விவசாயி............................*****

விவசாயம் என்பது இந்த உலகில்  கூடிய ஓர் அம்சம்.நாம் இன்று விவசாயத்தை மறந்து விட்டோம் அதனுடேன் கூடி விவசாயியையும் மறந்து விடோம் எனவேதான் இன்று விவசாயம் செய்வதற்கு மனிதர்கள் விருப்புவதில்லை.மனித நாகரீகத்திர்க்கே வழிகாட்டிய இந்த விவசாயம் இன்று இருக்கும் நிலையை நினைத்து பார்த்தால் நமக்கு வரும் காலத்தை பற்றிய பயம் புரியும்.விவசாயம் விருப்பத்துடன் செய்ய கூடிய ஒரு சேவை என்றே நான் கருதுகிறேன் எனவேதான் வேளாண்மை என்ற பெயர் வந்தது.வேளாண்மை என்றால் விருப்பி மற்றவருக்கு உதவுவது என்று பொருள்.இந்த தொழில் இயற்க்கை  காரணிகளை சார்ந்துள்ளது.எனவே இதனை விருப்பபுடந்தான் செய்யமுடியும்,மாதம் முடித்ததும் ஊதிய உத்திரவாதம் கொடுக்கும் தொழிலல்ல.எனவே இதனை விரும்பித்தான் செய்யமுடியும்.தங்களின் சோகங்களை மறந்து தன பசியையும்,பிறர் பசியையும் போக்கும் ஒரு உன்னதமான சேவை."தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்றான் மகாகவிஅனைவருக்கும் உணவளிக்கும் அந்த விவசாயியை போற்றவில்லை என்றாரும் தூற்றாமல் இருந்தாலே நாம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்  
நாம் யாருமே அந்த விவசாயம் நிலை பெற செய்வதற்காக எந்த ஓர் முயற்சியையும் எடுக்க வில்லை.இயற்கையான பூக்களை விற்று காகிதபூகளை வாங்கும் மனிதர்களாகத்தானே இருக்கின்றோம். நாம் இன்று தொழில் நுட்பத்தில் முன்னேறிகொண்டிருந்தாலும் நம்முடைய அடிப்படை விவசாயம்தான். நாம் தினமும் உண்ணும் உணவின் பின்னல் உள்ள விவசாயியை மதிப்போம் விவசாயத்தை வளர்ப்போம் வளமான பசி இல்ல எதிர்காலத்தை உருவாக்குவோம்.