அத்வானி என்றோ செய்த தவறு
அத்வானி என்றோ செய்த தவறு இன்று அவருக்கு தலைவலியை கூண்டுகிறது .பி.ஜே.பி என்ற ஒரு கட்சியின் வளர்ச்சியை அத்வானியை தவிர்த்து நினைத்து கூட பார்க்க முடியாது.அந்த அளவிற்கு அவருடைய அர்பணிப்பு அதன் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்குண்டு ஆனால் இன்று அவரை தவிர்த்து தவிக்க விடவேண்டும் என்ற எண்ணம் இன்றைய வளர்ச்சி அடைந்த ப..ஜ.க நினைக்கிறது இதற்க்கு காரணமும் அத்வானிதான்.தன் முகத்திற்கு முன்னால் பூனையைபோல் நடித்து முகத்துக்கு பின்னால் புலியை போல் வாழ்தவர்களை நம்பியதன் விளைவு.தன்னுடன் உண்மை பேசியவர்களை புறந்தள்ளியத்தின் வினை.காலுக்கடியில் வளர்ந்த முட்செடியை முதலிலேயே வெட்டாமல் விருட்சமாக வளர விட்டத்தின் பயன்.தன்னை நம்மவைது ஏமாற்றிய இந்த பூனையை நம்பி உண்மையிலேயே தன்னுடைய விசுவாசிகளை விலக்கி வைத்ததன் காரன்.இன்று அத்வானி செய்வது அறியாது தவிர்க்கிறார். ஆனால் அவர் சொல்லுவதை இப்போது பிஜேபி ஆராய்வது நல்லது. காற்று நிரம்பிய பலூனை நம்மி மிகப்பெரிய பயணத்திற்கு தயாராவது பி.ஜ.பி க்கு நல்லதல்ல.மக்களின் மிகப்பெரிய ஆதரவு இன்று ப.ஜ.க விற்கு இருப்பதை போல் தெரிவது உண்மையா என்பதை புரிந்து கொண்டு செயல் படுவது நல்லது.கட்சியின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றிய மூத்த தலைவரின் ஆலோசனையை கேட்டு கொள்வது நன்று.காய்த்து குலுங்கும் போது பழத்தை உண்பதற்கு அனைவரும் வருவார்கள்.கருகிய மரத்திற்கு தண்ணீர் உற்றதான் ஆள் இருக்காது.எதை வேண்டுமானாலும் மக்கள் மனித்து விடுவது வழக்கம் ஆனால் ஒருவரை அவமானபடுத்துவதை விருப்ப மாட்டார்கள் இதை மனதில் வைத்து தேர்தலை ப.ஜ.க சந்திப்பது நன்று