அசல் ........, நகல்........தலைவலி

ன்று நாம்  உபயோகிக்கும் பொருள்கள் அசல்தானா அல்லது அசலை போல் உள்ள நகலா அசலின் விலை கொடுத்து நகலை வாங்கி வைத்திருக்கிறோமா என்பது நமக்கே தெரிவதில்லை.அந்த அளவிற்கு போலிகள் நம்மிடையே ஆல் போல் பெருகி அருகுபோல் வளர்த்து விட்டது.ஒரு பொருளை தயாரித்து அதை மக்கள் மத்தியில் பிரபல படுத்துவதற்காக அந்த பொருளை தயாரித்த நிறுவனத்தார்  கொடுத்த உழைப்பையும் கால விரயத்தையும் எள்ளளவும் கூச்சமின்றி திருடி நகலை இப்போதுள்ள தொழில் நுட்பம்  கைகொடுக்க, அசல் போலவே நகலும் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடுகிறது. அசல் மேல் நம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் இந்த போலிகளும் விற்பனையில் நல்ல சம்பாதிக்கின்றன அதே நேரத்தில் அசலுடைய சந்தை மதிப்பையும் கீழேதள்ளுகிறது.அதை பற்றி இந்த போலி தயாரிப்பாளர்களுக்கு என்ன கவலை.இதை எல்லாம் செய்வது வேறு எங்கிருத்தோ வந்த மனிதர்கள் அல்ல. எல்லோரும் இந்த நாட்டை சேர்த்தவர்கள்தான்.எந்த பொருளுக்கும் ஒரு குளோனிங் போல் ஒரு போலி இருக்கிறது. 5 ரூபாயில் தொடங்கி லட்சங்களில் விற்கும் பொருள்களுக்கும் போலிகள் இருக்கின்றன. தன்னுடைய வாழ்க்கை முறையால் உழைப்பால்  நன்மதிப்பையும்,நிலைத்த புகழையும் பெற்று இந்த இந்த உலகை விட்டு பிரித்த அசல் தலைவர்களின் பெயர்களால் கூட அரசியலில்  நகல்கள் நம்மை சுற்றி வருகிறார்கள்.அனைத்து துறைகளிலும் இந்த போலிகள் இருக்கிறார்கள் அடுத்தவர்களின் உழைப்பையும்,அறிவாற்றலையும் திருடி இந்த போலிகள் அசல் களையே மக்கள் மத்தியில் போலிகளாக்கி  விடுவார்கள்.