கவலை வேண்டாம் தோழனே தோல்வி நிலை இல்லை இந்த நிலையும் மாறும்
மனிதன் மனதை எம்போதுமே திறமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றுதான் நினைத்திருப்போம் ஆனாலும் அதை நம்மால் சரியாக செயல் படுத்த முடிவதில்லை ஏதாவது ஒரு சூழ்நிலையில் நிட்சயமாக மனவலியுடன் இருப்பது மனித வாழ்கையில் நிகழக்கூடிய தவிர்க்க முடியாத சம்பவம்.எது நடந்தாலும் கவலை இல்லாமல் இருந்துவிடவேண்டும் என்றுதான் நாம் நினைக்கிறோம் ஆனால் நடப்பது வேறுவிதமாக இருக்கிறது.மனதை பன்படுத்தவேண்டும் பதபடுத்தவேண்டும் என்று நினைத்து நாம் ஏதேதோ செய்தாலும் நம் கட்டுபாட்டுக்குள் அது வருவது கிடையாது அதனுடைய கட்டுக்குள்தான் நாம் இருக்கிறோம்.மீண்டும் மீண்டும் நடந்ததையே நினைத்து வருந்துவதில் எந்த பயனும் இல்லை என்று நாம் உணர்ந்து கொண்டாலும் நமக்கு அந்த நிகழ்வையே நினைவூட்டி நம்மை ஒரு சஞ்சலமான நிலைக்கு தள்ளுவதிலேயே குறியாக இருக்கும்.ஏன் இப்படி நம் மனமே நமக்கு எதிராக செயல்படுகிறது என்று நாம் நினைத்தது கிடையாது.இந்த மனத்தை கட்டு படுத்தி வைப்பது என்பது மிக கடினமானதுதான் உங்களின் இன்றைய நிலை நிச்சயமாக மாறும் என்று உங்களின் நினைவு திருப்ப திருப்ப நினைபத்தின் மூலம் தான் உங்களின் உணர்ச்சி பிழம்பால் மேலே எழும்பும் மனதினை அமைதி படுத்துக்கள் இதற்க்கு பெரிய தியானம் ஒன்றும் தேவை இல்லை.மிகப்பெரிய மாற்றத்திற்க்குதான் இந்த நிகழ்வு நிகழ்திருக்கிறது என்பதை உங்களின் மனதிற்கு அழுத்தமாக சொல்லுங்கள்.இன்று உங்களை உதசினபடுத்தியவர்கள் மட்டும் தான் உலகம் என்று எழும் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள். அவர்கள் முன்னால் வெற்றி பெறவேண்டும் என்ற கற்பனையை அறவே ஒழித்து கட்டுக்கள்.தோல்வி எது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.உங்கள் வெற்றிக்காக வழிவிடும் பாதையை தோல்வி என்று ஒருபோதும் எண்னிவிடதீர்கள்.நீங்கள் செல்லும் இலக்கிற்கு சுற்றுப்பாதையை விட்டு நேர்வழிக்கு வருவதை தோல்வி என்று நினைத்து மன வலியை நீங்களே உருவாக்காதீர்கள்.மன வலிமையை உருவாகுவது அவ்வளவு ஒன்று கடினம் இல்லை.மன வலிமை என்பது அறிவு சார்த்த விஷயம் இல்லை அது அன்பு சார்த்த ஒரு நிகழ்வு.எதிரிக்கும் அன்பு காட்டவேண்டும் என்று மிகப்பெரிய மனதாழ்மை தலைவர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள்.என்றுமே அவமானங்கள் தோல்விகள் உங்களை கூனிகுருக செய்யும் அது உங்களை பக்குவபடுத்துவதர்க்குதான் என்பதை நீங்களே உணரும் சூழ்நிலை வரும் போது தூற்றியவர்கள் விரட்டியவர்கள் அனைவரும் காணாமல் போயிருப்பார்கள் அந்தளவிற்கு உயரத்தில் நீங்கள் இருப்பீர்கள் அன்று இவர்களை பற்றிய நினைப்பை நாம் நினைத்தாலும் நமக்கு வருவதில்லை அன்று அவர்கள் நம்மை பார்த்து கூனிகுருகி நம் கண்ணுக்கு மறைந்து செல்வார்கள்.மனம் உங்களை அழுத்தி திமிரும் மாய குதிரை அதை அவிழ்த்து விடும் வேலையில் இறங்காதீர்கள் வழக்கை இனிக்கும் வாழவே பிடிக்கும்.