ஞாபகங்கள்
ஞாபகங்கள் இருக்கும் வரைதான் மனிதன் மனிதானாக இருக்கிறான்.இந்த ஞாபகங்கள் தான் மனிதனின் வாழ்கை சக்கரத்தை செலுத்துவதற்கு மிகவும் முக்கியமான கருவி.சில சமயங்களில் இவை நம்மை தாலாட்டுகின்றன,சில சமயங்களில் நம்மை களையிழக்க செய்கின்றன.பெரும்பலநேரங்களில் சிறுவயது நினைவுகளை சொல்லி அட்சரியபடுத்துகின்றன.நாம் மறக்க நினைப்பதையும் தன்னகத்தே கொண்டு நம்மை எரிசலூட்டுகின்றன.இந்த ஞாபகங்களை நாம் வேண்டாம் என்ற முடிவுக்கு வர முடியாது.இவை நம் வாழ்கையில் நடக்கின்ற அனைத்தையுமே பதிவு செய்து கொண்டே இருக்கும் இதிலிருந்து நாம் நினைப்பது போல் மாற்றி அமைக்க முடியாது.இந்த ஞாபக பகுதி மனிதனுக்கு மனிதன் வேறுபாடும்.ஞாபகத்திற்கு பெரும் எதிரி மறதி நம் மனம் மறக்க விரும்பும் நிகழ்வுகளை இவை நமக்கு திருப்ப திருப்ப நினைவூடும். இதை போன்ற உணர்வுகள் தான் நம் வாழ்வை செம்மை படுத்துவதற்கு உதவுகின்றன