்த்தால் அதிமுகவின் எம்ஜீஆர் வாக்கு வங்கியில் பிளவுபட்டு பிரிந்து கிடக்கிறது இதில் தேமுதிகாவின் பக்கம் ஒதுங்கியவை அதிகம்,அதைப்போல் பாமகவின் வாக்கு வங்கி என்பது திருமாவளவனையும் உள்ளடைக்கியதாகவே இருக்கின்றது இம்முறை திருமாவளவன் வெளியேற , தேமுதிக விளையாட பாமக தன்னுடைய சுயருபத்தை கட்டியது என்பதுதான் உண்மை. இதை புரிந்து கொண்டு செயல்படுவதுதான் வரும் தேர்தலில் நன்மையை தரும். பணம் கொடுத்து வெற்றிபெற்றார்கள் , மின்னணு வாக்குஎந்திரத்தில் தில்லு முல்லு செய்துவிட்டார்கள் என்று நமக்கு நாமே சொல்லிகொண்டால் வரும் தேர்தலிலும் பெரும் ஏமாற்றமே மிஞ்சும் .