தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்கிறார்களா ........!

தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்கிறார்களா ........!

பிழைப்பிற்காக தமிழகத்தை தேடிவந்த பிற  மாநிலத்தை சேர்த்தவர்கள் தமிழ்நாட்டில் எண்ணிக்கை அளவில் வளர்த்து கொண்டேவருகிறார்கள் அப்படி வந்தவர்களில் இன்று அதிகபடியானவர்கள் இங்கேயே தங்கிவிட்டார்கள்.அவர்கள்.அனைத்து உரிமைகளையும்  பெற்று நலமுடன் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தமிழகத்தின் நலனில் எதேனும் அக்கறை இருக்கிறதா என்றுபார்த்தால்.துளியும் இல்லை என்பதுதான் இன்றைய தமிழர்களின் போராட்ட தோல்விகள் நமக்கு அறிவுறுத்துகிறது.இதுபோல் வந்து குடிஏறியவர்கள் தமிழர்களின் உணர்சிகரமான போராட்டங்களை நீர்த்துபோக செய்வதிலே வல்லவர்களாக இருக்கிறார்கள்.வெளியிலே தமிழ் மொழிகளில் பேசுகிறவர்கள் வீட்டிலே அவர்களுடைய தாய் மொழியிலேயே பேசி கொள்வார்கள். அப்படி பேசுவது மட்டும் இல்லாமல்,தனக்கு பிறந்த குழந்தைகளுக்கும் முதலில் அவர்களுடைய தாய் மொழியைத்தான் கற்றுத்தருகிறார்கள். வேறுவழி இன்றிதான் தமிழையும் கற்கிறார்கள்.பிற மாநிலத்தை சேர்த்தவர்கள் இன்று எல்லா மட்டத்திலும் வளர்ச்சி அடைந்து தமிழ்நாட்டில் ஒரு தவிர்கமுடியாத  அங்கமாக மாறிவிட்டார்கள் என்பது நாம் மறுத்தாலும் உண்மை.வியாபாரத்தில் கோலோச்சியவர்கள் இன்று அரசாங்க பணியிலும் ஆதிக்கம் செலுத்த தொடக்கி விட்டார்கள். இவர்களை போன்றவர்கள் தொடக்கி வைத்ததுதான் இந்த  அங்கில பள்ளி மோகம். அது இன்று கிழ் வரை சென்று அனைவரையும்பாடாய்  படுத்துகிறது. வேறு மாநிலத்தில் வாழுகின்ற தமிழர்கள் அந்த மாநிலத்தை சேர்தவரை ஒன்றித்தான் வாழவேண்டும் ,ஆனால் இங்கோ பிரமநிலத்தை சேர்தவரை அண்டி நாம் தொழிலோ வேலையோ செய்யவேண்டிய நிலையில் தான் இன்று தமிழகம் சென்று கொண்டிருக்கிறது.இந்த நிலையை மாற்றி தமிழகத்தை சேர்த்தவர்கள் வியாபாரத்திலும் பிற தொழில்களிலும் கோலோச்ச வழிவகை செய்தால் நம்முடையா வருங்கால தமிழ் சந்ததிகள் வழமுடன் வாழ்வார்கள்