கனவு
கனவு ஒரு இன்பமயமான நிகழ்வு,விழித்திருக்கும்போது வரும் கனவுகள்,ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவுகள்.விழித்திருக்கும் போது காணும் கனவு நம்மை எப்போதுமே மகிழ்விக்கும் ஆனால் தூக்கத்தில் வரும் கனவுகள் சில நேரம் நம்மை பயமுறுத்தும். வாழ்க்கையில் கனவுகளை,கனவோடு விட்டு விடாமல் அதை நனவாக்கி காட்டியவர்களும் உண்டு.கனவோடு கனவாக கரைந்து போனவர்களும் உண்டு.கனவு என்பது ஒரு அற்புதமான ஒரு உணர்வு அதனுடன் பயணிப்பது சொல்லிலடங்கா ஒரு அனுபவம்.அதை எல்லோராலும் அனுபவித்து விட முடியாது.நாம் வாழ்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் நாம் இதற்க்கு முன் சந்தித்ததை போல் ஒரு உணர்வை ஏற்படுத்தும். இந்தகைய உணர்வுகள் நம்முடைய ஆழ்த்த உறக்கத்தில் கிடைத்த கனவுகளின் பிரதிபலிப்பாக இருக்காலம்.தெளிந்த நீரோடை போல் நாம் காணும் கனவு தான் எந்த ஒரு முயற்சிக்கும் முதல் படி. நம்மை இந்த உலகம் தனிமை படித்திய போதெல்லாம் இந்த கனவுதான் நம்முடைய உற்ற தோழனாக, நம்மை செம்பை படுத்தும், நமாக்கு ஆறுதல் கொடுக்கும் கனவு காணாத மனிதனே இல்லை."கனவு மெய்பட வேண்டும்" என்பது தான் அனைவருடைய ஆசையும் ஆனால் அதை மெய்பட செய்தவர்கள் அறிதானவர்களாகத்தான் இருக்கிறார்கள்.நாம் காணும் கனவுகள் பெரும் பாலும் நம்முடைய வயதை சார்ததே நிகழும். இந்த கனவை துரத்த நினைத்தாலும்.அதை விட்டு நம்மால் பிரிய முடிவதில்லை.அவைதான் நம்மை துரத்துகின்றன.நம்முடைய சித்தனையின் வெளிப்பாடாக கூட இந்த கனவுகள் நம்மை ஆழுமை செய்யும்.எப்படியோ கனவு மனிதனின் வாழ்கையில் தவிர்க்கமுடியாத ஒன்று.. நம் கையில் உலகம் அடங்குவதற்கும் உலகத்தின் கையில் நாம் அடங்குவதற்க்கும் இந்த கனவுதான் முதல் நிலை. எனவே நல்ல கனவு கண்டால் நம் வாழ்வில் நன்மை உண்டு .