சினிமா (அரசியல்) நூற்றாண்டு விழா

சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் கலசங்கள் இல்லாத  கோபுரங்களுக்கு நடத்தப்படும் விழாவாக கொண்டாடப்படடுவது வேதனையாக  இருக்கிறது.தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஜாம்பவான்களை  தவிர்த்து விட்டு நூற்றாண்டு விழாக்களை கொண்டாடுவது என்பது இன்றைய திரைதுறை அரசியல் சார்தே செயல்படுகிற  நிலையில் உள்ளது என்பதை மக்களுக்கு பறைசாற்றும் விதமாக இருக்கிறது.ரசிகர்கள் பின்புலம் உள்ள நடிகர்களே இந்த அளவிற்கு பயம் என்னும் குழிக்குள் நின்று பேசுவதற்கு தயங்கும்போது தனிமனிதனின் நிலை என்ன? இசை அமைப்பாளர் M.S.விஸ்வநாதன் அவர்களுக்கு அனுமதி மறுக்க பட்டிருக்கிறதா, அவருடைய இசை இல்லாமல் இன்றைய தமிழ் திரை இசை இல்லை  என்கிற அளவிற்கு இன்றைய தலைமுறை வரை அவரின் இசையில் மயங்காதவர்கள் இல்லை. அப்படிபட்ட மனிதருக்கு அரங்கில் அனுமதி இல்லை தமிழ் திரை வரலாற்றை இவருடைய பெயரை மறைத்து எழுதிவிட முடியுமா! நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் இவர்களை எல்லாம் தகுந்த மரியாதையுடன் வீட்டிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரவேண்டியவர்கள் அப்படி செய்யாவிட்டாலும்,அவர் வராததை குறிப்பறிந்து அழைத்தீர்களா என்று இன்றைய முதல் நிலை நடிகர்கள் கூட கேட்கவில்லை என்பது என்ன இந்த உலகம் என்றுதான்.  நினைக்க தோன்றுகிறது இந்த நிலை நமக்கும் வராது என்பதாக இவர்கள் நினைத்தால் அது இவர்களின் அறியாமையை தான் உணர்த்தும். ,வரும் காலங்களில்லாவது இது போல் ஒரு நிகழ்வு நடக்காமல் பார்த்து கொள்ளுவது நன்று.