பெண்கள் வேலைக்கு செல்ல தேவை இல்லை


பெண்கள் வேலைக்கு  தகுந்த காரணம் இல்லாமல் செல்வது என்பது  தேவை இல்லாத ஒன்று. அனைவரும் கூறுவது போல் இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில்  ஆண்  பெண்  இருவரும்
வேலைக்குசென்றால் தான் ஓரளவிற்கு நல்ல வாழ்க்கை வாழமுடியும் என்ற வாதம் முற்றிலும் தவறானது. இன்றைய சூழ்நிலையில் நல்ல ஒழுக்க உள்ள குழந்தைகள்தான் நம் நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவை. அதை நாம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும் அதற்காக நம் நாட்டில் அன்பிற்கு எடுத்துக்காட்டாக கூறகூடிய பெண்கள்தான் ஆரம்பித்து வைக்க வேண்டும்.இதற்க்கு ஒருவீட்டில் ஆண் வேலைக்கு செல்லும்பட்சத்தில் பெண்கள் வீட்டில் இருத்து குழந்தைகளை நல்ல ஆரோகியமாகவும்,கட்டுபட்டுடனும் ஒழுக்கமுடனும் வளர்க்கவேண்டிய முழுபொறுப்பு  அவர்களுக்கு இருக்கிறது எனவே பணம் என்னும் ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நமக்கும் நமுடைய நாட்டிற்கும் நல்லபிள்ளைகளை தரவேண்டியது ஒவ்வரு பெண்களுடைய கடமை.ஏன் இந்த கடமையை ஆண்கள் செய்ய கூடாத என்று சிலர் கேட்கிறார்கள். ஒரு குடும்பத்தில், ஒருவர் குடும்பத்தையும்,குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும் மற்றவர் வேலைக்கு சென்று பொருள் ஈட்டுவதில் கவனம் செலுத்தவேண்டும். குடும்பத்தையும் குழந்தையையும் கவனிக்கும் அந்த ஒருவர் பெண்களாக இருந்தால் நன்று.அது எல்லாவிதமான நன்மையையும் விளைவிக்கும். கணவன் மனைவி இருவரில்  ஒருவர் மட்டுமே வேலைக்கு செல்வது வேலை இல்ல திண்டடத்தை ஓரளவிற்கு பூர்த்திசெய்யும் நல்ல ஆரோகியமான ஒழுக்கமான நாடு ஒருவாவதர்க்கும் வழிவகை செய்யும்.அவசியம் இருந்தால் ஒழிய பெண்கள் குடும்பத்தை பார்ப்பது நன்று