திருச்சி மோடியும் வேதாரணியமும்

திருச்சியில் உரையாற்றிய மோடி அவர்கள் தமிழகத்தின் சுதந்திரபோராட்ட வரலாறு தெரியாமல் உரையாற்றினார் என்று உடகங்களில் செய்திகள் வெளியாகியது.மோடிக்கு வேதாரணியம் போராட்டத்திற்கு யார்  தலைமையில் நடந்தது என்று தெரியாமல் இருக்கலாம் காரணம் அவருக்கு தயாரித்து கொடுக்க பட்ட உரையைத்தான் அவர் பேசி விட்டு சென்றிருக்கிறார்  ஆனால் தமிழக  பா.ஜ.க விற்கு தெரியாமல்போனதுதான் வேதனையான செய்தி இதிலிருந்து இவர்களின் தேசப்பட்ட்று தெரிகிறது.மோடியின் உரையை தயாரித்தவர்கள்  தமிழகத்தின் வரலாறு தெரிந்தவர் களாகத்தான் இருப்பார்கள் அப்படி இருக்கும்போது இந்த பிழையை வேண்டும்மென்றே செய்ததாகத்தான் பார்க்கவேண்டி இருக்கிறது. மறுநாள் நிச்சயம் இதன் தாக்கம் உடகங்களில் வரவேண்டும் என்று எதிர்பார்த்து தான் இந்தகைய பிழை செய்தார்களா என்று என்ன தோன்றுகிறது அல்லது உண்மையிலேயே இவர்களுக்கு சுதந்திர போராட்ட வரலாறு  தெரியாதா, அதை தெரிந்து நாம் என்ன செய்ய போகிறோம் நமக்கு சுதந்திர போராட்டமா இம்போதைக்கி முக்கியம் கனவை நிறைவேற்றுவதுதான் முக்கியம் அதில் இத்தகைய பிழைகளைகள் எல்லாம் ஒன்றும் இல்லை.கப்பலோட்டிய தமிழனையே நாடு வீதியில் விட்டவர்கள்தானே நாம் .