நட்பு
நட்பு என்பது அனைவராலும் அரவணைத்து செல்லகூடிய ஒரு நடைமுறை,முன்பெல்லாம் நட்பு என்பது மிகப்பெரிய அளவில் போற்றப்பட்டது.கழுதை தேய்த்து கட்டெறும்பு ஆனா கதையாக ஆகிவிட்டது.இன்று நட்பு என்பது வெறும் வார்த்தைகளிதான் இருக்கிறதே தவிர உண்மையான நிலையில் உயிருடன் இல்லை என்பதுதான் மெய்.வரலாற்றுகளில் போற்றப்பட்ட நட்பு என்ற பெயரை உபயோகித்து செய்ய படுகின்ற செயல்கள் அனைத்துமே அரைவேக்காட்டுதனமானவைதான்.அன்றைய நடப்பு உறவு முறைகளையும் மீறி காலம் கடந்து நிலைத்து நின்றது.ஒருவருக்கொருவர் விட்டு கொடுப்பதும், அன்பு பாராட்டுவதும் தான் நட்பை உயிருடன் வைத்து கொள்ளும்.ஆனால் இன்று நட்பு வெறும் வேசத்தினால் ஆனா சித்திரங்கள்.தன் வாழ்வை விட தன்னுடைய நண்பனின் வாழ்கையை செம்மைபடுத்திய நட்பு இன்று உண்டென்று நினைத்தால் அலசி ஆராய்ந்து பார்த்தாலும் கிடைக்காது.இளமையில் கூடி கலைவதாகத்தான் நட்பு இருக்கிறது.போலித்தனமாக விழாக்களில் வாழ்த்துக்கள் சொல்லுவதற்கும்,விசேசங்களில் ஒன்று கூடி கூத்தடிபதர்க்கும் தான் இன்று நட்பு என்ற சொல் பயன் படுகிறது.நம் வாழ்வில் வருபவர்கள் எல்லாம் நண்பர்கள் அல்லவீழும் போது நம்மை வாழ வைப்பவர்கள்தான் நண்பர்கள்.அப்பேற்பட்ட நண்பர்கள் நம்முடைய வாழ்நாளில் நம்மை விலகி சென்றிருத்தால் தயவுசெய்து அவர்களை தோழோடு தோழ் அனைத்து அரவணைத்து கொள்ளுங்கள்.வரும் காலம் நட்பிற்கு இலக்கணமாக விளங்கட்டும் நாமும் அதிலே ஒரு துளியாக இருப்போம் நல்ல பழக்கவழக்கம் கொண்ட உலகை நம் சத்ததிக்கு கொடும்போம்.