மேதாவி பிட்சைகாரர்கள்

பிட்சை எடுப்பது தவறா ? இந்த கேள்வி என்னையே நான் பலமுறை கேட்டுகொண்டிருக்கிறேன்,இதன் நீட்சியாக சென்ற வாரம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி பயணமாகி கொண்டிருந்தேன் அப்போது பிட்சை கேட்டு ஒரு முதியவர் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்தார் என் எதிரில் அமர்ந்தவர் ஒரு ரூபாய் நாணயத்தை முதியவரின் கைகளில் கொடுத்தார்.இதை பார்த்த அவர் அருகில் இருந்தவர்,அவரின் நண்பர் என்று நினைக்கின்றேன் அவரை வாங்கு ,வாங்கு என்று திட்டி தீர்த்து விட்டார் எதிரில் இருந்தவரை பார்க்க பாவமாக இருந்தது, ஏன் பிட்சை கொடுப்பது என்ன உலகமாகாதவறா! நம்மில் யார் தான் பிட்சை எடுக்கவில்லை கடனில் வாங்கிய பொருள்களுக்கு தவணை தியதி அன்று பணம் கட்டமுடியவில்லை என்றால் நான்கு நாட்களுக்குள் செலுத்திவிடுகிறேன் என்று காலத்தையே யாசகமாக கேட்கவில்லையா அந்த நான்கு நாட்களும் பிட்சைதானே! தகுதியை மீறி பதவி உயர்விற்காக மேலதிகாரியிடம் பரிந்துரைக்க சொல்லுவதும் பரிந்துரையை பெற்றுக்கொள்வதும் பிட்சைதானே ? யாசகமாக பணம் கேட்டால் ஆயிரம் விளக்கங்களும் வியக்கியானங்களும் ஆனால் அதிகாரத்துடன் கேட்பவர்களுக்கு எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல் கொடுத்து விடுவார்கள் பிட்சை எடுப்பதை விருப்பி யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தான் சம்பாதித்த காலத்தில் நம்பி கெட்டவர்கள் நயவஞ்சக கூடத்தில் வாழ்கையை தொலைத்தவர்கள் இன்று தெருவில் தன்னால் உழைப்பதற்கும் உடம்பில் தெம்பும் இல்லை ஆனால் வயிறு இருக்கிறதே என்ன செய்ய முடியும் யாசகம் தான் ஒரே வழி முடித்தால் உதவி இல்லைஎன்றால் விலகி நிற்பதேமேல்! தங்களின் மேதாவிதனமான வார்த்தைகளால் புன்னகிபோன மனதை ரணமாக்காதீர்கள் தெருவுக்கு வந்தவர்களுக்குள்ளும் மனமிருக்கும் புரிந்து கொள்ளுங்கள்