அம்மாவின் சூளுரை சுலபமாக.........!

நாடளுமன்ற தொகுதி நாற்பதையும்  நாம்  வெல்லுவோம் என்று அண்ணா  திராவிட முனேற்ற கழகத்தினுடைய பொதுசெயலாளர் அம்மா அவர்கள் சூளுரைத்திருக்கிறார்கள்.தேர்தல் கூட்டணியில் தே .மு.தி.க. வை அம்மா தக்கவைத்து கொள்வது ஒன்றுதான் அவரின் இந்த சூளுரைக்கு வலு சேர்க்கும்.அவர் நினைத்ததை நிச்சயமாக முடிபதற்கு வழி செய்யும்.யார் விலகினாலும் விவாதித்தலும் தே .மு.தி.க. கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் என்ற தனிமனிதனுக்கு குறுப்பிட்ட சதவிகித வாக்குகள் இருக்கின்றன.மக்களவை தேர்தலில் இந்த மனிதனின் பங்கு நிச்சயமாக வெற்றி பாதையை திசை திருப்ப சிறிய உந்து  சக்தியாக இருக்கும் இதை மறக்காமல் மனதில் வைத்து அம்மா இவரை அரவணைத்தால் வெற்றி சதவிகிதம் சற்று கூடும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின்  கனவு நனவாகும் இல்லை எனில் வெற்றி கோட்டை கடக்க  கடுமையாக உழைக்க வேண்டி வரும், சந்தர்ப்ப மாற்றத்தால் இழக்கவும் நேரிடலாம்.மலை ஏறகூடிய ரயில் வண்டிக்கு பின் பக்கமும் என்ஜின் தேவை என்பதை போல் அ .தி.மு.க விற்கு பின் பக்கம் தள்ளும்என்ஜினாக தே .மு.தி.க. தேவை. எத்தனை தேசிய தலைவர்கள் வந்து போனாலும் தமிழக வாக்காளர்களின் மனதில் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியாது.வெற்றி பெற்ற பின் தேவை படும் தலைவர்களை விட வெற்றி பெறுவதற்கு  தேவைப்படும் தலைவர்கள்தான் முக்கியம் இதை உணர்ந்தால் கனவு நனவாகும் இல்லை எனில் கனவே வழக்கமாகும்.