அண்ணா ஹசாரே டு அரவிந்த் கேஜ்ரிவால்

எதையும் சரி தவறு  இதனால் பிறர் பாதிக்க படுவார்களே என்று கொஞ்சமும் வெட்கபடாமல்  யாருடைய உழைப்பையாவது நாம் எடுத்து, நாம் நம்முடைய வாழ்கையில் கொண்ட குறிக்கோளை அடைய வேண்டும் என்பதைத்தான் அண்ணா ஹசாரே அவர்களால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் கேஜ்ரிவால். மக்களிடம் கருத்து கேட்பு, இது மக்களுக்கான கட்சி என்று, ஆட்டை எடுத்து குட்டியில் போட்டு குட்டியை எடுத்து  ஆட்டில் போட்டு ,யாருடனும் கூட்டணி இல்லை என்று குழப்பி இன்று டெல்லி யில்  முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட்டார். இது அரவிந்த் கெஜ்ரிவால்  என்ற மனிதருக்கு கிடைத்ததா, இல்லை இதற்க்கு முந்தைய ஆட்சியின் மீது மக்கள் கொண்ட கோபத்தின் விழைவா என்று பார்ப்பதை விட அண்ணா ஹசாரேவிற்கு கிடைத்த ஆதரவை தனதாக்கி கொண்டு தன் வழியை சரியான திட்டமிடுதலின் படி தனதாக்கி கொண்டதன் பலன்தான் இப்போது அரவிந்த் கேஜ்ரிவால் கிடைத்த முதர்வர் என்னும் பம்பர் பரிசு.அடுத்தவரின் உழைப்பில் கிடைத்த ஆதரவை வைத்து தான் இந்த பதவி என்பதை மறந்து தான் ஒரு கை தேர்ந்த அரசியல் வாதி என்பதை இவர் நிருபித்து விட்டார்.நல்ல சமயமாக குழப்பத்தை எதையும் உருவாக்காமல் ஆட்சியை அமைத்து விட்டார்.இதற்க்கு  வழிவகை செய்து கொடுத்த அண்ணா அவர்களுக்குதான் கேஜ்ரிவால் மற்றும் அவர்களின் கூட்டம் நன்றி சொல்ல வேண்டும். அடுத்தவரின் உழப்பை தனதாக்கி கொள்வது என்பது இங்கே ஒன்றும் புதிதில்லை தெடரட்டும் கேஜ்ரிவாலின் பணி

பெண்களும் பாலியல் தொந்தரவும்

பெண்களின் பாதுகாப்பிற்கா உருவாக்க பட்ட சட்டங்கள் இன்று திசைமாறி எதற்கெல்லாமோ பயன் பட தொடக்கி விட்ட து. சமுதாயத்தில் உயர் பதவியில் இருக்க கூடியவர்கள் மீது அவர்களின் பெண் உதவியாளர்கள் சுமத்தும் இத்தகைய பாலியல் குற்றங்கள் சரியானவைதானா இல்லை அந்த அதிகாரிகளுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் புனையபட்டவையா என்பது  நமக்கு புரிவதில்லை.பலமுறை இதை  போல் என்னிடம் நடந்தது கொண்டார் என்றுதான் பாலியல் குற்றம் சாட்டும் பெண்கள் சொல்லுகிறார்கள்.பலமுறை தொந்தரவு கொடுத்த ஒரு அதிகாரியை இப்போது மட்டும் ஏன்  புகார் கொடுக்க வேண்டும் அதன் காரணம் என்ன? இது வரை அவர் கொடுத்தா பாலியல் தொந்தரவிர்க்கான காரியங்கள் முடிக்க பட்டு விட்டனவா,இப்பொது காரியங்கள் முடிக்காமல் இருப்பதால் தான் புகார்  கொடுக்க பட்டதா என்பதையும் நாம் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.சாதாரணமான வாழ்கை வாழக்கூடிய பெண்கள் கூட தன்னுடைய அதிகாரி தன்மீது அத்து மீறும் போது உடனடியாக நடவடிக்கையை எடுத்து விடுகிறார் அது அவர் அந்த நிறுவனத்தை விட்டு விலகுவதாக கூட இருக்கலாம் அது சரியா தவறா என்பது ஒருபுறம் இருந்தாலும் ஒரு முடிவை எடுக்க கூடிய நிலைக்கு வந்து விடுகிறாள், ஆனால் இந்த புகார்  கொடுக்க கூடிய பெண்கள் வாழ்கை சூழ் நிலையை அறிந்தவர்கள்  சட்டத்தின் பாதுகாப்பையும் அறிவார்கள் இவர்கள் அதிகாரி வரம்பு மீறும் போதே அந்த குற்றத்தை வெளிகொண்டுவருவதில்லை.தன்னுடைய அதிகாரியின் மூலம் காரியங்களை சாதித்து கொள்ளும்வரை இருந்து விட்டு எப்போது அது முடியாது என்று வருகிறதோ அப்போதான் இவர்களுக்கு வேகம் வருகிறது புகார் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. தனுடைய மேல் அதிகாரியை தன்வயபடுத்துவதர்க்கு அவருக்கு கீழ் பணிபுற்பவர்கள், அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எதாவது செய்து அவர்களுக்கு நெருக்க மாணவர்களை போல் காட்டி கொள்ளுவார்கள் அது அவர்களுக்கு பல விதங்களில் உதவியாக இருக்கும்.அந்த அதிகாரி மோதிக்கொள்ளும் சூழ் நிலை வரும்போது ஆண் ஊழல் புகாரை கொடுக்கிறான் பெண்களோ இதை போல் ஒரு களங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.சமுதாயத்தில் அந்த அதிகாரியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த கூட அவருக்கு பிடிக்காத சில  விஷமிகள் இதை செய்வதற்கு துணியலாம். பாலியல் குற்ற வலைக்குள் ஒரு ஆண் அவனே விழுகிறானா அல்லது அந்த வலைக்குள் ஒரு பெண்ணால் விழவைக்க படுகிறானா, குற்றம் உண்மையில் நடந்ததாக கூட இருக்கலாம் ஆனால் அதை செய்ய தூண்டியது அவன் மட்டுமே உணர்சியின் பிடியில் செய்தானா  அல்லது உணர்ச்சியை தூண்டிவிட்டு அந்த குற்றத்தை செய்ய வைப்பது பெண்களா என்பதை நாம் உணரவேண்டும்.எப்படியாயினும் இந்த சட்டத்தால் சாதாரண பெண்களுக்கு கிடைக்கக கூடிய பாதுகாப்பு தொடரத்தான் வேண்டும். பாலியல் குற்றத்தை செய்யவில்லை என்று ஒரு ஆண்  மகன் நிரூபித்தாலும் அதன் வலியை அவன் இந்த சமுதாயம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கும் அதிலிருந்து விடுபட வெகுநாட்கள் ஆகும் என்பதே உண்மை.

நிறை குடம் தளும்ப கூடாதா?

நிறை குடம் தளும்ப கூடாதா, நிறை குடம் தழும்பாது என்ற வாக்கியத்தை உருவாக்கி விஷயம் தெரிந்தவர்களை வாய்மூடி மௌனியாக்கி விட்டு, ஒன்றும் தெரியாத அரை குறைகள் ஆட்டம் போட்டு கொண்டு திரிகின்றன,குதுகுளிப்பதர்காகவே இந்தகைய வாக்கியத்தை உருவாக்கி இருக்க வேண்டும். நிறை குடம் செய்த வெற்றிகரமான காரியத்தை குறை குடம் செய்ததாக குறிகொண்டு வெற்றிகளிப்பில் பங்கெடுக்கும் போது அதை உண்மையில் அந்த காரியத்தை செய்து முடித்தவர் எது தெரியாதவர் போல் இருக்க வேண்டும்  காரணம் அவர் நிறை குடம் அல்லவா அது தலும்பலாமா, இப்படி மௌனியாக இந்த நிறைகுடங்கள் எல்லாம்  இருந்ததால்தான் இன்றைக்கு அரை குறை குறை  குடங்கள் எங்கு  பார்த்தாலும், அனைத்து மட்டத்திலும் உயர் நிலை யில் இருக்கின்றன. இத்தகைய மனிதர்களுக்கு அவர்கள் வகிக்கின்ற பதவிக்கு உண்டன எத்தகைய தகுதியும் இல்லாமலேயே, பிறருடைய உழைப்பின் வேர்வையில் வாழ்த்து கொண்டு இருக்கிறார்கள். எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் கிடைத்திருக்கும் இந்த வெற்றிக்கு யார் காரணம் என்ற உண்மையை அறிவதற்கு முனைவதில்லை, வேலை முடிந்தது என்று மட்டில் முடித்து கொள்கிறார்கள் என்னவேதான்,நல்ல திறமைசாலிகள் எல்லாம் உலகத்தின் பார்வையில் ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். "யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே  அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் தெரியலே" என்று கவிஞர் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது.எந்த பதவியில் யாரை வைக்க வேண்டும் என்ற ஒரு விசாலமான பார்வை நம்மில் பலருக்கு தெரியவில்லை என்னவேதான் இந்த நிறை குடங்கள் தலும்பவேண்டும் அப்போதுதான் இந்த உலகத்திற்கு தெரியும் அசல் எது நகல் எது என்று. அது எந்த இடமாக இருந்தாலும் நாம் செய்த வேலையின் வெற்றியை, உழைப்பின் பலனை நாம் தான் அடைய வேண்டும், அதை அண்டங் காக்கைகள் அனுபவிக்க இடம் தரலாகாது,எனவே இதற்காகவாவது நிறை குடன்களே தயவு செய்து தலும்புங்கள் வளமான எதிர்காலத்திர்க்காகவாவது நிறை குடங்களே நீங்கள் தளும்புங்கள்.

பணம்

ணம் என்பது மனிதவாழ்க்கைக்கு தேவையான ஒன்று என்பதை நாம் மறுக்க முடியாது.அதற்காக ஏமாற்றுவதும்,மற்றவர்களை எமாற்றுகாரர்கலாக சித்தரிப்பதும் சரியா என்பது நமக்கு முன் நிற்கும் ஆட்சரியதரவைக்கும் ஒரு கேள்வி? இதற்கான பதிலை நாம் யாரும் சொல்ல முடிவதில்லை, நமக்கு வந்தால் ரத்தம்தான் என்று  ஆணிதனமாகவும் அடுத்தவருக்கு வரும் போது தக்காளி சட்டினியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளப்புவதும் தான் இன்றைக்கு அனைவரிடமும் அதிகமாக இருக்கிறது. நாம் நமக்கு சிந்தனையில் என்ன தோன்றுகிறதோ அதைதான் சரியாக அமையவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதும் அதற்கு வலு சேர்பதற்காக பிறர் மீது சேற்றை வாரி இறைப்பாதும் இன்றைக்கு வழக்கை முறையின் ஒரு அங்கமாக இருக்கிறது.இவை அனைத்தும் பணத்துக்காகத்தான் அன்றி வேறெதற்கும் இல்லை. பணம் என்பது இன்றைய  மக்களுக்கு முக்கியமானதாக ஆகிவிட்டபடியால் எதை செய்தாவது பணத்தை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்பது தான்  முக்கிய முதல் காரணியாக இருக்கிறது.பணம் ஒன்றுதான் இன்றைக்கு இந்த உலகத்தை நம்மை நிலை நிலைநிறுத்தி கொள்ளுவதற்கான ஒரே வழி யாக மக்கள் நினைக்கிறார்கள் அது ஓரளவிற்கு உண்மை என்பதை நாம் ஒத்துகொள்ளத்தான் வேண்டும்.பிறர் வாழ்வை கெடுத்ததுதான் தன்னுடைய பணத்தேவையை தன்னிறைவு செய்து கொள்ளும் நிலை சரியானதா? சிந்திக்கும் போது ஒரு உண்மை நமக்கு உணர்கிறது நாம் ஈட்டும் பணம் யாருக்காக என்பதை நாம் மறக்கிறோம்,  மனிதர்கள் உறவுகளை கூட மறந்து பணத்தில் பின்னல் செல்கிறார்கள் என்பது யாருக்கும் புரிவதில்ல இந்த நிலை என்பது இப்போது வந்தது இல்லை தொடக்க காலம் தொட்டே இருந்து வருகிறது. அதன் வீட்சு இப்போது அதிகரித்து விட்டது,அப்படி அதிகரித்து விட்ட இந்த நிலை பணம் நம்மை ஆள்வதற்கு தொடக்கி விட்டதா? பணத்திற்காக மனித உயிர்களை பறிப்பது  என்பது இன்றைக்கு சாதாரணமாகிவிட்டது. ஒரு அரசாங்கத்தினால் கூட ஒரு மனிதனின் உயிரை பறிக்க கூடாது என்று வாதிடுகிறார்கள் ஆனால் இந்த பணம் கொண்டே அவ்வாறு செய்து விடமுடியும் என்ற ஒரு வெட்ககேடான நிலையின்நூடே தான் நாம் நாம் இந்த பணத்தேடலில் விரைந்து செல்கின்றோம்.பணத்தாசையை அதிகபடுத்துவது நம்முடைய வாழ்கை முறையில் வந்து விட்ட ஆசை பற்றுதான் காரணம். பணம் பண்ணுவது ஒரு கட்டுக்குள் இல்லை என்றால் வாழ்வு நிலை சிதறிப்போகும் இதை எல்லோரும் உணர்ந்திருந்தும் நடைமுறைபடுத்துவதில்லை அது நடைமுறைக்கு வரும் போதுதான் நிமதியான ஒரு வழக்கை கிடைக்கும் அதுவரை போராட்டம் தான்.

டெல்லியில் ஆம் ஆத்தி கட்சி....

டெல்லியில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது .யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்றமையால் யாரும் ஆட்சியமைக்க முன்வரவில்லை.மக்கள் தங்களுடைய கடமையை நிறைவேற்றிவிட்டார்கள் யார் ஆட்சி நடத்துவது என்று இனிமேல் தீர்மானிக்க வேண்டியது  வெற்றிபெற்ற வேட்பாளர்கள்தான் அது அவர்களின் கடமை. மீண்டும் தேர்தலை சந்தித்து யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்க வில்லை என்றால் மீண்டும் தொடங்கிய நிலைக்கேதான் வரவேண்டும் எனவே மீண்டும் தேர்தல் என்பது தேவை இல்லதாவேலை.நம் அரசியல் சாசன முறைப்படி தேர்தல் நடந்து மக்களும் தங்களுடைய தொகுதிக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து விட்டார்கள் எனவே வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஒன்று கூடி ஆட்சி அமைப்பதுதான் முறை அதை தவிர்த்து தங்களுடைய பொறுப்பை தட்டி கழிப்பது என்பது சரியாக முடிவாக இருக்காது. ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் துணையுடன் ஆட்சி அமைக்கலாம்.இவர்களுக்கு இடையுறு செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி செயல் படுமாயின் அப்போது  ஆட்சியை  கலைத்து விட்டு மக்கள் மன்றத்தை சந்தித்தால் அறுதி பெரும்பான்மை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவை வாக்காளர்கள் எடுப்பார்கள். அறுதி பெரும்பான்மை கொடுத்தால்தான் நான் ஆட்சி அமைக்க முயற்சி செய்வோம் என்று சொல்லுவது சரியா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.மக்களால் தேர்தெடுத்த பிரதிநிதிகள் ஒன்று கூடி ஒரு தலைவரை தேர்தெடுத்து ஆட்சி செய்ய வேண்டும் என்பது தானே நமது தேர்தல் முறை அதை இவர்கள் ஏன் செயல் படுத்த தயங்குகிறார்கள்.மக்கள் எல்லோரையும் திருப்பதி படித்தவேண்டும் என்பது மிகக்கடினம் ஒரு சாரார் எப்போதும் குறை கூறு பவர்கலாகத்தான் இருக்கிறார்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் குற்றமில்லாத மனிதன் யாரும் இல்லை.  

கோவில் தொழில் நல்ல வருமானம்

கோவில்களை கட்டி பராமரித்துவருவதுதான் இன்றைக்கு சிரமமில்லாத நல்ல தொழிலாக இருக்கிறது.பரவலாக ஆங்காங்கே திடீர் என்று கோவில்கள் முளைப்பது இதைத்தான் நமக்கு காட்டுகிறது.கோவில் இல்லாத ஊரில் குடி இருக்காதே என்று சொன்னதையே கருத்தாக கொண்டு கோவில்களுக்கு மத்தியில்தான் இன்று நாம் வாழும் சூழ் நிலையை உருவாக்கி இருக்கிறோம். தடுக்கி விழுந்தால் ஒரு கோவில் என்ற நிலையை நாம் இன்றைக்கு கண்கூடாக பார்க்கிறோம் இந்த கீழ்மட்டம் மேல் மட்டம் என்ற பிரிவினை எல்லாம் கிடையாது எல்லமட்டதிலும் அவரவர் சக்திக்கு உட்பட்டு இந்த தொழிலை தொடங்கும் நிலை உருவாகிவிட்டது. கோவில் கட்டுவதில் இருந்தே இந்த வசூல் ஆரம்பித்து விடுகின்றது.கோவில் கட்டி முடித்தவுடன் யாரவது ஒரு பெரியவரை அழைத்து பெரிய விழாவாக கும்பாபிஷேகத்தை முடித்துவிட்டால் அன்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கி விடுகின்றது. கோவில்கள் தொழில் முறை ஆனபின் அந்த தொழில் வளர்வதற்கான அத்தனை  வரைவுகளையும் ஆராய்ந்து செயல்படுத்த தொடங்கிவிடுகின்றனர். ஜோதிட நண்பர்கள் மூலம் ஆள் சேர்ப்பது.ஆன்மீக சுற்றுலா செல்கின்ற பேருந்து,சிருந்து வாடகை மகிழுந்து அத்துணை ஓட்டுநர்களையும் ஒருங்கிணைத்து இந்த கோவில்களுக்கு  அவர்கள் வாகனத்தை அழைத்துவருவது. அப்படி அழைத்துவருவதற்காக  ஓட்டுனர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பது, இதுபோன்ற அடிப்படையில் கோவிலை பிரசித்தி படுத்தி கொள்வதற்கும் தொழிலை வளர்த்து கொள்வதற்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதுபோல் வளர்ந்த எந்தனையோ கோவில்கள் நாம் கண்கூடாக பார்கிறோம்.  அது அவர்களுக்கு கைமேல் பலன் தருகிறது. இது போதாது என்று ஊடகத்தின் வாயிலாக விளம்பரபடுத்துவது, தேவையில்லாத வதந்திகளை பரப்பிவிடுவது என்று எதாவது ஒருமுறையில் இவர்கள் தங்களுடைய கோவில் தொழிலுக்கு நன்றாக அடித்தளம் அமைத்து கொள்கிறார்கள். அடித்தளம் அமைந்த பின்னால் இவர்களுக்கு எந்தவிதமான விளம்பரமும் தேவை இல்லை காரணம் அங்கு செல்லும் மக்களே மிக பெரிய விளம்பர ஊடகமாக மாறிவிடுகிறார்கள். கோவில் தொடக்கம் முதல் இன்றுவரை செல்லும் பக்தர்களின் நிலை பொருள் ரீதியாக அப்படியீதான் இருக்கிறது ஆனால் அதை தொடங்கியவர்கள் எங்கோ உயர்ந்துவிட்டார்கள் என்பதை காணமுடிகிறது. அன்றைய மன்னர் காலத்தில் கோவில்கள் எதற்காக தோற்றுவிக்க பட்டது என்பது விவாதத்திற்குரியது ஆனால்  அதைவைத்து பணம் மண்ணும் நோக்கம் இருக்காது என்பதை நம்பலாம்.ஆனால் இன்றைக்கு காவி உடை தரித்து மரத்தின் கீழ் அமர்ந்தால் அங்கே யார் என்ன என்தற்காக என்ற கேள்வி இல்லாமல் மக்கள் கூடிவிடுகிறார்கள்.  தங்கழுடைய வாழும் வீட்டையே கோவிலாக பாவித்து பணம் பண்ணும் நபர்களும் நம்மிடையே உலவுகிறார்கள் . இப்படி பலதரப்பட்ட கோவில்களுக்கு ஆட்களை  கொண்டுவருவதற்கு இடைத்தரகர்கழும் இப்போது முளைத்துவிட்டார்கள். மன அமைதியை தேடித்தான் கோவில்களுக்கு செல்வதாக கூறுகிறோம் ஆனால் நாம் அங்கு சென்று மன அமைதியுடன்  இருக்கிறோமா என்றால் அது ஒரு கேள்விக்குறிதான். அச்சு ஊடகங்களில் திடீர் திடீர் என்று முழுபக்கத்திற்க்கு சாமியார் விளம்பரங்களும் கோவில் விளம்பரங்களும் நம்மை திக்கு முக்கட வைத்து  விடுகின்றன.கோவில்களும் தெய்வங்களும் நம்மை செழுமை படுத்தத்தான் கோவில் தொழில் நடத்துபவர்களை செழுமை படுத்த அல்ல என்பதை எளியவர்கள் புறிந்து கொள்ளவேண்டும்.      

கேரளமாநில அட்டபடி கிராம தமிழர்களின் நிலை என்ன

கேரளா மாநில எல்லையில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள  அட்டப்பாடி  என்ற கிராமத்தில் வசிக்கின்ற தமிழர்களை உடனடியாக காலி செய்யும் படி கேரளா அரசாங்கம் வற்புறுத்துவதாக செய்திகள் வெளியாகிறது. இது நீண்ட கால பிரச்சனையாக இருந்தாலும் இப்போது அங்கே கால காலமாக  குடி இருக்கின்ற தமிழர்களை விரட்டுவதில் கேரளா அரசாங்கம் குறியாக இருக்கிறது என்பது நமக்கு தெளிவாகிறது. கேரளா அரசாங்கத்தினுடைய அனைத்து ஆவணங்களும் வைத்திருந்தும் உடனடியாக அந்த இடத்தை விட்டு அகலும்படி கேரளா அரசாங்கம் சொல்லுகிறது என்றால் அதனுடைய நோக்கத்தை புரிந்து கொண்டு தமிழர்கள் உடனடியாக செயல்பட தொடங்க வேண்டும்.தமிழ் தேசியம்  பேசுபவர்கலானாலும்   திராவிடம் பேசுபவர்கலானாலும்  குரல் கொடுக்க வேண்டும் இதனை வளரவிட்டு விட்டு போராடாமல் முளைக்கும் போதே எதிர்ப்பை வலுவாக்கிட வேண்டும். தமிழ் நாட்டில் இருக்கின்ற பிற மாநிலத்தவர்களை கட்டுக்குள் வைத்தாலே தமிழன் வெளியே எங்கும் சென்று பொருள் இட்ட தேவை இல்லை.இங்கே இருக்கும் உள்ளூர் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டி போராடவேண்டிய சூழ்நிலைகளை உருவாக்கி விடாதீர்கள் அட்டப்பாடி கிராம தமிழர்களுக்கு நாம் கொடுக்க கூடிய அதரவு நம்முடைய வலிமையை காட்ட கூடியதாக இருக்க வேண்டும்.அவர்களின் வாழ்வாதாரத்தை பெற்றுதரகூடியதாக மாறவேண்டும் தேன்கூட்டில் கைவைத்தால் என்ன நடக்கும் என்பதை ஊர் அறிய செய்ய வேண்டும்.உளூரில் இருக்கும் பொருளீட்டும் வாய்ப்பை எல்லாம்  மாற்றான்களுக்கு தந்து விட்டு வெறுமனே வீதியில் திரிகின்ற நிலையை மாற்றவேண்டும் அதற்க்கு இது ஒரு முன் முயற்சியாக  இருக்கவேண்டும்.