வைகோ ,மதிமுக, தமிழக வாக்காளர்கள்
வை.கோபாலசாமி என திமுக வில் அறியப்பட்ட வைகோ.திமுகவை விட்டு விலகி தனி இயக்கம் கண்டவுடன் இளைஞர் மத்தியில் ஒரு பரபரப்பும் தமிழகத்தில் ஒரு எதிர் பார்ப்பும் உருவானது இது மறுக்க முடியாத உண்மை. அவர் நடத்திய மகாநாடு தமிழ் நாட்டின் இருபெரும் கட்சிகளுக்குமே ஒருவித அச்சத்தையும் தன் தொண்டைகளை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் உண்டு பண்ணியது . அதை சரியாக பயன்படுத்தாமல் காற்றாட்டு வெள்ளம் போல் புறப்பட்டு நல்ல ஒரு மாற்று இயக்கமாக வளர்த்திருக்க வேண்டிய மதிமுக சென்று சேர்த்த இடம் அதிமுக. இதை அப்போதே யாரும் ரசிக்க வில்லை. அங்கே துவங்கியது மதிமுகவின் சரிவு பாதை. அது இன்றுவரை தொடர்கிறது, மற்ற அரசியல் கட்சிகளுக்கெல்லாம் சவால்விடுகிற இயக்கமாக வளர்த்திருக்க வேண்டிய மதிமுக இன்றைய நிலையில் தன்மானத்தை காப்பற்றியகவேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது . தமிழகத்தில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் தமிழகம் எதிர்கொள்ளும் தொலைநோக்கு பிரச்சனைகள் வரை தெரிந்த ஓரிரு தலைவர்களுள் வைகோவும் ஒருவர். தமிழக மக்கள் எதிர் பார்க்கும் நல்ல தலைவர்களின் பட்டியலில் வைகோவிற்க்கும் இடம் இருக்கின்றது. அரசியல் பற்றியே தெரியாத கத்துக்குட்டிகள் எல்லாம் இன்று சவால் விடுகின்றன.எந்த தொகுதியில் என்ன மக்கள் பிரச்சனையை இருக்கிறது அதை எவ்வாறு கையாளவேண்டும் என்ற தெரியாமல் யாராவது எழுதிகொடுத்ததை மேடைகளிலே பேசி என்னால் மட்டுமே தீர்க்க முடியும் என்று சவால்விடும் அளவிற்கு வளர்த்துவிட்ட இந்தகாலத்தில் .அரசியல் அறிவில் யாருக்கும் சற்றும் சளைக்காத வைகோ தொடங்கிய மதிமுக , அரசியலிலே முக்கிய திருப்பு முனையாக அறியப்பட்ட மதிமுக இன்று அடுத்த கட்ட முடிவிற்கு கூட காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் மதிமுக எடுக்க கூடிய முடிவு வருகின்ற சட்டசபை தேர்தலுக்கும் , மதிமுக எதிர்காலத்திற்கும் மிக மிக முக்கியமானது இதை மதிமுக பொது செயலாளர்,கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எவ்வாறு கையாளுகிறார்களோ அதை பின்னோற்றிதான் மதிமுக வின் எதிகாலம் இருக்கும்.தனிமனித எதிர்ப்பை கைவிட்டு மதிமுக எதிர் காலத்தை முன்னிறுத்தி முடிவை அறியப்பட்டால் எதிர் காலத்தில் மதிமுக தவிர்த்து தேர்தலை சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகும், காலம் கனியுமாயின் ஆழுமைதன்மையுடைய அளும்கட்சியாக வரும், மதிமுக விற்கும் அதன் பொது செயலாளர்க்கும் அந்த தகுதி இம்மி அளவும் குறைவில்லை முன்போலவே முடிவுகள் அறியப்பட்டால் மதிமுக பத்தோடு ஒன்றாக ஒரு அரசியல் கட்சியாக வலம் வரும் அதில் யாருக்கும் சந்தேகமில்லை.