தாமரை மலருமா பதவியில் அமருமா ....!
எதிர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஒரு கூட்டணி ஆட்சிதான் மத்தியிலே ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்கிறார்கள்.அதை வைத்து பார்த்தோமேயானால் மத்தியில் இருபெரிய தேசியக்கட்சிகள் ஒன்று பாரதிய ஜனதா பார்ட்டி மற்றொன்று ஆளும் காங்கிரஸ் கட்சி இந்த இரு காட்சிகளில் ஒன்றின் தலைமையில்தான் ஆட்சி உருவாக முடியும் மூன்றாவது அணி என்றொரு கோஷம் வந்தாலும் அந்த அணி உருவாவதற்கான சாத்திய கூறுகள் சதவிகித அடிபடியில் புறந்தள்ள கூடிய நிலையில் தான் இருக்கிறது.பி,ஜே.பி கட்சியை பொருத்தமட்டில் அவர்கள் கூட்டணி அமைப்பதிலேயே எந்த ஒரு குழப்பமும் இருக்காது ஆனால் பலமான கூட்டணி அமைப்பதில் மிகப்பெரிய குழப்பத்தை சந்திக்க கூடிய நிலைதான் அதிகமாக தெரிகிறது.அப்படி பலமான கூட்டணியை அமைத்தால் ஒழிய அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவது என்பது கடினமான ஓர் நிகழ்வுதான்.மக்கள் பி.ஜே.பி.என்ற கட்சியின் மீது வைத்த நம்பிக்கையை விட வாஜ்பாய் என்ற தனிமனிதன் மீது வைத்த நம்பிக்கைதான் அதிகம் எனவேதான் அன்று ஆட்சி பீடத்தை கைப்பற்றியது ,அதைபோல் மக்கள் நம்பிக்கையை செல்வாக்கை பெற்ற தேசிய தலைவர்கள் இன்று பி.ஜே.பி.ல் இல்லை இது நிச்சயமாக அந்த கட்சிக்கு மிக பெரிய பின்னடைவு ஏற்படுத்த கூடிய ஒரு காரணி என்பதை பி.ஜே.பி மனதில் கொள்ளவேண்ட்ம் .பலரையும் அரவணைத்து கட்டுகோப்பாக செயல்பாட்டை செயல்படுத்துகின்ற ஒரு தலைமை இன்று பி.ஜே.பி.ல் இல்லை.அப்படி ஒரு தலைமை உருவானால் தான் இவர்கள் அட்சி அமைக்கும் கனவை நிறைவேற்ற முடியும்.
தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன் என்ற நிலையை தொடருமேயானால் எதிரியின் பலவீனம் போட்டியாளர்களின் பலமாக மாறிவிடும். அப்படி பலம் மாறுவதற்கான வாய்ப்புகளே தொலைவில் தெரிகிறது.அதை மாற்றவேண்டிய பெரும் பொறுப்பு பி.ஜே.பி.க்கு இருக்கிறது.
தாமரை மலருமா பதவியில் அமருமா
தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன் என்ற நிலையை தொடருமேயானால் எதிரியின் பலவீனம் போட்டியாளர்களின் பலமாக மாறிவிடும். அப்படி பலம் மாறுவதற்கான வாய்ப்புகளே தொலைவில் தெரிகிறது.அதை மாற்றவேண்டிய பெரும் பொறுப்பு பி.ஜே.பி.க்கு இருக்கிறது.
தாமரை மலருமா பதவியில் அமருமா