காந்தி பிறந்தநாள்

காந்தி என்று சொன்னாலே நம் நினைவில் வருவது அவர் முகம் தான். அவருக்கெண்டு ஒரு அடைமொழி தேவை இல்லை காரணம் யாரும் எந்த காந்தி என்று கேட்பது கிடையாது.அவரை பற்றிய பல மாறுபட்ட கருத்துக்கள் இன்றைக்கு உலவிக்கொண்டு இருக்கிறது அதை புறம் தள்ளி புறம்தள்ளி விட்டு இன்றைக்கும் நாம் அவர் நினைவுகளை சுமக்கிறோம்.இன்றைக்கு இருக்கின்ற சுதந்திர இந்தியாவிலேயே நாம் அரசியல்,அரசாங்க அதிகாரிகளை பற்றி பேசுவதற்கு இன்றும் நம்மில் சிறிய பயம் நமக்குள் இருக்கிறது ஆனால்.அடக்குமுறை இருந்த அடிமை இந்தியாவில் தைரியமாக குரல் கொடுப்பதற்கு நிச்சயமாக ஒரு அசாத்திய மன உறுதி வேண்டும்.சுதந்திர போராட்டத்தை வழி நடத்தினார் என்று வெறுமனே ஒற்றைவரியில் அவர் செய்த அந்த அறவழி போராட்டத்தை ஒதுக்கி தள்ளிவிடமுடியாது.ஆயிரம் ஆயிரம் தலைவர்கள் இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து கொண்டாலும் இந்த மனிதர் மட்டும் ஏன் வித்தியாசப்பட்டு இந்த தேசத்தின் தந்தையாக மதிக்கப்படுகிறார், தென் கோடியில் இருந்து வடகோடி வரைக்கும் இவரை அனைவரும் மதிக்க காரணம் என்ன ? வெற்றிகளை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற சுயநலம் சாரமையாலா.போராட்டங்களை ஒரு அர்பணிப்பு மனதுடன் வெற்றி தோல்விகளை பாரமால் நடத்தியதாலா, காணரம் எதுவாய் இருந்தால் என்ன, மனிதானாய் நாம் இந்த மண்ணில் வாழ வழிவகை செய்தார். இன்று தூற்றுவேருக்கும் சேர்த்தே இந்த சுதந்திரம் அவர் மகாத்மாவாகத்தான் எங்கள் கண்களுக்கு தெரிகிறார் அது எங்கள் பார்வை  கோளாறு என்றால் அந்த பார்வை குறைபாடு இருந்துவிட்டு போகட்டும்.அவர் விதைத்து சென்ற அகிம்சை இந்த மண்ணில் துளிர் விட்டால் நிச்சயம் துப்பாக்கி சத்தங்கள் மௌனிக்கும்.எல்லை கோட்டு யுத்தங்கள் இல்லாமல் போகும்.வாழ்க்கை வாழ்வதற்கே அதை வறைமுரையுடன் வாழ்வது வாழ்விற்கு ஒரு அர்த்தத்தை தரும்.