குஜராத் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைத்தது


குஜராத் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைத்தது என்று மெல்ல மெல்ல வெளிச்சத்திரிக்கு வர ஆரம்பித்திருக்கிறது  மேஜிக் செய்துவிட்டதாக இந்த உடகங்கள் எல்லாம்  தூக்கி வைத்து கொண்டாடி செய்திகளை வெளியிட்டது ஆனால் இன்று உண்மையான குஜராத் எப்படி இருக்கிறது மாநில வளர்சிபட்டியலில் அது கல்வி,தொழில்,விவசாயம், வறுமை,குழந்தை கல்வி போன்ற வற்றில் எந்த இடத்தில் இருக்கிறது என்று வெட்ட வெளிச்சமாகா விட்டாலும் மெல்ல திரை விலக ஆரமித்து இருக்கிறது.வரிந்து கட்டிய ஊடகங்களே கூட உண்மை நிலைமையை வெளிக்கொண்டு வருகின்றன.இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் இதை விட பல மடங்கு சதவிகித வளர்ச்சி அடிந்துள்ளது அந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் யாரும் என்னால் மாட்டுமே முடிந்ததது என்று தம்பட்டம் அடித்துகொள்வது அந்த மாநிலத்தில் முடிந்து விடும் ஆனால் குஜராத் விவகாரம் மட்டும் ஏன் இந்தியா முழுவதும் பரப்பபடவேண்டும் இது தாய் கழகத்தின் முறை படுத்துதலா அப்படிஎன்றால் ஏன் அவ்வாறு செய்யவேண்டும், கட்சியில் பல மூத்த தலைவர்களை ஓரம்கட்டிவிட்டு சிலரை மட்டும் முன்னிலை படுத்த வேண்டும்.தாய் கழகத்தின் செயல் வரை முறைகளை செயல் படுத்த முடியும் என்பதாலா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா,சுப்ரமணிய சாமி போன்றவர்கள் திடீரெண்டு இவர்களுடன் கைகோர்த்தது எதனால்? சுப்ரமணிய சாமி உலககளாவிய தலைவர்களுடன் மற்றும் சாமியார்களுடனும் தொடர்புடைய ஒரு மனிதர்.இவரை இன்று கட்சிக்குள் வந்தது அவர் விரும்பியா அல்லது தாய் கழகத்தின் விருப்பத்தின் பேரிலா என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். கட்சியை பூஜ்யத்திலிருந்து வளர்த்த மூத்த தலைவர் அத்வானி ஏன்  இதை மறுதலித்து பேசவேண்டும் அவருக்கு தெரிந்த உண்மை என்ன பிரதமர் பதவி ஆசையில் மட்டும் இதை பேசி இருப்பார் என்று ஒற்றைவரியில் தட்டி கழிக்க முடியாது அதையும் தாண்டி ஏதாவது இருக்க வேண்டும் என்பதையும் உணரவேண்டும் இதையும் நாம் கருத்தில் கொண்டு ஆராய்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இன்றைய சூழல் உள்ளது .மாற்றம் வரவேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருந்தாலும் அது சரியானதாக இருந்தால்தான் நல்லது கிராமத்து சொலவடைபோல் "புருஷனை விட்டு அரசனை பிடித்த கதையாக" ஆகிவிடக்கூடாது.சொந்தங்களிடம் வாங்கிய கடனை கந்துவட்டிகாரனிடம்  கடன் வாங்கி திருப்பி கொடுப்பது போல் நிலைமை மோசமாகிவிட கூடாது என்பதில் மக்கள் கவனாமாக இருக்க வேண்டும். மாற்றம் தேவை அது மாற்றானுக்கு மகிழ்ச்சியாகிவிட கூடாது