நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் மிரட்டல்



இந்தியாவில் லஞ்சம் மட்டும் அதன் வளர்சியை தடை செய்யவில்லை.அதற்க்கு சமமாக இருப்பது பயம்.நேர்மையான இருக்கவேண்டும் என்று எண்ணுகிற அதிகாரிகள் கூட பயம் காரணமாக தவறு செய்ய நேருகிறது.பயம் வர காரணமான இருக்கின்ற மிரட்டல்களை எதிர்த்துதான் இன்று நம்முடைய சமுதாயம் மிகப்பெரிய போராட்டத்தை முன் எடுத்து செல்லவேண்டும்.அன்பளிப்புகள் கூட லஞ்சம் என்கிற வரிசையில் வருகிறது அப்படி பார்த்தோமேயானால் லஞ்சத்தை விட இந்த மிரட்டல்,பயம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தானவை.நேர்மையாக வாழவிரும்பும் மனிதனை கூட அடிமையாக விருப்பமின்றி சில தவறான செயல்களை செய்ய கூடிய சூழ்நிலைகலை உருவாக்குகின்றது அதுவே பின்பு வழக்கமாகிவிடுகிறது.மிரட்டல் கொடுப்பது வெளியிலிருந்து மட்டும் வருவதில்லை உடன் பணிபுரிகின்றவர்கள் மூலமும் வருகின்றது.மிரட்டல் பயம் சமூகத்தல் எல்லா மட்டத்திலும் இருக்கின்றது.முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து இன்று எதற்கெடுத்தாலும் மிரட்டிபயம்கொள்ள செஇதுகாரியத்தை சாதித்துகொள்ளுவது என்பது சர்வசதரனமாகிவிட்டது.கண்டுகொல்லாமல்விட்டுபோன இந்த மிரட்டல், பயம் மெல்ல விலகுவதற்கு வழிசெய்தால் ஒரு ஒளிமயமான சமுதாயம் உருவாகும்.