நல்லவன் வாழ்வது .......+

இன்றைய காலத்தில் எல்லேரும் எதையாவது  ஒன்றை எதிர்பார்த்துதான் பிறருடன் பழகுகிறார்கள்.எதிர்பார்ப்பு இல்லாத பழக்கவழக்கம் என்பது யாரும் எவருடனும் பழகுவது இல்லை.ஒரு மனிதன்  பணியில் இருக்கும்போது நட்பு புடனும் ,மதிப்பு கொடுத்து பழகும் இந்த உலகம்.அவனுடைய பனி நிறைவிற்கு பின்னோ அல்லது அவன் அந்த பணியில் இல்லாத போதோ அவனிடம் அந்த அளவிற்கு நெருக்கம்  காட்டுவது இல்லை என்பதே அதற்க்கு சிறந்த உதாரணம் .அவனிடம் பழகிய அனைவரும்.அந்த பதவியில் புதியதாக பணிக்கு வந்தவரிடம் தன்னுடைய நெருக்கத்தை காட்ட தொடக்கி விடுகிறார்கள்.அதை சார்த்து பார்தோமேயனால்.அவர்கள் காட்டக்கூடிய நட்பும் அந்த பணிவும் அந்த பதவிக்குத்தான். அந்த பணியில் இருப்பவன், அவன் நல்லவனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும்,ஒரேமாதிரியான நட்பு பாராட்ட தெரிந்தவர்கள்தான் இன்றைய உலகில் வாழ்வியல் கற்றவர்கள் என்ற கட்டத்திற்குள் இருக்கிறார்கள். அவன் நமக்கு தேவை என்றபோது நெருக்கம் காட்டுவதும் வேண்டாம் என்றபோது விலகிநின்று வேடிக்கை பார்ப்பதும். நலவனாக இருக்கிறவனுக்கும்,நல்லவான்  அல்லாதவானுக்கும் ஒரு சேர நடக்கிறது என்றால் நல்லவன் மன அமைதியுடன் வாழ்வதற்கான சூழல்  குறைகின்றன.அவன் நல்லவனாகவே தன் வாழ்கையை தொடர்வதற்கான வாய்ப்புகளும் குறைகின்றன. நல்லவன் வாழ்வதற்கு காலமில்லையா அல்லது நல்லவனாக வாழ்வது தேவை இல்லையா ..!