பா.ஜ.க வின் தமிழக தொண்டர்கள்


ப.ஜ.க என்ற அரசியல் கட்சி R.S.S. என்ற தாய் கழகத்திலிருந்து உருவானது அல்ல, தாய் கழகமாம் R.S.S உருவாக்கிய தன்னுடைய அரசியல் பிரிவு தான் ப.ஜ.க. தாய் கழகத்தில் பயிற்சி பெற்ற பின்தான் ப.ஜ.க அரசியல் தளத்தில் பிரவேசிக்க முடியும்,அரசியலிலும் பிரகாசிக்க முடியும்.தாய் கழகத்தின் ஆதரவு ஒருவருக்கு இல்லை என்றால் இல்லை என்றால் அவர் அரசியல் வழக்கைபிசுபிசுத்துவிடும்.தாய் கழகம் ஓரம் கட்டினால் அவர் ப.ஜ.க வழர்ச்சியில் எவ்வளவு பங்குகொண்டாலும்,ப.ஜ.க வை அரசியல் வானில் ஒளிர செய்தாலும் அவரை தள்ளிவைத்து தான் பார்க்கும். பா.ஜ.க விற்கு தனியாக எதுவும் சட்ட திட்டங்கள் கிடையாது. தாய் கழகத்தில் இருக்கும் பலபேர் தங்களை முழுவதுமாக அர்பணித்து பணியாற்றுபவர்கள்,அர்பணித்து என்றால் தங்களின் சிறுவயதிலிருந்து தொடங்கிவாழ்க்கையில் திருமணம் கூட செய்து கொள்ளாமல்,தங்கள் குடுப்பத்துடன் தொடர்புகொள்ளாமல் கட்சிக்காக தங்களை ஒப்படைத்தவர்கள்.இந்தகைய தொண்டர்களின் மூளையாய் இயங்குவது தாய் கழகம். இவர்களின் செயல்பாடுகள் மூளையை வைத்திருக்கும் தாய் கழகத்தின் கட்டுபாட்டில் தான் நடக்கும். இத்தகைய முழு அர்பணிப்பு தொண்டர்கள் வட மாநிலத்தில் அதிகமாக காணப்படுவார்கள்.ஆனால் இப்போது தமிழ்நாட்டிலும் இவர்களின் எண்ணிக்கை முளையிலிருந்து கொஞ்சம் மேலே வந்திருப்பதாக உணரவேண்டி உள்ளது.இத்தகைய அர்பணிப்பு தொண்டர்கள் தமிழ்நாட்டில் வளர்வது நல்லதா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.இவர்களை போல் தொண்டர்கள்  வேறு காட்சிகளில் இருக்கிறார்களா நமக்கு தெரியவில்லை! நம்முடைய வழக்கை முறை கலாச்சாரம்  குடும்ப உறவுகளை சார்த்தது அன்பு, பாசம், நேசம், போன்றவற்றை சீர்துக்கி பார்த்து வாழ்வதுதான் நம்முடைய வாழ்கை பயணம்,ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்வது பாசத்திற்காக நாணல் போலே வளைத்து கொடுத்து வாழும்  ஒரு பாதை இதில் அதி தீவிர அர்பணிப்பு தொண்டர்கள் சுதந்திர ஜனநாயக நாட்டிற்கு எந்த அளவிற்கு தேவை என்பதை காலமும் , களமும் தான்  பத்தி சொல்ல வேண்டும்.