அத்வானியின் விருப்பத்தை வெளியிட்ட போபால் பொதுகூட்டம்
அத்வானியின் விருப்பம் என்ன என்பது போபால் பொதுகூட்டத்தில் தெரிந்துவிட்டது.மோடியை அத்வானி முகம் கொடுத்து கூட பார்கவில்லை.அத்வானி பேசும் போது மோடி,மோடி என்று திரும்பத்திரும்ப கூட்டத்தில் இருந்து மோடி ஆதரவாளர்கள் கத்திகொண்டே இருந்தது அத்வானி தனது உரையை பாதியிலேயே நிறுத்தும்படி செய்து விட்டடது.இந்த மோடி கூச்சல்கள் எப்படி வந்தது என்பது அத்வானிக்கு தெரியும் எனவேதான் தனது உரையை பாதியிலேயே நிறுத்திவிட்டார் வெறும் மோடி கூச்சல்கள் வெற்றியை தேடி தந்து விடாது என்பதை பா.ஜ.க புரிந்து கொள்ள வேண்டும். போபாலில் நடந்த பொதுக்கூட்டம் ப.ஜ.க.வில் மேல்மட்டத்தில் மிகப்பெரிய கிழேதள்ழுவதர்கான வேலைகள் தேர்தலில் நடைபெறும் என்பதை வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.அத்வானியை வலுகட்டயமாகத்தான் இந்த பிரதமர் வேட்பாளர் முடிவை ஏற்று கொள்ள வைத்திருக்கிறார்கள் அந்த அழுத்தம் தேர்தலில் நிச்சயமாக அத்வானியின் பக்கமிருந்து வெளிப்படும்.அந்த அத்வானியின் கதிவீச்சு ஒட்டுமொத்த தேர்தல் வெற்றியில் எந்தனை சதவிகிதம் பாதிக்கும் என்பது தெரியவில்லை.தேர்தலில் முழவதுமாக தனிமேரும்பான்மையை தங்கவைத்து கொண்டால் எந்தவிதமான குழப்பங்களும் இல்லாமல் ஆட்சியை அமைத்து விடும் ஆனால் அப்படி ஒரு சூழல் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. அப்படி தனிபெரும்பான்மை இல்லாதசமையத்தில் ஆட்சி கட்டிலை எட்டி பிடிப்பதற்கு அத்வானி போன்ற மூத்த தலைவர்களின் ஆசீர்வாதம் நிச்சயமாக தேவைப்படும் அப்போது மோடிகூச்சல்களுக்கு அத்வானி பதில் சொல்லும் நிலைமையை பா.ஜா.க எதிர்கொள்ளவேண்டி வரும் இதை உணர்த்து பொதுக்கூட்டங்களில் நடந்து கொள்ளவது நல்லது இல்லை என்றால் வெற்றி பெற்றாலும் எதி கட்சி வரிசையில்தான் அமரவேண்டிவரும்.