விழி இழந்தோரின் வழி பயணம் போராட்டமா
விழி இழந்தோரின் வழி பயணம் போராட்டமா கண் பார்வை இழந்த பட்டதாரிகள் தங்களின் உரிமைக்காக போரடிகொண்டிருக்கிறார்கள்.விழி இழந்தோரையும் வீதிக்கு வந்து போராடித்தான் உரிமைகளை பெறவேண்டும் என்ற நிலையில்தான் நம்நாடு இன்றும் இருக்கிறது.மனிதாமிமானம் உள்ளவர்கள் யாரும் இல்லையா இந்த நிகழ்வை முடிவுக்கு கொண்டுவர என்று நினைக்க தோன்றுகிறது வீதியில் செல்லும்போது இந்த விழி இழந்தோரை கண்டால் வரும் பட்சாதாபம், பரிதாபம் கூட நம் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்று நினைக்கும்போது வேதைனையில் இதயம் அழுகிறது . விழி இழந்தோரின் வாழ்கையே உணர்வுகளின் அடிப்படையில் தான் அப்படிப்பட்ட வர்களின் போராட்ட உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை என்றால்.நாம் கண்ணிருந்து குருடர்களாக,காதிருந்தும் செவிடர்களாக வாழ்கிறோம் என்றுதான் பொருள்.பார்வைதிரனை இழந்தவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் வேலைகொடுப்பது என்பது நினைத்து கூட பார்கமுடியாத கற்பனை.அரசு நிறுவனங்களிலும் அவர்களை புறக்கணிப்பது நல்ல முன்னுதாரணமாக இருக்காது.இவர்களது போராட்டத்தை யாரும் பெரிதாக மதிக்க வில்லை போலும் எந்த அரசியல் தலைவர்களும் இவர்களின் நிலையை பற்றி பேசுவதற்கு முன் வரவில்லை,போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வில்லை,குண்டுகட்டாக அப்புறபடுத்தும் போது காவல்துறை கொஞ்சம் கனிவுடன் செயல் பட கூடாதா.நிகழ்வை பார்பவர்களை நெகிழ செய்கிறது.இந்த காட்சியை காணமுடியாத இந்த கண்மணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யுங்கள்.இவர்கள் ஆட்சியை பிடிக்க உதவுவார்களோ இல்லையோ நிச்சயம் புண்ணியம் சேர்க்க உதவுவார்கள்.