துரோகம்...............................?



துரோகம் எங்கு  பார்த்தாலும் துரோகம்.உண்மையான நட்பில்,கணவன் மனைவி உறவில் கூட இந்த துரோகங்கள் புகுந்து விட்டது என்பது வேதனையான ஒன்றாக இருக்கிறது.ஒரே அலுவலகத்திகுள் வேலைபார்கின்றவர்களுக்கு மத்தியிலும் இந்த துரோகங்கள் வேலையை காட்ட ஆரமித்து விட்டது.தங்களது பதவி உயர்வுக்கு உதவுவதற்காக இந்த துரோகங்களை கையில் எடுத்து கொள்கிறார்கள். துரோகங்கள் எத்தனையோ விதவிதமான வேடங்களில் இருந்தாலும் அனைத்து துரோகங்களின் விளைவுகள் வெளிப்படையாக இருப்பதில்லை. தாளமுடியாத வேதனையைத்தான் இதன் முடிவு  இருக்கிறது.இந்த துரோகங்கள் வளர காரணம் என்ன? மனித மனங்களுக்கு இடையேயான சுயநலம் அதிகமாக இருப்பதால்தான்,சகோதர சகோதரி, மத்தியில் கூட உறவை மதிக்காமல் துரோகங்கள் நிகழ்கிறது. அரசியல் துரோகங்கள் மனிதனின் ஆளுமையை கேள்விக்குரியாக்குகிறது.அதன் விளைவுகள் விபரீதமாக முடிவதால் தனிமனிதனுக்கு மட்டுமில்லாமல்  எதில் காலத்தையும் பரந்து விரிந்து பாதிக்கிறது.அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய துரோகங்கள், ஆளைவிழுங்கும் துரோகங்கள்,அநாதையாக்கும் துரோகங்கள்,நிர்மூலம்மாக்கும் துரோகங்கள்,அத்தனை துரோகமும் நம்பிக்கை என்ற ஒற்றை விதியை மீறுவதால் தான் நிகழ்கிறது. நீட்டி முழக்கி இன்னமும் எந்தனையோ துரோகங்கள் வீதியில் அலைந்து கொண்டுதான் இருக்கிறது வேதியல் மாற்றத்தை வாழ்க்கையில் ஏற்படுத்த! இதை செய்வதிலே முதலில் நிப்பது இளைஞர்கள் கூட்டம் .இதை உணராமல் இன்றைய இளைஞர்கள் இவைகளுக்கு துணை நிற்பதுதான் மிகவும் வேதனையான நிகழ்வு. இந்த செயல்களுக்கு பணம்தான் முக்கியகாரணம் என்று சொன்னாலும் அதனை முழுமையாக ஏற்கமுடியாது. இளைஞர்கள் மத்தியில் உள்ள தைரியமின்மையும்,ஒழுக்கமின்மையும்மே  ஆதிமூலமாக இருக்கிறது.அதை களைந்தால் ஒழிய,இத்துரோகங்களை வேரோடுசாய்க்க முடியாது.துரோகங்கள் வேறுவேறு வேடங்களில் வழ்துகொண்டுதான் இருக்கும். வாழ்வை காவு வாங்கிகொண்டுதான் இருக்கும்