மோடியின் ஒருகல்லில் இரண்டு மாங்காய்

மோடியினுடைய ஊடக வளர்ச்சி மேகங்கள் கொஞ்சகொஞ்சமாக விலகி உண்மை வெளியில் தெரிய வந்த உடன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பெறுவதற்காக ஒரு வார்த்தையை உதிர்த்திருக்கிறார் நாட்டிற்கு இப்போதைய தேவை கோவில்கள் அல்ல கழிவறைகள் தான் என்று.இதில் கோவில் கட்ட விரும்பும்,தன்னை விருப்பாத அத்வானிக்கு மறைமுகமாக எதிர்ப்பும் நாட்டுமக்களிடம் நல்ல பெயர்  எடுத்து விடலாம் என்று இந்த வாசகத்தை அழுத்தமாக உச்சரித்து இருக்கிறார்.ஆனால் சிறிது காலத்திற்கு முன் காங்கிரஸ் பிரமுகர் இதையே  சொன்ன போது ப.ஜ.க மற்றும் அதனை உருவாக்கிய அனைத்து கட்சிகளும்  கடுமையாக எதிர்த்தன ஆனால் இன்று அதையே ப.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் சொல்லுவதற்கு காரணம்.தன்னுடைய உடக வெளிச்சத்தை தக்க வைத்து கொள்ளவும் எதிர்ப்பை மீறி செயல் பட கூடிய தலைவர் என்று ஒரு மாயையை மக்களுக்கு உருவாக்கிடவும் தான் இந்த முத்தான வார்த்தை. என்றாலும் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இது உருமாறாமல் சாதாரண மாக எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து விட்டது காரணம் மோடியின் மாயை முன்மை போல் எந்ததாக்கத்தையும் பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தவில்லை. யார் வேண்டுமானாலும் ஆட்சியை பிடிக்கலாம்  அது மக்களின் கையில் உள்ளது. அதற்காக அவர் களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கும் பநோபாவம் நல்ல அணுகுமுறை கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தமுறை ப.ஜ.க விற்கு மிகமுக்கியமான தேர்தல் இதில் அவர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கவேண்டும் முடிந்த அளவிற்கு அமைதியான முறையில் செயல் பட்டாலே ஆட்சியை கைபற்றகூடிய சூழ்நிலை உருவானது அதை இவர்கள் கை நழுவ விட்டு விடுவார்கள் என்றே தோன்றுகிறது.சுப்ரமணிய சுவாமிகள் வழியை பின்பற்றி நடப்பது  ப.ஜ.க வின் எதிர் காலத்திற்கு அது நல்லது அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்