அழகிரியை கட்சியை விட்டு நீக்கியது பின்னடைவுதான்

அழகிரியை கட்சியை விட்டு நீக்கியது  திமுக விற்கு நிச்சயமாக பினடைவு ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வுதான்.  இது நாடகமாக இருந்தாலும் வரும் நாடுளுமன்ற தேர்தலில் திமுக விற்கு பின்னடைவை ஏற்படுத்த கூடிய நிகழ்வுதான் இது அமையும் . தேமுதிக, திமுக கூட்டணியில் வந்தாலும், விஜயகாந்தை மாற்றுசக்தியாக பார்த்து வாக்களித்த மக்கள் இந்த முறை கூட்டணி மாறிவிட்டதை கருத்தில் கொண்டு தான் வாக்களிப்பார்கள் அவருக்க முன் கிடைத்த வாக்கு சதவிகிதம் குறைவதற்கான வாய்புகள் தான் அதிகமாக இருக்கிறது. அழகிரி கூற்றுப்படி தேமுதிக கூட்டணி என்பது எல்லா வகையிலும் திமுகாவிற்கு பாதிப்பைதான் ஏற்படுத்தும். வேலியில் பேகிற ஓணானை இழுத்தகதையாகத்தான் அமையுமே தவிர மிக பெரிய பலனை தராது.தேமுதிக தனித்து நிற்கும் பட்சத்தில் தான் திமுக விற்கு நன்மையே தவிர அதனுடன் கூட்டணி சேர்வதில் பயன் ஏதும் இல்லை. தேமுதிக தனிமையில் இருக்கிறது எனவே அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதுதான் சிறந்த வழி.காங்கிரஸ் சொல்லுவதைத்தான் தேமுதிக கேட்டு செயல்படும். தனியாக எதையுமே செய்வதில்லை அப்படியான ஒரு வழி முறையைத்தான் தேமுதிக தலைமை எடுத்துவருகிறது எனவே தேமுதிகாவுடனான கூட்டணிக்கு  அதிகமான ஆசையுடன் செல்வது என்பது ஆபத்துதான் என்பதை திமுக புரிந்து கொள்ள வேண்டும். யானைக்கும் அடிசறுக்கும் என்பதை திமுக தன்னுடைய கூட்டணி அமைப்பதன்  மூலம் ஏற்கனவே  நிருபித்திருக்கிறது எனவே தேமுதிக உடனான கூட்டணி என்பது அத்தி பழம் போலத்தான்.