புனிதமானதா காதல் ..................!
புனிதமானதா,பெற்றோர்கள் வைத்த அன்பு என்பது கலப்படமானதா.காதல் தெரிந்து கண்டித்தால்,காதலனை வீட்டிற்கு வரசொல்லுவதும்,காதலன் நண்பர்களுடன் வீட்டிற்கு வந்து உன் பெண்ணை நான் காதலிக்கிறேன்,பெண்ணை கூப்பிடு என்று தகராறு செய்வதும், அதற்கு சட்டங்கள் இடம்கொடுப்பதும் , அந்த பெண்ணோ எனக்கு பிடித்திருக்கிறது அவனுடன் நான் செல்வேன் என்று சொல்வதும் காதலின் உத்ச்சகட்டங்கள்.இதனால் அந்த பெண்ணின் வீட்டிற்கு ஏற்படும் அவமானமும் கஷ்ட நஷ்டக்க்களும்தான் அந்த பெண் தன்னை வளர்த்த தன குடும்பத்திற்கு தரும் பரிசு, எத்தனையோ சூழ்நிலைகளில் தன்னுடைய மகளுக்காக அந்த தகப்பன் தனுடைய சொந்த விருப்புகளை மறந்து தான் நினைத்துகூட பார்க்கமுடியாத உலகத்திற்கு மகளை உயர்த்தவேண்டும் என்று தினமும் உழைத்து தன் கனவை கலைத்து மகளுக்காக ஒரு தனி உலகத்தை உருவாக்க நினைக்கின்றான். சிறுவயது முதல் பெண் பூப்படையும் வயதுவரை ஒரு உலகத்திலும் அதற்க்கு பின்னால் ஒரு உலகத்திலும் சஞ்சரிப்பதர்க்கு உறுதுணையாக இருப்பது பெற்றோர்கள்தான்.அன்புக்காக உயிரை கொடுப்பது பெற்றோர்கள்தான்.ஆனால் அந்த அன்பை களவாடிவிட்டு தன் வீட்டாரை நிர்கதியில் விட்டு செல்வதுதான் காதல்.பெண்ணுக்கு பிடித்திருந்தால் கல்யாணம் பன்னவேண்டியதுதனே! என்று சொல்லுபவர்கள், யாரும் பின்னாளில் வரும் துன்பத்திர்க்கோ, துயரத்திக்கோ,கஷ்ட நஷ்டக்கழுக்கு உதவ வருவதில்லை,கேலி பேசுவார்கள் என்பதுதான் உண்மை, அந்த நேரத்திலும் தன்னை அவமானபடுத்திவிட்டு சென்றவள் என்றுகூட பாராமல் அந்த பெண்ணிற்கு கைகொடுத்து தூக்கி விடுவது தாய் தந்தயரும்தான். காரணம் அவள் மகள் அல்லவா, மகள் என்ற பந்தம் காதலை விட சிறந்தது. புனிதமானது எதையும் காயப்படுத்தாது .காயபடுதுவது எதுவும் புனிதமானதாக இருக்கமுடியாது .காதல் புனிதமானதா ?