தமிழ் கலாச்சார காதல் o+

 

தமிழர் கலாச்சாரம் என்பது ஒரு சங்கிலி வளையம் போன்றது.அதில் ஒரு பிளவு ஏற்பட்டாலும் அந்த சங்கிலி  வளையம்  அதன் வலிமையை இழந்து விடும். அது போலத்தான் தமிழர் கலாச்சாரமும், நாகரீகம் என்ற பெயரிலோ அல்லது சமுக மாற்றம் என்ற பெயரில் சிறுசிறு மாற்றங்களை செய்யலாமே தவிர அதில் பிளவை ஏற்படுத்த முனைய கூடாது அப்படி முனைவோரை இனம் கண்டு புறம் தள்ள வேண்டும். இன்று அப்படி ஒரு சூழ் நிலை வந்திருக்கிறது அது தாய் தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பெற்றோரின் பாச போராட்டம். தன்னுடைய  மகளின் மூலம் புது சொந்தக்கள் வரக்கூடிய  காலகட்டம்தான் திருமணம் என்ற பந்தம். இந்த திருமண பந்தத்தைதான், காதல் என்ற ஒரு போதை வீழ்திவிட நினைக்கிறது.பெண்ணின் சம்மதம் மட்டுமே போதுமானது என்று கூறுகின்ற சமுதாயத்தை நாம் கொஞ்சம் தள்ளி வைப்பது நன்று .திருமணம் என்பது ஒரு புது உறவை ஏற்படுத்ட கூடியது அது அவர் அவர்களுடைய குணாதிசியத்தை பொறுத்து அந்த புது உறவை தீர்மானிக்கிறார்கள்.குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடிமிக்க கொளல். என்று ஆராய்ந்து நாம் புதியவைகளை தேர்த்தேடுக்கிறோம்.அவ்வாறு தேர்தெடுப்பதில் உள்ள சிறு சிறு குறைகளை மட்டும் வைத்து கொண்டு.திருமண செய்து கொள்ள கூடிய பெண்ணின் சம்மதம் மட்டுமே போதும் என்ற ஒரு நிலையை வலியுறுத்தி சொல்ல்வது கலாசார சங்கலியை அறுப்பதற்கு சமமானது.உன் பெண்ணிற்கு என்னை பிடித்திருக்கிறது என்னுடன் அனுப்பிவை என்று பெற்றோரிடம் கேட்பது சரி என்று வாதிட்டால்.இன்று அவளுக்கு சரி என்று தெரிகின்ற ஒரு நிகழ்வு,நாளை தவறு என்று அவள் நினைத்தால் அந்த சமயத்தில் அவள் என்ன செய்ய வேண்டும் என்பதை சரி என்று வாதிடுபவர்கள் சுட்டி காட்ட வேண்டும்.பெண்களுக்கு மட்டும் இந்த விசயத்தில் ஏன் எதிர்ப்பு இந்த அளவிற்கு கிளம்புகிறது என்றால்.ஒரு தந்தை தன்னுடைய மகளை,தன்  தாயின் மறு உருவமாக பார்க்கிறான்  என்பது  தான் உண்மை. மேலும் தன்னுடைய அரவணைப்பில்,கட்டுப்பாட்டில்   வளர்ந்த தன்  மகளை முற்றிலுமாக தன்னுடைய உரிமையை  இழந்து , அனைத்து அதிகாரத்தையும்,உரிமைகளையும்  வேறு ஒருவருடைய கரங்களில் கொடுக்கும் போது,அவர் தன்னை போலவே, தான் எப்படி தன்  தாயின் மருவுருவமாக நினைத்து தன் மகளை வளர்த்தோமோ,தன்னை போலவே ஒரு மனிதர் வேண்டும் என்று நினைக்கின்றார் எனவேதான் இந்த எதிர்ப்புகள் கிழம்புகின்றன.தந்தை தாயின் எதிர்பார்ப்பை சிறிதேனும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கின்ற எந்த ஒரு ஆண்மகனையும்  யாரும் எதிர்பதில்லை.இந்த திருமண பந்தத்தில் பெண்ணின் விருப்பம் எந்த அளவிற்கு தகுதியானதோ,அதில் பாதி அளவிற்காவது தகுதியானதுதான் பெற்றோரின் விருப்பமும்.வாழ்கையே விட்டு  கொடுத்து வாழ்வதுதான் அந்த விட்டு கொடுப்பது யாருக்கு தன் உறவுக்கா இல்லை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் நபருக்க என்பதை பொறுத்துதான் வாழ்கையின் வீரியமும்,தளர்ச்சியும்.