யாருக்கும் வேண்டாம் ஒழுக்கம் எல்லோருக்கும் வேண்டும் மனஅமைதி
ஒரு மனிதன் வாழ்வதற்காக வாழ்க்கைமுறையில் கடைபிடிக்க வேண்டிய குறைத்தபட்ட்ச நெறி முறைகளையாவது கடிபிடிக்க படுகிறதா என்று நாம் பார்த்தோமேயானால் நூற்றுக்கு ஒருவர் கூட தேறுவது கடினம். ஏன் நாம் முறையாக வாழ முடியவில்லைஎன்று என்றைக்காவது நாம் சிந்தித்ததுண்டா, அதற்காக நமக்கு நாமேவாவது வருந்தியதுண்டா,நம்மால் வாழ்கையின் விழிப்பிற்கு விரட்டபட்டவர்களை நாம் எண்ணி வருந்தியதுண்டா கிடையாது ஆனால் நமக்கு நேரும் போது மட்டும் இந்த உலகை எண்ணி வருந்துகிறோம்.எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற எண்ணம் வந்த பின்னால். நமக்கு ஏற்படுகின்ற பினடைவுகளும் இதைப்போல் வாழுகின்ற ஒருவரால் தான் ஏற்படுகிறது என்பதை நாம் உணர்வது கிடையாது. இபோதுள்ள வாழ்கை சூழலில் வளைந்து கொடுத்துதான் போகவேண்டும் என்று சொன்னாலும் அதற்க்கென்று ஒரு எல்லையை வகுத்து கொள்ளவேண்டாமா? அப்படி எல்லையை வகுத்து கொள்ளாமல் வாழ்வது என்பது மிருக வாழ்க்கைக்கு சமமாததல்லவா.இதை நாம் ஏன் சிறிது கூட சிந்தித்து பார்க்க மறுக்கிறோம். இப்படி ஒரு வரை முறை இல்லா வாழ்கை என்பது நமக்கு நாமே செய்கின்ற தூரோகம் இல்லையா. வாழ்கையை ஒரு வரைமுறைக்குள் வைத்து கொள்ளாமல். நாம் எப்படிவாழ்க்கையில் அமைதியை தேடி அலைய முடியும் அந்த அமைதி எப்படி நமக்கு சாத்தியமாகும். அமைதிஎன்பது நாம் கடை பிடிக்கும் வாழ்கை நெறி முறைகளில்தான் மறைந்திருக்கிறது என்பது தெரிந்திருந்தும் யாரும் அதை கண்டு கொள்ளுவதாகவே தெரியவில்லை.அமைதியை நாடி எங்கும் அலைய வேண்டியதில்லை அது நாம் வாழும் வாழ்கை நெறி முறைகளில்தான் அமைத்திருக்கிறது. குறைந்தபட்சம் நாம் கடைபிடிக்க கூடிய,கடை பிடிக்க முடிந்த வாழ்கை ஒழுக்க முறைகளை கடைப்பிடித்து வாழ்த்தாலே நாம் நிமதியாகவும் அமைதியாகவும் வாழமுடியும் என்பதை நாம் உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நாம் நெறி படுத்தி கொண்டால் நம்முடைய வாழ்வு மட்டு மல்லாது நம்முடைய எதி கால சந்ததியினறது வாழ்வும் முறைப்பாடும்.இதை சரிபடுத்தாமல் நாட்டில் எவ்வளுவு பெரிய மாற்றங்கள் வந்தாலும் அது எதற்கும் உதவாது. யாருக்கும் வேண்டாம் ஒழுக்கம் எல்லோருக்கும் வேண்டும் மனஅமைதி