உணர்ச்சிகள் ................{உணர்வுகள் }



காமம் என்பது மனித உணர்ச்சிகளிலேயே மிக முக்கியமான அவசியமான ஒன்று.காமம் என்பது மிக மதிகதக்கதும்  புனிதமானதுமாக கருதுவது தமிழ் கலாசாரமாக இருந்துவருகிறது ,ஒரு ஆணும் பெண்ணும் சங்கமிக்கின்ற இந்த உணர்வு இன்று மிகவும் கேலிகூத்தாக பார்கபடுவது வேதைனையான விஷயம்.தன துணையுடன் பகிர்த்த காம உணர்ச்சியை பிறரிடம் பகிர்த்து கொள்ளுவது வேதனையிலும் வேதனையானது நாகரிக போர்வையை போர்த்திக்கொண்டு இந்த வேலையை செய்வது என்பது  அருவரும்பும் நிறைத்த ஒரு உலகத்திற்கு நம்மை இட்டு செல்லும். ஒரு நல்ல கணவன் மனைவி தங்களுடைய படுக்கை அறையில் இந்த உணர்ச்சியை பரிமாறிக்கொள்ளும் போது  விளக்குகள் எரிவதில்லை,வெளிச்சம் அங்கே  தேவை இல்லை என்று நினைத்தார்கள் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் அந்தரங்கத்திற்கு மதிப்பளித்தார்கள்.வாழ்வில் சிறப்பு சேர்த்தார்கள்.ஆனால் அதே காமம் இன்று படும் பாட்டை நினைத்தால் வாழ்வியல் தந்துவங்கள் தோற்றுவிட்டனவா என்று என்ன தோன்றுகிறது. இன்றைக்கு இருக்கின்ற இளைஞர்கள்,நடுத்தர வயதுடையவர்கள்,நடுதரவயதை கடந்தவர்கள் என்று அனைவரிடமும் காம உணர்ச்சி ஒன்றும்  போற்றபடகூடிய புனிதமானது அல்ல என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.பெரும் பாலான சினிமாவில் நகைசுவை காட்சிகளுக்கு கூட இந்த காம உணர்ச்சியை பயன்படுத்துவது என்பது ஆரோகியமான ஒரு இளையதலைமுறையை உருவாக்குவதற்கு வழி வகை செய்யாது.காம உணர்ச்சி என்பது அனைவரிடத்திலும் பகிர்த்து கொள்ள கூடிய கடை பொருள் அல்ல.எந்த உணர்ச்சிக்கு அடிமையானாலும் உன்னை ஆளும் காம உணர்ச்சிக்கு அடிமையானால் உன்னை வீழ்த்தும்.தகுந்த மரியாதை கொடுத்தால் தன்மானத்தை காக்கும் .தலை நிமிர செய்யும். உணர்வுகள்

நல்லவன் வாழ்வது .......+

இன்றைய காலத்தில் எல்லேரும் எதையாவது  ஒன்றை எதிர்பார்த்துதான் பிறருடன் பழகுகிறார்கள்.எதிர்பார்ப்பு இல்லாத பழக்கவழக்கம் என்பது யாரும் எவருடனும் பழகுவது இல்லை.ஒரு மனிதன்  பணியில் இருக்கும்போது நட்பு புடனும் ,மதிப்பு கொடுத்து பழகும் இந்த உலகம்.அவனுடைய பனி நிறைவிற்கு பின்னோ அல்லது அவன் அந்த பணியில் இல்லாத போதோ அவனிடம் அந்த அளவிற்கு நெருக்கம்  காட்டுவது இல்லை என்பதே அதற்க்கு சிறந்த உதாரணம் .அவனிடம் பழகிய அனைவரும்.அந்த பதவியில் புதியதாக பணிக்கு வந்தவரிடம் தன்னுடைய நெருக்கத்தை காட்ட தொடக்கி விடுகிறார்கள்.அதை சார்த்து பார்தோமேயனால்.அவர்கள் காட்டக்கூடிய நட்பும் அந்த பணிவும் அந்த பதவிக்குத்தான். அந்த பணியில் இருப்பவன், அவன் நல்லவனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும்,ஒரேமாதிரியான நட்பு பாராட்ட தெரிந்தவர்கள்தான் இன்றைய உலகில் வாழ்வியல் கற்றவர்கள் என்ற கட்டத்திற்குள் இருக்கிறார்கள். அவன் நமக்கு தேவை என்றபோது நெருக்கம் காட்டுவதும் வேண்டாம் என்றபோது விலகிநின்று வேடிக்கை பார்ப்பதும். நலவனாக இருக்கிறவனுக்கும்,நல்லவான்  அல்லாதவானுக்கும் ஒரு சேர நடக்கிறது என்றால் நல்லவன் மன அமைதியுடன் வாழ்வதற்கான சூழல்  குறைகின்றன.அவன் நல்லவனாகவே தன் வாழ்கையை தொடர்வதற்கான வாய்ப்புகளும் குறைகின்றன. நல்லவன் வாழ்வதற்கு காலமில்லையா அல்லது நல்லவனாக வாழ்வது தேவை இல்லையா ..!

அசல் ........, நகல்........தலைவலி

ன்று நாம்  உபயோகிக்கும் பொருள்கள் அசல்தானா அல்லது அசலை போல் உள்ள நகலா அசலின் விலை கொடுத்து நகலை வாங்கி வைத்திருக்கிறோமா என்பது நமக்கே தெரிவதில்லை.அந்த அளவிற்கு போலிகள் நம்மிடையே ஆல் போல் பெருகி அருகுபோல் வளர்த்து விட்டது.ஒரு பொருளை தயாரித்து அதை மக்கள் மத்தியில் பிரபல படுத்துவதற்காக அந்த பொருளை தயாரித்த நிறுவனத்தார்  கொடுத்த உழைப்பையும் கால விரயத்தையும் எள்ளளவும் கூச்சமின்றி திருடி நகலை இப்போதுள்ள தொழில் நுட்பம்  கைகொடுக்க, அசல் போலவே நகலும் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடுகிறது. அசல் மேல் நம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் இந்த போலிகளும் விற்பனையில் நல்ல சம்பாதிக்கின்றன அதே நேரத்தில் அசலுடைய சந்தை மதிப்பையும் கீழேதள்ளுகிறது.அதை பற்றி இந்த போலி தயாரிப்பாளர்களுக்கு என்ன கவலை.இதை எல்லாம் செய்வது வேறு எங்கிருத்தோ வந்த மனிதர்கள் அல்ல. எல்லோரும் இந்த நாட்டை சேர்த்தவர்கள்தான்.எந்த பொருளுக்கும் ஒரு குளோனிங் போல் ஒரு போலி இருக்கிறது. 5 ரூபாயில் தொடங்கி லட்சங்களில் விற்கும் பொருள்களுக்கும் போலிகள் இருக்கின்றன. தன்னுடைய வாழ்க்கை முறையால் உழைப்பால்  நன்மதிப்பையும்,நிலைத்த புகழையும் பெற்று இந்த இந்த உலகை விட்டு பிரித்த அசல் தலைவர்களின் பெயர்களால் கூட அரசியலில்  நகல்கள் நம்மை சுற்றி வருகிறார்கள்.அனைத்து துறைகளிலும் இந்த போலிகள் இருக்கிறார்கள் அடுத்தவர்களின் உழைப்பையும்,அறிவாற்றலையும் திருடி இந்த போலிகள் அசல் களையே மக்கள் மத்தியில் போலிகளாக்கி  விடுவார்கள்.


சுய ஒழுக்கம்........................!

சுய ஒழுக்கம் என்பது வாழ்வியலில் மிகமிக முக்கியமானது. நாட்டில் நடக்கின்ற அனைத்து செயல்களும் சுய ஒழுக்கத்தை அடிப்படையாக வைத்துதான் நடைபெறுகின்றது.நாட்டில் ஏதாவது ஒரு தவறு நடக்கும் பட்சத்தில் "உதாரணமாக பெண்பாலியல்" அந்த தவறுக்கு காரணமானவனை நாம் முடித்த அழவிற்கு திட்டி தீர்த்து விடுகின்றோம் ஆனால் நம்மில் எந்தனை நபர்கள் அதே தவறுகளை வெளியில் தெரியாமல் மனதளவில் செய்திருக்கிறோம். நண்பனின் மனிவி என்று கூட பார்க்காமல் மனத்லேயே ரசிக்க கூடிய கொடிய மிருகங்கள் நம்பிடையே இருக்கின்றது.இதற்கெல்லாம் காரணம் சுய ஒலிக்கம் இல்லாமையே.முன்மு நம்முடைய பள்ளிகளில் நடைபெற்று வந்த சுய ஒழுக்க போதனை வகுப்புக்கள் இன்று எந்த பள்ளிகளிலும் இல்லை. இன்று சுய ஒழுக்கமில்லாத மனிதர்கள் குறைய காரணம் குடும்ப சூழ்நிலைமட்டும் அல்ல.சமுதாயத்தில் உள்ள குறைபாடுகள் தான்.பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலவதாக வந்த மானவனைதான் நாம் கொண்டாடுகின்றோம், ஆனால் நல்  ஒழுக்கமான மனவணன் யார் என்று பார்த்து அவனுக்கு ஒரு வாழ்த்தாவது சொல்லி இருப்போமா. மதிப்பெண்களில் அதிகம் பெற்றிருத்தால் போதுமானது அவர்களை ஏதோ சாதித்தது போல் அவனை தூக்கி வைத்து அனைவரும் கொண்டாடுகிறோம்.எனவே சுய ஒழுக்க கட்டுபாடுடன்  வாழ வழி தேடுவோம் சுய ஒழுக்கத்துதன் வாழ்பவரை தொழுவோம்.

சான்றிதழ் இருதால் போதுமா................?

 இந்தியாவை பொறுத்தளவில் சான்றிதழ் இருதால் போதுமானது திறமையோ அந்ததுறை சார்த்த  நுண் அறிவோ தேவையே இல்லை.இதன் காரணமாகத்தான் திறமையானவர்கள் , துறை அறிவே  இல்லாதவர்கள் எல்லோரும் துறை அலுவலர்களாகவும் நல்ல திறமையும் அனுபவமும் உள்ளவர்கள் ,இனமும் அவர்களுக்கு உதவியாளர்களாக இருக்கிறார்கள். எதாவது ஒரு கலூரியில் மூன்றுவருடங்கள் காலத்தை கழித்துவிட்டு சான்றிதள்கள் பெற்றுவிட்டாலே போதுமானதாக இருக்கின்றது, அதைவைத்துக்கொண்டு அனுபவம் உயள்ளவர்களுக்கே மேலதிகாரிகளாக  வந்துவிடுகிறார்கள். வெறும் காகித்தாலான சான்றிதள்களைமட்டும் வைத்து பணியமர்த்துவது என்பது சரியாக இருக்காது .இதன் காரணமாகத்தான் இன்று போலியான சான்றிதழ்கள் நாட்டில் உலவுகின்றன. கூடுதலாக படித்தவன்தான் கண்டுபிடிப்புகள் எதையும்  செய்திருக்க முடியும் என்னும் தவறான எண்ணமும் இன்றும் நம்மிடம் நிலவுகிறது."யாரை எங்கே வைப்பது என்று வாருக்கும் தெரியலே" என்ற வரிக்கு பொருத்தமாகத்தான் இன்று நாட்டில் நடப்பவை நமக்கு உணர்த்துகிறது.மூன்று வருட பட்ட படிப்பு படித்திருந்தால் போதும் என்ற நினைப்பு நம்பிடையே பரவலாக காணப்படுகிறது அப்படி படித்தவர்கள் தான் அறிவுடையவர்களாக இருப்பார்கள் என்ற பார்வை "வடிவேலு கூறியபடி சிகப்பா  இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்" என்பதைப்போலத்தான் இருக்கிறது. நல் அறியும் நல் திறமையும் நாட்டின் இருகண்கள்.அதை பாதுகாப்பது அவசியம் அவசரம்

துரோகம்...............................?



துரோகம் எங்கு  பார்த்தாலும் துரோகம்.உண்மையான நட்பில்,கணவன் மனைவி உறவில் கூட இந்த துரோகங்கள் புகுந்து விட்டது என்பது வேதனையான ஒன்றாக இருக்கிறது.ஒரே அலுவலகத்திகுள் வேலைபார்கின்றவர்களுக்கு மத்தியிலும் இந்த துரோகங்கள் வேலையை காட்ட ஆரமித்து விட்டது.தங்களது பதவி உயர்வுக்கு உதவுவதற்காக இந்த துரோகங்களை கையில் எடுத்து கொள்கிறார்கள். துரோகங்கள் எத்தனையோ விதவிதமான வேடங்களில் இருந்தாலும் அனைத்து துரோகங்களின் விளைவுகள் வெளிப்படையாக இருப்பதில்லை. தாளமுடியாத வேதனையைத்தான் இதன் முடிவு  இருக்கிறது.இந்த துரோகங்கள் வளர காரணம் என்ன? மனித மனங்களுக்கு இடையேயான சுயநலம் அதிகமாக இருப்பதால்தான்,சகோதர சகோதரி, மத்தியில் கூட உறவை மதிக்காமல் துரோகங்கள் நிகழ்கிறது. அரசியல் துரோகங்கள் மனிதனின் ஆளுமையை கேள்விக்குரியாக்குகிறது.அதன் விளைவுகள் விபரீதமாக முடிவதால் தனிமனிதனுக்கு மட்டுமில்லாமல்  எதில் காலத்தையும் பரந்து விரிந்து பாதிக்கிறது.அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய துரோகங்கள், ஆளைவிழுங்கும் துரோகங்கள்,அநாதையாக்கும் துரோகங்கள்,நிர்மூலம்மாக்கும் துரோகங்கள்,அத்தனை துரோகமும் நம்பிக்கை என்ற ஒற்றை விதியை மீறுவதால் தான் நிகழ்கிறது. நீட்டி முழக்கி இன்னமும் எந்தனையோ துரோகங்கள் வீதியில் அலைந்து கொண்டுதான் இருக்கிறது வேதியல் மாற்றத்தை வாழ்க்கையில் ஏற்படுத்த! இதை செய்வதிலே முதலில் நிப்பது இளைஞர்கள் கூட்டம் .இதை உணராமல் இன்றைய இளைஞர்கள் இவைகளுக்கு துணை நிற்பதுதான் மிகவும் வேதனையான நிகழ்வு. இந்த செயல்களுக்கு பணம்தான் முக்கியகாரணம் என்று சொன்னாலும் அதனை முழுமையாக ஏற்கமுடியாது. இளைஞர்கள் மத்தியில் உள்ள தைரியமின்மையும்,ஒழுக்கமின்மையும்மே  ஆதிமூலமாக இருக்கிறது.அதை களைந்தால் ஒழிய,இத்துரோகங்களை வேரோடுசாய்க்க முடியாது.துரோகங்கள் வேறுவேறு வேடங்களில் வழ்துகொண்டுதான் இருக்கும். வாழ்வை காவு வாங்கிகொண்டுதான் இருக்கும் 

புனிதமானதா காதல் ..................!


காதல் என்பது காதலன் காதலி இருவர் சார்த்து மட்டுமா அவர்களை சுற்றியுள்ள உறவுகளுக்கு கிடையாத.குறிப்பாக அவர்களின் தாய் தந்தையருக்கு கிடையாதா.காதலில் வலி என்பது பெண்ணை பெற்ற பெற்றோருக்குத்தான்  அதிகம்.பதினெட்டொ,இருபதோ ஆண்டுகள் வளர்த்து ஆளாக்கிவிட்ட தாய் தந்தையர்களின்  விருப்பம் துளியும் தேவையில்லை.பெண்ணிற்கு யாருடன் வாழவிருப்பபோ அவனுடன் அனுப்பிவைக்க சொல்லுவது எந்தவிதத்தில் நியாயம். அந்த பெண்ணை வளர்பதற்க்காக அந்த தாயும் தந்தையும் பட்ட வேதனையும்,கஷ்டங்களும் தனிப்பட்ட அனந்த இரு ஜீவன்களுக்குதான் தெரியும்.காதல் மட்டும் தான்  
புனிதமானதா,பெற்றோர்கள் வைத்த அன்பு என்பது கலப்படமானதா.காதல் தெரிந்து கண்டித்தால்,காதலனை வீட்டிற்கு வரசொல்லுவதும்,காதலன்  நண்பர்களுடன் வீட்டிற்கு வந்து உன் பெண்ணை நான் காதலிக்கிறேன்,பெண்ணை கூப்பிடு என்று தகராறு செய்வதும், அதற்கு சட்டங்கள் இடம்கொடுப்பதும் , அந்த பெண்ணோ எனக்கு பிடித்திருக்கிறது அவனுடன் நான் செல்வேன் என்று சொல்வதும் காதலின் உத்ச்சகட்டங்கள்.இதனால் அந்த பெண்ணின் வீட்டிற்கு ஏற்படும் அவமானமும் கஷ்ட நஷ்டக்க்களும்தான் அந்த பெண் தன்னை வளர்த்த தன குடும்பத்திற்கு தரும் பரிசு, எத்தனையோ சூழ்நிலைகளில் தன்னுடைய மகளுக்காக அந்த தகப்பன் தனுடைய சொந்த விருப்புகளை மறந்து தான் நினைத்துகூட பார்க்கமுடியாத உலகத்திற்கு மகளை உயர்த்தவேண்டும் என்று தினமும் உழைத்து தன் கனவை கலைத்து மகளுக்காக ஒரு தனி உலகத்தை உருவாக்க நினைக்கின்றான். சிறுவயது முதல் பெண் பூப்படையும் வயதுவரை ஒரு உலகத்திலும் அதற்க்கு பின்னால் ஒரு உலகத்திலும் சஞ்சரிப்பதர்க்கு உறுதுணையாக இருப்பது பெற்றோர்கள்தான்.அன்புக்காக உயிரை கொடுப்பது பெற்றோர்கள்தான்.ஆனால் அந்த அன்பை களவாடிவிட்டு தன் வீட்டாரை நிர்கதியில் விட்டு செல்வதுதான் காதல்.பெண்ணுக்கு பிடித்திருந்தால் கல்யாணம் பன்னவேண்டியதுதனே! என்று சொல்லுபவர்கள், யாரும் பின்னாளில் வரும் துன்பத்திர்க்கோ, துயரத்திக்கோ,கஷ்ட நஷ்டக்கழுக்கு உதவ வருவதில்லை,கேலி பேசுவார்கள் என்பதுதான் உண்மை, அந்த நேரத்திலும் தன்னை அவமானபடுத்திவிட்டு சென்றவள் என்றுகூட பாராமல் அந்த பெண்ணிற்கு கைகொடுத்து தூக்கி விடுவது தாய் தந்தயரும்தான். காரணம் அவள் மகள் அல்லவா, மகள் என்ற பந்தம் காதலை விட சிறந்தது. புனிதமானது எதையும்  காயப்படுத்தாது .காயபடுதுவது எதுவும் புனிதமானதாக இருக்கமுடியாது .காதல் புனிதமானதா ?


நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் மிரட்டல்



இந்தியாவில் லஞ்சம் மட்டும் அதன் வளர்சியை தடை செய்யவில்லை.அதற்க்கு சமமாக இருப்பது பயம்.நேர்மையான இருக்கவேண்டும் என்று எண்ணுகிற அதிகாரிகள் கூட பயம் காரணமாக தவறு செய்ய நேருகிறது.பயம் வர காரணமான இருக்கின்ற மிரட்டல்களை எதிர்த்துதான் இன்று நம்முடைய சமுதாயம் மிகப்பெரிய போராட்டத்தை முன் எடுத்து செல்லவேண்டும்.அன்பளிப்புகள் கூட லஞ்சம் என்கிற வரிசையில் வருகிறது அப்படி பார்த்தோமேயானால் லஞ்சத்தை விட இந்த மிரட்டல்,பயம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தானவை.நேர்மையாக வாழவிரும்பும் மனிதனை கூட அடிமையாக விருப்பமின்றி சில தவறான செயல்களை செய்ய கூடிய சூழ்நிலைகலை உருவாக்குகின்றது அதுவே பின்பு வழக்கமாகிவிடுகிறது.மிரட்டல் கொடுப்பது வெளியிலிருந்து மட்டும் வருவதில்லை உடன் பணிபுரிகின்றவர்கள் மூலமும் வருகின்றது.மிரட்டல் பயம் சமூகத்தல் எல்லா மட்டத்திலும் இருக்கின்றது.முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து இன்று எதற்கெடுத்தாலும் மிரட்டிபயம்கொள்ள செஇதுகாரியத்தை சாதித்துகொள்ளுவது என்பது சர்வசதரனமாகிவிட்டது.கண்டுகொல்லாமல்விட்டுபோன இந்த மிரட்டல், பயம் மெல்ல விலகுவதற்கு வழிசெய்தால் ஒரு ஒளிமயமான சமுதாயம் உருவாகும்.

தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்கிறார்களா ........!

தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்கிறார்களா ........!

பிழைப்பிற்காக தமிழகத்தை தேடிவந்த பிற  மாநிலத்தை சேர்த்தவர்கள் தமிழ்நாட்டில் எண்ணிக்கை அளவில் வளர்த்து கொண்டேவருகிறார்கள் அப்படி வந்தவர்களில் இன்று அதிகபடியானவர்கள் இங்கேயே தங்கிவிட்டார்கள்.அவர்கள்.அனைத்து உரிமைகளையும்  பெற்று நலமுடன் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தமிழகத்தின் நலனில் எதேனும் அக்கறை இருக்கிறதா என்றுபார்த்தால்.துளியும் இல்லை என்பதுதான் இன்றைய தமிழர்களின் போராட்ட தோல்விகள் நமக்கு அறிவுறுத்துகிறது.இதுபோல் வந்து குடிஏறியவர்கள் தமிழர்களின் உணர்சிகரமான போராட்டங்களை நீர்த்துபோக செய்வதிலே வல்லவர்களாக இருக்கிறார்கள்.வெளியிலே தமிழ் மொழிகளில் பேசுகிறவர்கள் வீட்டிலே அவர்களுடைய தாய் மொழியிலேயே பேசி கொள்வார்கள். அப்படி பேசுவது மட்டும் இல்லாமல்,தனக்கு பிறந்த குழந்தைகளுக்கும் முதலில் அவர்களுடைய தாய் மொழியைத்தான் கற்றுத்தருகிறார்கள். வேறுவழி இன்றிதான் தமிழையும் கற்கிறார்கள்.பிற மாநிலத்தை சேர்த்தவர்கள் இன்று எல்லா மட்டத்திலும் வளர்ச்சி அடைந்து தமிழ்நாட்டில் ஒரு தவிர்கமுடியாத  அங்கமாக மாறிவிட்டார்கள் என்பது நாம் மறுத்தாலும் உண்மை.வியாபாரத்தில் கோலோச்சியவர்கள் இன்று அரசாங்க பணியிலும் ஆதிக்கம் செலுத்த தொடக்கி விட்டார்கள். இவர்களை போன்றவர்கள் தொடக்கி வைத்ததுதான் இந்த  அங்கில பள்ளி மோகம். அது இன்று கிழ் வரை சென்று அனைவரையும்பாடாய்  படுத்துகிறது. வேறு மாநிலத்தில் வாழுகின்ற தமிழர்கள் அந்த மாநிலத்தை சேர்தவரை ஒன்றித்தான் வாழவேண்டும் ,ஆனால் இங்கோ பிரமநிலத்தை சேர்தவரை அண்டி நாம் தொழிலோ வேலையோ செய்யவேண்டிய நிலையில் தான் இன்று தமிழகம் சென்று கொண்டிருக்கிறது.இந்த நிலையை மாற்றி தமிழகத்தை சேர்த்தவர்கள் வியாபாரத்திலும் பிற தொழில்களிலும் கோலோச்ச வழிவகை செய்தால் நம்முடையா வருங்கால தமிழ் சந்ததிகள் வழமுடன் வாழ்வார்கள்



பெண்கள் வேலைக்கு செல்ல தேவை இல்லை


பெண்கள் வேலைக்கு  தகுந்த காரணம் இல்லாமல் செல்வது என்பது  தேவை இல்லாத ஒன்று. அனைவரும் கூறுவது போல் இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில்  ஆண்  பெண்  இருவரும்
வேலைக்குசென்றால் தான் ஓரளவிற்கு நல்ல வாழ்க்கை வாழமுடியும் என்ற வாதம் முற்றிலும் தவறானது. இன்றைய சூழ்நிலையில் நல்ல ஒழுக்க உள்ள குழந்தைகள்தான் நம் நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவை. அதை நாம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும் அதற்காக நம் நாட்டில் அன்பிற்கு எடுத்துக்காட்டாக கூறகூடிய பெண்கள்தான் ஆரம்பித்து வைக்க வேண்டும்.இதற்க்கு ஒருவீட்டில் ஆண் வேலைக்கு செல்லும்பட்சத்தில் பெண்கள் வீட்டில் இருத்து குழந்தைகளை நல்ல ஆரோகியமாகவும்,கட்டுபட்டுடனும் ஒழுக்கமுடனும் வளர்க்கவேண்டிய முழுபொறுப்பு  அவர்களுக்கு இருக்கிறது எனவே பணம் என்னும் ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நமக்கும் நமுடைய நாட்டிற்கும் நல்லபிள்ளைகளை தரவேண்டியது ஒவ்வரு பெண்களுடைய கடமை.ஏன் இந்த கடமையை ஆண்கள் செய்ய கூடாத என்று சிலர் கேட்கிறார்கள். ஒரு குடும்பத்தில், ஒருவர் குடும்பத்தையும்,குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும் மற்றவர் வேலைக்கு சென்று பொருள் ஈட்டுவதில் கவனம் செலுத்தவேண்டும். குடும்பத்தையும் குழந்தையையும் கவனிக்கும் அந்த ஒருவர் பெண்களாக இருந்தால் நன்று.அது எல்லாவிதமான நன்மையையும் விளைவிக்கும். கணவன் மனைவி இருவரில்  ஒருவர் மட்டுமே வேலைக்கு செல்வது வேலை இல்ல திண்டடத்தை ஓரளவிற்கு பூர்த்திசெய்யும் நல்ல ஆரோகியமான ஒழுக்கமான நாடு ஒருவாவதர்க்கும் வழிவகை செய்யும்.அவசியம் இருந்தால் ஒழிய பெண்கள் குடும்பத்தை பார்ப்பது நன்று

ஏமாற்று.................. ஏமாறு ...............

இப்போது நாட்டில் அனைவருமே ஏமாற்றுபவர்களாகத்தான் இருக்கிறார்கள்.ஏமாற்றும் வித்தை  அனைவரிடமும் இருப்பதால் அனைவருமே ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம். சதவித அடிப்பையில் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கிறது எதாவது ஒருவிசயத்தில் நாம் பிறரை ஏமாற்றுகிறோம், எதாவது ஒருவிசத்தில் பிறரிடம் நாம் ஏமாறுகிறோம்.இந்த விகிதாசாரம் ஒவ்வருவருக்கும் வேறுபடுகிறது சிலர் அதிகமாக  ஏமாறுகிறார்கள் சிலர் அதிகமாக ஏமாற்றுகிறார்கள். நாம் ஏமாறும் போது மட்டும் நமக்கு கோபம் சொல்லமுடியாத அளவிற்கு வருகிறது அதேநேரம் நாம் ஏமாற்றும் போது அதற்கானகறன காரியங்களை தேடுகிறது, சரிஎன்று நம் மனம் நம்மிடம் சமாதனம் சொல்லுகிறது.எதிலும் ஏமாற்று எனக்கும் ஏமாற்று என்று ஆகிவிட்டது. சாதரணமாக ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கினால் கூட இரண்டு ரூபாய் அதிகமாக கொடுத்து தெரிந்தே ஏமாறுகிறோம் அதற்காக எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமலே இருக்கிறோம்.நாம் வாங்கும்,விற்கும்  உணவுவகையிலாவது குறைந்தபட்சம் ஏமாற்றுவதை குறைப்பதற்கான சுய ஒழுக்க கட்டுப்பாடு இருக்கவேண்டாமா. சுய ஒழுக்க கட்டுப்பாடு இல்லாமல் நாட்டில் எந்தவிதமான மாற்றத்தையும் கொடுவரமுடியது.