பாலியல் கொடுமைக்கு என்ன காரணம் ...........;

பெண்களின் மீது பாலியல் கொடுமை நடப்பதற்கு வெறும் காமம் மட்டுமே காரணமா? இதுபோல் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் சட்டத்தில் உட்டபட்ச தண்டனை கிடைக்க வாய்பிருக்கிறது என்று தெரிந்ததும் வெறும் காம பசிக்காக பாலியல் வன்முறைகள் நடக்க வாய்ப்பிருக்கிறதா?

இன்றைக்கு  பெண்  என்ற வித்தியாசமில்லாமல் எல்லா துறைகளிலும் ஆண்களுடன்  போடிபோட்டுகொண்டு  பெண்கள் வளர்ச்சி அடைத்திருக்கிறார்கள், இதைபோல் சூழ்நிலை இருக்கின்ற இந்த உலகத்தில் வெறும் பாலுனற்சிக்காக இதைப்போன்ற வன்கொடுமைகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை! அதையும் தாண்டிதான் நாம் இதை சித்திக்கவேண்டி இருக்கிறது.
விரோதம் அதன் காரணமாக நடக்கும் பழிவாங்கும் நடவடிக்கை என்று எத்தைனையோ காரணிகளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டி இருக்கிறது

ஒரு ஆண்  ஆண்மேல் கொண்ட விரோதம் , பெண் பெண்மேல் கொண்ட விரோதம், ஒரு ஆண்,  பெண்மேல் கொண்ட விரோதம் , பெண் ஆண்மேல் கொண்ட விரோதம்.
இந்த விரோதங்கள் மனிதனின் மனதின்  தன்மையையும் அவர்களின் சமூக நிலையையும் ,பணபலத்தையும் பொறுத்து பழிவாங்கும் நடவடிக்கை இருக்கிறது.இதில் ஆணுக்கும் ஆணுக்கும் இடையே நடைபெறுகின்ற விரோத யுத்தத்தில் விளையும் விளைவுகள் ஒரு சம்பவமாக நம்மை கடத்து சென்றுவிடுகிறது.இதே விரோதங்கள் பெண்மீது நடக்கும் போது அவை பாலியல் வன்கொடுமை என்ற ஒரு வட்டத்திற்குள் வைத்து விடுகின்றது. 
இதை வெறும் பாலியல் வன்கொடுமையாக மட்டுமே பார்க்காமல் அதற்க்கான காரணிகளை ஆராயவேண்டும். இதைபோல் நடைபெறும் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை தரும் அதே வேளையில் இந்தகைய கொடுமைகள் நடக்க  காரணமான ஆணிவேரை ஆராய்ந்து அழித்தால் மட்டுமே இதைப்போல் சம்பவங்கள் மேலும் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.