வைகோ பாரதிய ஜனதா கட்சி பெரியார்

 வைகோ பாரதிய ஜனதா கட்சியுடனான பேச்சிவார்த்தையை  தொடக்கி விட்டார் ஆனால் அவர் அடிக்கடி அரசியல்  ஆசான்  என்று சொல்லும்  பெரியாரை இழிவாக பேசுகின்ற ஒரு கட்சியுடன் கூட்டணி என்று தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.பெரியாரை பல்வேறுவிதமாக உடகங்களில் வசைபாடுகிற ஒரு கூட்டத்துடன் கைகோர்ப்பது என்பது அவருடைய விருப்பமாக இருக்காலாம்  வேறு யாரும் இவரை கூட்டணிக்கு அழைப்பதாக இல்லை,  என்ன காரணம் என்று நமக்கு தெரியவில்லை.மற்றவர்களை பார்த்து  பெரியாரின் வழி நடப்பவர்கள் இதை செய்யலாமா, அதை  செய்யலாமா, அது  தவறல்லவா   என்று அறிவுரை சொல்லும்  இவர் பெரியாரை நேரிடையாக வசைபாடுகிற கூட்டத்துடன் கைகோர்ப்பது என்பது இவர் வெளியே பெரியாரின் தொண்டராகவும் உள்ளே மோடியின்  விசிவாசியுமாக இருக்கத்தான் விரும்புகிறார் தன்னுடைய அரசியல் ஆசானை  தரம்  தாழ்த்தி  பேசும்போது  குறைந்தபட்சம்  தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டாமா? அவர் யாருடன் வேண்டுமானாலும் கைகோர்த்து அரசியல் செய்யட்டும் ஆனால் தமிழகத்தில் இன்றைக்கு இருக்கிற சமத்துவ சமுதாயத்திற்கு அடிகோலியவர்களில்  பெரியாரும் ஒரு காரணமல்லவா,இந்த சமுதாய மாற்றத்திற்கு காரணமான அவரை ஒருவர் அவதுறாக பேசும் போது குறைதபட்சம் கண்டனத்தை பதிவு செய்யாமல் கண்டும் காணமல் போவதுதான் பெரியாரின் வழித்தோன்றல் செய்யும் செயலா? அவருக்கு இந்த சமுதாயம் பெரும் நன்றிகடன் பட்டிருக்கிறது.அதிலும் அவர் பெயரை வைத்து அரசியல் செய்யும் இவர் முதல் நபராக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தால் இவருடைய பெரியாரின் பற்று அரசியலுக்கு மட்டுமல்ல ஆத்மாத்தமானதுதான்  என்பதை உணரலாம்.