உணர்ச்சிகள் ................{உணர்வுகள் }



காமம் என்பது மனித உணர்ச்சிகளிலேயே மிக முக்கியமான அவசியமான ஒன்று.காமம் என்பது மிக மதிகதக்கதும்  புனிதமானதுமாக கருதுவது தமிழ் கலாசாரமாக இருந்துவருகிறது ,ஒரு ஆணும் பெண்ணும் சங்கமிக்கின்ற இந்த உணர்வு இன்று மிகவும் கேலிகூத்தாக பார்கபடுவது வேதைனையான விஷயம்.தன துணையுடன் பகிர்த்த காம உணர்ச்சியை பிறரிடம் பகிர்த்து கொள்ளுவது வேதனையிலும் வேதனையானது நாகரிக போர்வையை போர்த்திக்கொண்டு இந்த வேலையை செய்வது என்பது  அருவரும்பும் நிறைத்த ஒரு உலகத்திற்கு நம்மை இட்டு செல்லும். ஒரு நல்ல கணவன் மனைவி தங்களுடைய படுக்கை அறையில் இந்த உணர்ச்சியை பரிமாறிக்கொள்ளும் போது  விளக்குகள் எரிவதில்லை,வெளிச்சம் அங்கே  தேவை இல்லை என்று நினைத்தார்கள் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் அந்தரங்கத்திற்கு மதிப்பளித்தார்கள்.வாழ்வில் சிறப்பு சேர்த்தார்கள்.ஆனால் அதே காமம் இன்று படும் பாட்டை நினைத்தால் வாழ்வியல் தந்துவங்கள் தோற்றுவிட்டனவா என்று என்ன தோன்றுகிறது. இன்றைக்கு இருக்கின்ற இளைஞர்கள்,நடுத்தர வயதுடையவர்கள்,நடுதரவயதை கடந்தவர்கள் என்று அனைவரிடமும் காம உணர்ச்சி ஒன்றும்  போற்றபடகூடிய புனிதமானது அல்ல என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.பெரும் பாலான சினிமாவில் நகைசுவை காட்சிகளுக்கு கூட இந்த காம உணர்ச்சியை பயன்படுத்துவது என்பது ஆரோகியமான ஒரு இளையதலைமுறையை உருவாக்குவதற்கு வழி வகை செய்யாது.காம உணர்ச்சி என்பது அனைவரிடத்திலும் பகிர்த்து கொள்ள கூடிய கடை பொருள் அல்ல.எந்த உணர்ச்சிக்கு அடிமையானாலும் உன்னை ஆளும் காம உணர்ச்சிக்கு அடிமையானால் உன்னை வீழ்த்தும்.தகுந்த மரியாதை கொடுத்தால் தன்மானத்தை காக்கும் .தலை நிமிர செய்யும். உணர்வுகள்