ஏற்காடு இடைதேர்தலும் ஆளும் கட்சியும்
ஏற்காடு இடைதேர்தல் அறிவிக்க இருக்கின்ற நிலையில் இந்த இடைதேர்தல் முடிவுகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்களின் முன்னோட்டமாக அமையும் என்பது தான் இன்றைக்கு தமிழக கட்சிகளின் கணிப்பாக யொருக்கிறது . சரியான திட்டமிடல் இல்லாமல் நாம் தாம் வெற்றி மேருவெம் என்ற இறுமாப்புடன்இந்த தேர்தலை ஆளும் கட்சி சந்திக்குமானால் அதன் முடிவுகள் மிகப்பெரிய பாடத்தை கற்றுகொடுத்துவிடும் அதன் பிரதி மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும்.மூன்றாவது அணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க நினைக்கும் வேளையில் இந்த சட்டமன்ற இடைதேர்தல் முக்கியமானது என்பதை உணர்ந்து செயல் படுவது முக்கியமானது.ஏற்காடு சட்டமன்ற தொகுதியை மிகப்பெரிய வெற்றியாக வென்றெடுப்பது என்பது ஆளும் கட்சிக்கு பிகபெரிய சவாலாகத்தான் இருக்கும் கூட்டணியில் குழப்பம் நிலவுகின்ற காரணத்தால். மிக கவனத்துடனேயே இந்த இடைதேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அனைத்து கட்சிகளும் இந்த ஏற்காடு இடைதேர்தலில் பங்கெடுக்கும் காரணம் தங்களை ஒரு சுய பரிசோதனை செய்து கொளுவதர்க்கு இந்த தேர்தலை பயன்படுத்தி கொள்ளும்.தங்களுடைய பலம் என்ன என்பதை தெரிந்து கொண்டு வருகின்ற மக்களவை தேர்தல் கூண்டணியை முடிவு செய்வதற்கு உதவியாக இருக்கும்.மற்றவர்களுக்கு இந்த தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் பெரிய மாற்றம் நிகழாது ஆனால் ஆளும் கட்சிக்கு நிச்சயமாக வெற்றியாக மட்டும் இல்லாமல் அது ஒரு மாபெரும் வெற்றியாக இருந்தால் ஒழிய இவர்கள் மக்களவை தேர்தலை சிரத்தை இல்லாமல் சந்திக்க முடியாது.ஆளும் கட்சி மக்களவை தேர்தலில் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்று செய்திகள் மக்களிடையே உலவ தொடங்கி விட்டது,அதற்க்கு சாமரம் வீசுவதை போல் ஆளும் கட்சியின் தவறான முடிவால் இந்த ஏற்காடு இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்தால் மக்களின் நினைப்பு பூதாகரமாக உருபெற்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியின் கனவிற்கு முற்று புள்ளி வைத்துவிடும். இந்த ஏற்காடு இடைதேர்தல் ஒரு தொகுதியை கொடுக்கும் தேர்தல் அல்ல இதன் முடிவு மக்களவை தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பிரதிபலிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுவது நல்லது .