அவதூறு ஆண்மையா பெண்மையா ...........
பிறரை பற்றி பொய் சொல்லிஅவதூறு பரப்புவதற்கு யாரும் இம்போது வெட்கப்படுவதும் இல்லை கூட்சப்டுவதும் இல்லை.அந்த நபரை பற்றி தவறான செய்தியை சொல்லுகிறோமே என்ற தன்பயம் என்ற பண்பு இம்போது பொரும்பாலான மனிதர்களிடம் இல்லை. எதையாவது சொல்லி அவர்களின் நற்பெயரை களங்கபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த அவதூறுகள் பரப்பபடுகின்றன.அதன் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு யாரும் முற்படுவது இல்லை.இப்படிப்பட்ட பொய்களினால் ஏற்படகூடிய பின் விளைவுகளை பற்றிய கவலை இப்படிப்பட்ட அவதுறு பரப்பும் மனிதர்களிடம் கிடையாது.எதாவது ஒரு பொய்யை சொல்லி தனுடைய நிலையை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் இன்று அனேகரிடம் இருக்கிறது முன்மெல்லாம் அரிதாக அறியப்பட்ட இந்த அவதுர்கள் இப்போது சர்வசாதரணமாக சின்ன சின்ன நிகழ்வுகளுக்கு கூட இவர்களால் பரப்பபடுகிறது.இத்தகைய அவதூறுகள் சிலசமயம் மனிதனுடைய உயிரை கூட விழுங்கி விடுகின்றன. கவரிமான் பரம்பரை மனிதர்கள் யாரும் இல்லை என்றாலும் மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்து கொள்ளும் மனிதர்கள் இனமும் இந்த உலகில் இருக்கிறார்கள்.தன்னை பற்றிய அவதூறுகளை கண்டும் காணாதவர்கள் போல் இருக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.தன்னுடைய பணியிடத்தில் பதவி உயர்விற்காக சில பொய்களை சொல்லி தன்னுடன் பதவிஉயர்வு போட்டியில் இருப்பவரை பற்றி அவதூறு பேசி தன்னுடைய பதவி உயர்வை தங்கவைத்து கொள்ளுவது இன்றைய சூழ்நிலையில் சர்வசாதாரணமாகி விட்டது."பொய்மையும் வாய்மை இடத்து" என்று வள்ளுவர் சொன்னது நன்மை செய்ய கூடிய பொய் ஒன்று கிடையவே கிடையாது என்பதால் தான்.அவதுறு பரப்புவது என்பது முள் கொடியை தன்மீது சுற்றுவது போல் என்றாவது ஒருநாள் அது உங்களை செயல் படாமல் இருக்க செய்து விடும்.
அவதூறு விரட்டுவோம் அன்பை அணைப்போம் என்றும் மனிதனாய் வாழ்வோம் ஆண்மையா பெண்மையா
அவதூறு விரட்டுவோம் அன்பை அணைப்போம் என்றும் மனிதனாய் வாழ்வோம் ஆண்மையா பெண்மையா