முகஸ்துதி முள்ளம்பன்றிகள்
முகஸ்துதி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் பிடித்த ஒன்று. தன்னை பற்றி சொல்லும் இந்த அதிகபடியான விஷயங்கள் அனைத்தும் பொய் என்று தெரிந்தும்.அப்படிப்பட்ட நபர்களைதான் அவர்களுக்கு பிடித்திருக்கும் .இவ்வாறு முகஸ்துதி செய்பவர்கள் ஆபத்தானவர்கள் என்று தெரித்திருந்தும் அவர்களை தன்னுடன் வைத்து கொள்ளவதைதான் மனிதன் விரும்புகிறான்.மது உடலுக்கு கெடுதல் என்று தெரிந்தும் கூடஅதை அருத்துவத்தை போல இந்த முகஸ்துதி மனதை கெடுக்க கூடிய ஒரு கொடிய செயல் என்று தெரிந்தும் மனிதன் அதை விரும்புகிறான்.இதனால் தன் தகுதிக்கு மீறிய செயலை செய்வதற்கு அவன் துணிகிறான்.அதன் விழைவு நிர்கதியாக நிற்க கூடிய சூழ்நிலை உருவாகிறது.மனம் முகஸ்துதி செய்து உருஏற்றப்பட்ட அந்த நிலையில் இருந்து தன்னை மாற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிறது. இப்படி முகத்திற்கு நேராக ஒன்றும் மறைமுகமாக வேறொன்றும் பேசுபவர்கள்தான் இன்றைய சூழ்நிலையில் வாழதெரிந்தவர்களாக உலகம் நினைக்கிறது.இப்படிப்பட்டவர்கள்தான் நாட்டில் அதிகம் காணப்படுகிறார்கள்.இவர்களுடன் போட்டி போடமுடியாமல் தன்மானம் உள்ள மனிதர்கள் வெறுத்துபோய் அமைதியாகிவிடுகிரார்கள் அல்லது அவர்களும் வேறுவழி இன்றி முகஸ்துதி செய்ய தொடக்கி விடுகிறார்கள்.முகஸ்துதி அரசியல்,அழுவலகம் என்று எல்லா நிலையிலும் இருக்கிறது.இந்த ஆபத்தான நபர்கள் தங்களுடைய சாதக பாதக மான வேலைகளை இதன்மூலம் முடித்து கொண்டு வாழ்வில் வெற்றிபெற்றவர்களாக திகழ்கிறார்கள்.அந்த வெற்றிக்கு பின்னல் இருக்க கூடிய ஈன செயல் களை யாரும் அறியாததால் இந்த கீழ்நோக்கு பார்வை உள்ளவர்களை. இந்த உலகம் மேல் நோக்கி பார்கிறது.