அத்வானியின் விருப்பத்தை வெளியிட்ட போபால் பொதுகூட்டம்


அத்வானியின்  விருப்பம் என்ன என்பது  போபால் பொதுகூட்டத்தில் தெரிந்துவிட்டது.மோடியை  அத்வானி முகம் கொடுத்து கூட பார்கவில்லை.அத்வானி பேசும் போது மோடி,மோடி என்று திரும்பத்திரும்ப கூட்டத்தில் இருந்து மோடி ஆதரவாளர்கள் கத்திகொண்டே இருந்தது  அத்வானி தனது உரையை பாதியிலேயே  நிறுத்தும்படி செய்து விட்டடது.இந்த மோடி  கூச்சல்கள் எப்படி வந்தது என்பது அத்வானிக்கு தெரியும் எனவேதான் தனது உரையை பாதியிலேயே நிறுத்திவிட்டார் வெறும் மோடி கூச்சல்கள் வெற்றியை தேடி தந்து விடாது என்பதை பா.ஜ.க புரிந்து கொள்ள வேண்டும். போபாலில் நடந்த பொதுக்கூட்டம் ப.ஜ.க.வில் மேல்மட்டத்தில் மிகப்பெரிய கிழேதள்ழுவதர்கான வேலைகள் தேர்தலில் நடைபெறும் என்பதை வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.அத்வானியை வலுகட்டயமாகத்தான் இந்த பிரதமர் வேட்பாளர் முடிவை ஏற்று கொள்ள வைத்திருக்கிறார்கள் அந்த  அழுத்தம் தேர்தலில் நிச்சயமாக அத்வானியின் பக்கமிருந்து வெளிப்படும்.அந்த அத்வானியின் கதிவீச்சு ஒட்டுமொத்த தேர்தல் வெற்றியில் எந்தனை சதவிகிதம் பாதிக்கும் என்பது தெரியவில்லை.தேர்தலில் முழவதுமாக தனிமேரும்பான்மையை தங்கவைத்து கொண்டால் எந்தவிதமான குழப்பங்களும் இல்லாமல் ஆட்சியை அமைத்து விடும் ஆனால் அப்படி ஒரு சூழல் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. அப்படி தனிபெரும்பான்மை இல்லாதசமையத்தில் ஆட்சி கட்டிலை எட்டி பிடிப்பதற்கு அத்வானி போன்ற மூத்த தலைவர்களின் ஆசீர்வாதம் நிச்சயமாக தேவைப்படும் அப்போது மோடிகூச்சல்களுக்கு அத்வானி பதில் சொல்லும் நிலைமையை பா.ஜா.க எதிர்கொள்ளவேண்டி வரும் இதை உணர்த்து பொதுக்கூட்டங்களில் நடந்து கொள்ளவது நல்லது இல்லை என்றால் வெற்றி பெற்றாலும் எதி கட்சி வரிசையில்தான் அமரவேண்டிவரும்.

பா.ஜ.க வின் தமிழக தொண்டர்கள்


ப.ஜ.க என்ற அரசியல் கட்சி R.S.S. என்ற தாய் கழகத்திலிருந்து உருவானது அல்ல, தாய் கழகமாம் R.S.S உருவாக்கிய தன்னுடைய அரசியல் பிரிவு தான் ப.ஜ.க. தாய் கழகத்தில் பயிற்சி பெற்ற பின்தான் ப.ஜ.க அரசியல் தளத்தில் பிரவேசிக்க முடியும்,அரசியலிலும் பிரகாசிக்க முடியும்.தாய் கழகத்தின் ஆதரவு ஒருவருக்கு இல்லை என்றால் இல்லை என்றால் அவர் அரசியல் வழக்கைபிசுபிசுத்துவிடும்.தாய் கழகம் ஓரம் கட்டினால் அவர் ப.ஜ.க வழர்ச்சியில் எவ்வளவு பங்குகொண்டாலும்,ப.ஜ.க வை அரசியல் வானில் ஒளிர செய்தாலும் அவரை தள்ளிவைத்து தான் பார்க்கும். பா.ஜ.க விற்கு தனியாக எதுவும் சட்ட திட்டங்கள் கிடையாது. தாய் கழகத்தில் இருக்கும் பலபேர் தங்களை முழுவதுமாக அர்பணித்து பணியாற்றுபவர்கள்,அர்பணித்து என்றால் தங்களின் சிறுவயதிலிருந்து தொடங்கிவாழ்க்கையில் திருமணம் கூட செய்து கொள்ளாமல்,தங்கள் குடுப்பத்துடன் தொடர்புகொள்ளாமல் கட்சிக்காக தங்களை ஒப்படைத்தவர்கள்.இந்தகைய தொண்டர்களின் மூளையாய் இயங்குவது தாய் கழகம். இவர்களின் செயல்பாடுகள் மூளையை வைத்திருக்கும் தாய் கழகத்தின் கட்டுபாட்டில் தான் நடக்கும். இத்தகைய முழு அர்பணிப்பு தொண்டர்கள் வட மாநிலத்தில் அதிகமாக காணப்படுவார்கள்.ஆனால் இப்போது தமிழ்நாட்டிலும் இவர்களின் எண்ணிக்கை முளையிலிருந்து கொஞ்சம் மேலே வந்திருப்பதாக உணரவேண்டி உள்ளது.இத்தகைய அர்பணிப்பு தொண்டர்கள் தமிழ்நாட்டில் வளர்வது நல்லதா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.இவர்களை போல் தொண்டர்கள்  வேறு காட்சிகளில் இருக்கிறார்களா நமக்கு தெரியவில்லை! நம்முடைய வழக்கை முறை கலாச்சாரம்  குடும்ப உறவுகளை சார்த்தது அன்பு, பாசம், நேசம், போன்றவற்றை சீர்துக்கி பார்த்து வாழ்வதுதான் நம்முடைய வாழ்கை பயணம்,ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்வது பாசத்திற்காக நாணல் போலே வளைத்து கொடுத்து வாழும்  ஒரு பாதை இதில் அதி தீவிர அர்பணிப்பு தொண்டர்கள் சுதந்திர ஜனநாயக நாட்டிற்கு எந்த அளவிற்கு தேவை என்பதை காலமும் , களமும் தான்  பத்தி சொல்ல வேண்டும். 

பார்வை அற்றவர்களின் பரிதாப போராட்டம்

பார்வை அற்ற பட்டதாரிகளின் கோரிக்கை போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது சென்னை மாநகரில் ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள் தங்களின் கோரிக்கைகளை செவிமடுப்பதற்கு ஆளில்லை என்று அவர்கள் காட்சி உடகங்களில் புலம்புவது கண்ணிருந்தும் குருடர்களாய் வாழும் நம் அரசியல் வாதிகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது.வாழ்வில் ஒளியேற்ற வேண்டியவர்கள் இவர்களின் போராட்டங்களை முடக்க பார்ப்பது மிகவும் பரிதாபத்திக்குரிய ஒரு நிகழ்வு.இவர்களின் போராட்டம் தமிழ்நாடு முழவதும் பரவத்தொடங்கி இருக்கிறது.இவர்களின் முக்கியமாக கோருவது நாங்கள் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் எங்கள் கோரிக்கைகளை அவர்களிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்பதுதான். முதல்வர் இவர்களை சந்திப்பதை தவிர்பதர்க்கு என்ன காரணம்.இந்த பார்வியாற்ற மனிதர்களை அங்கும் இங்கும் அலைகளிப்பது சரிதானா.இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி பிறகு விவாதிக்கலாம் இவர்களை சந்தித்து கோரிக்கைகளை செவிமடுத்தாலே இவர்களின் மனபாரம் குறையும் அதை செய்தாலே இவர்களுக்கு பிகபெரிய சந்தோசம் ஏற்படும் இவர்களின் போராட்டமும் ஒரு நிலைக்கு வரும்.இவர்களை காட்சி உடகங்களில் பார்க்கும் போது இவர்கள்  போராடித்தான் வாழவேண்டும் என்றால் இந்த ஜனநாயக அமைப்பு என்பதே தவறான பாதையில் பயணிப்பதாக ஆகிவிடும்,  மனிதாமிமானம் இல்லாமல் போய்விடும் .மனம் மாறுங்கள் மாற்றுதிரனாளிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்   

சினிமா (அரசியல்) நூற்றாண்டு விழா

சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் கலசங்கள் இல்லாத  கோபுரங்களுக்கு நடத்தப்படும் விழாவாக கொண்டாடப்படடுவது வேதனையாக  இருக்கிறது.தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஜாம்பவான்களை  தவிர்த்து விட்டு நூற்றாண்டு விழாக்களை கொண்டாடுவது என்பது இன்றைய திரைதுறை அரசியல் சார்தே செயல்படுகிற  நிலையில் உள்ளது என்பதை மக்களுக்கு பறைசாற்றும் விதமாக இருக்கிறது.ரசிகர்கள் பின்புலம் உள்ள நடிகர்களே இந்த அளவிற்கு பயம் என்னும் குழிக்குள் நின்று பேசுவதற்கு தயங்கும்போது தனிமனிதனின் நிலை என்ன? இசை அமைப்பாளர் M.S.விஸ்வநாதன் அவர்களுக்கு அனுமதி மறுக்க பட்டிருக்கிறதா, அவருடைய இசை இல்லாமல் இன்றைய தமிழ் திரை இசை இல்லை  என்கிற அளவிற்கு இன்றைய தலைமுறை வரை அவரின் இசையில் மயங்காதவர்கள் இல்லை. அப்படிபட்ட மனிதருக்கு அரங்கில் அனுமதி இல்லை தமிழ் திரை வரலாற்றை இவருடைய பெயரை மறைத்து எழுதிவிட முடியுமா! நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் இவர்களை எல்லாம் தகுந்த மரியாதையுடன் வீட்டிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரவேண்டியவர்கள் அப்படி செய்யாவிட்டாலும்,அவர் வராததை குறிப்பறிந்து அழைத்தீர்களா என்று இன்றைய முதல் நிலை நடிகர்கள் கூட கேட்கவில்லை என்பது என்ன இந்த உலகம் என்றுதான்.  நினைக்க தோன்றுகிறது இந்த நிலை நமக்கும் வராது என்பதாக இவர்கள் நினைத்தால் அது இவர்களின் அறியாமையை தான் உணர்த்தும். ,வரும் காலங்களில்லாவது இது போல் ஒரு நிகழ்வு நடக்காமல் பார்த்து கொள்ளுவது நன்று.

பார்வை அற்றவர்களின் போராட்டம் பார்க்க நாதி இல்லை

சென்னையில் பார்வை அற்ற பட்டதாரிகளின் போராட்டத்தை வேடிக்கை பார்க்காமல் ஒளி இல்லா அவர்களின் வாழ்கையில் ஒளி ஏற்றிவைகவேண்டியது நம்முடைய அனைவரது கடமை.தொடர்ந்து போராடி வரும் இவர்களை கவனிக்க ஆளில்லாமல் அல்லோல படும் காட்சியம் கானொளியில் காண்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.மிருகங்களுக்கு கூட துன்புறுத்த பட்டால் உடனே குரல் கொடுக்க ஆளிருக்கிறது இவர்களுக்கு துணையாக உரிமை குரல் கொடுக்க எந்த அமைப்பும்  முன்வரவில்லை என்பது கண்டனத்திற்குரியது.இவர்களும் வேலையில்லா பட்டதரிகலள் தான்.இவர்களின் கோரிக்கை என்ன வென்று கேட்ககூட நாதி இல்லாமல் போயிற்று என்று நினைக்கும் போது மனிதாபிமானம் இன்று  என்னவாயிற்று அது இல்லாமல் போயிற்று  என்றே என்ன தோன்றுகிறது.இப்படிப்பட்ட பார்வையற்ற மாற்றுதிறனாளிகளே  போராடித்தான் உரிமைகளை பெறவேண்டி இருக்கிறது என்றால்.மற்றவர்களின் நிலை நினைக்கவே பயமாக இருக்கிறது.வரும் நாட்களில் மனிதாபிமானமற்ற செயல்கள்தான் வீதி உலா வரும் என்ற கவலை வருவதை நம்மால் மறுக்க முடியவில்லை.
இதைபோல் வேறு எந்த கூட்டமைபாவது போராடி இருக்குமானால் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே வேறுவிதமாக இருக்கும்.பார்வையற்ற இவர்களால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணம் தான் இந்த போராட்டத்திற்கு செவிமடுக்காமல் மௌனியாக இருக்கிறது.ஏதேதோ அமைப்புகள் வைத்திருக்கும் அன்பு சகோதர சகோதரிகளே  தயவு செய்து இவர்களுக்கு எதாவது செய்து உரிமைகளை பெற்றுத்தர முடிந்தால் செய்யுங்கள் உங்களுக்கு கோடி நன்மைகள் கிடைக்கும் .

விழி இழந்தோரின் வழி பயணம் போராட்டமா

விழி இழந்தோரின் வழி பயணம் போராட்டமா  கண் பார்வை இழந்த  பட்டதாரிகள் தங்களின் உரிமைக்காக போரடிகொண்டிருக்கிறார்கள்.விழி இழந்தோரையும் வீதிக்கு வந்து போராடித்தான் உரிமைகளை பெறவேண்டும் என்ற நிலையில்தான் நம்நாடு  இன்றும் இருக்கிறது.மனிதாமிமானம் உள்ளவர்கள் யாரும் இல்லையா இந்த நிகழ்வை முடிவுக்கு கொண்டுவர என்று நினைக்க தோன்றுகிறது  வீதியில் செல்லும்போது இந்த விழி இழந்தோரை கண்டால் வரும் பட்சாதாபம்,  பரிதாபம் கூட நம்  அரசியல்வாதிகளுக்கு இல்லை என்று நினைக்கும்போது வேதைனையில் இதயம் அழுகிறது . விழி இழந்தோரின் வாழ்கையே உணர்வுகளின் அடிப்படையில் தான் அப்படிப்பட்ட வர்களின் போராட்ட உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை என்றால்.நாம் கண்ணிருந்து குருடர்களாக,காதிருந்தும் செவிடர்களாக வாழ்கிறோம் என்றுதான் பொருள்.பார்வைதிரனை இழந்தவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் வேலைகொடுப்பது என்பது நினைத்து கூட பார்கமுடியாத கற்பனை.அரசு நிறுவனங்களிலும் அவர்களை புறக்கணிப்பது நல்ல முன்னுதாரணமாக இருக்காது.இவர்களது போராட்டத்தை யாரும் பெரிதாக மதிக்க வில்லை போலும் எந்த அரசியல் தலைவர்களும் இவர்களின் நிலையை பற்றி பேசுவதற்கு முன் வரவில்லை,போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வில்லை,குண்டுகட்டாக அப்புறபடுத்தும் போது காவல்துறை கொஞ்சம் கனிவுடன் செயல் பட கூடாதா.நிகழ்வை பார்பவர்களை நெகிழ செய்கிறது.இந்த காட்சியை காணமுடியாத இந்த கண்மணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யுங்கள்.இவர்கள் ஆட்சியை பிடிக்க உதவுவார்களோ இல்லையோ நிச்சயம் புண்ணியம் சேர்க்க உதவுவார்கள்.  

மாறுமா மனம் மன்றாடும் தமிழர்கள்

தமிழ்நாட்டில் இம்போது தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டு வாழ்பவர்களை காட்டிலும் பிறமாநிலத்தை சேர்தவர்கள்தான் அதிகமாக நிலம் வாங்குகிறார்கள் .குறைந்தபட்சம் தமிழகத்தின் குடும்ப அட்டையை பதினைந்துவருடங்கள் பயன்படுத்தியவர்கள் தான் தமிழகத்தில் நிலம் வாங்க தகுதி என்ற ஒரு வரை முறையை கொண்டுவரவேண்டும் இல்லையேல் விரைவாக தமிழகத்தில் தமிழர்கள் அகதிகள் ஆக்கபட்டுவிடுவார்கள் தமிழகத்தின் அரசு உயர்பதவிகளில் இருப்பவர்கள் ஐம்பது சதவிகிதத்திற்கு மேலாக பிற மாநிலத்தை சேர்தவர்கள் தான். இவர்கள் முழுமையாக இங்கே வந்து குடியேறிவிட்டார்கள்.இவர்களின் பதவியை மூலதனமாக வைத்து இன்னும் பலபேர்களை இழுத்து வந்து இங்கே குடி யேற்றிவிட்டார்கள்.அவர்கள் உயர்பதவில் இருப்பவர்களை தங்களுக்கு சாதகமான வேலைக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள் இதன் விழைவு சரியான பாதையில் தமிழனுடைய வாழ்கை  பயணம் நகர்வது இல்லை.சில இடங்களில் இவர்களின் தயவு இல்லாமல் வாழஇயாத சூழ்நிலைகள் கூட அரங்கேறுகிறது.சென்னையில் அதிகபடியாக பிற மாவட்டத்தாரை விட பிற மாநிலத்தார் வருடத்திற்கு வரு\டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறார்கள்.இதற்க்கு காரணம் நம்மிடம் உள்ள ஒற்றுமை இன்மைதான் இதை பயன்படுத்தி கொண்டவர்கள் நம்மை பிரித்தாண்டு கொண்டே இருக்கிறார்கள்.நாமும் அவர்கள் தூக்கி போடும் வஸ்துகளை பிடித்து கொண்டு சாமரம் வீச தயாராகி விடுகிறோம்.தமிழ் நாட்டில் வாழும் தமிழனாவது அகதிகள் ஆகாமல் இருக்க இந்த அரசியல்வாதிகள் விடுவார்களா இல்லை அதையும் ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்களா. தமிழர்களே தமிழர்களே விழ்த்து கொள்ளுங்கள் எல்லோரும் நம் நண்பர்கள்தான் முகத்தை விறு முகவரியை வாங்கும் நிலைக்கு நாம் வரவேண்டாம்.  

ரஜினி .. பா.ஜ.க.. ஆதரவு...இது ஆண்டவன் இட்ட கட்டளையா?

ரஜினியிடம் பா.ஜ.க வை ஆதரிக்க சொல்லி ஒரு பத்திரிக்கை ஆசிரியர் கேட்டுக்கொண்டதாக தெரிகின்றது  .ப.ஜ.க வை சேர்ந்த தலைவர்கள் உடகங்கள் மூலமாக ரஜினியின் ஆதரவை நேரடியாகவே கோருகிறார்கள்.இதற்க்கெல்லாம் ரஜினி எந்த அளவிற்கு அசைந்து கொடுப்பார்,ஆதரவு கொடுப்பாரா என்பது  தெரியவில்லை.அரசியலில் அவருக்கு முன்பு கிடைத்த அனுபவம் அவரை நிச்சயமாக நிறைய சிந்திக்க வைக்கும்.இருப்பினும் தன்வாழ்வில் உயர்வதற்காக உதவியவர்கள் கோரும்போது அதை தட்டி கழிக்க முடியாமல் ஒரு தர்மசங்கடமான நிலைக்கு அவர் வரக்கூடும் .காரணம் செய் நன்றி மறக்க கூடியவராக அவர் தெரியவில்லை எனவே  தவிர்க்க முடியாமல் பா.ஜ.க.வை ஆதரிக்க கூடிய ஒரு முடிவை  எடுக்கும் சூழ்நிலைக்கு அவர் வரலாம் அதன் விளைவாக ஒரு இறுக்கமான மனநிலைக்கு  மீண்டும் அவர் வரவேண்டிய இருக்கும்.யாருக்காகவோ அவர் பா.ஜ.க வை ஆதரித்து அந்தகட்சி வெற்றிபெறும் பட்சத்தில் இவருடைய   நிலையில் எந்த இக்கட்டான காட்சிகளும்   வர வாய்ப்பில்லை காரணம் வெற்றிக்கு பின் ரஜினியை ப.ஜ.க தேடப்போவது இல்லை.தோல்வியை தழுவும் பட்சத்தில் தமிழக பா.ஜ.க பெரிதாக அலட்டிகொள்ளாது காரணம் அதன் நிலையில் இருந்து அது  கீல்ழிறங்காது  அனால் ரஜினியின் நிலை,செய்நன்றி கடன் என்று சொனால் யார் கேட்டு சமாதனாம் ஆவது ? மோசமான விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும் மேலும் ஒரு இறுக்கமான சூழ்நிலைக்கு தள்ள படுவார். அதே பத்திரிக்கை ஆசிரியரின் ஆலோசனையில் முன்பு ரஜினி பெற்ற அரசியல் அனுபவம் அவருக்கு இந்த நிலையில் சிந்திப்பதற்கு  கை கொடுக்கும்.ஆதரித்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் பா.ஜ.கவின் கட்சி  தலைமை பொறுப்பை ஏற்பதை விட தனியாக கட்சியை தொடக்கி  பா.ஜ.க.வை ஆதரிப்பதே நலமாக இருக்கும்.தேவைபட்டால் அரசியலில் இருக்கலாம் இலையேல் அறிக்கை விடும் ஒரு கட்சியாக மாற்றிவிடலாம். மிகுந்த சிரமத்திற்கும் ஆளாக தேவை இல்லை . இது ஆண்டவன் இட்ட கட்டளையா இல்லை அரசியலில் தவிர்க்கமுடியாத சூழ்நிலையா.தன்  அரசியல் வாழ்கை ஆண்டவன் கையில் இருப்பதாக சொல்லுபவருக்கு அந்த நிலை கைகூடுகிறதா. 

குஜராத் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைத்தது


குஜராத் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைத்தது என்று மெல்ல மெல்ல வெளிச்சத்திரிக்கு வர ஆரம்பித்திருக்கிறது  மேஜிக் செய்துவிட்டதாக இந்த உடகங்கள் எல்லாம்  தூக்கி வைத்து கொண்டாடி செய்திகளை வெளியிட்டது ஆனால் இன்று உண்மையான குஜராத் எப்படி இருக்கிறது மாநில வளர்சிபட்டியலில் அது கல்வி,தொழில்,விவசாயம், வறுமை,குழந்தை கல்வி போன்ற வற்றில் எந்த இடத்தில் இருக்கிறது என்று வெட்ட வெளிச்சமாகா விட்டாலும் மெல்ல திரை விலக ஆரமித்து இருக்கிறது.வரிந்து கட்டிய ஊடகங்களே கூட உண்மை நிலைமையை வெளிக்கொண்டு வருகின்றன.இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் இதை விட பல மடங்கு சதவிகித வளர்ச்சி அடிந்துள்ளது அந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் யாரும் என்னால் மாட்டுமே முடிந்ததது என்று தம்பட்டம் அடித்துகொள்வது அந்த மாநிலத்தில் முடிந்து விடும் ஆனால் குஜராத் விவகாரம் மட்டும் ஏன் இந்தியா முழுவதும் பரப்பபடவேண்டும் இது தாய் கழகத்தின் முறை படுத்துதலா அப்படிஎன்றால் ஏன் அவ்வாறு செய்யவேண்டும், கட்சியில் பல மூத்த தலைவர்களை ஓரம்கட்டிவிட்டு சிலரை மட்டும் முன்னிலை படுத்த வேண்டும்.தாய் கழகத்தின் செயல் வரை முறைகளை செயல் படுத்த முடியும் என்பதாலா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா,சுப்ரமணிய சாமி போன்றவர்கள் திடீரெண்டு இவர்களுடன் கைகோர்த்தது எதனால்? சுப்ரமணிய சாமி உலககளாவிய தலைவர்களுடன் மற்றும் சாமியார்களுடனும் தொடர்புடைய ஒரு மனிதர்.இவரை இன்று கட்சிக்குள் வந்தது அவர் விரும்பியா அல்லது தாய் கழகத்தின் விருப்பத்தின் பேரிலா என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். கட்சியை பூஜ்யத்திலிருந்து வளர்த்த மூத்த தலைவர் அத்வானி ஏன்  இதை மறுதலித்து பேசவேண்டும் அவருக்கு தெரிந்த உண்மை என்ன பிரதமர் பதவி ஆசையில் மட்டும் இதை பேசி இருப்பார் என்று ஒற்றைவரியில் தட்டி கழிக்க முடியாது அதையும் தாண்டி ஏதாவது இருக்க வேண்டும் என்பதையும் உணரவேண்டும் இதையும் நாம் கருத்தில் கொண்டு ஆராய்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இன்றைய சூழல் உள்ளது .மாற்றம் வரவேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருந்தாலும் அது சரியானதாக இருந்தால்தான் நல்லது கிராமத்து சொலவடைபோல் "புருஷனை விட்டு அரசனை பிடித்த கதையாக" ஆகிவிடக்கூடாது.சொந்தங்களிடம் வாங்கிய கடனை கந்துவட்டிகாரனிடம்  கடன் வாங்கி திருப்பி கொடுப்பது போல் நிலைமை மோசமாகிவிட கூடாது என்பதில் மக்கள் கவனாமாக இருக்க வேண்டும். மாற்றம் தேவை அது மாற்றானுக்கு மகிழ்ச்சியாகிவிட கூடாது

அத்வானி என்றோ செய்த தவறு

அத்வானி என்றோ  செய்த தவறு இன்று அவருக்கு தலைவலியை கூண்டுகிறது .பி.ஜே.பி என்ற ஒரு கட்சியின் வளர்ச்சியை அத்வானியை தவிர்த்து நினைத்து கூட பார்க்க முடியாது.அந்த அளவிற்கு அவருடைய அர்பணிப்பு  அதன் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்குண்டு ஆனால் இன்று அவரை தவிர்த்து தவிக்க விடவேண்டும் என்ற எண்ணம் இன்றைய வளர்ச்சி அடைந்த ப..ஜ.க நினைக்கிறது இதற்க்கு காரணமும் அத்வானிதான்.தன் முகத்திற்கு முன்னால் பூனையைபோல் நடித்து முகத்துக்கு பின்னால் புலியை போல் வாழ்தவர்களை நம்பியதன் விளைவு.தன்னுடன் உண்மை பேசியவர்களை புறந்தள்ளியத்தின் வினை.காலுக்கடியில் வளர்ந்த முட்செடியை முதலிலேயே வெட்டாமல் விருட்சமாக வளர விட்டத்தின் பயன்.தன்னை நம்மவைது ஏமாற்றிய இந்த பூனையை நம்பி உண்மையிலேயே தன்னுடைய விசுவாசிகளை விலக்கி வைத்ததன் காரன்.இன்று அத்வானி செய்வது அறியாது தவிர்க்கிறார். ஆனால் அவர் சொல்லுவதை இப்போது பிஜேபி ஆராய்வது நல்லது. காற்று நிரம்பிய பலூனை நம்மி மிகப்பெரிய பயணத்திற்கு தயாராவது பி.ஜ.பி க்கு நல்லதல்ல.மக்களின் மிகப்பெரிய ஆதரவு இன்று ப.ஜ.க விற்கு இருப்பதை போல் தெரிவது உண்மையா என்பதை புரிந்து கொண்டு செயல் படுவது நல்லது.கட்சியின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றிய மூத்த தலைவரின் ஆலோசனையை கேட்டு கொள்வது நன்று.காய்த்து குலுங்கும் போது பழத்தை உண்பதற்கு அனைவரும் வருவார்கள்.கருகிய மரத்திற்கு தண்ணீர் உற்றதான் ஆள் இருக்காது.எதை வேண்டுமானாலும் மக்கள் மனித்து விடுவது வழக்கம் ஆனால் ஒருவரை அவமானபடுத்துவதை விருப்ப மாட்டார்கள் இதை மனதில் வைத்து தேர்தலை ப.ஜ.க சந்திப்பது  நன்று 

,உனக்கு நீயே அன்பு செலுத்து

உன்னுள் இருக்கும் மானுடத்தை  நீ கண்டுகொண்டால் மனம் என்ற  ஒன்றை புரிந்து  கொள்வாய் அதுவரை கடல் அலையை போலே அகம் புறம் என்று அலை அடித்துக்கொண்டுதான் இருக்கும்.ஒரு கடல் அதன் ஆழத்தில் அமைதியாகத்தான் இருக்கிறது ஆனால் கரை மீது எப்போதும் ஓயாது அலை அடித்துக்கொண்டுதான் இருக்கும்.உன் மனதின் ஆழத்தின் அமைதியை உணர்ந்து கொண்டால் உன்னுள் நடக்கும் தர்க்க போராட்டம் தானாக உருத்தெரியாமல் போய்  விடும்.
குறைந்த பட்சம் உனக்கு  நீயே  பொய் சொல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் அப்படி  வாழ்வது என்பது ஒரு வகையான தவம் இதை செய்வதை தொடக்கி விட்டால் தோல்வியின் முடிச்சிகள் ஒன்று ஒன்றாக  அறுந்து விழுத்துவிடும்.உன்னையே நீ விருப்பு
,உனக்கு நீயே அன்பு செலுத்து, வெற்றிபடிகட்டுகள் உன்  கண்முனே தெரிய தொடங்கும்  நமக்கு நாமே உண்மையை சொல்லுவதற்காக ஏன் தயங்கவேண்டும். நாம் இப்போதிருக்கும் நிலை  உணர்த்து நடந்தால் எந்த உயரத்தையும் யாராக இருந்தாலும்   அடைந்து விடமுடியும்.  நீ உனக்காக உன்  நிலையின் உயரத்தை அளப்பதற்கு கற்பனையை நாடாதே அது ஆபத்து. நம்முடைய திறமையை உணர்தாதவரை யாரும் அவர்களாக உணர்த்திட  மாட்டார்கள்.எது உன் குறிக்கோள் என்பதை அறிந்து கொள் அதன் உயரத்தை அளந்துகொள்,அதன் பயண பாதையை புரிந்து கொள். இப்போது நீ இருக்கும் உயரம் உனக்கு புரியும் நீ தொடவேண்டிய சிகரத்தின் உயரமும் பயணபடவேண்டிய தூரமும் விளங்கும.மனமே மாற்றத்திற்கான  மிக பெரிய உந்து சக்தி அந்த சக்தியை  உனக்கு பயன் படுத்த கற்றுக்கொள் மனமே உந்தன் முதல் அறிமுகம் அதனை நண்பனாக்கி கொண்டால் உனக்கு ஏவல் ஆளாக உன் கட்டளைக்கு கட்டுப்படும் சக்தியாக மாறிவிடும்  அதன் வேகம் உந்தன் வெறிகொண்ட வெற்றியை சொல்லமுடியாத  கால அளவில் உன்னிடம் சமர்பிக்கும்.வாழ்வில் நீ அடைய முடியாது என்ற நினைத்திருந்த உயரத்திற்க்கெல்லாம் உன்னை  அனாசியமாக இழுத்து செல்லும் மனமாற்றம் ஒன்றுதான் வாழ்வின் மறுமலர்ச்சிக்கு வித்து அதை உணர்ந்து கொள் வாழ்வில் வசந்தம் மலரும் புரிந்து கொள் வாழ்க அன்புடன் வளர்க அமைதியாக 

உதவி........ ஒத்தாசை.........

மனிதன் தன சக மனிதனுக்கு ஒத்தாசை உடன் வாழ்வதுதான் உதவி.உதவியில் பலவகை உண்டு,பொருள்,பணம்  கொடுத்து வாழ்கையை சீர்படுத்த  உதவுவது,தமக்கு தெரியாத ஒரு செயலை நமக்கு படிப்பித்து உதவுவது,உடலுறுப்புகளை கொடுத்து உதவுவது.இன்னும் இதைபோல் பல எந்த உதவியாக இருந்தாலும் உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே அதை செயல் படுத்த முடியும்.
 இன்று நாம் வழும் சூழலில் உறவினர்கள் நண்பர்கள் என்று சொல்லுபவர்கள்  கூட உதவி செய்வதற்கு முன் வருவதில்லை.அதனால் வரும் பின்விளைவை எண்ணி மறுத்து விடுவார்கள்.தன் உறவினர்கள், நண்பர்களின்  முக வாட்டத்தை பார்த்து உதவிய காலங்கள் இன்று இல்லை.
நமக்கு உதவி தேவை என்ற சூழலில் நமக்கிருக்கும் மனநிலை,உதவும் நிலையில் இருக்கும் போது  பெரும் பாலோனோருக்கு இருப்பதில்லை.இதிலிருந்து ஒரு சிலருக்கு விலக்கு உண்டு. உருகி உருகி பழகும் நண்பர்களானாலும்,உறவினர்களானாலும் கூட உதவி என்று வரும் பொது தங்களுடைய நிஜ முகத்தை காட்டிவிடுகிறார்கள்.உலகம் இதைபோல் இருக்க தங்களை வருத்தி கொண்டு உதவும் நல்  உள்ளங்களும் இப்புவியில் இருக்கத்தான் செய்கிறார்கள் அது மிக மிக குறைந்த சதவிகிதத்தில்தான் இருக்கிறது.மனிதநேயம்  மனிதாபிமானம் போன்ற நல்ல குணங்கள் இன்றைக்கு மனதளவில் மட்டுமே பேசப்படும் செயல் பாட்டில் வருவது என்பது மிகமிக குறைவு.இதைபோல் ஒரு பண்பாட்டை வளர்த்து கொண்டால் வரும்  காலம், நம்முடைய எதிகால சந்ததியின் வழக்கை முறை மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகவேண்டியதுதான் அதில் நம்முடைய ரத்த உறவுகளும்  அடங்கும்.
எதையும் கொடுக்காவிட்டாலும் பிறர் மனம் புண்படும் படி நடக்காவண்ணம் வாழ்வதே இப்போது பிறருக்கு நாம் செய்யும் பெரிய உதவி 

மனம் ஒரு அறிய மருந்து......வாழ பழகிகொள்ளுங்கள்....வழக்கையின் இன்பம் தெரியும்

 தோல்விகளை கண்டு துவளாதீர்கள் மனம்  ஒரு அறிய மருந்து அதை எம்போதும் உச்சகத்துடனே வைத்து கொள்ளுவது  ஒரு வைகயான கலை.
முதலில் தோல்வி வரும் பொது ஏதோ நமக்கு  நிகழும் ஒரு நிகழ்வாக பார்க்கும் பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி கொள்ளுங்கள்.என்றாவது நமக்கு சாதகமான நிகழ்வுகள் நடக்கும் போது  இது நமக்கு மட்டுமே நிகழ்வதாக நினைத்ததுண்டா இல்லையே,, சிறிது நினைவுபடுத்தி பாருங்கள் இல்லை என்ற பதில் தான் நமக்கு கிடைக்கும் ஆனால் பாதகமான நிகழ்வுகழுக்கு மட்டும் நாமக்கு மட்டுமே நிகழ்வதாக நினைத்து மனதை சோர்வடைய செய்கிறீர்கள் அதற்க்கு மாறாக  நமக்கு சாதகமான நிகழ்வுகள் வரும் போது  நாம் அதை நினைத்து உற்சாகம் அடைந்து கொள்ளவேண்டும்.நன்றாக நினைவு படுத்தி பார்த்தால் நமக்கு சாதகமான நிகழ்வுகள் தான் அதிகமாக நிகழ்திருக்கும் ஆனால் மனம் அதில் லயிப்பதில்லை பதிலாக எப்போதாவது நடக்கும் பாதகமான நிகழ்வுகளை மட்டும் மீண்டும் மீண்டும் நமக்குமட்டுமே நடப்பதாக எண்ணி கொண்டு மனதின் கிழ் நோக்கி பயணத்திற்கு தயார்படுத்தி கொண்டிருக்கிறோம் .இதுவரை நடந்த சாதகமான நிகழ்வுகளை திரும்பி பார்பதை  காட்டிலும் இன்றிலிருந்து இனிமேல் வருகின்ற சாதகமான  நிகழ்வுகள் எந்தனை நம் வாழ்வில் என்று எண்ணிப்பாருங்கள்  இந்த நிகழ்வு நமக்காக நிகழ்வதாக எண்ணி மகிழுங்கள்.பாதகமான நிகழ்வுகள் அனைவருக்கும் நிகழகூடியதுதான் அதை நினைத்து வருந்தி மனதை மேலும் மேலும் உற்சாகம் இழக்க வைப்பது உங்களுக்கு நீங்களே எதிரியாகி விடுவீர்கள் சாதகமான நிகழ்வுகளை உங்கள் நினைவில் வைத்து கொண்டு வாழ பழகிகொள்ளுங்கள் வழக்கையின் இன்பம் தெரியும்.வாழ்வது சுலபம் என்பது புரியும்.

சுனாமி எழும்பும் கள்ள காதல்

காதல் என்பது ஒருவர் மீது ஒருவர் இனம்புரியாத அன்பு செலுத்துவது சரி,அது என்ன கள்ள காதல்,ஆண்கள் மனைவியை விட்டு விட்டு வேறு பெண்ணிடம் கொள்ளும் ஒரு மயக்கம் அதேபோல் ஒரு பெண் தான் கணவனை விட்டு வேறுஒரு ஆணுடன் கொள்ளும் ஒருவித மயக்கம். இந்த வகையில் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத ஒருவித மயக்கம் தான் இந்த கள்ளகாதல் என்று கொள்ளலாம்.
இந்த கள்ள காதலால் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை போக்கையே புரட்டி போட்டு சின்ன பின்ன மாக்கி இருக்கிறது.இது பெரும்பாலும் பொருளாதாரத்தின் தேவையால் ,பேராசை காரணமாக,காமத்தின் மறு பிரசவத்தால்,ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை விமர்சிக்கும் சுய ஒழுக்கமற்றவர்களால் தான் இது ஆங்காங்கே முளைத்து இன்று பரவலங்கபட்டுவிட்டது.இதன் விளைவு நம் சமுதாய கட்டுக்கோப்பில் ஆண்களை வெகுவாக பாதிக்கிறது.தனக்கு  மட்டுமே சொந்தம் என்று  நினைத்திருக்கும் தன் மனைவி பிறருடன் கேவலமான காம இச்சைக்காக தொடர்புகொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் ஒரு ஆண் படும் வேதனையை எழுத்துகள் கொண்டு நாம் எழுதுவது முடியாது, சமுதாய பார்வையில் அவன் புழுவாக நெழியும் போது அந்த வேதனையின்  வெளிப்பாடு அந்த உணர்ச்சியை உணராமல் யாராலும் தெளிவுபடுத்த முடியாது அதன் விளைவுதான் கொலைகளும்,தற்கொலைகளும்.அதேபோல் தான் தனக்கு சொந்தமான தன கணவன் வேறு பெண்ணுடன் தொடர்புடன் இருக்கிறான் என்று தெரிந்ததும் அந்த பெண்ணின் வேதனையும்.
ஒரு ஆண் தன்  மனைவியுடன் பொது இடத்திற்கு வரும்போது அவனுக்கு இருக்கும் மனநிலையும் தனிமையில் இருக்கும்போது இருக்கும் மனநிலையும் வேறுமாதிரியாக இருக்கிறது.அதேபோல்தான் ஒரு பெண்ணின் நிலையும். இது எவ்வாறு நிகழ்கிறது.நம்முடைய சுயகட்டுபாடு இல்லாமையும் தான் செய்யும் நிகழ்வு அனைத்துமே சரியானவை என்று நினைக்கும் மனபாவமும்தான்.
சமுதாயம் என்பது மனித செங்கற்களால் கலாச்சாரம் என்ற கட்டுபாட்டால் ஆனா ஒரு அருமையான கோயில் அதில் அங்கொன்றும் இங்கொன்றும் செங்கற்கள் விழும் பட்சத்தில் சமுதாயம் என்னும் இந்த ஜன சமுத்திரத்தில் சுனாமி எழும்பும் சுகமான, சுமூகமான வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். வழக்கை என்பது வெறும் காம சுகத்தில் இல்லை என்பதை புரிந்து கொண்டால் எனலாமே நமக்கு நலமே. 

கவலை வேண்டாம் தோழனே தோல்வி நிலை இல்லை இந்த நிலையும் மாறும்

  மனிதன்  மனதை எம்போதுமே திறமாக வைத்துக்கொள்ளவேண்டும்  என்றுதான் நினைத்திருப்போம் ஆனாலும் அதை நம்மால் சரியாக செயல் படுத்த முடிவதில்லை ஏதாவது ஒரு சூழ்நிலையில் நிட்சயமாக மனவலியுடன் இருப்பது மனித வாழ்கையில் நிகழக்கூடிய தவிர்க்க முடியாத  சம்பவம்.எது நடந்தாலும் கவலை இல்லாமல் இருந்துவிடவேண்டும் என்றுதான் நாம் நினைக்கிறோம் ஆனால் நடப்பது வேறுவிதமாக இருக்கிறது.மனதை பன்படுத்தவேண்டும் பதபடுத்தவேண்டும் என்று நினைத்து நாம் ஏதேதோ செய்தாலும் நம் கட்டுபாட்டுக்குள் அது வருவது கிடையாது அதனுடைய கட்டுக்குள்தான் நாம் இருக்கிறோம்.மீண்டும் மீண்டும் நடந்ததையே நினைத்து வருந்துவதில் எந்த பயனும் இல்லை என்று நாம் உணர்ந்து கொண்டாலும்   நமக்கு அந்த நிகழ்வையே நினைவூட்டி நம்மை ஒரு சஞ்சலமான நிலைக்கு தள்ளுவதிலேயே குறியாக இருக்கும்.ஏன் இப்படி நம் மனமே நமக்கு எதிராக செயல்படுகிறது என்று நாம் நினைத்தது கிடையாது.இந்த மனத்தை கட்டு படுத்தி வைப்பது என்பது மிக கடினமானதுதான் உங்களின் இன்றைய நிலை நிச்சயமாக மாறும் என்று உங்களின் நினைவு திருப்ப திருப்ப நினைபத்தின் மூலம் தான் உங்களின் உணர்ச்சி பிழம்பால் மேலே எழும்பும் மனதினை அமைதி படுத்துக்கள் இதற்க்கு பெரிய தியானம் ஒன்றும் தேவை இல்லை.மிகப்பெரிய மாற்றத்திற்க்குதான் இந்த நிகழ்வு நிகழ்திருக்கிறது என்பதை உங்களின் மனதிற்கு அழுத்தமாக சொல்லுங்கள்.இன்று உங்களை உதசினபடுத்தியவர்கள் மட்டும் தான் உலகம் என்று எழும் நினைப்பை மாற்றி  கொள்ளுங்கள். அவர்கள் முன்னால் வெற்றி பெறவேண்டும் என்ற கற்பனையை அறவே ஒழித்து கட்டுக்கள்.தோல்வி எது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.உங்கள் வெற்றிக்காக வழிவிடும் பாதையை தோல்வி என்று ஒருபோதும் எண்னிவிடதீர்கள்.நீங்கள் செல்லும் இலக்கிற்கு சுற்றுப்பாதையை விட்டு நேர்வழிக்கு வருவதை தோல்வி என்று நினைத்து மன  வலியை நீங்களே  உருவாக்காதீர்கள்.மன வலிமையை உருவாகுவது அவ்வளவு  ஒன்று கடினம் இல்லை.மன வலிமை என்பது அறிவு சார்த்த விஷயம் இல்லை அது அன்பு சார்த்த ஒரு நிகழ்வு.எதிரிக்கும் அன்பு காட்டவேண்டும் என்று மிகப்பெரிய மனதாழ்மை தலைவர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள்.என்றுமே அவமானங்கள் தோல்விகள் உங்களை கூனிகுருக செய்யும் அது உங்களை பக்குவபடுத்துவதர்க்குதான் என்பதை நீங்களே உணரும் சூழ்நிலை வரும் போது தூற்றியவர்கள் விரட்டியவர்கள் அனைவரும் காணாமல் போயிருப்பார்கள் அந்தளவிற்கு உயரத்தில் நீங்கள் இருப்பீர்கள் அன்று இவர்களை பற்றிய நினைப்பை நாம் நினைத்தாலும் நமக்கு வருவதில்லை அன்று அவர்கள் நம்மை பார்த்து கூனிகுருகி நம் கண்ணுக்கு மறைந்து செல்வார்கள்.மனம் உங்களை அழுத்தி திமிரும் மாய குதிரை அதை அவிழ்த்து விடும் வேலையில் இறங்காதீர்கள் வழக்கை இனிக்கும் வாழவே பிடிக்கும்.

பாராட்டும் பதக்கங்களும்

பாராட்டும் பதக்கங்களும் ஒரு படைப்பாளிக்கு  அவரது துறையில் செம்மை படுத்துவதற்காக செய்ய கூடிய ஒருசெயல். அப்படி கௌரவபடுத்துவதர்காக கொடுக்கப்படும் அந்த பாராட்டும் பதக்கமும் அவர்களை  செம்மை படுத்துகிறதா அல்லது அவர்களை கர்வபடுத்துகிறதா.ஒருவர் ஒரு பாராட்டோ பதக்கமோ  பெற்றால் மனதை சஞ்சல பட வைக்கிறது மீண்டும் அந்த பாராட்டையும் பதக்கத்தையும் நோக்கியே அந்தந்த துறையில் அவர்களது பயணம் தொடர்கிறது.எதோ ஒன்றை எதிர் பார்த்து செய்கின்ற வேலை மனதுடன் ஓட்ட மறுக்கிறது வேலையினுடைய நிலைத்தன்மை கேள்விக்குறியாகி விடுகிறது.ஒரு அர்பணிப்புடன் செய்கின்ற பணிக்கும் எதிர்பார்ப்புடன் செய்கின்ற பணிக்கும் நிரம்பவே வித்தியாசங்கள் இருக்கின்றன மேலும் எதிர் பார்த்த பாராட்டோ  பதக்கமோ கிடைக்காத பட்சத்தில் மனம், தான் செய்த வேலையின் குறைபாட்டை  காண மறுத்து, பிறர் மீது குற்றம் சுமத்துவதில் ஆரம்பித்து  ஏதேதோ செய்ய ஆரமித்து விடுகிறது இதனால் மனம் சன்சலமடைந்து நல்ல முறையில் படைப்புகளை தரமுடிவதில்லை அல்லது தன்னுடைய படைப்புக்கு எப்படியாவது குறுக்கு வழியில் பதக்கங்களையும் பாராட்டுகளையும் பெற்றுவிடவேண்டும் என்ற நினைப்பு வருகிறது.நல்ல படைப்பாளிக்கு பாராட்டும் பதக்கங்களும் மக்களிடமிருத்து தானாக கிடைத்துவிடும். அதன் பிறகு  தகுதியானவருக்கு பாராட்டு விழ எடுப்பது தான் முறையாக இருக்கும்,வளமான படைப்புகள் மக்களுக்கு நிறைய கிடைக்கும்.தடுக்கி  விழ்ந்ததுக்கெல்லாம் பாராட்டும் பதக்கமும் கொடுத்தால் நிஜமான படைப்புகள் வெளியில் தெரியாமல் போய்விடக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகம்.இந்த பாராட்டும் பதக்கமும் பெறுபவரை கௌரவிக்க வேண்டுமே தவிர கூச்சபடவைத்து விட கூடாது. பாராட்டுக்கள் எல்லை மீறி போவதன் விழைவு குருவி தலையில் பணம் பழத்தை வைப்பது போன்று அது அவரை கிழே விழ செய்து விடும். பாராட்டை பெறுபவர் தன நிலை அறிந்தால் வெற்றி தவறாது, வீழ்வது நிகழாது

ஆசிரியர் தினம் யாருக்கு..?

ஆசிரியர் தினம் அய்யா சர்வபள்ளி திரு ராதாகிருஷ்ணனின் அவர்களின் பிறந்த  நாளைதான் நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.ஒரு தலை சிறந்த ஆசிரியரின் பிறந்த தினத்தைத்தான்  நாம் ஆசிரியர் தினமாககொண்டிருக்கிறோம்
நம்முடைய வாழ்க்கையில் நாம் மறக்க முடியாத சில ஆசிரியர்கள் நிச்சயமாக இருப்பார்கள்.நாம் இந்த நிலைக்கு, அது உயர்ததோ,குறைத்தோ, வர காரணம் இவர்களின் பங்கு அதிகமாகும்.நம் குணங்கள் நம்முடைய பெற்றோரின் சார்த்து என்றாலும் இந்த ஆசிரியரின் சதவிகிதமும்  அதில் கலந்திருக்கிறது இருக்கிறது.என்பது முற்றிலும் உண்மை. நமக்கு கிடைக்கின்ற ஆசிரியர்கள் எப்படியோ அதை கொண்டுதான் நம்முடைய அறியுதிறன் சுய ஒழுக்கம் முதலிய பண்புகள் நம்மை வந்தடைகின்றது
ஆசிரியர் பணி என்பது ஊதியத்திர்க்காக மட்டுமே செய்யகூடிய ஒரு பணி அல்ல  அது ஒரு அர்பணிப்பு செய்ய வேண்டிய ஒரு பணி. கல்வியை கற்றுகொடுக்க  மட்டுமல்ல அதையும் தாண்டி உயிரோட்டமுள்ள ஒரு மனிதனை உருவாக்கவேண்டிய ஒரு சிற்ப்பியாக இருக்கவேண்டிய ஒரு பணி.இதை உணர்ந்தது திறம்பட செயலாற்றுபவர்கல்தான் உண்மையான ஆசிரியர்கள்.வகுப்பரைகளில்தான் வருங்கால தூண்கள் உருவாக்கபடுகிறது.அதனால் ஆசிரியர்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளை நிசயமாக துறந்த மனிதர்களாக இருக்க வேண்டும்.வெறும் ஆசிரியர் பயிற்சியினை முடித்தால் போதுமானதா,மனப்பயிற்சிதான்  தேவை மாணவர்களின் அறிவு விசாலமாக்குவதர்க்கு இவர்களின் பங்கு மிகவும் பெரிது அதை உணர்ந்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்
இந்த  ஆசிரியர் தினம் மாணவர்கள் அறிந்து கொள்ளுவதை விட ஆசிரியர்கள் புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.உங்களை இந்த உலகம் கல்வி கண்திறக்கும் கடவுளாக பார்க்கிறது அது உன்பைதான் என்பதை நீங்கள் தான் செய்து காட்டவேண்டும்.


உடை கட்டு பாடும் அரசாங்க சட்டமும்

கல்லூரியில் பயில்பவர்களுக்கு உடையில் கட்டுபாடுகள் கொண்டுவருவதற்கான சட்டத்தை அரசாங்கம் கொண்டுவத்திருக்கிறது.இதை எதிர்பவர்களும் உண்டு, ஆதரிப்பவர்களும் உண்டு.ஆதரிப்பவர்கள் பெரும்பாலும் மாணவ,மாணவியர்தான் பொது ஜனத்தில் சிலர் இருக்கிறார்கள்.பதினெட்டு வயதானால் ஒட்டு போடுவதற்கு உரிமை இருக்குப் போது அவர்கள் சுயமாக உடையுடுத்தி கொள்ள உரிமை  இல்லையா என்றும், பெண்களை ஏன்  இன்னமும் போக பொருளாக பார்கிறீர்கள்? அவர்களை நீங்கள் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது என்று விளக்கம் கொடுத்தாலும்.

பொதுவாக பார்க்கும்போது ஒற்ற ஜீன்களின் தொடர்பில்லாத பிற பெண்ணின் சில உறுப்புக்களை  ஆண்  பார்க்கும் நேர்ந்தால் தானாகவே உணர்ச்சி அவனுடைய உடம்பில் வருகிறது வரவேண்டும் என்பதுதான் இயற்கையின் படைப்பு.அவ்வாறு வரவில்லை என்றால்.பாலுணர்வில் ஏதோ குறைபாடு  இருக்கிறது என்று பொருள்.கம உணர்சிகளை மற்ற உணர்சிகள் போல் தன்வய படுத்தி கட்டுக்குள் வைப்பது கடினம் அப்படி வைத்தால் அது முற்றும் துறந்த துறவி நிலை .ஒரு பெண் பாதி மார்பகங்கள் தெரியும் அளவிற்கு ஆடை அணித்து வந்து அது என்னுடைய உரிமை என்கிறார்கள்,மார்பகம் என்பது இயற்கையின் படைப்பில் ஆணிற்கு  காம உணர்சியை தூண்டக்கூடிய ஒரு பெண் அவயம் அதை  பார்த்தால் ஆண்  உணர்சிவயப்படுவது இயற்க்கை, அதை பார்த்தாலும் ஆண்களின் மனது கெட கூடாது என்பது என்ன நியாயம்.மனதை கட்டு படுத்துவதை விட மார்பகத்தை மறைப்பது சுலபம் என்பதை புரித்து கொள்ள வேண்டும்.உடை என்பதே நம் உடம்பில் உணர்ச்சியை தூண்டக்கொடிய அவயத்தை மறைப்பதற்காகத்தான் என்பதை அறிந்து  கொண்டு உடைஉடுத்துவது நன்று .
மாணவ மாணவியருக்கு உடையில் கட்டுப்பாடு என்பது எப்போது வருகிறது என்றால் உடையில் நாகரீக தன்மை குறைத்து அலங்கோலங்கள் அதிகரிக்கும்  போதுதான் கட்டுபாடுகள் வருகிறது.இப்போது அப்படி ஒரு சூழல் நிலவுவதால் இந்த கட்டுப்பாடு தேவையான ஒன்று.
இது மட்டுமல்லாமல்,எந்த பள்ளியில் படித்தாலும் பள்ளி மாணவர்களுக்கு என்று ஒரே நிறத்திலான உடையும்,கல்லூரி மாணவர்களுக்கு என்று ஒரு நிறத்திலானால உடையும் கொண்டு வரும் பட்சத்தில் மாணவர்களின் கவனம் சிதற வாய்ப்பில்லை.உடை என்பது மனம் சம்பாத்த பட்டது பள்ளி உடையில் மாணவன் இருக்கும் போது அவனின் மனநிலைக்கும் பிற உடையில் வரும் போது அவனின் மனநிலையும் நிச்சயமாக வித்தியாசப்படும்.

அவதூறு ஆண்மையா பெண்மையா ...........

பிறரை  பற்றி பொய்   சொல்லிஅவதூறு பரப்புவதற்கு யாரும் இம்போது வெட்கப்படுவதும் இல்லை கூட்சப்டுவதும் இல்லை.அந்த நபரை பற்றி தவறான செய்தியை  சொல்லுகிறோமே என்ற தன்பயம் என்ற பண்பு  இம்போது பொரும்பாலான மனிதர்களிடம் இல்லை. எதையாவது சொல்லி அவர்களின் நற்பெயரை களங்கபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த அவதூறுகள் பரப்பபடுகின்றன.அதன் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு யாரும் முற்படுவது இல்லை.இப்படிப்பட்ட பொய்களினால் ஏற்படகூடிய பின்  விளைவுகளை பற்றிய கவலை இப்படிப்பட்ட அவதுறு பரப்பும் மனிதர்களிடம் கிடையாது.எதாவது ஒரு பொய்யை சொல்லி தனுடைய நிலையை   தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் இன்று அனேகரிடம் இருக்கிறது முன்மெல்லாம் அரிதாக அறியப்பட்ட இந்த அவதுர்கள் இப்போது சர்வசாதரணமாக சின்ன சின்ன நிகழ்வுகளுக்கு கூட இவர்களால் பரப்பபடுகிறது.இத்தகைய அவதூறுகள் சிலசமயம் மனிதனுடைய உயிரை கூட விழுங்கி விடுகின்றன. கவரிமான் பரம்பரை மனிதர்கள் யாரும் இல்லை என்றாலும் மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்து கொள்ளும் மனிதர்கள் இனமும் இந்த உலகில் இருக்கிறார்கள்.தன்னை பற்றிய அவதூறுகளை கண்டும் காணாதவர்கள் போல் இருக்கும் மனிதர்களும்  இருக்கத்தான் செய்கிறார்கள்.தன்னுடைய பணியிடத்தில் பதவி உயர்விற்காக சில பொய்களை சொல்லி தன்னுடன் பதவிஉயர்வு போட்டியில் இருப்பவரை பற்றி அவதூறு பேசி தன்னுடைய பதவி உயர்வை தங்கவைத்து கொள்ளுவது இன்றைய சூழ்நிலையில் சர்வசாதாரணமாகி விட்டது."பொய்மையும் வாய்மை இடத்து" என்று வள்ளுவர் சொன்னது நன்மை செய்ய கூடிய பொய் ஒன்று கிடையவே கிடையாது என்பதால் தான்.அவதுறு பரப்புவது என்பது  முள் கொடியை தன்மீது சுற்றுவது போல் என்றாவது ஒருநாள் அது உங்களை செயல் படாமல் இருக்க செய்து விடும்.
அவதூறு விரட்டுவோம் அன்பை அணைப்போம்  என்றும் மனிதனாய் வாழ்வோம்  ஆண்மையா  பெண்மையா 
  

திருடு ....என்னைவிடு.....

 நாட்டில் திருட்டுக்கள் அதிகமாகி விட்டன தினமும் தொலை காட்சியில் கொள்ளை செய்தி இல்லாத நாட்களே இல்லை.ஆனால் இதைப்பற்றி யாரும் பெரிதாக நினைப்பது இல்லை  கண்டுகொள்வதும்  இல்லை.இந்த திருடுகள் அனைத்தும் கிராமம் நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் பரவலாக நடக்கிறது.திருடர்கள் என்றால் இரவில் யாரும் பார்த்துவிடுவார்களோ என்று பயந்து வருவார்கள் என்று நினைத்தால் நாம் பழைய காலத்து மனிதர்களாக இருப்போம் ஆனால் இப்பேது அப்படி எல்லாம் இல்லை. இப்போது நடக்கும் திருட்டுகள் அனைத்தும் அனாசியமாக ஏன் பகலிலேகூட நடக்கிறது.மக்கள் இதற்க்கு பழகிவிட்டர்களோ என்ற எண்ணம் வருகிறது.தொலைகாட்சியில் வரும் கொள்ளை சம்பவத்தை பார்க்கும் மக்கள்  இன்றைக்கு எத்தனை பவுன் தங்கம் திருட்டு போய்  விட்டது  என்று அறிந்து கொள்ளும் மனநிலையிலேயே இருக்கிறார்கள் அதோடு இந்த சம்பவம் முடித்து போய்  விடுகிறது. பட்டபகலில் நடைபெறுகின்ற இத்தகைய செய்தியை கூட ஒரு ஆச்சிரியத்தோடு  நாம் முடித்து கொள்ளுகிறோம்.இதை எல்லாம் பார்க்கும் போது மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்றே புரியவில்லை நம்மை வாழவிட்டால் போதும் என்று சிறு கூட்டுக்குள் சுருங்கி விட்டார்களா அல்லது  வாய்ப்பு கிடைக்கும் போது பதில் செல்லலாம் என்று காத்திருக்கிறார்களா? நாம் என்ன செய்ய முடியும் என்று எல்லாம் அவன் செயல் என்று அடங்கி விடுகிறார்களா.இதை பற்றி எந்த ஒரு அரசியல் வாதிகளும் பெரிதாக வாய் திறந்ததாக தெரியவில்லை.இதற்கெல்லாம் யார் பதில் சொல்லுவது யாருக்கும் புரியவில்லை ஆனால் காலத்தின் கையில் எல்லா நிகழ்வுகளுக்கும் பதில் உண்டு அது பதில் சொல்லும்.   

திரு நரேந்திர மோடி அவர்கள் இந்த மாதம் 26 ம் தேதி திருச்சியில் ..!

திரு நரேந்திர மோடி அவர்கள் இந்த மாதம் 26 ம் தேதி திருச்சியில் தனது தேர்தல்  கூட்டத்தில் உரையற்ற இருக்கிறார் இதற்காக தமிழக பி.ஜ.பி கணனிமூலம் இருக்கைகளை உறுதி செய்வதற்கான முன்பதிவு முறையை அறிமுகபடுத்த இருக்கிறது.நல்லது ஆனால் இந்த ஒட்டு போடவராத கூட்டத்தை வைத்து கொண்டு இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை.அடித்தட்டு மக்களை அழைத்துவந்து உரிய முறையில் உரையாற்றினால்  பலன் உண்டு இதை புரிந்து கொண்டு செயல் படுவது தமிழக பி.ஜ.பி க்கு  நன்று .அடுத்து இந்த கூட்டத்தில் கலந்து கொளுவதர்க்காக மோடியுடன் சேர்ந்து தற்போது பி.ஜ.பி.யில்  சேர்ந்த சுப்ரமனியசுவாமி வருவாரா என்று தெரியவில்லை.பி.ஜ.பி யில் சுப்ரமணியசாமி சேர்த
தே வளமான வருங்கால இந்தியாவை எதிர்பார்க்கலாம்.காரணம் சுப்ரமணிய சாமீ யை பற்றி தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.மோடியின்  உரையாற்றலில் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தொட்டு  இலங்கை தமிழர்களின் பிரச்னையை சேர்த்து  பேசுவார் என்று எதிர்பார்ப்போம்.ஆனால் தமிழகத்தில் தமிழர்களின் பிரச்சனையை வடநாட்டு தலைவர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து  உணர்ச்சிவயப்பட கணிசமான மக்கள் இங்கே கிடையாது.இந்த நேரத்தில் நாம் மொழிப்போர் தியாகிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.தாய் மொழி ஓரளவிற்கு காப்பற்றபட்டதிற்க்கு.இல்லை என்றால் எந்தனை விழுத்து விழுத்து நாம் இந்தியை கற்றுகொன்டாலும் அரசியலில் பெரும்பங்கை நாம் எட்டிவிட முடியாது வாடா இந்தியர்களின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்திருக்கும்.வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இவரையும் வாழவைக்குமா ?மோடியின்  திருச்சி கூட்டம் வெற்றிகரமாக முடியட்டும்.மக்களின் மன நிலையில் மாற்றம் வர வாழ்த்துக்கள்

கணணி முன்பதிவும் மக்களின் ஏமாற்றமும் ................!

கணணி மூலம் ரயில்களில் முன்பதிவு செய்வதில் ஒரு முறைபடுத்துதல் வேண்டும் குறுப்பிட்ட சதவிகிதம் மட்டுமே கணணி முறையில் முன் பதிவு செய்ய முடியும் என்று ஒரு முறைபடுத்துதலை  கொண்டுவரவேண்டும்.இன்னமும் நம்மில் அதிகமானவர்கள் ரயில் நிலையம் வந்துதான் முன்பதிவு செய்கிறார்கள் இதை பயண சீட்டு முன்பதிவிர்காக ரயில் நிலையங்களில்  குவியும் மக்களை பார்த்தல் தெரிகிறது.முக்கியமாக நிகழ்வுகளுக்காக தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்காக முன்பதிவு செய்ய வந்தால்.முன்பதிவு தொடக்கிய சிறிது நேரத்தில் முடிவடைந்து விட்டது என்ற அறிவிப்பு வருகிறது.ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே இந்த முன்பதிவு வசதியை பயன்படுத்தமுடியும் என்ற சூழ்நிலை நம்மை அறியாமலேயே வந்து விட்டது. பேருந்துகளில் பயணிக்க பயனகட்டணம் அதிகமாக இருக்கிறபடியால் மக்கள் இந்த ரயில்பயணத்தை விருப்புகிறார்கள்.ஏழைகளுக்கும் மத்தியதரவர்கத்திர்க்கும் இந்த ரயில் பயணம் ஒரு தான் குறைந்த பணத்தில் நிறைந்த பயணத்தை தருகிறது.எனவே இந்த முன்பதிவை முறைபடுத்த வில்லை என்றால் நக்கலுக்கு இருக்கும் இந்த குறித்த கட்டண ரதம் எட்டா கணியகிவிடும்.கணணி முறையில் குறுப்பிட்ட சதவிகிதத்தை ஒதிக்கி விட்டு மீதியை ரயில் நிலையங்களில் வரும் முன் பதிவாளர்களுக்கு கொடுத்தால் கணணி பயன்படுத்ததவர்களுக்கு வசதியாக இருக்கும் செய்வார்களா 

மனவளர்ச்சி நிரம்பிய டெல்லி சிறுவன் ; முயல் உடம்பில் ஒரு வேங்கை

டெல்லி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவனுக்கு சிறுவன் என்ற முறையில் மூன்றாண்டுகள் தண்டனை கொடுத்து நீதிமன்றம் தீர்பளித்து இருக்கிறது.அதிக சிதரவதை செய்தவன் என்று பாதிக்கப்பட்ட பெண் இறப்பதற்கு முன்  அடையாளம் காட்டப்பட்டவனுக்குதான் சிறார் என்ற முறையில் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.வயதை மட்டும் வைத்து கொண்டு ஒருவனை சிறார் என்ற வகையில் சேர்ப்பது எந்த அளவிற்கு சிறந்தது  என்று தெரியவில்லை.ஒருவனுடைய மனமுதிர்ச்சியை கொண்டுதான் அவனுடைய வளர்ச்சியை எடைபோடவேண்டும்.
சிலருக்கு வயது அதிகமாக இருக்கும் ஆனால் அவர்களுடைய மனவளர்ச்சி குன்றியவராக இருப்பார்கள் அவர்களை இந்த சமூகம் எந்த பார்வையில் பார்க்குமோ,இந்த தண்டனை சட்டம் எந்த பார்வையில் பார்க்குமோ அதே பார்வையில்தான் இந்த வழக்கில் சப்பத்தபட்ட மனவளர்ச்சி நிரம்மிய  சிறுவனை நாம் பார்க்கவேண்டும்.மனவளர்ச்சி குன்றியவன் வயது அதிகமானாலும் மனதளவில் வளர்ச்சியடையாமல் இருக்கிறான் .அதே போலத்தான் வயது குறைந்த சிறுவர்கள் சிலர் மனவளர்ச்சியில் முதிர்ச்சி அடைந்தவர்களாக இருக்கிறார்கள்.இதை மனதில் கொண்டு நீதி கிடைக்குமானால்  வரும்காலங்களில் இதை போன்றதொரு குற்றத்தை சிறுவர் என்றபோர்வையில் மறைத்து கொண்டு நிகழ்த்தாமல் தவிர்க்கலாம்