கல்வி<<<<<<<<<>>>>>>>>>>>>>>
கல்வி என்பது அடிதட்டு வரை பரவலாக்க பட்டிருக்கிறதா என்று நினைத்து பார்க்கும் போது, அடித்தட்டு வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு அது எட்டாத ஒரு நிலையிலேயே இருக்கிறது. ஏன் நம் யாரும் இதற்காக எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளுவதற்கு விரும்புவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சட்டத்தின் மூலமாகவும் தன்னார்வம் மூலமாகவும் முயற்சிகள் மேற்கொண்டாலும் அது சரியான நபர்களுக்கு போய் சேர்வதில்லை என்பது உண்மை.ஒரு திரைப்படம் தொடக்க விழா, இசை வெளியீட்டு விழாவிற்கு,வெற்றிவிழ என்று எந்தனையோ விழாக்களை கொண்டாடும் இந்த திரை துறையினர்கள் ஒரு விழாவிற்கு ஒரே ஒரு மாணவனுடைய கல்வி செலவையாவது ஏற்றுக்கொள்ளுவதற்கு முன் வரலாமே.ஒரு நாள் விழாக்களுக்காக லட்சகணக்கில் செலவு செய்கின்ற இந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு.ஒரு மாணவனுக்கான கல்வி செலவுகளை ஏற்பது ஒன்றும் பெரிய காரியமல்ல.ஒரு திரைப்படம் வெளிவரும் போது சில மாணவர்கள்,குறைந்த பட்டசமாக ஒரு மாணவனாவது கல்வி பெறுகிறான் என்ற நிலை வரவேண்டும்.அப்போது தான் இந்த மக்கள் திரைத்துறையினருக்கு செய்த உதவிக்கு ஒரு சிறிய கைமாறாக இருக்கும் வரும் தலை முறை முழுமையான கல்விபெற்ற தலை முறையாக மாறுவதற்கான ஒரு சூழல் உருவாவதற்கு இவர்களும் ஒரு துணையாக இருந்தார்கள் என்ற ஒரு நல்ல பெயராவது கிடைக்கும்.திரை துறையினர்தான் இதை செய்யவேண்டும் என்பது இல்லை.தேவை இல்லாத அடம்பர விழாக்கள் கொண்டாடும் அனைவருமே இதை மனதில் வைத்து கொண்டு செயல் படுவது நன்று.ஒரு விழா நடைபெறுகிறது என்றால் ஒரு மாணவனுக்கு கல்வி கிடைகிறது என்ற எண்ணம் வந்து விட்டால.எத்தனை பாராட்டு விழாக்கள் நடந்தாலும்,மக்கள் வரவேற்ப்பார்கள்.கொண்டாடுவார்கள்.