ஏமாற்று.................. ஏமாறு ...............
இப்போது நாட்டில் அனைவருமே ஏமாற்றுபவர்களாகத்தான் இருக்கிறார்கள்.ஏமாற்றும் வித்தை அனைவரிடமும் இருப்பதால் அனைவருமே ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம். சதவித அடிப்பையில் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கிறது எதாவது ஒருவிசயத்தில் நாம் பிறரை ஏமாற்றுகிறோம், எதாவது ஒருவிசத்தில் பிறரிடம் நாம் ஏமாறுகிறோம்.இந்த விகிதாசாரம் ஒவ்வருவருக்கும் வேறுபடுகிறது சிலர் அதிகமாக ஏமாறுகிறார்கள் சிலர் அதிகமாக ஏமாற்றுகிறார்கள். நாம் ஏமாறும் போது மட்டும் நமக்கு கோபம் சொல்லமுடியாத அளவிற்கு வருகிறது அதேநேரம் நாம் ஏமாற்றும் போது அதற்கானகறன காரியங்களை தேடுகிறது, சரிஎன்று நம் மனம் நம்மிடம் சமாதனம் சொல்லுகிறது.எதிலும் ஏமாற்று எனக்கும் ஏமாற்று என்று ஆகிவிட்டது. சாதரணமாக ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கினால் கூட இரண்டு ரூபாய் அதிகமாக கொடுத்து தெரிந்தே ஏமாறுகிறோம் அதற்காக எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமலே இருக்கிறோம்.நாம் வாங்கும்,விற்கும் உணவுவகையிலாவது குறைந்தபட்சம் ஏமாற்றுவதை குறைப்பதற்கான சுய ஒழுக்க கட்டுப்பாடு இருக்கவேண்டாமா. சுய ஒழுக்க கட்டுப்பாடு இல்லாமல் நாட்டில் எந்தவிதமான மாற்றத்தையும் கொடுவரமுடியது.