தமிழகத்தில் தமிழனை நிம்மதியாக வாழ விட கூடாது

தமிழகத்தில் தமிழனை நிம்மதியாக  வாழ விட கூடாது என்று கங்கணம் கட்டி கொண்டு சில அப்பைபுகள் தொடர்ந்து செயல் பட்டு கொண்டு வருகிறது அவர்கள் அணித்திருக்கும் முக மூடி தமிழர் பாதுகாப்பு என்ற உணர்ச்சி சாயம் மூசிய முகமூடிகள் இவர்கள் தமிழர் களுக்காக என்ன செய்தார்கள் என்று பட்டியலிட்டு பார்த்தால் வெறும் கையை மூடி கொண்டு உள்ளே நிறைய இருக்கிறது என்ற மாயா தோற்றத்தை உருவாகியதாகத்தான் இருக்கும். அமைதியான வாழ்க்கைக்கு வழி செய்ய கூடிய தமிழ் தமிழர் பற்றாளர்கள்  இங்கு இல்லை. தன்னலமற்ற தன்னுடைய முயற்சியால் அடிமையாக இருந்த ஒடுக்க பட்ட சமுதாயத்தை எந்த விதமான கலோபரமும் இல்லாமல் சமுகத்தில் அவர்களுக்கும் அந்தஸ்தை பெற்றுதந்த,இன்று பெண்கள் இந்த அளவிற்கு மிக  பெரிய வளர்ச்சி கண்டிருப்பதற்கு காரணமாக இருந்த  தந்தை பெரியார் அவர்களை போல் ஒரு மனிதர் இந்த தமிழ் சமுதாயத்தை பாதுகாப்பதற்கு இன்று உருவாக்கி இருக்கிறார்களா என்று பார்த்தால் இல்லை. ஏதாவது அதிரடியாக செய்து தங்களை முன்னிறுத்தி கொள்ளத்தான் முயற்சிகளை செய்கிறார்கள்.அதனால் யார் பாதிக்க பட்டாலும் அதைப்பற்றி கவலை  இல்லை என்ற கொள்கைகளைத்தான் கொண்டிருக்குறார்கள் .இதைப்போல் தனிச்சையாக செயல்படுகின்ற தமிழ் அமைப்புகளை கண்டு கொண்டு புறம் தள்ளுவதுதான் எதிர்கால தமிழர்களுக்கு நல்லது இல்லை என்றால் நம் சொந்த மண்ணில் நாம் அகதிகளை போல் சுற்றி திரியும் நிலைதான் ஏற்படும். ஒரு சில காரியத்தை கருத்தில் கொண்டு அதை முன்னிறுத்தி செயல் பட்டால் தான் அவர்கள் தமிழர் அமைப்புகள் என்று ஒரு தவறான என்னத்தை இங்கே உருவாக்கி விட்டார்கள் எனவே தான் இந்த அமைப்புக்கள் அதை சுற்றியே செயல் படுகின்றன. தமிழகத்தில் சமுதாயமற்றத்திர்க்கு வித்திட்டவர்களில் முதல்வராக இருந்த தந்தை பெரியார் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில்  தைரியமாக பேசும் அளவிற்கு தமிழர் பற்று வேறு திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.எதிர்கால தமிழர்கள் நலமுடன் வாழ்வதற்கு போலி யான இந்த தமிழர் பற்றாளர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

தேமு தி க கட்சி யாருடன் கூட்டணி

தேமு தி க கட்சி யாருடன் கூட்டணி அமைக்க விருக்கிறது என்றுதான் என்றைக்கு தமிழகத்தில் சிலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.ஆனால் அந்த கட்சியுகட்சியுடைய தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு தன்னுடைய கட்சியில் இருப்பவர்களை டெல்லிக்கு அனுப்புவதில் அவ்வளவாக ஆர்வமில்லை. இந்த தேர்தலில் எவ்வளவு பணம் நாம் பார்க்க முடியும் என்பதுதான் அவர்ருடைய எண்ணம்.கட்சியில் உறுப்பினராக இல்லாதவராக இருந்தாலும் அவருக்கு தேமுதிக சார்பாக போட்டி இடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் தலைவர் எதிர் பார்த்த தொகையை செலுத்தி விட்டால் அவர் யாராக இருந்தாலும் பரவாஇல்லை போட்டி இடுவதற்கு வாய்ப்பு  கிடைக்கும். அதை போல் எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் அவருக்கு சேரவேண்டிய தொகையை செலுத்தி விட்டால் அந்த கட்சியுடன் கூட்டணி  இறுதி செய்யப்படும். தேமுதிக வை பொருத்தவரையில். தனக்குள்ள சந்தை நிலவரத்தை வைத்து பணம் பண்ண வேண்டும் என்பது தான் அதை தவிர வேறு இல்லை. மக்கள் மனம் மாறுவதற்குள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்து கொண்டு செயல் படுகிறார்.

இனி மெய் மெல்ல சாகும்

இன்று நாம் வாழுகின்ற சூழ்நிலை என்பது ஒரு பாதுகாப்பானதா என்று சிந்தித்தோமேயானால் நாம் ஒரு திரிசங்கு நிலையில்தான் வாழ்கிறோம்.பொய்களை புனைந்து உண்மைக்கு எதிரானதொரு நிலையை வெற்றிகரமாக மாற்றுகின்ற   ஒரு அபாயகரமான சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம்.உண்மையை உண்மை என்று நிருபிப்பதர்க்குகூட நாம் நீண்ட நெடிய உழப்பை தரவேண்டி இருக்கிறது. அதே சமயம் பொய்கள் எந்த விதமான கடினமும் இல்லாமல் வெற்றிகரமாக உலாவந்து கொண்டிருக்கிறது.சில சமயங்களில் உண்மையை நாம் ஏன் நிருபிக்க வேண்டும் நாமும் பொய்யுடனே ஒத்து போய்  விடுவோம் என்ற  உச்சகட்டமான எண்ணம் நம்பிடையே வருகிறது,அப்படி ஒத்து போனவர்கள் பலபேர் நம்மிடையே இருக்கிறார்கள்.எப்பொருள் யார் யார் வை கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்று நம் அனைவருக்குமே தெரிந்தாலும் நாம் சிந்திப்பதே இல்லை.கன்னல் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய் என்று உனர்திருந்தாலும் எதையும் நாம் நிதானத்துடன் கவனமுடன் கையாள்வதில்லை.நம்முடைய காதுகளில் வருகின்ற செய்திகள் உண்மை உள்ளவையா என்று நாம் சிந்திப்பதே இல்லை எனவே தான் இந்த உண்மைகளை விட பலமடங்கு சக்தி வாந்ததாக பொய் திகழ்கிறது.பொய் சொல்ல பயந்த காலங்கள் எல்லாம் இன்று மறைந்து போய். சர்வ சாதாரணமாக நடப்புலகில் பொய்கள் உலாவருகின்றன. அது உண்மையை கிழே தள்ளி அதன் மீது ஏறி சவாரி செய்து கொண்டு இருக்கிறது.கீழ் நிலை மேல் நிலை என்று பாரபட்சம் பார்க்காமல் இந்த பொய்யால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அப்படி பாதிக்க பட்ட பிறகும் இவர்கள் உண்மையை நோக்கி செல்லவது இல்லை . சமர்தியமில்லமல் சொன்ன பொய்யால்தான் மாட்டிகொண்டதாக கருதுகிறார்களே தவிர நாம் உண்மையை மறைத்தால் சிக்கி கொண்டதாக கருதுவது இல்லை இவர்கள் மனசாட்சி கூட அவ்வாறு நினைப்பது இல்லை.இதனால் தான்  பல குழப்பங்களும்  நிலையும் இன்று நம்மிடையே இருக்கிறது என்பது நிசர்தனம். இனி உண்மை மெல்ல சாகும் என்பதே  உண்மை.

வைகோ பாரதிய ஜனதா கட்சி பெரியார்

 வைகோ பாரதிய ஜனதா கட்சியுடனான பேச்சிவார்த்தையை  தொடக்கி விட்டார் ஆனால் அவர் அடிக்கடி அரசியல்  ஆசான்  என்று சொல்லும்  பெரியாரை இழிவாக பேசுகின்ற ஒரு கட்சியுடன் கூட்டணி என்று தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.பெரியாரை பல்வேறுவிதமாக உடகங்களில் வசைபாடுகிற ஒரு கூட்டத்துடன் கைகோர்ப்பது என்பது அவருடைய விருப்பமாக இருக்காலாம்  வேறு யாரும் இவரை கூட்டணிக்கு அழைப்பதாக இல்லை,  என்ன காரணம் என்று நமக்கு தெரியவில்லை.மற்றவர்களை பார்த்து  பெரியாரின் வழி நடப்பவர்கள் இதை செய்யலாமா, அதை  செய்யலாமா, அது  தவறல்லவா   என்று அறிவுரை சொல்லும்  இவர் பெரியாரை நேரிடையாக வசைபாடுகிற கூட்டத்துடன் கைகோர்ப்பது என்பது இவர் வெளியே பெரியாரின் தொண்டராகவும் உள்ளே மோடியின்  விசிவாசியுமாக இருக்கத்தான் விரும்புகிறார் தன்னுடைய அரசியல் ஆசானை  தரம்  தாழ்த்தி  பேசும்போது  குறைந்தபட்சம்  தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டாமா? அவர் யாருடன் வேண்டுமானாலும் கைகோர்த்து அரசியல் செய்யட்டும் ஆனால் தமிழகத்தில் இன்றைக்கு இருக்கிற சமத்துவ சமுதாயத்திற்கு அடிகோலியவர்களில்  பெரியாரும் ஒரு காரணமல்லவா,இந்த சமுதாய மாற்றத்திற்கு காரணமான அவரை ஒருவர் அவதுறாக பேசும் போது குறைதபட்சம் கண்டனத்தை பதிவு செய்யாமல் கண்டும் காணமல் போவதுதான் பெரியாரின் வழித்தோன்றல் செய்யும் செயலா? அவருக்கு இந்த சமுதாயம் பெரும் நன்றிகடன் பட்டிருக்கிறது.அதிலும் அவர் பெயரை வைத்து அரசியல் செய்யும் இவர் முதல் நபராக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தால் இவருடைய பெரியாரின் பற்று அரசியலுக்கு மட்டுமல்ல ஆத்மாத்தமானதுதான்  என்பதை உணரலாம்.