வைகோவின் அரசியல் வியூகம் என்ன.........?

 வைகோ இன்றைக்கு இருக்கும் அரசியலில் கவனிக்க படாத ஒரு நபராக மாறிபோனார்.அல்லது மிகவும் பிந்தங்கியநிலலையில் நிலையில் இருக்கிறார்.நன்றாக அரசியல் நுணுக்கங்கள் தெரிந்தவர்,அரசியலை நன்கு அறிந்தவர் புரிந்தவர்,பல் மொழி புலம் தெரிந்தவர்.நல் அரசியலுக்குரிய  தகுதியும் இருக்கின்ற ஒரு சிறந்த அரசியல் தலைவர்.ஓயாது உழைக்க கூடிய ஒரு மனிதர் இன்று ஏன் அவருடைய கட்சிக்கு பின்தங்கிய ஒரு நிலைமை.அரசியலில் மாற்று சக்தி என்று உருவாக்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்.மிகப்பெரிய மாற்றுசத்தியாக விளகியிருக்க வேண்டிய அக் கட்சி. இன்று அரசியலில் கேட்பாரற்று இருப்பதற்கு எது காரணமாக இருக்க முடியும்.
பதவி எட்ட முடியாத   கட்டசியாக இருக்கலாம் ஆனால் யார் பதவி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று தீர்மானிக்கிற ஒரு சக்தியாகவாவது இருதிருக்க வேண்டாமா!
அரசியல் அரிசுவடி இல்லாதவர்கள் கூட, இன்றைய  சூழ்நிலையில் தங்கள்  கட்சியை தவிர்த்து அரசியல் வெற்றியை பெறுவது  கடினம் என்றநிலையை உருவாக்கி கட்சியை வளர்ச்சி பாதையில் நடத்து கின்ற போது.அரசியல் சாசனத்தின் அனைத்து மட்டத்தையும் தன்னகத்தே வைத்து அரசியல் செய்யும் வைகோவால் ஏன் இன்னமும் தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத இடத்தை பெறமுடியவில்லை.தமிழக மக்கள் இவரை அண்ணாந்து பார்த்து  மலைத்த நின்ற காலங்கள் போய்  ஒரு ஏக்கத்துடன் பார்க்கும் நிலை உருவாக காரணம் என்ன எந்த ஒரு மேடை களிலும் பேசக்கூடிய ,எந்த நாட்டு அரசியலையும் அலசகூடிய ஒரு அசாத்திய திறமை பல மணி நேரங்கள் மக்கள் மன்றத்திலே உரையாற்றி உரை கேட்பவர்களை தன்வயபடுத்தகூடிய வலிமை இவை அனைத்தும் இருந்தும்.தமிழக அரசியலில் பின் நோக்கி பயணப்படுகிறது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்பதை மறைக்க முடியாது.மக்கள் மன்றம் தீர்மானிக்கும் அரசியலில் தனி நபர்களை காரணமாக கூறுவது   தன்னை தானே ஏமாற்றுகின்ற வேலை.எதை தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ந்து தவிர்தால் ஒழிய மறுமலர்ச்சி என்பது கட்சியின் பெயரோடு நின்று விட கூடும்.வரும் காலங்களில்  ம. தி. மு. க. மீண்டும் மலருமா ,மக்கள் மனங்களில் வளருமா விதைத்ததை தான் அறுவடை செய்யமுடியும் காலத்தின் கைகளில் ம. தி. மு. க.