ஆயுதம் எங்கு கிடைகிறது இவர்களுக்கு
அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய போராட்ட்டம் என்பது எல்லா காலகட்டங்களிலும் இந்த உலகத்தில் இருந்து வந்திருக்கிறது அவர் களின் போராட்டம் என்பது அவர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும் என்பது வேறு ம் பேசுவது நன்றல்ல.ஆனால் இப்படி போராடக்கூடிய போராளிகளுக்கு அவர்கள் பயன் படுத்தும் ஆயுதம் அவர்களுக்கு எங்கிருத்து கிடைகிறது என்பது நமக்கு புரியாத புதிராகத்தான் இருக்கிறது.இன்னமும் நாம் கவனமாக பார்த்தோமேயானால் இவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தும் புதுவகையை சேர்ததாகத்தான் இருக்கிறது அப்படியானால் இவர்களுக்கு நடப்பில் உள்ள ஆயுதங்களை எந்த விதமான தங்குதடையுமில்லாமல் கிடைக்க செய்பவர்கள் யார் என்பது சாதாரண மனிதனாகிய நமக்கு விடை தெரியாத கேள்வியாகத்தான் இருக்கிறது.இவர்களுடைய போராட்டம் நியாயமானதாக கூட இருக்காலாம் ஆனால் இவர்கள் ஆயுதம் நிச்சயமாக நேர்வழியில் வாங்கிக்கொள்ள முடியாது என்பது உண்மை. அப்படியானால் இவர்கலூடான தொடர்பில் இருப்பவர்கள் யார் யார் அவர்களுக்கு இந்த போராட்டத்தை ஆதரிக்கும் போராட்டகாரர்களா இல்லை வெறும் ஆயுத விற்பனையாளராகத்தான் இருக்கிறார்களா? இவர்களின் தொழில் ஆயுதபரிமாற்றம்தானா அல்லது வேறுதொழிலில் உள்ளவர்கள் பலர் கூடி இதை செய்கிறார்களா.நடப்பில் உள்ள புதுவகையான ஆயுதங்கள் எங்கோ தொடர்புகொள்ள முடியாத இடத்தில் பதுங்கி இருக்கும் இவர்களை எப்படி சென்றடைகிறது இதை உன்னிப்பாக கவனித்தால் ஒன்று நமக்கு புலப்படவில்லை ஆயுதங்களை சர்வசாதாரணமாக பெற்றுக்கொள்ள கூடிய தூரத்தில் இருக்கும் இந்த போராட்டக்காரர்களை நாம் பல வருடங்களாக தேடும் முயற்சியில்தான் இருக்கிறோம்.அவர்களின் இயக்கங்களும் வளர்த்து கொண்டேதான் போகிறது.ஆயுத பரிமாற்றத்தை தொழிலாக செய்ய பல முகமூடியை அணிந்து நாட்டில் இருக்கிறார்கள் இவர்கள்தான் எங்கோ இருந்து போராடும் போராளிகளை விட மிக மிக ஆபத்தானவர்கள் போராட்டத்தில் சுவாலையை அணையவிடாமல் பார்த்து கொள்ளுவது தான் இவர்களது தொழிலின் முனேற்றம் எனவே இப்படிப்பட்டவர்களை இனம் கண்டு விலக்குவது தான் இந்த ஆயுதம் ஏந்தி போராடுபவர்களை ஒரு நிலைக்கு கொண்டுவரமுடியும் அவர்களுடனான வாழ்க்கை முறையையும் மாற்றமுடியும்.புலிவாலை பிடித்தைகதையாக பலபேர் இருக்க கூடும் அவர்களை நல்வழிக்கு திருப்பிட முடியும்.