இந்தியாவை பொறுத்தளவில் சான்றிதழ் இருதால் போதுமானது திறமையோ அந்ததுறை சார்த்த நுண் அறிவோ தேவையே இல்லை.இதன் காரணமாகத்தான் திறமையானவர்கள் , துறை அறிவே இல்லாதவர்கள் எல்லோரும் துறை அலுவலர்களாகவும் நல்ல திறமையும் அனுபவமும் உள்ளவர்கள் ,இனமும் அவர்களுக்கு உதவியாளர்களாக இருக்கிறார்கள். எதாவது ஒரு கலூரியில் மூன்றுவருடங்கள் காலத்தை கழித்துவிட்டு சான்றிதள்கள் பெற்றுவிட்டாலே போதுமானதாக இருக்கின்றது, அதைவைத்துக்கொண்டு அனுபவம் உயள்ளவர்களுக்கே மேலதிகாரிகளாக வந்துவிடுகிறார்கள். வெறும் காகித்தாலான சான்றிதள்களைமட்டும் வைத்து பணியமர்த்துவது என்பது சரியாக இருக்காது .இதன் காரணமாகத்தான் இன்று போலியான சான்றிதழ்கள் நாட்டில் உலவுகின்றன. கூடுதலாக படித்தவன்தான் கண்டுபிடிப்புகள் எதையும் செய்திருக்க முடியும் என்னும் தவறான எண்ணமும் இன்றும் நம்மிடம் நிலவுகிறது."யாரை எங்கே வைப்பது என்று வாருக்கும் தெரியலே" என்ற வரிக்கு பொருத்தமாகத்தான் இன்று நாட்டில் நடப்பவை நமக்கு உணர்த்துகிறது.மூன்று வருட பட்ட படிப்பு படித்திருந்தால் போதும் என்ற நினைப்பு நம்பிடையே பரவலாக காணப்படுகிறது அப்படி படித்தவர்கள் தான் அறிவுடையவர்களாக இருப்பார்கள் என்ற பார்வை "வடிவேலு கூறியபடி சிகப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்" என்பதைப்போலத்தான் இருக்கிறது. நல் அறியும் நல் திறமையும் நாட்டின் இருகண்கள்.அதை பாதுகாப்பது அவசியம் அவசரம்
மகாராஷ்டிராவில், இடுப்புக்கு கீழே செயல்படாத, 58 வயது அரசு பெண் அதிகாரி, 32 ஆண்டுகளாக, ஒரு நிமிடம் கூட, அலுவலகத்திற்கு, தாமதமாக வந்ததில்லை; இம்மாதம் அவர் ஓய்வுபெறப் போகிறார்..