பெண்கள் பாதுகாப்பு சட்டத்தில் ஆண்களின் நிலை

பெண்கள் சுமத்தும் குற்றசாட்டுகள் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுகொள்ளுவது நியாயமானதா. மகளீர்காவல் நிலையத்தில் பெண்கள் கொடுக்கின்ற தன்னுடைய கணவன் மீது மற்றும் அவரை சார்ந்த கணவனின் தந்தை மீதும் இவர்கள் கொடுக்கின்ற புகார்களை  பார்த்தோமேயானால் மிகவும் தரம் தாழ்த்து இருப்பதை காணமுடிகிறது. இதை போல் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற ஐயப்பாடும் நமக்கு எழுகிறது, என்கணவன் அவரின் தாயாருடன் ஒரு அறையில் தனியாக இருந்ததாகவும் அதை நான் பார்த்ததாகவும் சொல்லுவதும், இன்னும் பல அபாண்டமான குற்றசாட்டுகள் பல இருக்கின்றன,இதைபோல் பெண்களின் குற்றசாட்டுக்கு உள்ளாகும் ஆண்கள் பல பேர்  இந்த சமுதாயத்தை நேர்கொண்டு காணமுடியாமல் தவிக்கிறார்கள் தங்களையே அழித்து கொண்டுவிடுகிறார்கள்.பெண்களுக்கு பாதுகாப்பிற்காக இயற்றிய சட்டங்கள் இன்று ஆண்களை மிரட்டுவதற்காக பயன்படுவது  போல்தான் தெரிகிறது. என்னை என்னுடைய மாமனார் தவறாக செயலுக்கு அழைகிறார் என்கின்ற போது அதில் இருக்கும் உண்மை எதுவாக இருக்கிறது என்று புரிவதற்குள் இந்த சமுதாயம் அந்த மாமனாரை நார் நாராக கிழித்து விடுகிறது காரணம் முதன்மை  செய்திக்கு தான்  முக்கியத்துவம் என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம் வழக்கு முடிந்தபின் மாமனார் நல்லவராக இருந்தாலும் அதை யாரும் கண்டுகொல்லுவது இல்லை  அவருக்கு சமுதாயத்தில் கிடைப்பது அவப்பெயர்தான்.சில நேரங்களில் பெண் குற்றம் சாட்டும் குடும்பமே தற்கொலை செய்து கொண்டு தங்களின் நியாயத்தை சமுதாயத்திற்கு உணர்த்த நினைத்தாலும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் அவர்களுக்கு அவப்பெயர் கிடைகிறது. மகளீர் காவல் நிலையத்தில் ஒரு பெண் சென்று புகார் கொடுத்தால் அங்கே ஒரு ஆணுக்கு நடக்கும் நிகழ்வை நினைத்து கூட பார்க்கமுடியாது.இங்கே பெண்களுக்கு மட்டும் தான் கொடுமைகள் நடப்பதாக நமக்கு அறிய தருகிறார்கள் ஆனால் வெளியே சொல்லமுடியாத பல மன அழுத்தத்தில் தான் ஆண்கள் பல பேர் இந்த உலகில்  வாழ்த்து கொண்டிருக்கிறார்கள்.குடும்பம் நல்லநிலைக்கு வருவதானால் அதில் பங்கு பெறுவதற்கு அனைவரும் வருவார்கள் ஆனால் அதே நேரம் நேர் எதிமறை நிகழ்வாக இருந்தால் அது ஆணைதான் சாரும். அணுக்கும் ஓர் மனம் இருக்கிறது என்று இங்கே யாரும் நினைப்பதில்லை பெண் புகார் கொடுத்து விட்டாலே  அவர்களுக்கு சார்பு நிலை எடுப்பதற்காகவே பல அமைப்புகள் இருக்கின்றது அனால் ஒரு ஆணின் சார்பு நிலையை எடுப்பதற்கு யாரும் இல்லை என்பதுதான் இயல்புநிலை இந்த பெண் சாதக சட்டத்தை முழுவதுமாக ஆகற்றவேண்டியது இல்லை.பெண்கள் கொடுக்கும் புகார்களின் உண்மைத்தன்மையை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். காரணம் இது வெறும் காகித சட்டம் மட்டுமல்ல பல  ஆண்டுகாலம் காத்துவருகின்ற நம்முடைய பாரம்பரிய கலாசாரமும் அதில் கலந்திருக்கிறது ரத்தத்தோடு கலந்து விட்ட இத்தகைய நிகழ்வுகளில் குடும்பம் என்ற சங்கிலி தொடரும் அடங்கி இருக்கிறது எனவேதான் வெள்ளை காகிதத்தில் எழுதித்தரும் ஒரு  புகாரை மட்டுமே வைத்து கொண்டு அந்த பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் சிதைத்துவிடும் செயல்களை செய்வதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை. கொடுக்கும் புகார்களில் உண்மை இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை தேவையான ஒன்றுதான் ஆனால் அதையே தங்களின் சுயலாபத்திற்காக செயல் படுத்தும் பட்சத்தில் பாதிக்கபடுவது ஆண்சார்த்த குடும்பம் தான். பெண் புரட்சி பெண்ணாகி விடுகிறாள். உணர்சிவயப்படுவதை விட்டு சிறிது நிதானமாக செயல் படுவது நல்லது . அது நல்ல பெண்ணிய எதிர்காலத்தை உருவாக்கும்.

சங்கராச்சாரியார் விடுதலை மக்கள் கற்றுக்கொண்ட பாடம்

சங்கராச்சாரியார் உட்பட அனைத்து நபர்களையும்  சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.இது வழக்கு தமிழ்நாடு  முழுவதும் உன்னிப்ப்பக கவனித்த ஒரு வழக்கு.இந்த வழக்கு தீர்ப்பின் மூலம் மக்களுக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பினை வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.தன்னிலை உணர்ந்து போகிற போக்கில் வாழ கற்று கொள்ளவேண்டும் என்ற உன்னதமான உண்மையை உணர்த்துகிறது. இவர்கள் தான் சங்கர் ராமன் கொலைக்கு காரணமானவர்கள் என்று இதுவரை யாரையும் அடையாளம் காண முடியவில்லை.இந்த வழக்கில் சங்கர் ராமனின் மனைவியே பிறழ் சாட்சியம் அளித்துள்ளதாக அறிய வருகிறது .கொலையுண்டவரின் மனைவியே சொன்ன சாட்சியத்தை மாற்றி சொல்லுகிறார் என்னும் பொழுது அவர் எந்த சூழ்நிலையில் ஏன்  மாற்றி சாட்சியம் சொல்லுகிறார் என்று நீதிமன்றம்  அறியவரவில்லை . எதையும் மாற்றமுடியும் அதில் நீதியும் அடக்கம் என்று நினைப்பு மக்களுக்கு வருவதற்கு முன் இவர்கள் இல்லை என்றால்  யார் செய்தார்கள் என்று இந்த உலகத்திற்கு தெளிவு படுத்தவேண்டிய கடமை இந்த நீதி துறைக்கும் காவல்  துறைக்கும் இருக்கிறது. சூரா பத்மனை சம்ஹாரம் செய்த கடவுளின் பெர்யர் கொண்ட நீதிபதி தான் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார்.மக்களுக்கு நீதி மன்றங்களின் மீதிருக்கும் மதிப்பை காப்பாற்றி கொள்ளவேண்டிய மிகப்பெரிய சவால் இன்றைக்கு சட்டத்துறைக்கு இருக்கிறது.சாதாரண மனிதன் அடங்கி ஒடிங்கிதான்  வாழவேண்டும் என்ற நிலை இன்று நேற்றல்ல காலங்காலமாய் தெடர்கிறது. திரைப்படங்களில்  காட்டுவதைப்போல காட்சிகள் இன்று மக்கள் மன்றத்தில் அரங்கேற தொடக்கி விட்டன என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.இத்தனை ஆண்டுகள் கழித்து தீர்ப்பு சொல்லும் போது இந்த கொலைக்கான காரண காரியங்களை தீர்ப்பில் சுட்டி காட்டி  இருக்கும் பட்சத்தில் மக்களுக்கு நீதியின் மீது ஒரு மன ஆறுதலாவது வந்திருக்கும்.எல்லாமே ஒரு வட்டம் தான் மீண்டும் நீதி தொடக்க நிலைக்கு திரும்பும் என்ற சாமாதனத்துடந்தான் வாழவேண்டி உள்ளது. இன்றைய சூழ்நிலையில் கொலைகள் சாதாரணமாகிவிட்ட படியால் இன்னும் சிறிது காலத்தில் இது எல்லாம் மறந்து விடும் என்பது தான் உண்மை ஆனால் காலம் எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டுதான் இருக்கும் அதன் பிடியில் யாரும் தப்ப முடியாது!

பெங்களூர் ஏ டி எம் கொள்ளையும் அரசின் நடவடிக்கையும்

பெங்களூர் ஏ டி எம் ஒன்றில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்திருக்கும்.இந்தனை சுலபமாக ஒரு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றும் அளவிற்கு நாடு ஒரு மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றால்.அதன் நீட்சியாக  பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக கூறி  250 திற்கும்    மேல்பட்ட மையங்களை மூடியது இது மிகவும் கொடுமையான ஒரு நிகழ்வு பாதுகாப்பு கொடுக்கவேண்டியது அரசின் கடமை. அதை சரியாக செய்வதற்கான வழிமுறைகளை நடவடிக்கைகளை துரிதபடுத்தவேண்டுமே தவிர இதைமோல் ஏ டி எம் மையங்களை மூடுவதன் மூலமாக சாதாரண பொது மக்களுக்கு தொல்லை கொடுப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.இது எப்படி இருக்கிறது என்று பார்த்தல் மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல் உள்ளது.வீடு புகுந்து மனிதர்களை தாக்கி விட்டு தினம் ஒரு கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது அதற்காக வீடுகளே இல்லாமல் வாழ்ந்து விட முடியுமா என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.மூடிய ஏ டி எம் மையங்கள் இது வரை பாதுகாப்பாக இல்லாமல் இருந்தது என்பதை அவர்கள் ஒத்து கொள்ளுகிறார்களா ஆம் என்றால்.அங்கே வைத்திருக்கும் பணத்தை பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லையா அல்லது வேறு காரணங்களா? இதுவரை இவர்கள் அசட்டையாக இருப்பதற்கு என்ன காரணம் அதை கவனிக்க கூடிய அலுவலர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்.இந்த மையங்களை பாடுகாப்பதற்க்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் பாதுகாப்பு அமைப்புகள் செயல் படுகின்றனவா அல்லது அவர்களின் மாத வருவாயை பெற்றுக்கொண்டு பாதுகாப்பு அலுவலர்களை பனியாமர்த்துவது இல்லையா? ஒரு நிகழ்வு நடந்தவுடன் வேகம் காட்டுவதும், பிறகு எப்போதும் போல் அசட்டையாக இருப்பதும் நம் நாட்டில் சர்வசாதாரணமாகி விட்டது.இந்த நிலை என்று மாறும் காலத்தில் கையில்தான் இருக்கிறது.மனித உயிர் இன்று மதிப்பில்லாமல் போய் விட்டது என்பது தான்  இதைபோல் சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. கேவலம் பணத்திற்கு கொடுக்கும் மரியாதை கூட மனிதர்களுக்கு சமுதாயத்தில் இல்லை என்பதன் ஒரு பகுதிதான் இதை போன்ற கொலை கொள்ளை சம்பவங்கள்.

சென்னை நகரம் உழலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது

சென்னை நகரம் உழலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்ற செய்தி நமக்கு ஒன்றும் புதிய செய்தியாக இருக்காது காரணம் நாம் அன்றாடம் சந்திக்கும் நினைவுகளே நமக்கு சொல்லும் பாடம்தான் என்றாலும் நம்முடைய மாநிலத்தின் தலை நகரம் உழலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று தெரியவரும் போது நாம் விழிப்புடன் இருக்கவேண்டிய ஒரு சூழ்நிலை  இருக்கிறது.இதற்க்கு என்ன காரணம் ஊழல் செய்பவரை விட ஊழல் செய்ய தூண்டுபவர்கள்தான் இன்று அதிகபடியாக இருக்கிறார்கள். மற்றும் நம்சொந்தங்களில் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் வாழக்கூடிய மனிதர்களுக்கு யாரவது மரியாதை தந்திருக்கிறோமா என்று சிந்தித்து பாருங்கள். ஊழல் செய்து பணத்தை சேர்த்துவைத்திருக்கும் நபருக்குத்தான் நாம் எந்த இடத்திலும் மரியாதை செய்கின்றோம்.நம் உறவுகளாக இருந்தாலும் அவர்களை திருத்துவதற்கு முயற்சி எடுத்திருக்கிறோமா குறைந்த பட்சம் அவர்களை நம் வாழ்வில் தவிர்த்திருக்கிறோமா இல்லவே  இல்லை அவர்களுக்குதான் இங்கே திருமனவிழாவாக இருந்தாலும்,இறப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும்  முதல் மரியாதை முக்கியத்துவம் எல்லாம்,  உறவுகளிடையே இதை போல் அங்கீகாரம் கிடைத்து விட்ட பிறகு, தான் செய்யும் ஊழல் நிச்சயமாக தவராகவேதெரியாது அது மேலும் மேலும் வளரத்தான் செய்யும். ஊழல் செய்பவரை அண்ணாந்து அசிங்கத்துடன்  பார்த்த பார்வை போய் பிழைக்க தெரிந்தவன் என்ற ஆச்சரியத்துடன் பார்பதற்கு சமுதாயம் பழகிவிட்ட பிறகு, யாரொருவர் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும்   ஊழல் செய்யாத  பாவப்பட்ட மனிதரை தான் இன்று அண்ணாந்து அசிங்கத்துடன் பார்க்கிறோம். பிழைக்க தெரியாதவன்என்ற அடைமொழியாலே வசைபாடுகிறோம்.  தன்னுடைய மனைவி இடமே அவப்பெயர் வாங்கி தன்னுடைய தள்ளாத காலத்தை தவிப்புடன் வழக்கை வாழ்கிறார்கள்.தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஊழல் செய்தவர்கள் எந்தவித குழப்பப்மும், குற்ற உணர்வும்  இல்லாமல் நிமதியாக தன்னுடைய முதுமையை கழிக்கிறார்கள். இதுதான் எதார்த்தம் என்று சொல்லியே எல்லோரும் ஊழலின் வலியோடு வாழபழகிவிட்டோம். அது இல்லாமல் வாழ்வதுதான் கடினம் என்ற சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். உண்மையான வாழ்கை போராட்டத்தை உணர்ந்து கொண்டாலொழிய இந்த ஊழல் ஒழியாது அது நிழலை போல் நம்முடனே இருந்து கொண்டே இருக்கும்.

நடிகர் விஜயின் ஜில்லா பொங்கல் வெளியீடாக இல்லாமல் இருப்பது நல்லது

டிகர் விஜயின்   ஜில்லா பொங்கல் வெளியீடாக இல்லாமல் இருப்பது நல்லது.அவசர அவசரமாக ஜில்லாவை திரைக்கு கொண்டுவருவது இந்த நேரத்தில் நல்லது இல்லை ரஜினியின் பெயராலேயே சினிமாவில் தன்னை நிலைநிறுத்தி கொண்டவர் விஜய்.அவருடைய ரசிகர்களில் பெரும்பாலனவர்கள் ரஜினிப்பிரியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். விஜயின் தற்போதைய நிலையில் ஒரு உச்சபட்ச வெற்றியை கொடுக்கவேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறார் என்பது உண்மை எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவசரமாக களம் இறக்குவது என்பது ஆபத்தான விளையாட்டு துணிந்தபின் துயரம் கொள்ளவதை விட நிதானமான வெற்றி சிகரமே சிறந்தது என்பதை நமக்கு இந்த சினிமாதுறையே நன்றாக விளக்கி இருக்கிறது என்பதை விஜயும் படத்தின்  தயாரிப்பாளரும் மறந்துவிடக்கூடாது. இப்போது விஜய்க்கு மிகவும் நெருக்கடியான சூழ்நிலை இருப்பது உண்மைதான் எனவே விஜய் அவர்களே சிந்தித்து செயல் படுங்கள் அது உங்களுக்கு நல்லது நீங்கள் மனதில் கற்பனை செய்து வைத்திருக்கும் சிகரத்தின் வெற்றிக்கும் நல்லது.

தாய் அன்புக்கு சாட்சி

ஒரு தனியார் தொலைக்காட்சி  நடத்திய போட்டி நிகழ்ச்சி ஒன்றில் ஆட்டிசம் என்ற ஒருவகையான மனநோயால் பதிக்க பட்ட 16 வயது மகனை கலந்துகொள்வதர்க்காக அழைத்து வந்திருந்தார்   காட்பாடியை சேர்ந்த  இந்த்ராணி என்ற தாய்.தன் மகன் மீது கொண்டிருந்த  பாசமும் மகனை எப்படியாவது நல்நிலைக்கு உருவாக்கிவிடவேண்டும் என்ற வைராக்கியமும் அந்த  தாயிடம் பார்க்க முடிந்தது. இந்தகைய பாசத்தையும் இத்தகைய உணர்ச்சியையும் தாய் அல்லாத ஒருவரிடமும் நாம் பார்க்க முடியாது என்பது உண்மை. மகன் எந்த நிலையில் இருந்தாலும் தாய்க்கு அவன் மகன்தான்.அந்த தாய் அந்த மகனை 16 வருடங்கள் வளர்பதற்கு  எந்தகைய துன்பங்களை தாங்கி இருப்பார்  அதைவிட  இந்த சமுதாயத்தின் குத்தும் பார்வையை உள்வாங்கி  இருப்பார் என்பதை  நாம் உணரவேண்டும்.இத்தகைய குறைபாடுள்ள ஒரு மனிதனை தன்னுடன் அனைத்து அரவணைத்து செல்வதற்கு தாய் என்ற உறவால் மட்டுமே முடியும்.நிச்சயம் அவர் உற்றார் உறவினர்கள் இந்தகைய மகனை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்துவிடவேண்டும் என்ற வேண்டாத ஆலோசனையை வழங்கி இருப்பார்கள்.அதை தவிர்த்துதான் கடந்த 16 வருடமாக தான் பெற்ற அந்த மகனை தன்னுடன் வைத்திருந்து அந்த குறைபாடை போக்குவதற்காக அன்பு என்னும் வைத்தியத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.திருப்பதி சென்ற பொது ஒருமுறை மகனை வழி தவறவிட்டு விட்டதாகவும் இரண்டு நாட்கள் கழித்து தேடி கண்டுபிடித்ததாகவும் அந்த நிகழ்ச்சியில் அவர் சொல்லும்போது நிச்சயம் இப்படி மனநிலை உள்ள ஒரு மனிதனை தவறவிட்டு விட்டு மீண்டும் தேடி கண்டுபிடிக்கவேண்டும் என்ற மன நிலை ஒரு தாயை தவிர வேறுயாருக்கும் வராது. தாய் பாசம், தாய் அன்பு என்பதற்கு இந்த காட்பாடியை சேர்த்த இந்துராணி போன்றவர்கள் இன்னமும் சாட்சியாக இருக்கிறார்கள். நாகரீகம் என்ற பெயரில் காதலன் தரும் போலி சுகத்திற்க்காக சுற்றித்திரிந்து, குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசி திரியும் பெண்கள் அதிகரித்து விட்ட இந்த கால கட்டத்தில் தாய் அன்பு தாய் பாசம் தாய்மை என்பதெல்லாம் எழுத்தால் யாருக்கும் புரியவைத்து விட  முடியாது  அது உணர்தலின் மூலம் தெரிந்து கொள்ள  கூடிய ஒரு  விஷயம்.வெற்று உடம்பில் ஆண்மை கலந்து கருத்தரித்து குழந்தையை ஜனித்தால் மட்டுமல்ல தாய்.தாய் என்ற சொல்லுக்கு வெறும் குழந்தை பிறப்பு மட்டுமல்ல பொருள் அதையும் தாண்டி ஆயிரம் செய்கைகளும் ஆயிரம் அர்த்தங்களும் பொதிந்ததுதான்  அந்த சொல்.ஒரு பெண் தாய்மையை வெறும் உடல் சம்பாத்த பட்டதாக எண்ணிவிடவேண்டாம் அது உள்ளம் சம்பத்தபட்ட்டது,உயிர் சம்பத்தபட்டது என்பதை உள்வாங்கி உணரவேண்டும்.இந்த காட்பாடி இந்த்ராணியை போல் ஆயரம் ஆயரம் இந்த்ராணி என்ற தாய்மார்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.தாயை போற்றுவோம் தாய்மையை காப்போம்.

ஆயுதம் எங்கு கிடைகிறது இவர்களுக்கு

அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய போராட்ட்டம் என்பது எல்லா காலகட்டங்களிலும் இந்த உலகத்தில் இருந்து வந்திருக்கிறது அவர் களின் போராட்டம் என்பது அவர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும் என்பது வேறு ம் பேசுவது நன்றல்ல.ஆனால் இப்படி போராடக்கூடிய    போராளிகளுக்கு அவர்கள் பயன் படுத்தும் ஆயுதம் அவர்களுக்கு எங்கிருத்து கிடைகிறது என்பது நமக்கு புரியாத புதிராகத்தான் இருக்கிறது.இன்னமும் நாம் கவனமாக பார்த்தோமேயானால் இவர்கள்  பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தும் புதுவகையை சேர்ததாகத்தான்  இருக்கிறது அப்படியானால் இவர்களுக்கு நடப்பில் உள்ள ஆயுதங்களை எந்த விதமான தங்குதடையுமில்லாமல் கிடைக்க செய்பவர்கள் யார் என்பது  சாதாரண மனிதனாகிய நமக்கு விடை தெரியாத கேள்வியாகத்தான் இருக்கிறது.இவர்களுடைய போராட்டம் நியாயமானதாக கூட இருக்காலாம் ஆனால் இவர்கள் ஆயுதம் நிச்சயமாக நேர்வழியில் வாங்கிக்கொள்ள முடியாது என்பது உண்மை. அப்படியானால் இவர்கலூடான தொடர்பில் இருப்பவர்கள் யார் யார் அவர்களுக்கு இந்த  போராட்டத்தை ஆதரிக்கும் போராட்டகாரர்களா இல்லை  வெறும் ஆயுத விற்பனையாளராகத்தான் இருக்கிறார்களா? இவர்களின் தொழில் ஆயுதபரிமாற்றம்தானா அல்லது வேறுதொழிலில் உள்ளவர்கள் பலர் கூடி இதை செய்கிறார்களா.நடப்பில் உள்ள புதுவகையான ஆயுதங்கள் எங்கோ தொடர்புகொள்ள முடியாத இடத்தில் பதுங்கி இருக்கும் இவர்களை எப்படி சென்றடைகிறது இதை உன்னிப்பாக கவனித்தால் ஒன்று நமக்கு புலப்படவில்லை ஆயுதங்களை சர்வசாதாரணமாக பெற்றுக்கொள்ள கூடிய தூரத்தில் இருக்கும் இந்த போராட்டக்காரர்களை நாம் பல வருடங்களாக தேடும் முயற்சியில்தான் இருக்கிறோம்.அவர்களின் இயக்கங்களும் வளர்த்து கொண்டேதான் போகிறது.ஆயுத பரிமாற்றத்தை தொழிலாக  செய்ய பல முகமூடியை அணிந்து நாட்டில் இருக்கிறார்கள் இவர்கள்தான்  எங்கோ இருந்து போராடும் போராளிகளை விட  மிக மிக ஆபத்தானவர்கள் போராட்டத்தில் சுவாலையை அணையவிடாமல் பார்த்து கொள்ளுவது தான் இவர்களது தொழிலின் முனேற்றம் எனவே இப்படிப்பட்டவர்களை இனம் கண்டு விலக்குவது தான் இந்த ஆயுதம் ஏந்தி போராடுபவர்களை ஒரு நிலைக்கு கொண்டுவரமுடியும் அவர்களுடனான வாழ்க்கை முறையையும் மாற்றமுடியும்.புலிவாலை பிடித்தைகதையாக பலபேர் இருக்க கூடும் அவர்களை நல்வழிக்கு திருப்பிட முடியும்.

தாய் என்ற சொல்

தாய் என்ற சொல் வெறும் உறவை குறிப்பது மட்டுமல்ல அது அன்பு என்னும் சொல்லுக்கு ஒரு அர்த்தத்தை தரக்கூடியது.தாய் அன்பு என்பது ஒரு பெண்மையின் உச்சகட்ட அடையாளம்.தாய்மையை ஒரு பெண் உணரும்போதுதான் அந்த பெண் வாழ்கையில் இயற்க்கை தமக்குதரப்பட்ட இடத்தை உணர்கிறாள்.இந்த தாய் உறவு  தான் கடைசிவரை மாறாதது.
தாய் என்ற ஈரெழுத்து சொல், உச்சரிக்கும்போதே தமக்குள்ள ஒரு அன்பு சுரப்பதை ஒவ்வருவரும் உணர்வார்கள்.தாய் என்பவள் தன்னலம் உணராதவள் உணர்சிவயபடாதவள் நம்மை பிரசவிப்பதால் அவளும் ஒரு கடவுள் தான்.இந்த பிரசவத்தை வெறும் காமமாக பார்க்கும் நான்காம் கட்ட மனநிலைக்கு மனிதன் வந்துவிட்டால் அன்று பிறழ்வுகள் நடக்க துவங்கி விடும். இருக்கும்போது தாயை பெருமையையும்,முக்கியத்துவையும் உணராதவர்கள் அவள் இறந்தபின் அதன் வேதனையை வெளிகாட்டாமல் இருக்க முடியாது.தன்னை  மாய்த்து கொண்டு தன்னுடைய பிள்ளைகள் வாழ்கை முன்னேற்றத்தில் வெற்றிபடிகளாய் நின்றவளும்,அனல் வீசும் வழக்கை சூழலை தான் வாங்கிகொண்டு குளிர்காற்றை தன் சிசுக்களுக்கு கொடுத்து இமயமாய் வளர்ந்த தாயும் உண்டு. தாய் பாசம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல எல்லஉயிரினத்திற்கும் இருக்கிறது என்பதற்கு நம் நடை முறை வாழ்க்கையில் நாம் கண்ட பல காட்சிகளே உதாரணம் .தாய் பாசம் என்பது பெண்ணிடத்தில் மட்டுமல்ல ஆணிடத்திலும் சுரக்ககூடிய ஒரு அற்புத நிகழ்வு.ஒரு சிசுவை பிரசவிப்பதை மூலம் தான் தாய் பாசம் ஆணிடம் இருந்து ஒரு நூலிழை உயர்ந்து பெண் இருக்கிறாகள்  மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியில் தாய் பாசம் என்பது தாய்மை என்பதும் கேள்விகுறியாகிவிட்டது.தாயிடம்  பாசத்தை காட்டுவதற்காக ஒருதினத்தை தேர்தெடுத்த அன்றே நாம் வார்த்தையால் சொல்லமுடியாத இந்த தாய் அன்பை கேலி கூத்தாகிவிட்டோம்.தாய் அன்பு என்பது நமது நினைவுகளை இருந்து அழிக்கமுடியாத ஒன்று அதை நினைத்து பார்க்க ஒருதினத்தை நாம் தெரிவுசெய்ய வேண்டுமா என்ன. அவளை மறந்தவர்கள் நினைப்பதர்க்குதான் இந்த நினைவு தினங்கள் அதன் தொடர்பாகவரும் அனைத்து நிகழ்வுகளும் ஆனால் என்றும் என்னுடன் ரத்தமும் சதையுமாக இருக்கும் அந்த உயிருடன் உலவும் பாசத்திற்கு இதல்லாம் தேவையில்லை. நம்மை ஈன்றபோது அவள் பெற்ற வலியை நாம் மறப்போமா,நாம்மையும் அறியாமல் நம்முள் சுரப்பதுதான் தாயின் மீதான பாசம் நம்மையும் மீறி நம் கட்டுக்கு அடங்காத சில உணர்சிகள் போல்தான் இந்த தாய் பாசம்.எதையும் எதிபார்க்கும் அன்பு அல்ல இந்த தாய் அன்பு அதை விவரிப்பது கடினம் உணர்வதுதான் சுலபம்.அதை ஒருமுறை உணர்ந்தால் அதன் உண்மை புரியும். தாயின் அன்பை உணருங்கள் தாய்மையை போற்றுங்கள்.

இலங்கை பொதுநலவாய மாநாடும் இந்திய போராட்டமும்

பொதுநலவாய மாநாட்டில் இந்தியாவின் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்றும், இந்தியாவின் சார்பில் சல்மான் குர்ஷித் கலத்துகொளுவதாக அறிவித்தாகிவிட்டது.இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கூடாது என்று பலர் தமிழ்நாட்டில் போராட்டத்தின் காரணமாகவும் தமிழக காங்கிரஸ் கட்சி பிரமுகர்களின் அழுத்தம் காரணமாகவும், அரசியல் சூழ்நிலையை மனதில் கொண்டும்,ஆளும் மத்திய காங்கிரஸ் அரசு இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது.இந்தியா பிரதமர் கலந்து கொள்ளாமல் போனதால் எந்தவிதமான அழுத்தமோ மாறாக எந்தவிதமான தீர்வோ கிடைத்து விடாது,யாருக்குமே எந்த லாபமோ நஷ்டமோ கிடையாது.இந்த மாநாட்டு பற்றிய  விவாதங்கள், போராட்டங்கள் எல்லாம் மாநாடு முடிந்த கொஞ்ச நாட்களில் அதன் சுவடுகள் தெரியாமல் மறைந்து போகும்.பின் மீண்டும் ஒரு சூழ்நிலை வரும்வரை யாருமே ஈழத் தமிழர்களை நினைப்பதே கிடையாது.இங்கே நடந்துவருகின்ற ஈழ ஆதரவு போராட்டங்கள் எல்லாமே ஒரு தீர்வை நோக்கி செல்லவில்லை. இந்த போராட்டங்கள் எல்லாமே தற்காலிக தீர்விர்கானதகத்தான் இருக்கின்றன.அதிலேயே திருப்பதி அடைகின்ற வகையில்தான் இந்த போராட்டகாரர்களும் இருக்கிறார்கள். பொதுநலவாய மாநாடு இலங்கையில்தான் நடைபெறும் என்பதை அறிவித்துடனேயே அதில் உடன்பாடு இல்லாதவர்கள் அங்கே நடத்தாமல் இருப்பதற்காக என்ன வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அறிந்து அதை செய்வதற்கு முன்வராதது வருத்தம் அளிக்கிறது ஒரு நிகழ்வாகத்தான் இருக்கிறது.ஈழ சம்பத்தப்பட்ட போராட்டத்தில் எப்போதுமே மாணவர்கள் ஈடுபாட்டுடன் போராடவருகிறார்கள்.நம் போராட்டங்கள்  அதன் தீர்வை நோக்கி நம்மை வழிநடத்தும் தலைவர்கள் எடுத்து செல்கிறார்களா என்று என்றுமே  சிந்தித்ததில்லை.மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள கூடாது என்ற ஒற்றை குறிகோளுடன்  போராட்டங்கள் மங்கிவிடுகின்றன.எந்த வித போராட்டத்தையும் அதன் முடிவுரை எழுதும் வரை எடுத்து செல்வது தான் போராட்ட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு அதை  வழி நடத்துபவர்களுக்கு நன்மையை பயக்கும்.போராட்டத்தை சரியான வழியில் நடத்தி வேண்டும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் தேவையில்லாத உணர்சியூட்டல்கள் தனிமனித விரோதங்கள்  தவிர்த்து உண்மையிலே நல்ல தீர்வை நோக்கி மட்டும் செயல்ப்படுமாயின் போராட்டத்தின் நோக்கத்தின்  வெற்றி நம்மை நோக்கி வரும். மாறாக சுய லாப நோக்கிருந்தால் வெற்றி சிதறிவிடும் வெறும்  போராட்டமே மிஞ்சும்.





தமிழ் மொழி வரி வடிவத்தில் என்ன குழப்பம்

தமிழ் மொழியின் வரி வடிவத்தை மாற்றவேண்டும் என்ற குரல் இப்போது பரவலாக பலராலும் முன் வைக்க படுகிறது.தமிழ் மொழியை எளிமை படுத்துவதற்காக இதை செய்ய வேண்டும் என்றும். பல முன்னாள் அரசியல், மற்றும் மக்கள் தலைவர்கள் சொன்னதை இவர்களின் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாகவும் இதை முன் எடுக்கிறார்கள்  . தமிழ் மொழியை வளர்பதற்கு இது பயன் படும் என்று இவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது எந்தவகையில் தமிழை வளர்க்கும் என்று தெரியவில்லை. உச்சரிப்பு இனிமை கொண்ட மொழி தமிழ் அதன் வரி வடிவத்தை மாற்றவேண்டியதன் அவசியம் என்ன என்பதை இவர்கள் தெளிவாக சொல்ல வில்லை.ஒரு மொழி உயிரோட்டமாக இருப்பதற்கு அதன் தனித்தன்மைதான் மிகவும் முக்கியம். நம்மிடம், நம்மொழியில் என்ன இல்லை எல்லாம் இருந்தும் அதை வெளிகொண்டுவருவதர்க்கான முயற்சியில் இறங்கவேண்டுமே தவிர இதை போல் அபத்தமான முயற்சியை முன் எடுப்பது ஆபத்தானது.சிலர் செய்யும் சிறுதவறுகளை எழுத்து பிழைகளை திருத்திகொள்வதர்கான செய்கைகளை வளர்க்கவேண்டும் அதை விடுத்து கையை சுட்டு கொண்டால் விரலை வெட்டுவது சரியல்ல  இப்போது உள்ள வரிவடிவத்தில் என்ன குறை இருக்கிறது அதை ஏன் நாம் மாற்றி புது குழப்பத்தை ஏற்படுத்திதரவேண்டும். வேற்று மொழிகளுக்கு நாம் வரிவடிவம் கொடுக்கும் அளவிற்கு நம் மொழியை கொண்டுசெல்வதுதான் நாம் நம் மொழிதைக்கு செய்யும் நன்றிகடன். அதை விடுத்து செய்நன்றி மறப்பது என்பது நமக்கு அழகல்ல. இதை யார் என்ன காரணத்திற்க்காக செய்ய முயல்கிறார்கள் என்று ஆராய்ந்து முன் எடுக்கும்  முன்பே முற்றுபெறவைப்பது நன்று.

மங்கள்யான் இந்தியாவின் பெருமையா

மங்கள்யான் வெற்றிகரமாக் விண்ணில் பறந்தது ஆசியாவிலேயே முந்திக்கொண்டு இந்தியா செய்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக  முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளின் மூளையில் உருவானது இந்த விண்கலத்தை பறக்க விட்டிருக்கிறது .இதை பலர் எதிர்த்தாலும், சீன பத்திரிக்கைகள் ஏழைகள் அதிகம் வாழும் நாட்டில் 450 கோடியை இது போன்று செலவு செய்தது சரி இல்லை என்று சீன பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டிருக்கிறது,செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி தோல்வியுற்ற  சீனாதான் இந்த செய்தியை பரப்புகிறது இதுபோல் நிகழ்வை பார்த்துதான் நம் முனோர்கள் சொன்னார்கள்  ஆடுனனைகிறது என்று ஓநாய் அழுகிறது என்று. இதை வைத்து கொண்டு இகேயும் பலர் இதை எதிர்க்கிறார்கள் வீணான செலவு என்கிறார்கள்.தங்களுடைய முயற்சிகள் அனைத்தும் இந்தியாவிற்கு பயன் படவேண்டும் என்று நினைத்து இந்தியாவிலேயே தங்கிவிட்ட விஞ்ஞானிகளுக்கு ஊக்கத்தை  கொடுப்பதற்காக இதைபோல் செய்வது மிகநன்று நிச்சயமாக நமவர்கள் சாதிப்ப்பார்கள்.நாமே நம்மை நம்பாவிட்டால் வேறு யார் செய்வார்கள். நல்லவேளையாக இந்த எதிர்ப்பு பெரிய விளைவுகள் ஒன்றையும் ஏற்படுத்தவில்லை.மங்கள்யான் நம் தேசத்திற்கு பெருமையே ஏற்படுத்துகிறதோ இல்லையோ நாம் நம்ம்மவர்களுக்கு நாம் பெருமை சேர்ப்போம். 

தமிழ் மொழி

மாநில மொழிகளை படிக்க, எழுத  தெரிந்தால்தான், மாநில அரசாங்க வேலை என்ற முடிவை எடுத்தாகவேண்டிய சூழ்நிலையில் நம் அரசு இருக்கிறது. தாய் மொழியை காக்கவேண்டிய முழு பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது.எத்தனையோ முன்னோர்களின் கடினமான அர்பனிப்பிர்க்கு பின் நம்முடைய மொழி பல ஆண்டுகள் கழித்தும் தலை நிமிர்ந்து நிற்கிறது வழக்கு மொழியாகவும் பேசும் மொழியாகவும் திகழ்கிறது.இன்று மொழி பற்று என்பது பேச்சளவில் கூட நம்மிடையே இல்லை பின் எப்படி உணர்வு பூர்வமாக நாம் அதை சிந்திக்க போகிறோம்.நம்மில் உள்ள இந்த மொழி ஆர்வம் சிதைந்து போனதற்கு காரணம். நம்முடைய மாநிலத்திலேயே நம்மொழி படித்தவர்களுக்கு  எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்க வில்லை என்பதுதான்.அது வேலை கிடைப்பதாக இருந்தாலும்,வேறு எதுவாக  இருந்தாலும் நம் மொழி பேசி எந்த பயனும் இல்லை என்ற உணர்வை நம்முடைய அரசாங்கங்கள்களும் அதனுடே கூடிய இந்த வெகுஜன முற்போக்கு வாதிகளும் ஏற்படுத்திவிட்டனர்.மற்ற மாநிலங்களில் அவர்களுடைய மொழிகளுக்கு கொடுக்கப்படும் ஒரு அங்கீகாரம் நம் தமிழ் நாட்டில் நாம் கொடுப்பதில்லை மாறாக அதை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருக்கிறோம். இதைபோல்லுள்ள அனைத்து இடையுருகளையும் தாண்டித்தான் தமிழ் தன்னை பாதுகாத்து வருகிறது.தமிழர்களை தமிழ் மொழி துரோகிகாளாக ஆகக்கூடிய ஒரு துணிவு நம்முடைய மாநிலத்தில்தான் முடியும்.சுயநலம் சாராமல் வீடு மறந்து நம் மொழிக்காக பயணப்பட்டவர்கள் பல ஆயிரம் பேர் அவர்களின் ஆன்மாக்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவாவது நம் நடந்து கொள்ளவேண்டாமா.நம் தாயையும் தாய் பாசத்தையும் எப்படி இன்று விவாத பொருலாக்குகிறோமோ  அதை போல்  தான்  இந்த தாய் மொழியையும் நாம் விவாத பொருளாகுகிறோம்.குறைகள் இருப்பினும் அதை நிவர்த்தி செய்ய வழிதேடாமல் நம் மொழியை நாமே குறைத்து பேசித்தான் நம்முடைய  நடுநிலையை  நாம் வளர்க்க வேண்டுமா.நம் மாநிலத்தில் உள்ள பல அன்பர்கள் இன்று தமிழ் மொழிக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் காரணம் அவர்கள் யாரும் மொழியால் உணர்வால் தமிழர்கள் அல்ல அவர்களின் தாய் மொழி வேறு பிழைப்பு மொழிதான் தமிழ் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.நம் தாயை மறந்தாலும் நம்முடைய தாய் மொழியை நாடி நரம்பெல்லாம் உணர்வாக நிரப்பி  நமாக்காக கசங்காமல் நசுங்காமல் தெள்ள தெளிவாக நமக்களித்து சென்றார்கள் நம் முனோர்கள்  நம் வரும்கால சந்ததியினருக்கு அதை போல் ஒரு தெளிவான மொழியை நம் மொழி என்று நாம் வழங்கி செல்ல போகிறோமா இல்லை மொழியில்ல இனம் என்ற பழியை விட்டு செல்ல போகிறோமா.உணர்ந்து செயல் படுங்கள் தமிழர்களே நம்மிடம் உள்ள பிறமொழிகலப்பை தவிர்ப்போம் மொழியை காத்து வரும் கால சந்ததியினருக்கு அளிப்போம் என்ற உறுதிமொழியை செயல் பாட்டிற்கு  கொண்டுவருவோம் .