அம்மாவின் சூளுரை சுலபமாக.........!

நாடளுமன்ற தொகுதி நாற்பதையும்  நாம்  வெல்லுவோம் என்று அண்ணா  திராவிட முனேற்ற கழகத்தினுடைய பொதுசெயலாளர் அம்மா அவர்கள் சூளுரைத்திருக்கிறார்கள்.தேர்தல் கூட்டணியில் தே .மு.தி.க. வை அம்மா தக்கவைத்து கொள்வது ஒன்றுதான் அவரின் இந்த சூளுரைக்கு வலு சேர்க்கும்.அவர் நினைத்ததை நிச்சயமாக முடிபதற்கு வழி செய்யும்.யார் விலகினாலும் விவாதித்தலும் தே .மு.தி.க. கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் என்ற தனிமனிதனுக்கு குறுப்பிட்ட சதவிகித வாக்குகள் இருக்கின்றன.மக்களவை தேர்தலில் இந்த மனிதனின் பங்கு நிச்சயமாக வெற்றி பாதையை திசை திருப்ப சிறிய உந்து  சக்தியாக இருக்கும் இதை மறக்காமல் மனதில் வைத்து அம்மா இவரை அரவணைத்தால் வெற்றி சதவிகிதம் சற்று கூடும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின்  கனவு நனவாகும் இல்லை எனில் வெற்றி கோட்டை கடக்க  கடுமையாக உழைக்க வேண்டி வரும், சந்தர்ப்ப மாற்றத்தால் இழக்கவும் நேரிடலாம்.மலை ஏறகூடிய ரயில் வண்டிக்கு பின் பக்கமும் என்ஜின் தேவை என்பதை போல் அ .தி.மு.க விற்கு பின் பக்கம் தள்ளும்என்ஜினாக தே .மு.தி.க. தேவை. எத்தனை தேசிய தலைவர்கள் வந்து போனாலும் தமிழக வாக்காளர்களின் மனதில் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியாது.வெற்றி பெற்ற பின் தேவை படும் தலைவர்களை விட வெற்றி பெறுவதற்கு  தேவைப்படும் தலைவர்கள்தான் முக்கியம் இதை உணர்ந்தால் கனவு நனவாகும் இல்லை எனில் கனவே வழக்கமாகும். 

»

இம்போதைய தேவை நம் நாடா? வெளிநாடா ..?

இன்று நம் பயன் பாட்டிற்காக வாங்கும் பொருள்களில் அதிகம் நம்நாட்டு தயாரிப்புகள் இல்லை.சுதேசியை விருப்புபவர்கள் இன்று நாட்டில் அதிகம் இல்லை. நமது நாட்டு தயாரிப்புகளை வாங்குபவர்களை ஏளனமாக பார்க்கவும்  , பன்னாட்டு நிறுவனத்தினுடைய தயாரிப்புகளை வாங்குபவர்களை மரியாதையுடனும் பார்க்க கூடிய  சமூகத்தை தான் நாம் பெற்றிருக்கிறோம்.தினமும் உபயோகிக்கும் பொருள்கள் முதல் ஆடம்பர,அலங்கார பொருள்கள் வரை பன்னாட்டு மோகத்தில்தான்  நாம் இருக்கிறோம்.ஏன்  இப்படி என்று காரணம் கேட்டால் அவை தரமானது என்றும் சமூக அந்தஸ்து என்ற பதில் கிடைகிறத.இவர்கள்  வாங்கும் பன்னாட்டு நிறுவன சாதனங்களில் பல அந்த நிறுவனத்தினுடைய தயாரிப்புகளே அல்ல அந்த  நிறுவனங்களின் பெயர்களை தாங்கி நிற்கும்   போலிகள்தான். நாம் உள்ளநாட்டு பொருள்கள் பல தரமானதாக இருக்கின்றது அத்தகைய தயாரிப்பும்  இந்த பன்னாட்டு மோகத்தால் மறைந்து போகிறது.இந்திய தயாரிப்பு என்றால் அது தரம் குறைவாக தான் இருக்கும் என்று ஒரு நினைப்பு மக்கள் மனதில் இருக்கும் வரைக்கும் பொருளாதாரத்தின் நிலைப்புத்தன்மை கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.
குளிக்க உபயோகபடுத்தும் சோப்பு,பல் துலக்க உபயோகிக்கும் பற்பசை போன்ற தின உபயோக பொருல்களையாவது  நமது தயாரிப்பை பயன் படுத்த கூடாதா,இதில் சில முரன்பாடுகள் இருக்கிறது சிலருக்கு நமது நாட்டின் தயாரிப்பு பொருள்கள் எது என்பதே தெரிவதில்லை அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பன்னாட்டு பொருள்களை உபயோகிக்கிறார்கள்.இந்திய தயாரிப்பு நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் போது  இது ஒரு இந்தியதயரிப்பு என்று விளம்பர படுத்தவேண்டும். நமது நாட்டின் ஜனத்தொகையில் 80 சதவிகிதம் பேர் தினம் உபயோகிக்கும் பொருள்களை வாங்கும் போது  இந்தியதயரிப்புக்கு  மாறினாலே நம்முடைய இந்தியாவின் பொருளாதாரத்தை திரத்தன்மை ஆக்கிவிடலாம் இந்திய தயாரிப்புகள் எவை எவை என்ற ஒரு பட்டியலை இந்த உடகங்கள்  வெளியிட வேண்டும்  அப்படி பட்டியல் கிடைக்கும் பட்சத்தில் மக்கள் தயாராக இருக்கிறார்கள் மாற்றத்திற்கு உடகங்கள் வெளியிட தயாரா ? 

»

சாதனையாளர்கள்.......!

சாதனையாளர்கள் பெரும்பாலும் ஏட்டுப்படிப்பில் பெரும் ஆர்வம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.ஏட்டுபடிப்பை கவனத்துடன் முடித்தவர்கள் உயர்த்த நிலையில் இருக்கிறார்கள்  ஆனால்  சாதனையாளர்களாக இருக்கிறார்களா என்றால்  பெரும்பாலும் இல்லை.இந்த சாதனையாளர்களுக்கு உள்ள மனஉறுதியை யார் கொடுக்கிறார்கள் அவர்கள் எவ்வாறு பெறுகிறார்கள்.சாதனை படைக்க வேண்டும் என்று உலகில் உள்ள அனைத்து இளைஞர்களுமே நினைகிறார்கள் அனால் அதை வெற்றிகரமாக முடிப்பவர்கள் மிக சிலரே.இந்த உலகம் புதுமையை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளுவதில்லை அதுவும் படிப்பறிவு குறைதவர்களின் வார்த்தைகளை மதிப்பதே இல்லை. அதையும் மீறிதான் இந்த சாதனையாளர்கள் வெற்றிபெறுகிறார்கள்.இளஞர்களாக இருக்கும் போது நமக்கிருக்கும் ஆர்வம் வயது ஏற ஏற கொஞ்சகொஞ்சமாக குறைத்து வாழ்தால் போதும் என்று நிலைக்கு தள்ள படுகிறார்கள்.அதையும் மீறி இந்த புதிய கண்டுபிடிப்புகளையும் அறிய பெரிய சாதனைகளையும் நிகழ்த்துபவர்கள் பெரும்பாலும் ஏட்டுபடிப்பை சரிவர படிக்காதவர்களாகவோ அல்லது மெத்த படிக்காதவர்களகவோதான் இருக்கிறார்கள்.எத்தனையோ சாதனையாளர்கள் இந்த உலகத்தினரால் இணம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு மறைந்து   மண்ணோடு மண்ணாகி இருக்கிறார்கள்.நம்மிடையே உள்ள சாதனை படைக்கும் மனிதர்களை கண்டு கொள்ளுவோம்,அவர்களை உகுவிப்போம்,அனைவரும் சாதனையாளர் ஆவதற்கு முயற்சிசெய்வோம்.

»

தாமரை மலருமா பதவியில் அமருமா ....!

எதிர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஒரு கூட்டணி ஆட்சிதான் மத்தியிலே ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்கிறார்கள்.அதை வைத்து பார்த்தோமேயானால் மத்தியில் இருபெரிய தேசியக்கட்சிகள் ஒன்று பாரதிய ஜனதா பார்ட்டி மற்றொன்று  ஆளும் காங்கிரஸ் கட்சி இந்த இரு காட்சிகளில் ஒன்றின் தலைமையில்தான் ஆட்சி உருவாக  முடியும் மூன்றாவது அணி என்றொரு கோஷம் வந்தாலும் அந்த அணி உருவாவதற்கான சாத்திய கூறுகள் சதவிகித அடிபடியில் புறந்தள்ள கூடிய நிலையில் தான் இருக்கிறது.பி,ஜே.பி கட்சியை பொருத்தமட்டில் அவர்கள் கூட்டணி அமைப்பதிலேயே எந்த ஒரு குழப்பமும் இருக்காது ஆனால் பலமான கூட்டணி அமைப்பதில் மிகப்பெரிய குழப்பத்தை சந்திக்க கூடிய நிலைதான்  அதிகமாக தெரிகிறது.அப்படி பலமான கூட்டணியை அமைத்தால் ஒழிய அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவது என்பது கடினமான ஓர் நிகழ்வுதான்.மக்கள் பி.ஜே.பி.என்ற கட்சியின் மீது வைத்த நம்பிக்கையை விட வாஜ்பாய் என்ற தனிமனிதன் மீது வைத்த நம்பிக்கைதான் அதிகம் எனவேதான் அன்று ஆட்சி பீடத்தை கைப்பற்றியது ,அதைபோல் மக்கள் நம்பிக்கையை செல்வாக்கை  பெற்ற தேசிய தலைவர்கள் இன்று பி.ஜே.பி.ல் இல்லை இது நிச்சயமாக அந்த கட்சிக்கு மிக  பெரிய பின்னடைவு ஏற்படுத்த கூடிய ஒரு காரணி என்பதை பி.ஜே.பி மனதில் கொள்ளவேண்ட்ம் .பலரையும் அரவணைத்து கட்டுகோப்பாக செயல்பாட்டை செயல்படுத்துகின்ற ஒரு தலைமை இன்று பி.ஜே.பி.ல் இல்லை.அப்படி ஒரு தலைமை உருவானால் தான் இவர்கள் அட்சி அமைக்கும் கனவை நிறைவேற்ற  முடியும்.  
தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன் என்ற நிலையை தொடருமேயானால் எதிரியின் பலவீனம் போட்டியாளர்களின் பலமாக மாறிவிடும். அப்படி பலம் மாறுவதற்கான வாய்ப்புகளே தொலைவில் தெரிகிறது.அதை மாற்றவேண்டிய பெரும் பொறுப்பு பி.ஜே.பி.க்கு இருக்கிறது.
தாமரை மலருமா பதவியில் அமருமா

»

வைகோவின் அரசியல் வியூகம் என்ன.........?

 வைகோ இன்றைக்கு இருக்கும் அரசியலில் கவனிக்க படாத ஒரு நபராக மாறிபோனார்.அல்லது மிகவும் பிந்தங்கியநிலலையில் நிலையில் இருக்கிறார்.நன்றாக அரசியல் நுணுக்கங்கள் தெரிந்தவர்,அரசியலை நன்கு அறிந்தவர் புரிந்தவர்,பல் மொழி புலம் தெரிந்தவர்.நல் அரசியலுக்குரிய  தகுதியும் இருக்கின்ற ஒரு சிறந்த அரசியல் தலைவர்.ஓயாது உழைக்க கூடிய ஒரு மனிதர் இன்று ஏன் அவருடைய கட்சிக்கு பின்தங்கிய ஒரு நிலைமை.அரசியலில் மாற்று சக்தி என்று உருவாக்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்.மிகப்பெரிய மாற்றுசத்தியாக விளகியிருக்க வேண்டிய அக் கட்சி. இன்று அரசியலில் கேட்பாரற்று இருப்பதற்கு எது காரணமாக இருக்க முடியும்.
பதவி எட்ட முடியாத   கட்டசியாக இருக்கலாம் ஆனால் யார் பதவி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று தீர்மானிக்கிற ஒரு சக்தியாகவாவது இருதிருக்க வேண்டாமா!
அரசியல் அரிசுவடி இல்லாதவர்கள் கூட, இன்றைய  சூழ்நிலையில் தங்கள்  கட்சியை தவிர்த்து அரசியல் வெற்றியை பெறுவது  கடினம் என்றநிலையை உருவாக்கி கட்சியை வளர்ச்சி பாதையில் நடத்து கின்ற போது.அரசியல் சாசனத்தின் அனைத்து மட்டத்தையும் தன்னகத்தே வைத்து அரசியல் செய்யும் வைகோவால் ஏன் இன்னமும் தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத இடத்தை பெறமுடியவில்லை.தமிழக மக்கள் இவரை அண்ணாந்து பார்த்து  மலைத்த நின்ற காலங்கள் போய்  ஒரு ஏக்கத்துடன் பார்க்கும் நிலை உருவாக காரணம் என்ன எந்த ஒரு மேடை களிலும் பேசக்கூடிய ,எந்த நாட்டு அரசியலையும் அலசகூடிய ஒரு அசாத்திய திறமை பல மணி நேரங்கள் மக்கள் மன்றத்திலே உரையாற்றி உரை கேட்பவர்களை தன்வயபடுத்தகூடிய வலிமை இவை அனைத்தும் இருந்தும்.தமிழக அரசியலில் பின் நோக்கி பயணப்படுகிறது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்பதை மறைக்க முடியாது.மக்கள் மன்றம் தீர்மானிக்கும் அரசியலில் தனி நபர்களை காரணமாக கூறுவது   தன்னை தானே ஏமாற்றுகின்ற வேலை.எதை தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ந்து தவிர்தால் ஒழிய மறுமலர்ச்சி என்பது கட்சியின் பெயரோடு நின்று விட கூடும்.வரும் காலங்களில்  ம. தி. மு. க. மீண்டும் மலருமா ,மக்கள் மனங்களில் வளருமா விதைத்ததை தான் அறுவடை செய்யமுடியும் காலத்தின் கைகளில் ம. தி. மு. க.

»

அரசியலுக்கு தயாராகிறார நடிகர் விஜய் ?!

இப்படி நடக்கவும் இடம் முண்டு . நடிகர் விஜய் தனக்கு தலைவா திரைப்படத்தை வெளியிடுவதில் ஏற்ப்பட்ட தலைவலி திருகு வழியை சாதாரணமாக எடுத்து கொண்டாலும் அவரை சுற்றி உள்ளவர்கள் அதை சாதரணமாக எடுத்துகொளுவதர்க்கு தயாராக இல்லை. தம்பி விஜயை தீவிர அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.விஜயை எம்.ஜி.ஆர் ராக மாற்றநினைக்கும், அண்ணாவும் இதற்க்கான முயற்சியில் இருக்கிறார்.அதற்காக தேசிய கட்சியில் பணியாற்றிய பழம் பெரும்  அரசியல் வாதியிடமும்   ஒரு மூத்த இந்திய ஆட்சி பணியாளரிடமும் ஆலோசனை நடத்திவருகிறார்கள்.வருகின்ற தேர்தலில் விஜயின் பங்கு நடிகராக இருக்குமா அல்லது அரசியல் வாதியாக இருக்குமா என்பது இன்னும் குறைந்த கால இடைவெளியில் தெரிந்துவிடும்.அதற்க்கான அறிவிப்பு சூசகமாக வெளிவரும் ஆனால் விஜய் அரசியலுக்கு வருவது நிச்சயம். வெற்றியா தோல்வியா என்பது காலத்தின் கையில்.

»

மோடி மஸ்தான்

மோடி மஸ்தான்  என்றால் தெருவில் ஒரு கூட்டத்தை  கூட்டி வைத்து கொண்டு  அந்த கூட்டத்தின் நடு  நடுவே மோடி மஸ்தான் சார்ந்த நபர்கள் இருந்து கொண்டு அவரின் புகழ் பாடி கொண்டிருப்பார்கள் .   எல்லாவிதமான பிரச்சனைக்கும் தன்னிடம் தீர்வு இருக்கிறது என்று சொல்லி கொண்டு கூடி இருக்கின்ற கூட்டத்தை தன்வய படுத்தி தன்னை ஒரு சக்தி வாய்த்த நபராக காட்டி கொள்ளுபவன்.உண்மையில் அப்படிஒரு சக்தி அவனுக்கு கிடையாது.அது உண்மை அல்ல என்று தெரித்தவர்கள் கூட அந்த மோடி மஸ்தான் செய்யும் நபரை நெருக்குவதில்லை காரணம்.அவன் கூறும் அச்சமூட்டும் வார்த்தைகளினால் ஏற்படும் சிறு பயம்!.

அதை போலத்தான் இன்றைய அரசியலில் சில மோடி மஸ்தான்கள்  இருக்கிறார்கள்.தன்னால் மட்டுமே  இந்தியாவை வல்லரசாக  மாற்றமுடியும் என்று சொல்லுகிறார்கள்.ஏழைகள் இல்ல இந்தியாவை  படைக்கும் படைப்பாளியாக தன்னைகாட்டி கொள்ளுகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் சொல்லுவதை போல  "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது "என்பதை போலத்தான் இந்த நாயகர்களின் பிம்பங்கள். சுரைக்காய் என்று காகிதத்தில் எழுதுவது சுலபம், அதை சமத்து சாப்பிட முடியாது.என்பதை சுற்றி மக்கள் உணர்த்திருந்தாலும் அரசியல் மோடி மஸ்தான் களை பற்றி பேசுவதற்கு தயங்குகிறார்கள் காரணம், எப்படி தெருவில் இருக்கும் மோடி மஸ்தானின்  வார்த்தைகளுக்கு பயந்து செல்லுகிறார்களோ அதை போலத்தான் இவர்களை பற்றி பேசினால் நாம் ஒன்றும் தெரியாத ஆசாமியாகி விடுவோமோ என்ற வெட்கம் காரணமாக இந்த அரசியல் மோடி மஸ்தானின் மகுடிக்கு மயங்குகிறார்கள் பின் இவர்களே  அவர்களின் புகழ் பாட தொடக்குகிறார்கள்.

 அலுவலகத்தில் தன்னை முதன்மை படுத்துவதற்காக  எந்த  ஒரு வேலையையும் செய்யாமல் எல்லா  வேலையையும் தான் தான் முன்னின்று செய்தததாக,தன்னுடைய மேலதிகாரிகளுக்கு காட்டிகொள்வார்கள்.
அதை போலத்தான் இந்த அரசியல் மோடி மஸ்தான்கலும் எதற்க்கெடுத்தாலும் தன்னை முதன்மை படுத்தி கொளுவதர்க்காக. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கதைகளை தன்  புகழ் பாடிகளை வைத்து  பாட கொண்டிருப்பார்கள், இத்தகைய அரசியல் மோடி மஸ்தான்கள் மிகவும் கண்டிக்க தக்கவர்கள்,  கவனமுடன்  கவனிக்க தக்கவர்கள். 
 
  


»

வாங்க வடிவேலு வாங்க

 வாங்க  வடிவேலு வாங்க நாங்க தியேட்டர்ல வாய்விட்டு சிரிச்சி ரொம்ப நாளாச்சி.இன்றைய காமெடி நடிகர்கள் சிரிப்பை  சினிமா ரசிகர்களிடம் வரவழைக்க அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது .காமடி செய்கிறேன் பேர்வழி என்று அவர்களே சிரித்து கொள்ளுகிறார்கள்.எங்களையும் கொல்லுகிறார்கள்.உங்களை திரையில் பார்த்து வெகு நாட்களான நிலையில் எங்களுக்கு இவர்களின் காமெடிகள் பழகி வேறு வழி இல்லாமல் இவர்களையும் திரையில் பார்த்து தொலைக்கிரோம் அது அவர்களின் ரேட்டிங்கை கூட்டுகிறது ஊதியத்தை எகிரவைகிறது.ஏன் இந்த தமிழ் திரை உலகம்.உங்களை கைவிட்டது என்றே தெரியவில்லை இன்றைக்கும் தொலைகாட்சியில் உங்களின் காமெடியை பார்த்து பார்த்து சிரித்து கமெடி பஞ்சத்தை தீர்கிரூம்.காமெடியில்  யாரையும் ஞாபக படுத்தாத என் வழி தனி வழி என்று நீங்க ஒரு தனிரகம். சீக்கிரம் வந்து கமடிக்கிற பெயர்ல இவர்கள் செய்யும் கொடுமையை நிறுத்தத்துக்க வாங்க வடிவேலு வாங்க .........

»

பாலியல் கொடுமைக்கு என்ன காரணம் ...........;

பெண்களின் மீது பாலியல் கொடுமை நடப்பதற்கு வெறும் காமம் மட்டுமே காரணமா? இதுபோல் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் சட்டத்தில் உட்டபட்ச தண்டனை கிடைக்க வாய்பிருக்கிறது என்று தெரிந்ததும் வெறும் காம பசிக்காக பாலியல் வன்முறைகள் நடக்க வாய்ப்பிருக்கிறதா?

இன்றைக்கு  பெண்  என்ற வித்தியாசமில்லாமல் எல்லா துறைகளிலும் ஆண்களுடன்  போடிபோட்டுகொண்டு  பெண்கள் வளர்ச்சி அடைத்திருக்கிறார்கள், இதைபோல் சூழ்நிலை இருக்கின்ற இந்த உலகத்தில் வெறும் பாலுனற்சிக்காக இதைப்போன்ற வன்கொடுமைகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை! அதையும் தாண்டிதான் நாம் இதை சித்திக்கவேண்டி இருக்கிறது.
விரோதம் அதன் காரணமாக நடக்கும் பழிவாங்கும் நடவடிக்கை என்று எத்தைனையோ காரணிகளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டி இருக்கிறது

ஒரு ஆண்  ஆண்மேல் கொண்ட விரோதம் , பெண் பெண்மேல் கொண்ட விரோதம், ஒரு ஆண்,  பெண்மேல் கொண்ட விரோதம் , பெண் ஆண்மேல் கொண்ட விரோதம்.
இந்த விரோதங்கள் மனிதனின் மனதின்  தன்மையையும் அவர்களின் சமூக நிலையையும் ,பணபலத்தையும் பொறுத்து பழிவாங்கும் நடவடிக்கை இருக்கிறது.இதில் ஆணுக்கும் ஆணுக்கும் இடையே நடைபெறுகின்ற விரோத யுத்தத்தில் விளையும் விளைவுகள் ஒரு சம்பவமாக நம்மை கடத்து சென்றுவிடுகிறது.இதே விரோதங்கள் பெண்மீது நடக்கும் போது அவை பாலியல் வன்கொடுமை என்ற ஒரு வட்டத்திற்குள் வைத்து விடுகின்றது. 
இதை வெறும் பாலியல் வன்கொடுமையாக மட்டுமே பார்க்காமல் அதற்க்கான காரணிகளை ஆராயவேண்டும். இதைபோல் நடைபெறும் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை தரும் அதே வேளையில் இந்தகைய கொடுமைகள் நடக்க  காரணமான ஆணிவேரை ஆராய்ந்து அழித்தால் மட்டுமே இதைப்போல் சம்பவங்கள் மேலும் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.  

»

ஞாபகங்கள்

ஞாபகங்கள் இருக்கும் வரைதான் மனிதன் மனிதானாக இருக்கிறான்.இந்த ஞாபகங்கள் தான் மனிதனின் வாழ்கை சக்கரத்தை செலுத்துவதற்கு மிகவும் முக்கியமான கருவி.சில சமயங்களில் இவை நம்மை தாலாட்டுகின்றன,சில சமயங்களில் நம்மை களையிழக்க செய்கின்றன.பெரும்பலநேரங்களில் சிறுவயது நினைவுகளை சொல்லி அட்சரியபடுத்துகின்றன.நாம் மறக்க நினைப்பதையும் தன்னகத்தே கொண்டு நம்மை எரிசலூட்டுகின்றன.இந்த ஞாபகங்களை நாம் வேண்டாம் என்ற முடிவுக்கு வர முடியாது.இவை நம் வாழ்கையில் நடக்கின்ற அனைத்தையுமே பதிவு செய்து கொண்டே இருக்கும் இதிலிருந்து நாம் நினைப்பது போல் மாற்றி  அமைக்க முடியாது.இந்த ஞாபக பகுதி மனிதனுக்கு மனிதன் வேறுபாடும்.ஞாபகத்திற்கு பெரும் எதிரி மறதி நம் மனம் மறக்க விரும்பும் நிகழ்வுகளை இவை நமக்கு திருப்ப திருப்ப நினைவூடும். இதை போன்ற உணர்வுகள் தான் நம் வாழ்வை செம்மை படுத்துவதற்கு உதவுகின்றன 

»

கல்வி<<<<<<<<<>>>>>>>>>>>>>>

  
கல்வி என்பது அடிதட்டு  வரை பரவலாக்க பட்டிருக்கிறதா என்று நினைத்து பார்க்கும் போது, அடித்தட்டு வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு அது எட்டாத ஒரு  நிலையிலேயே இருக்கிறது. ஏன் நம்  யாரும் இதற்காக எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளுவதற்கு விரும்புவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சட்டத்தின்  மூலமாகவும் தன்னார்வம்  மூலமாகவும் முயற்சிகள் மேற்கொண்டாலும் அது சரியான நபர்களுக்கு போய்  சேர்வதில்லை என்பது உண்மை.ஒரு திரைப்படம் தொடக்க விழா, இசை வெளியீட்டு விழாவிற்கு,வெற்றிவிழ என்று எந்தனையோ விழாக்களை கொண்டாடும் இந்த திரை துறையினர்கள்  ஒரு விழாவிற்கு ஒரே ஒரு மாணவனுடைய கல்வி செலவையாவது ஏற்றுக்கொள்ளுவதற்கு முன் வரலாமே.ஒரு நாள் விழாக்களுக்காக லட்சகணக்கில் செலவு செய்கின்ற  இந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு.ஒரு மாணவனுக்கான கல்வி செலவுகளை ஏற்பது ஒன்றும் பெரிய காரியமல்ல.ஒரு திரைப்படம்  வெளிவரும் போது சில மாணவர்கள்,குறைந்த பட்டசமாக ஒரு மாணவனாவது கல்வி பெறுகிறான் என்ற நிலை வரவேண்டும்.அப்போது தான் இந்த மக்கள் திரைத்துறையினருக்கு செய்த உதவிக்கு ஒரு சிறிய கைமாறாக இருக்கும் வரும் தலை முறை முழுமையான கல்விபெற்ற தலை முறையாக மாறுவதற்கான ஒரு சூழல் உருவாவதற்கு இவர்களும் ஒரு துணையாக இருந்தார்கள் என்ற ஒரு நல்ல பெயராவது கிடைக்கும்.திரை துறையினர்தான் இதை செய்யவேண்டும் என்பது இல்லை.தேவை இல்லாத அடம்பர விழாக்கள் கொண்டாடும் அனைவருமே இதை மனதில் வைத்து கொண்டு செயல் படுவது நன்று.ஒரு விழா நடைபெறுகிறது என்றால் ஒரு மாணவனுக்கு கல்வி கிடைகிறது என்ற எண்ணம் வந்து விட்டால.எத்தனை பாராட்டு விழாக்கள் நடந்தாலும்,மக்கள் வரவேற்ப்பார்கள்.கொண்டாடுவார்கள்.

»

பயணம்................

 நாம் எல்லோருக்கும் விருப்பமான ஒரு சம்பவம்.இந்த பயணம் மனித வாழ்கையில் சிறு குழந்தை பருவத்திலிருத்தே நம்மை பற்றிகொள்கிறது .சில பயணங்கள் நாம் மிகவும் விருப்பி மேற்கொள்ளும் பயணம் சிலவை நம் விருப்பத்திற்கு மாறாக நாம் மேற்கொள்ள வேண்டிய பயணங்கள்.பிறந்த போது மருத்துவமனையில் இருந்து இல்லத்திற்கு துவங்கும் பயணம்.நாம் இறந்த பிறகு நடைபெறும் அந்த இருகாட்டை நோக்கிய இறுதி பயணத்துடன் முடிவடைகிறது இந்த இரண்டிற்கும் இடையே யான வாழ்கை பலவிதமான பயணங்களை நாம் மேற்கொள்கிறோம்.ஆன்மீக பயணம் நாம் வாழும் வாழ்கை சூழ்நிலையிலிருத்து விலகி ஒரு அமைதியான ஒரு உணர்வை மனதுக்கு கொடுக்கிறது சந்தோசமான நிகழ்வுகளுக்காக செல்லுகின்ற பயணம் எப்போதுமே வயது விதியாசமில்லாமல்  அனைவரையும் குதுகலிக்க செய்கிறது.நம்முடைய எதிபார்ப்பை பூர்த்தி செய்வதற்கான பயணத்தில் ஒரு இறுக்கமான மனநிலையை ஏற்படுத்துகிறது.இதை தவிர நம்முடைய வழக்கை சக்கரத்தை நகர்த்துவதற்காக தினமும் நாம் பணிக்கு சென்று திரும்பும் பயணம் என்பது ஒரே நிகழ்வாக இருப்பினும் ஒவ்வரு நாளும்  ஒவ்வரு உணர்வை நமக்கு ஏற்படுத்துகின்றது.தெரிந்தே சில பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்ளுகிறோம். இருப்பிரும் அவை நமக்கு சுகமாகவும் அமைவதுண்டு சோகமாகவும் அமைந்துவிடுவதும் உண்டு.கனவு பயணம், நினைவு பயணம் என்று நம் வாழ்கையில் கலந்து விட்ட இந்த பயணங்கள் ஒரு கால கட்டத்தில் நமக்கு அதான் மீதிருந்த ஒரு ஈர்ப்பை குறைந்து விடுகின்றான்.நம்முடைய வயதை பொறுத்து பயணத்தை தவிர்ப்பதற்க்கே நாம் முயல்கின்றோம். ஒரு காலத்தில் நாம் மிகவும் விரும்பிய இந்த பயணம் நம்முடைய வயதான காலக்களில் நாம் வெறுக்க துவக்குகிறோம்.அதன் பின் நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் பணிக்கும் ஒரே பயணம் நம்முடைய இறுதி பயணம் தான். அந்த பயணத்தின் உணர்வுகளை நாம் பிறருக்கு அளித்து விட்டு எந்த வித சலனமும் இல்லாமல் பயணிக்கிறோம்.

»

கனவு


கனவு ஒரு இன்பமயமான நிகழ்வு,விழித்திருக்கும்போது வரும் கனவுகள்,ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவுகள்.விழித்திருக்கும் போது  காணும் கனவு நம்மை எப்போதுமே மகிழ்விக்கும் ஆனால் தூக்கத்தில் வரும் கனவுகள் சில நேரம் நம்மை பயமுறுத்தும். வாழ்க்கையில் கனவுகளை,கனவோடு விட்டு விடாமல் அதை நனவாக்கி காட்டியவர்களும் உண்டு.கனவோடு கனவாக கரைந்து போனவர்களும் உண்டு.கனவு என்பது ஒரு அற்புதமான ஒரு உணர்வு அதனுடன் பயணிப்பது சொல்லிலடங்கா ஒரு அனுபவம்.அதை எல்லோராலும் அனுபவித்து விட முடியாது.நாம் வாழ்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் நாம் இதற்க்கு முன் சந்தித்ததை  போல் ஒரு உணர்வை ஏற்படுத்தும். இந்தகைய உணர்வுகள் நம்முடைய ஆழ்த்த உறக்கத்தில் கிடைத்த கனவுகளின் பிரதிபலிப்பாக இருக்காலம்.தெளிந்த நீரோடை போல் நாம் காணும் கனவு தான் எந்த ஒரு முயற்சிக்கும் முதல் படி.  நம்மை இந்த உலகம் தனிமை படித்திய போதெல்லாம் இந்த கனவுதான் நம்முடைய உற்ற தோழனாக, நம்மை செம்பை படுத்தும், நமாக்கு ஆறுதல் கொடுக்கும் கனவு காணாத   மனிதனே இல்லை."கனவு மெய்பட வேண்டும்" என்பது தான் அனைவருடைய ஆசையும் ஆனால் அதை மெய்பட செய்தவர்கள் அறிதானவர்களாகத்தான் இருக்கிறார்கள்.நாம் காணும் கனவுகள் பெரும் பாலும்  நம்முடைய வயதை சார்ததே நிகழும். இந்த கனவை துரத்த நினைத்தாலும்.அதை விட்டு நம்மால் பிரிய முடிவதில்லை.அவைதான் நம்மை துரத்துகின்றன.நம்முடைய சித்தனையின் வெளிப்பாடாக கூட இந்த கனவுகள் நம்மை ஆழுமை செய்யும்.எப்படியோ கனவு மனிதனின் வாழ்கையில் தவிர்க்கமுடியாத ஒன்று..  நம்  கையில் உலகம் அடங்குவதற்கும் உலகத்தின் கையில் நாம் அடங்குவதற்க்கும் இந்த கனவுதான் முதல் நிலை. எனவே நல்ல கனவு கண்டால்   நம் வாழ்வில் நன்மை உண்டு .

»

மருத்துவம் தவமாகுமா..................!


மருத்துவம் ஒரு தொழில் அல்ல அது ஒரு கலை அது தவம் அது சேவை,அதை தொழிலாக மாற்றிக்கொண்டிருக்கும் இன்றைய மருத்துவர்களும், மருத்துவ  படிப்பதை  ஒரு கௌரவமாக நினைத்து படிக்கும் பணம்படைத்தவர்களையும்  நினைத்தால் வேதனைதான் மீதமிருக்கிறது .பணம் பிடுக்கும் நோகத்திலேயே இன்றைய மருத்துவர்கள் செயல் படுகிறார்கள் .கிராம புறங்களுக்கு சென்று பணியாற்றுவதற்கு இன்றைய தலைமுறை மருத்துவர்கள் யாரும் தயாராக இல்லை.தவமாக செய்ய வேண்டிய ஒரு செயலை சட்டத்தை போட்டு நிறைவேற்ற வேண்டிய நிலை உள்ளது.எந்தனையோ  கிராமங்களில் இன்றும் சரியான மருத்துவம் கிடைப்பதில்லை.குறைந்த பட்சம் குழந்தைகளுக்கான மருத்துவமாவது சரியாக கிடைக்க வழி  செய்தால் நன்று.இத்தகைய மருத்துவர்கள் நமக்கு தரும் மருத்துகள் நமக்குல்ள்ள நோய்க்கான மருத்துகள்தான என்று நாம் ஆராஇவதுஇல்லை  அந்த அளவிற்கு முழுமையான நம்பிக்கை நாம் மருத்துவர்கள் மீது வைகிரோம் அனால் அவர்கள் அந்த நம்பிக்கைக்கு தகுந்தளவு  அர்பணிப்புடன் இந்த சேவையை செய்கிறார்களா என்றால் துளி அளவும் இல்லை என்றுதான் நாம் நடைமுறை யதார்த்தத்தில் பார்கிறோம்.மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு மருத்துவ படிப்புக்கு ஆள் சேர்ப்பதோடு,கொஞ்சம் மனிதாமிமானம் முள்ள,மனிதத்துவ சிந்தனை உள்ள மாணவர்களுக்கும் இடமளித்தால் நன்றாக இருக்கும்.அவர்களாவது எதிர்வரும் காலத்தில் இந்த மருத்துவத்தை தொழிலாக  பார்க்காமல், சேவையாக தவமாக செய்வார்களா என்று பார்போம்.நம்மிக்கைதானே வழக்கை செய்வார்கள் என்று நம்புவோம்.

»

தண்ணீர்------------------------------?


காற்று,நிலம்,நீர் ஆகாயம் , பூமி  இந்த ஐந்தில் தண்ணீர் மனித தேவைகளிலே மிகவும் முக்கியமான ஒன்று.ஹைட்ரஜனையும்,ஆக்சிசனையும் தன்னகத்தே கொண்ட ஒரு நீர்மம் மனிதனுக்கு மட்டுமல்ல மரம் செடி, கொடி அனைத்திற்கும் தேவையான ஒன்று . தண்ணீர்தான் உடலுக்கு  ஜீவன் தரும் ஒரு அம்சம்.இன்றும் நாம் பருகுவதற்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது.தண்ணீரை விலை கொடுத்து வாங்க  வேண்டிய ஒரு சூழ் நிலை இன்று நிலவுகிறது,அப்படி வாங்கும் தண்ணீர் சுந்தமனதா என்று பார்த்தால் முழுமையாக 'ஆம்' என்றும்  சொல்லுவதற்க்கில்லை. இயற்கை நமக்கு அளித்த இந்த அற்புதத்தை கூட   சரியாக நமக்கு கிடைப்பதற்கு யாரும் எந்த  வழிவகையும்  செய்யவில்லை.அதை விற்பனை பொருளாக்கி வேடிக்கை பார்க்கிற கூட்டம்தான் இன்று இருக்கின்றது . இந்த நீர் ஆதாரங்களை எவ்வாறு பாதுகாத்து நம்முடைய தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேண்டும் என்று நமக்கு நாமே சிந்திப்பதும் இல்லை.செயல் பாட்டுக்கு கொடுவருவதும் இல்லை.பிறர் மீது குற்றம் சுமத்தி விட்டு நாம்  நம் வழி பார்கிறோம் வெந்ததை தின்போம் விதி வந்தால்  சாவோம் என்றுதான் நாம் இன்று எதை பற்றியும் கவலைபடுவதில்லை.வேளாண்மைக்கான நீர் ஆதாரத்தையாவது சரியாக,முறையாக பராமரித்து வைத்துள்ளோமா அதுவும் இல்லை.நீர் இன்று அமையாது உலகு நாம் இதை உணர்ந்தால் வாழ்வது இலகு .......!



»

விவசாயி............................*****

விவசாயம் என்பது இந்த உலகில்  கூடிய ஓர் அம்சம்.நாம் இன்று விவசாயத்தை மறந்து விட்டோம் அதனுடேன் கூடி விவசாயியையும் மறந்து விடோம் எனவேதான் இன்று விவசாயம் செய்வதற்கு மனிதர்கள் விருப்புவதில்லை.மனித நாகரீகத்திர்க்கே வழிகாட்டிய இந்த விவசாயம் இன்று இருக்கும் நிலையை நினைத்து பார்த்தால் நமக்கு வரும் காலத்தை பற்றிய பயம் புரியும்.விவசாயம் விருப்பத்துடன் செய்ய கூடிய ஒரு சேவை என்றே நான் கருதுகிறேன் எனவேதான் வேளாண்மை என்ற பெயர் வந்தது.வேளாண்மை என்றால் விருப்பி மற்றவருக்கு உதவுவது என்று பொருள்.இந்த தொழில் இயற்க்கை  காரணிகளை சார்ந்துள்ளது.எனவே இதனை விருப்பபுடந்தான் செய்யமுடியும்,மாதம் முடித்ததும் ஊதிய உத்திரவாதம் கொடுக்கும் தொழிலல்ல.எனவே இதனை விரும்பித்தான் செய்யமுடியும்.தங்களின் சோகங்களை மறந்து தன பசியையும்,பிறர் பசியையும் போக்கும் ஒரு உன்னதமான சேவை."தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்றான் மகாகவிஅனைவருக்கும் உணவளிக்கும் அந்த விவசாயியை போற்றவில்லை என்றாரும் தூற்றாமல் இருந்தாலே நாம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்  
நாம் யாருமே அந்த விவசாயம் நிலை பெற செய்வதற்காக எந்த ஓர் முயற்சியையும் எடுக்க வில்லை.இயற்கையான பூக்களை விற்று காகிதபூகளை வாங்கும் மனிதர்களாகத்தானே இருக்கின்றோம். நாம் இன்று தொழில் நுட்பத்தில் முன்னேறிகொண்டிருந்தாலும் நம்முடைய அடிப்படை விவசாயம்தான். நாம் தினமும் உண்ணும் உணவின் பின்னல் உள்ள விவசாயியை மதிப்போம் விவசாயத்தை வளர்ப்போம் வளமான பசி இல்ல எதிர்காலத்தை உருவாக்குவோம்.



»

தமிழ் கலாச்சார காதல் o+

 

தமிழர் கலாச்சாரம் என்பது ஒரு சங்கிலி வளையம் போன்றது.அதில் ஒரு பிளவு ஏற்பட்டாலும் அந்த சங்கிலி  வளையம்  அதன் வலிமையை இழந்து விடும். அது போலத்தான் தமிழர் கலாச்சாரமும், நாகரீகம் என்ற பெயரிலோ அல்லது சமுக மாற்றம் என்ற பெயரில் சிறுசிறு மாற்றங்களை செய்யலாமே தவிர அதில் பிளவை ஏற்படுத்த முனைய கூடாது அப்படி முனைவோரை இனம் கண்டு புறம் தள்ள வேண்டும். இன்று அப்படி ஒரு சூழ் நிலை வந்திருக்கிறது அது தாய் தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பெற்றோரின் பாச போராட்டம். தன்னுடைய  மகளின் மூலம் புது சொந்தக்கள் வரக்கூடிய  காலகட்டம்தான் திருமணம் என்ற பந்தம். இந்த திருமண பந்தத்தைதான், காதல் என்ற ஒரு போதை வீழ்திவிட நினைக்கிறது.பெண்ணின் சம்மதம் மட்டுமே போதுமானது என்று கூறுகின்ற சமுதாயத்தை நாம் கொஞ்சம் தள்ளி வைப்பது நன்று .திருமணம் என்பது ஒரு புது உறவை ஏற்படுத்ட கூடியது அது அவர் அவர்களுடைய குணாதிசியத்தை பொறுத்து அந்த புது உறவை தீர்மானிக்கிறார்கள்.குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடிமிக்க கொளல். என்று ஆராய்ந்து நாம் புதியவைகளை தேர்த்தேடுக்கிறோம்.அவ்வாறு தேர்தெடுப்பதில் உள்ள சிறு சிறு குறைகளை மட்டும் வைத்து கொண்டு.திருமண செய்து கொள்ள கூடிய பெண்ணின் சம்மதம் மட்டுமே போதும் என்ற ஒரு நிலையை வலியுறுத்தி சொல்ல்வது கலாசார சங்கலியை அறுப்பதற்கு சமமானது.உன் பெண்ணிற்கு என்னை பிடித்திருக்கிறது என்னுடன் அனுப்பிவை என்று பெற்றோரிடம் கேட்பது சரி என்று வாதிட்டால்.இன்று அவளுக்கு சரி என்று தெரிகின்ற ஒரு நிகழ்வு,நாளை தவறு என்று அவள் நினைத்தால் அந்த சமயத்தில் அவள் என்ன செய்ய வேண்டும் என்பதை சரி என்று வாதிடுபவர்கள் சுட்டி காட்ட வேண்டும்.பெண்களுக்கு மட்டும் இந்த விசயத்தில் ஏன் எதிர்ப்பு இந்த அளவிற்கு கிளம்புகிறது என்றால்.ஒரு தந்தை தன்னுடைய மகளை,தன்  தாயின் மறு உருவமாக பார்க்கிறான்  என்பது  தான் உண்மை. மேலும் தன்னுடைய அரவணைப்பில்,கட்டுப்பாட்டில்   வளர்ந்த தன்  மகளை முற்றிலுமாக தன்னுடைய உரிமையை  இழந்து , அனைத்து அதிகாரத்தையும்,உரிமைகளையும்  வேறு ஒருவருடைய கரங்களில் கொடுக்கும் போது,அவர் தன்னை போலவே, தான் எப்படி தன்  தாயின் மருவுருவமாக நினைத்து தன் மகளை வளர்த்தோமோ,தன்னை போலவே ஒரு மனிதர் வேண்டும் என்று நினைக்கின்றார் எனவேதான் இந்த எதிர்ப்புகள் கிழம்புகின்றன.தந்தை தாயின் எதிர்பார்ப்பை சிறிதேனும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கின்ற எந்த ஒரு ஆண்மகனையும்  யாரும் எதிர்பதில்லை.இந்த திருமண பந்தத்தில் பெண்ணின் விருப்பம் எந்த அளவிற்கு தகுதியானதோ,அதில் பாதி அளவிற்காவது தகுதியானதுதான் பெற்றோரின் விருப்பமும்.வாழ்கையே விட்டு  கொடுத்து வாழ்வதுதான் அந்த விட்டு கொடுப்பது யாருக்கு தன் உறவுக்கா இல்லை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் நபருக்க என்பதை பொறுத்துதான் வாழ்கையின் வீரியமும்,தளர்ச்சியும்.

»

நட்பு

நட்பு என்பது அனைவராலும் அரவணைத்து செல்லகூடிய ஒரு நடைமுறை,முன்பெல்லாம் நட்பு என்பது மிகப்பெரிய அளவில் போற்றப்பட்டது.கழுதை தேய்த்து கட்டெறும்பு ஆனா கதையாக ஆகிவிட்டது.இன்று நட்பு என்பது வெறும் வார்த்தைகளிதான் இருக்கிறதே தவிர உண்மையான நிலையில் உயிருடன் இல்லை என்பதுதான் மெய்.வரலாற்றுகளில் போற்றப்பட்ட நட்பு என்ற பெயரை உபயோகித்து செய்ய படுகின்ற செயல்கள் அனைத்துமே அரைவேக்காட்டுதனமானவைதான்.அன்றைய நடப்பு உறவு முறைகளையும் மீறி காலம் கடந்து நிலைத்து நின்றது.ஒருவருக்கொருவர் விட்டு கொடுப்பதும், அன்பு பாராட்டுவதும் தான் நட்பை  உயிருடன் வைத்து கொள்ளும்.ஆனால் இன்று நட்பு வெறும் வேசத்தினால் ஆனா சித்திரங்கள்.தன்  வாழ்வை விட தன்னுடைய நண்பனின் வாழ்கையை செம்மைபடுத்திய  நட்பு இன்று உண்டென்று நினைத்தால் அலசி ஆராய்ந்து பார்த்தாலும் கிடைக்காது.இளமையில் கூடி கலைவதாகத்தான் நட்பு  இருக்கிறது.போலித்தனமாக விழாக்களில்  வாழ்த்துக்கள் சொல்லுவதற்கும்,விசேசங்களில் ஒன்று கூடி கூத்தடிபதர்க்கும் தான் இன்று நட்பு என்ற சொல் பயன் படுகிறது.நம் வாழ்வில் வருபவர்கள் எல்லாம் நண்பர்கள் அல்லவீழும் போது  நம்மை வாழ வைப்பவர்கள்தான் நண்பர்கள்.அப்பேற்பட்ட நண்பர்கள் நம்முடைய வாழ்நாளில் நம்மை விலகி சென்றிருத்தால் தயவுசெய்து அவர்களை தோழோடு தோழ்  அனைத்து அரவணைத்து கொள்ளுங்கள்.வரும் காலம் நட்பிற்கு இலக்கணமாக விளங்கட்டும் நாமும் அதிலே ஒரு துளியாக இருப்போம் நல்ல பழக்கவழக்கம் கொண்ட உலகை நம் சத்ததிக்கு கொடும்போம்.

»

முகஸ்துதி முள்ளம்பன்றிகள்

முகஸ்துதி என்பது  ஒவ்வொரு மனிதனுக்கும் பிடித்த ஒன்று. தன்னை பற்றி சொல்லும்  இந்த அதிகபடியான விஷயங்கள் அனைத்தும் பொய் என்று தெரிந்தும்.அப்படிப்பட்ட நபர்களைதான் அவர்களுக்கு பிடித்திருக்கும் .இவ்வாறு முகஸ்துதி செய்பவர்கள் ஆபத்தானவர்கள் என்று தெரித்திருந்தும் அவர்களை தன்னுடன் வைத்து கொள்ளவதைதான் மனிதன் விரும்புகிறான்.மது உடலுக்கு கெடுதல் என்று தெரிந்தும் கூடஅதை அருத்துவத்தை போல இந்த முகஸ்துதி மனதை கெடுக்க கூடிய ஒரு கொடிய செயல் என்று தெரிந்தும் மனிதன் அதை விரும்புகிறான்.இதனால் தன் தகுதிக்கு மீறிய செயலை செய்வதற்கு அவன் துணிகிறான்.அதன் விழைவு நிர்கதியாக நிற்க கூடிய சூழ்நிலை உருவாகிறது.மனம் முகஸ்துதி செய்து உருஏற்றப்பட்ட அந்த நிலையில் இருந்து தன்னை மாற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிறது. இப்படி முகத்திற்கு நேராக ஒன்றும் மறைமுகமாக வேறொன்றும் பேசுபவர்கள்தான் இன்றைய சூழ்நிலையில் வாழதெரிந்தவர்களாக உலகம் நினைக்கிறது.இப்படிப்பட்டவர்கள்தான் நாட்டில் அதிகம் காணப்படுகிறார்கள்.இவர்களுடன் போட்டி போடமுடியாமல் தன்மானம் உள்ள மனிதர்கள் வெறுத்துபோய் அமைதியாகிவிடுகிரார்கள் அல்லது அவர்களும் வேறுவழி இன்றி முகஸ்துதி செய்ய தொடக்கி விடுகிறார்கள்.முகஸ்துதி அரசியல்,அழுவலகம் என்று எல்லா நிலையிலும் இருக்கிறது.இந்த ஆபத்தான நபர்கள் தங்களுடைய சாதக பாதக மான வேலைகளை இதன்மூலம் முடித்து கொண்டு வாழ்வில் வெற்றிபெற்றவர்களாக திகழ்கிறார்கள்.அந்த வெற்றிக்கு பின்னல் இருக்க கூடிய ஈன செயல் களை  யாரும் அறியாததால் இந்த கீழ்நோக்கு பார்வை உள்ளவர்களை. இந்த உலகம் மேல் நோக்கி பார்கிறது.

»

கடவுள் இன்லையா,இருக்கிறாரா.............................!

கடவுள்  இன்லையா,இருக்கிறாரா என்பது மிகப்பெரிய விவாதத்திற்கு உரிய ஒரு விஷயம்.பெரிய பெரிய ஞானிகளும், தத்துவமேதைகளும் கடவுள்இருக்கிறார் அது இயற்கையாகவோ,எல்லாவற்றிற்கும் மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்று வேறு வேறு கோணங்களில் நம்மை சிந்திக்க சொல்லுகிறார்கள். மிகப்பெரிய விஞ்ஞானிகள் அனைத்தையும் தாண்டிய ஒரு சக்தி இருபதாக சொல்லுகிறார்கள். பொது ஜனங்களின் மத்தியில் கடவுள் இருக்கிறார், இல்லை என்ற விவாதமும் , இல்லவே இல்லை என்று உறுதியாக ஒருசாராரும் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.பொதுவாக மக்கள் மத்தியிலே  அவரவருக்கு சாதகமாக நடைபெறும் சம்பவங்களுக்கு கடவுளின் அனுக்கிரகமாகவே நினைகிறார்கள்,எதிர் மறை சம்பவங்கள் நிகழ்த்து அது துன்பத்தை தரும் சமயம் கடவுள் இருக்கிறாரா என்ற சத்தேகத்தை எழுப்புகிறார்கள்,இவாறு மனிதன் இல்லை என்றும், இருக்கிறாரென்றும் மாறி மாறி தன்னுடைய என்னத்தை வெளிப்படுதிகொண்டே கடவுளின் பக்கமே  நிற்கிறார்கள் காரணம் தன்னுடைய வாழ்கையில் ஏதேனும் பெரிய பாதகம் நிகழ்துவிடுமோ என்கிற எண்ணம்.தன்னை முழுமையாக கடவுளை நம்பி தன்னுடைய வாழ்கையை ஒப்டைதவர்கள் மிக மிக மிக குறைவாகவே இருக்கிறார்கள், இன்றைய சூழ்நிலையில் அப்படி பட்ட மனிதரை பார்ப்பது என்பது மிக அரிது . இல்லவே இல்லை என்வபவர்கள் முழுமையாக இல்லை என்று சொல்லுவதற்கு எந்த முகாந்திரத்தையும் அவர்கள் சுட்டி கொடுப்பது இல்லை. இந்த போலி சாமியார்கள்தான் அவர்களின் இலக்கு அவர்களை வைத்து கொண்டு கடவுளை எடை போடுகிறார்கள்.அறிவியலர்கள் நாங்கள் கடவுளின் செயல்களை நாங்கள் நெருங்கி விட்டதாக சொல்லுகிறார்கள்.மனிதன் கடவுளை நெருங்கும் சம்பவம் நிகழ்த்து விடாதா என்று நாமில் எதிர்பர்த்டு கொண்டிருக்கிறோம். ஆனால் சமய ஆர்வலர்கள் இன்னமும் கடவுளின் பாதையில் ஒரு சதவிகிதமகூட பணிக்கவில்லை என்று ஒரு புறம் விவாதிக்கிறார்கள்.மனித உடலில் நிகழும் மாற்றங்களை. அறிவியல் நிகழ்த்தி இருக்கிறதா, "நாம் உண்ணும் உணவு, வெளிவரும் கழிவு" இது எவ்வாறு நடை பெறுகிறது என்பது நமக்கு தெரியும். இதைபோல் ஒரு அறிவியல் துணை கொண்ட ஒரு சாதனம் நிகழ்த்துமா என்பது மிகப்பெரிய கேள்வி. இருக்கிறது என்பவருக்கு "இருக்கிறது" என்பதே கடவுள் .... இல்லை என்பவருக்கு "இல்லை " என்பதே  கடவுள்.கடவுள் இருக்கிறது என்று சொல்லுவதிலும் "போலிகள்"இருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களிடமும் "போலிகள்" இருக்கிறார்கள்.கடவுள் நம்மையும் கடந்து சென்றிருக்கலாம்,நம்மை கடக்கும் வரை நாம் உணருவதில்லை 

»

உணர்ச்சிகள் ................{உணர்வுகள் }



காமம் என்பது மனித உணர்ச்சிகளிலேயே மிக முக்கியமான அவசியமான ஒன்று.காமம் என்பது மிக மதிகதக்கதும்  புனிதமானதுமாக கருதுவது தமிழ் கலாசாரமாக இருந்துவருகிறது ,ஒரு ஆணும் பெண்ணும் சங்கமிக்கின்ற இந்த உணர்வு இன்று மிகவும் கேலிகூத்தாக பார்கபடுவது வேதைனையான விஷயம்.தன துணையுடன் பகிர்த்த காம உணர்ச்சியை பிறரிடம் பகிர்த்து கொள்ளுவது வேதனையிலும் வேதனையானது நாகரிக போர்வையை போர்த்திக்கொண்டு இந்த வேலையை செய்வது என்பது  அருவரும்பும் நிறைத்த ஒரு உலகத்திற்கு நம்மை இட்டு செல்லும். ஒரு நல்ல கணவன் மனைவி தங்களுடைய படுக்கை அறையில் இந்த உணர்ச்சியை பரிமாறிக்கொள்ளும் போது  விளக்குகள் எரிவதில்லை,வெளிச்சம் அங்கே  தேவை இல்லை என்று நினைத்தார்கள் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் அந்தரங்கத்திற்கு மதிப்பளித்தார்கள்.வாழ்வில் சிறப்பு சேர்த்தார்கள்.ஆனால் அதே காமம் இன்று படும் பாட்டை நினைத்தால் வாழ்வியல் தந்துவங்கள் தோற்றுவிட்டனவா என்று என்ன தோன்றுகிறது. இன்றைக்கு இருக்கின்ற இளைஞர்கள்,நடுத்தர வயதுடையவர்கள்,நடுதரவயதை கடந்தவர்கள் என்று அனைவரிடமும் காம உணர்ச்சி ஒன்றும்  போற்றபடகூடிய புனிதமானது அல்ல என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.பெரும் பாலான சினிமாவில் நகைசுவை காட்சிகளுக்கு கூட இந்த காம உணர்ச்சியை பயன்படுத்துவது என்பது ஆரோகியமான ஒரு இளையதலைமுறையை உருவாக்குவதற்கு வழி வகை செய்யாது.காம உணர்ச்சி என்பது அனைவரிடத்திலும் பகிர்த்து கொள்ள கூடிய கடை பொருள் அல்ல.எந்த உணர்ச்சிக்கு அடிமையானாலும் உன்னை ஆளும் காம உணர்ச்சிக்கு அடிமையானால் உன்னை வீழ்த்தும்.தகுந்த மரியாதை கொடுத்தால் தன்மானத்தை காக்கும் .தலை நிமிர செய்யும். உணர்வுகள்

»

நல்லவன் வாழ்வது .......+

இன்றைய காலத்தில் எல்லேரும் எதையாவது  ஒன்றை எதிர்பார்த்துதான் பிறருடன் பழகுகிறார்கள்.எதிர்பார்ப்பு இல்லாத பழக்கவழக்கம் என்பது யாரும் எவருடனும் பழகுவது இல்லை.ஒரு மனிதன்  பணியில் இருக்கும்போது நட்பு புடனும் ,மதிப்பு கொடுத்து பழகும் இந்த உலகம்.அவனுடைய பனி நிறைவிற்கு பின்னோ அல்லது அவன் அந்த பணியில் இல்லாத போதோ அவனிடம் அந்த அளவிற்கு நெருக்கம்  காட்டுவது இல்லை என்பதே அதற்க்கு சிறந்த உதாரணம் .அவனிடம் பழகிய அனைவரும்.அந்த பதவியில் புதியதாக பணிக்கு வந்தவரிடம் தன்னுடைய நெருக்கத்தை காட்ட தொடக்கி விடுகிறார்கள்.அதை சார்த்து பார்தோமேயனால்.அவர்கள் காட்டக்கூடிய நட்பும் அந்த பணிவும் அந்த பதவிக்குத்தான். அந்த பணியில் இருப்பவன், அவன் நல்லவனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும்,ஒரேமாதிரியான நட்பு பாராட்ட தெரிந்தவர்கள்தான் இன்றைய உலகில் வாழ்வியல் கற்றவர்கள் என்ற கட்டத்திற்குள் இருக்கிறார்கள். அவன் நமக்கு தேவை என்றபோது நெருக்கம் காட்டுவதும் வேண்டாம் என்றபோது விலகிநின்று வேடிக்கை பார்ப்பதும். நலவனாக இருக்கிறவனுக்கும்,நல்லவான்  அல்லாதவானுக்கும் ஒரு சேர நடக்கிறது என்றால் நல்லவன் மன அமைதியுடன் வாழ்வதற்கான சூழல்  குறைகின்றன.அவன் நல்லவனாகவே தன் வாழ்கையை தொடர்வதற்கான வாய்ப்புகளும் குறைகின்றன. நல்லவன் வாழ்வதற்கு காலமில்லையா அல்லது நல்லவனாக வாழ்வது தேவை இல்லையா ..!

»

அசல் ........, நகல்........தலைவலி

இன்று நாம்  உபயோகிக்கும் பொருள்கள் அசல்தானா அல்லது அசலை போல் உள்ள நகலா அசலின் விலை கொடுத்து நகலை வாங்கி வைத்திருக்கிறோமா என்பது நமக்கே தெரிவதில்லை.அந்த அளவிற்கு போலிகள் நம்மிடையே ஆல் போல் பெருகி அருகுபோல் வளர்த்து விட்டது.ஒரு பொருளை தயாரித்து அதை மக்கள் மத்தியில் பிரபல படுத்துவதற்காக அந்த பொருளை தயாரித்த நிறுவனத்தார்  கொடுத்த உழைப்பையும் கால விரயத்தையும் எள்ளளவும் கூச்சமின்றி திருடி நகலை இப்போதுள்ள தொழில் நுட்பம்  கைகொடுக்க, அசல் போலவே நகலும் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடுகிறது. அசல் மேல் நம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் இந்த போலிகளும் விற்பனையில் நல்ல சம்பாதிக்கின்றன அதே நேரத்தில் அசலுடைய சந்தை மதிப்பையும் கீழேதள்ளுகிறது.அதை பற்றி இந்த போலி தயாரிப்பாளர்களுக்கு என்ன கவலை.இதை எல்லாம் செய்வது வேறு எங்கிருத்தோ வந்த மனிதர்கள் அல்ல. எல்லோரும் இந்த நாட்டை சேர்த்தவர்கள்தான்.எந்த பொருளுக்கும் ஒரு குளோனிங் போல் ஒரு போலி இருக்கிறது. 5 ரூபாயில் தொடங்கி லட்சங்களில் விற்கும் பொருள்களுக்கும் போலிகள் இருக்கின்றன. தன்னுடைய வாழ்க்கை முறையால் உழைப்பால்  நன்மதிப்பையும்,நிலைத்த புகழையும் பெற்று இந்த இந்த உலகை விட்டு பிரித்த அசல் தலைவர்களின் பெயர்களால் கூட அரசியலில்  நகல்கள் நம்மை சுற்றி வருகிறார்கள்.அனைத்து துறைகளிலும் இந்த போலிகள் இருக்கிறார்கள் அடுத்தவர்களின் உழைப்பையும்,அறிவாற்றலையும் திருடி இந்த போலிகள் அசல் களையே மக்கள் மத்தியில் போலிகளாக்கி  விடுவார்கள்.


»

சுய ஒழுக்கம்........................!

சுய ஒழுக்கம் என்பது வாழ்வியலில் மிகமிக முக்கியமானது. நாட்டில் நடக்கின்ற அனைத்து செயல்களும் சுய ஒழுக்கத்தை அடிப்படையாக வைத்துதான் நடைபெறுகின்றது.நாட்டில் ஏதாவது ஒரு தவறு நடக்கும் பட்சத்தில் "உதாரணமாக பெண்பாலியல்" அந்த தவறுக்கு காரணமானவனை நாம் முடித்த அழவிற்கு திட்டி தீர்த்து விடுகின்றோம் ஆனால் நம்மில் எந்தனை நபர்கள் அதே தவறுகளை வெளியில் தெரியாமல் மனதளவில் செய்திருக்கிறோம். நண்பனின் மனிவி என்று கூட பார்க்காமல் மனத்லேயே ரசிக்க கூடிய கொடிய மிருகங்கள் நம்பிடையே இருக்கின்றது.இதற்கெல்லாம் காரணம் சுய ஒலிக்கம் இல்லாமையே.முன்மு நம்முடைய பள்ளிகளில் நடைபெற்று வந்த சுய ஒழுக்க போதனை வகுப்புக்கள் இன்று எந்த பள்ளிகளிலும் இல்லை. இன்று சுய ஒழுக்கமில்லாத மனிதர்கள் குறைய காரணம் குடும்ப சூழ்நிலைமட்டும் அல்ல.சமுதாயத்தில் உள்ள குறைபாடுகள் தான்.பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலவதாக வந்த மானவனைதான் நாம் கொண்டாடுகின்றோம், ஆனால் நல்  ஒழுக்கமான மனவணன் யார் என்று பார்த்து அவனுக்கு ஒரு வாழ்த்தாவது சொல்லி இருப்போமா. மதிப்பெண்களில் அதிகம் பெற்றிருத்தால் போதுமானது அவர்களை ஏதோ சாதித்தது போல் அவனை தூக்கி வைத்து அனைவரும் கொண்டாடுகிறோம்.எனவே சுய ஒழுக்க கட்டுபாடுடன்  வாழ வழி தேடுவோம் சுய ஒழுக்கத்துதன் வாழ்பவரை தொழுவோம்.

»

சான்றிதழ் இருதால் போதுமா................?

 இந்தியாவை பொறுத்தளவில் சான்றிதழ் இருதால் போதுமானது திறமையோ அந்ததுறை சார்த்த  நுண் அறிவோ தேவையே இல்லை.இதன் காரணமாகத்தான் திறமையானவர்கள் , துறை அறிவே  இல்லாதவர்கள் எல்லோரும் துறை அலுவலர்களாகவும் நல்ல திறமையும் அனுபவமும் உள்ளவர்கள் ,இனமும் அவர்களுக்கு உதவியாளர்களாக இருக்கிறார்கள். எதாவது ஒரு கலூரியில் மூன்றுவருடங்கள் காலத்தை கழித்துவிட்டு சான்றிதள்கள் பெற்றுவிட்டாலே போதுமானதாக இருக்கின்றது, அதைவைத்துக்கொண்டு அனுபவம் உயள்ளவர்களுக்கே மேலதிகாரிகளாக  வந்துவிடுகிறார்கள். வெறும் காகித்தாலான சான்றிதள்களைமட்டும் வைத்து பணியமர்த்துவது என்பது சரியாக இருக்காது .இதன் காரணமாகத்தான் இன்று போலியான சான்றிதழ்கள் நாட்டில் உலவுகின்றன. கூடுதலாக படித்தவன்தான் கண்டுபிடிப்புகள் எதையும்  செய்திருக்க முடியும் என்னும் தவறான எண்ணமும் இன்றும் நம்மிடம் நிலவுகிறது."யாரை எங்கே வைப்பது என்று வாருக்கும் தெரியலே" என்ற வரிக்கு பொருத்தமாகத்தான் இன்று நாட்டில் நடப்பவை நமக்கு உணர்த்துகிறது.மூன்று வருட பட்ட படிப்பு படித்திருந்தால் போதும் என்ற நினைப்பு நம்பிடையே பரவலாக காணப்படுகிறது அப்படி படித்தவர்கள் தான் அறிவுடையவர்களாக இருப்பார்கள் என்ற பார்வை "வடிவேலு கூறியபடி சிகப்பா  இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்" என்பதைப்போலத்தான் இருக்கிறது. நல் அறியும் நல் திறமையும் நாட்டின் இருகண்கள்.அதை பாதுகாப்பது அவசியம் அவசரம்

»

துரோகம்...............................?



துரோகம் எங்கு  பார்த்தாலும் துரோகம்.உண்மையான நட்பில்,கணவன் மனைவி உறவில் கூட இந்த துரோகங்கள் புகுந்து விட்டது என்பது வேதனையான ஒன்றாக இருக்கிறது.ஒரே அலுவலகத்திகுள் வேலைபார்கின்றவர்களுக்கு மத்தியிலும் இந்த துரோகங்கள் வேலையை காட்ட ஆரமித்து விட்டது.தங்களது பதவி உயர்வுக்கு உதவுவதற்காக இந்த துரோகங்களை கையில் எடுத்து கொள்கிறார்கள். துரோகங்கள் எத்தனையோ விதவிதமான வேடங்களில் இருந்தாலும் அனைத்து துரோகங்களின் விளைவுகள் வெளிப்படையாக இருப்பதில்லை. தாளமுடியாத வேதனையைத்தான் இதன் முடிவு  இருக்கிறது.இந்த துரோகங்கள் வளர காரணம் என்ன? மனித மனங்களுக்கு இடையேயான சுயநலம் அதிகமாக இருப்பதால்தான்,சகோதர சகோதரி, மத்தியில் கூட உறவை மதிக்காமல் துரோகங்கள் நிகழ்கிறது. அரசியல் துரோகங்கள் மனிதனின் ஆளுமையை கேள்விக்குரியாக்குகிறது.அதன் விளைவுகள் விபரீதமாக முடிவதால் தனிமனிதனுக்கு மட்டுமில்லாமல்  எதில் காலத்தையும் பரந்து விரிந்து பாதிக்கிறது.அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய துரோகங்கள், ஆளைவிழுங்கும் துரோகங்கள்,அநாதையாக்கும் துரோகங்கள்,நிர்மூலம்மாக்கும் துரோகங்கள்,அத்தனை துரோகமும் நம்பிக்கை என்ற ஒற்றை விதியை மீறுவதால் தான் நிகழ்கிறது. நீட்டி முழக்கி இன்னமும் எந்தனையோ துரோகங்கள் வீதியில் அலைந்து கொண்டுதான் இருக்கிறது வேதியல் மாற்றத்தை வாழ்க்கையில் ஏற்படுத்த! இதை செய்வதிலே முதலில் நிப்பது இளைஞர்கள் கூட்டம் .இதை உணராமல் இன்றைய இளைஞர்கள் இவைகளுக்கு துணை நிற்பதுதான் மிகவும் வேதனையான நிகழ்வு. இந்த செயல்களுக்கு பணம்தான் முக்கியகாரணம் என்று சொன்னாலும் அதனை முழுமையாக ஏற்கமுடியாது. இளைஞர்கள் மத்தியில் உள்ள தைரியமின்மையும்,ஒழுக்கமின்மையும்மே  ஆதிமூலமாக இருக்கிறது.அதை களைந்தால் ஒழிய,இத்துரோகங்களை வேரோடுசாய்க்க முடியாது.துரோகங்கள் வேறுவேறு வேடங்களில் வழ்துகொண்டுதான் இருக்கும். வாழ்வை காவு வாங்கிகொண்டுதான் இருக்கும் 

»

புனிதமானதா காதல் ..................!


காதல் என்பது காதலன் காதலி இருவர் சார்த்து மட்டுமா அவர்களை சுற்றியுள்ள உறவுகளுக்கு கிடையாத.குறிப்பாக அவர்களின் தாய் தந்தையருக்கு கிடையாதா.காதலில் வலி என்பது பெண்ணை பெற்ற பெற்றோருக்குத்தான்  அதிகம்.பதினெட்டொ,இருபதோ ஆண்டுகள் வளர்த்து ஆளாக்கிவிட்ட தாய் தந்தையர்களின்  விருப்பம் துளியும் தேவையில்லை.பெண்ணிற்கு யாருடன் வாழவிருப்பபோ அவனுடன் அனுப்பிவைக்க சொல்லுவது எந்தவிதத்தில் நியாயம். அந்த பெண்ணை வளர்பதற்க்காக அந்த தாயும் தந்தையும் பட்ட வேதனையும்,கஷ்டங்களும் தனிப்பட்ட அனந்த இரு ஜீவன்களுக்குதான் தெரியும்.காதல் மட்டும் தான்  
புனிதமானதா,பெற்றோர்கள் வைத்த அன்பு என்பது கலப்படமானதா.காதல் தெரிந்து கண்டித்தால்,காதலனை வீட்டிற்கு வரசொல்லுவதும்,காதலன்  நண்பர்களுடன் வீட்டிற்கு வந்து உன் பெண்ணை நான் காதலிக்கிறேன்,பெண்ணை கூப்பிடு என்று தகராறு செய்வதும், அதற்கு சட்டங்கள் இடம்கொடுப்பதும் , அந்த பெண்ணோ எனக்கு பிடித்திருக்கிறது அவனுடன் நான் செல்வேன் என்று சொல்வதும் காதலின் உத்ச்சகட்டங்கள்.இதனால் அந்த பெண்ணின் வீட்டிற்கு ஏற்படும் அவமானமும் கஷ்ட நஷ்டக்க்களும்தான் அந்த பெண் தன்னை வளர்த்த தன குடும்பத்திற்கு தரும் பரிசு, எத்தனையோ சூழ்நிலைகளில் தன்னுடைய மகளுக்காக அந்த தகப்பன் தனுடைய சொந்த விருப்புகளை மறந்து தான் நினைத்துகூட பார்க்கமுடியாத உலகத்திற்கு மகளை உயர்த்தவேண்டும் என்று தினமும் உழைத்து தன் கனவை கலைத்து மகளுக்காக ஒரு தனி உலகத்தை உருவாக்க நினைக்கின்றான். சிறுவயது முதல் பெண் பூப்படையும் வயதுவரை ஒரு உலகத்திலும் அதற்க்கு பின்னால் ஒரு உலகத்திலும் சஞ்சரிப்பதர்க்கு உறுதுணையாக இருப்பது பெற்றோர்கள்தான்.அன்புக்காக உயிரை கொடுப்பது பெற்றோர்கள்தான்.ஆனால் அந்த அன்பை களவாடிவிட்டு தன் வீட்டாரை நிர்கதியில் விட்டு செல்வதுதான் காதல்.பெண்ணுக்கு பிடித்திருந்தால் கல்யாணம் பன்னவேண்டியதுதனே! என்று சொல்லுபவர்கள், யாரும் பின்னாளில் வரும் துன்பத்திர்க்கோ, துயரத்திக்கோ,கஷ்ட நஷ்டக்கழுக்கு உதவ வருவதில்லை,கேலி பேசுவார்கள் என்பதுதான் உண்மை, அந்த நேரத்திலும் தன்னை அவமானபடுத்திவிட்டு சென்றவள் என்றுகூட பாராமல் அந்த பெண்ணிற்கு கைகொடுத்து தூக்கி விடுவது தாய் தந்தயரும்தான். காரணம் அவள் மகள் அல்லவா, மகள் என்ற பந்தம் காதலை விட சிறந்தது. புனிதமானது எதையும்  காயப்படுத்தாது .காயபடுதுவது எதுவும் புனிதமானதாக இருக்கமுடியாது .காதல் புனிதமானதா ?


»

நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் மிரட்டல்



இந்தியாவில் லஞ்சம் மட்டும் அதன் வளர்சியை தடை செய்யவில்லை.அதற்க்கு சமமாக இருப்பது பயம்.நேர்மையான இருக்கவேண்டும் என்று எண்ணுகிற அதிகாரிகள் கூட பயம் காரணமாக தவறு செய்ய நேருகிறது.பயம் வர காரணமான இருக்கின்ற மிரட்டல்களை எதிர்த்துதான் இன்று நம்முடைய சமுதாயம் மிகப்பெரிய போராட்டத்தை முன் எடுத்து செல்லவேண்டும்.அன்பளிப்புகள் கூட லஞ்சம் என்கிற வரிசையில் வருகிறது அப்படி பார்த்தோமேயானால் லஞ்சத்தை விட இந்த மிரட்டல்,பயம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தானவை.நேர்மையாக வாழவிரும்பும் மனிதனை கூட அடிமையாக விருப்பமின்றி சில தவறான செயல்களை செய்ய கூடிய சூழ்நிலைகலை உருவாக்குகின்றது அதுவே பின்பு வழக்கமாகிவிடுகிறது.மிரட்டல் கொடுப்பது வெளியிலிருந்து மட்டும் வருவதில்லை உடன் பணிபுரிகின்றவர்கள் மூலமும் வருகின்றது.மிரட்டல் பயம் சமூகத்தல் எல்லா மட்டத்திலும் இருக்கின்றது.முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து இன்று எதற்கெடுத்தாலும் மிரட்டிபயம்கொள்ள செஇதுகாரியத்தை சாதித்துகொள்ளுவது என்பது சர்வசதரனமாகிவிட்டது.கண்டுகொல்லாமல்விட்டுபோன இந்த மிரட்டல், பயம் மெல்ல விலகுவதற்கு வழிசெய்தால் ஒரு ஒளிமயமான சமுதாயம் உருவாகும்.

»

தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்கிறார்களா ........!

தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்கிறார்களா ........!

பிழைப்பிற்காக தமிழகத்தை தேடிவந்த பிற  மாநிலத்தை சேர்த்தவர்கள் தமிழ்நாட்டில் எண்ணிக்கை அளவில் வளர்த்து கொண்டேவருகிறார்கள் அப்படி வந்தவர்களில் இன்று அதிகபடியானவர்கள் இங்கேயே தங்கிவிட்டார்கள்.அவர்கள்.அனைத்து உரிமைகளையும்  பெற்று நலமுடன் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தமிழகத்தின் நலனில் எதேனும் அக்கறை இருக்கிறதா என்றுபார்த்தால்.துளியும் இல்லை என்பதுதான் இன்றைய தமிழர்களின் போராட்ட தோல்விகள் நமக்கு அறிவுறுத்துகிறது.இதுபோல் வந்து குடிஏறியவர்கள் தமிழர்களின் உணர்சிகரமான போராட்டங்களை நீர்த்துபோக செய்வதிலே வல்லவர்களாக இருக்கிறார்கள்.வெளியிலே தமிழ் மொழிகளில் பேசுகிறவர்கள் வீட்டிலே அவர்களுடைய தாய் மொழியிலேயே பேசி கொள்வார்கள். அப்படி பேசுவது மட்டும் இல்லாமல்,தனக்கு பிறந்த குழந்தைகளுக்கும் முதலில் அவர்களுடைய தாய் மொழியைத்தான் கற்றுத்தருகிறார்கள். வேறுவழி இன்றிதான் தமிழையும் கற்கிறார்கள்.பிற மாநிலத்தை சேர்த்தவர்கள் இன்று எல்லா மட்டத்திலும் வளர்ச்சி அடைந்து தமிழ்நாட்டில் ஒரு தவிர்கமுடியாத  அங்கமாக மாறிவிட்டார்கள் என்பது நாம் மறுத்தாலும் உண்மை.வியாபாரத்தில் கோலோச்சியவர்கள் இன்று அரசாங்க பணியிலும் ஆதிக்கம் செலுத்த தொடக்கி விட்டார்கள். இவர்களை போன்றவர்கள் தொடக்கி வைத்ததுதான் இந்த  அங்கில பள்ளி மோகம். அது இன்று கிழ் வரை சென்று அனைவரையும்பாடாய்  படுத்துகிறது. வேறு மாநிலத்தில் வாழுகின்ற தமிழர்கள் அந்த மாநிலத்தை சேர்தவரை ஒன்றித்தான் வாழவேண்டும் ,ஆனால் இங்கோ பிரமநிலத்தை சேர்தவரை அண்டி நாம் தொழிலோ வேலையோ செய்யவேண்டிய நிலையில் தான் இன்று தமிழகம் சென்று கொண்டிருக்கிறது.இந்த நிலையை மாற்றி தமிழகத்தை சேர்த்தவர்கள் வியாபாரத்திலும் பிற தொழில்களிலும் கோலோச்ச வழிவகை செய்தால் நம்முடையா வருங்கால தமிழ் சந்ததிகள் வழமுடன் வாழ்வார்கள்



»

பெண்கள் வேலைக்கு செல்ல தேவை இல்லை


பெண்கள் வேலைக்கு  தகுந்த காரணம் இல்லாமல் செல்வது என்பது  தேவை இல்லாத ஒன்று. அனைவரும் கூறுவது போல் இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில்  ஆண்  பெண்  இருவரும்
வேலைக்குசென்றால் தான் ஓரளவிற்கு நல்ல வாழ்க்கை வாழமுடியும் என்ற வாதம் முற்றிலும் தவறானது. இன்றைய சூழ்நிலையில் நல்ல ஒழுக்க உள்ள குழந்தைகள்தான் நம் நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவை. அதை நாம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும் அதற்காக நம் நாட்டில் அன்பிற்கு எடுத்துக்காட்டாக கூறகூடிய பெண்கள்தான் ஆரம்பித்து வைக்க வேண்டும்.இதற்க்கு ஒருவீட்டில் ஆண் வேலைக்கு செல்லும்பட்சத்தில் பெண்கள் வீட்டில் இருத்து குழந்தைகளை நல்ல ஆரோகியமாகவும்,கட்டுபட்டுடனும் ஒழுக்கமுடனும் வளர்க்கவேண்டிய முழுபொறுப்பு  அவர்களுக்கு இருக்கிறது எனவே பணம் என்னும் ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நமக்கும் நமுடைய நாட்டிற்கும் நல்லபிள்ளைகளை தரவேண்டியது ஒவ்வரு பெண்களுடைய கடமை.ஏன் இந்த கடமையை ஆண்கள் செய்ய கூடாத என்று சிலர் கேட்கிறார்கள். ஒரு குடும்பத்தில், ஒருவர் குடும்பத்தையும்,குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும் மற்றவர் வேலைக்கு சென்று பொருள் ஈட்டுவதில் கவனம் செலுத்தவேண்டும். குடும்பத்தையும் குழந்தையையும் கவனிக்கும் அந்த ஒருவர் பெண்களாக இருந்தால் நன்று.அது எல்லாவிதமான நன்மையையும் விளைவிக்கும். கணவன் மனைவி இருவரில்  ஒருவர் மட்டுமே வேலைக்கு செல்வது வேலை இல்ல திண்டடத்தை ஓரளவிற்கு பூர்த்திசெய்யும் நல்ல ஆரோகியமான ஒழுக்கமான நாடு ஒருவாவதர்க்கும் வழிவகை செய்யும்.அவசியம் இருந்தால் ஒழிய பெண்கள் குடும்பத்தை பார்ப்பது நன்று

»

ஏமாற்று.................. ஏமாறு ...............

இப்போது நாட்டில் அனைவருமே ஏமாற்றுபவர்களாகத்தான் இருக்கிறார்கள்.ஏமாற்றும் வித்தை  அனைவரிடமும் இருப்பதால் அனைவருமே ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம். சதவித அடிப்பையில் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கிறது எதாவது ஒருவிசயத்தில் நாம் பிறரை ஏமாற்றுகிறோம், எதாவது ஒருவிசத்தில் பிறரிடம் நாம் ஏமாறுகிறோம்.இந்த விகிதாசாரம் ஒவ்வருவருக்கும் வேறுபடுகிறது சிலர் அதிகமாக  ஏமாறுகிறார்கள் சிலர் அதிகமாக ஏமாற்றுகிறார்கள். நாம் ஏமாறும் போது மட்டும் நமக்கு கோபம் சொல்லமுடியாத அளவிற்கு வருகிறது அதேநேரம் நாம் ஏமாற்றும் போது அதற்கானகறன காரியங்களை தேடுகிறது, சரிஎன்று நம் மனம் நம்மிடம் சமாதனம் சொல்லுகிறது.எதிலும் ஏமாற்று எனக்கும் ஏமாற்று என்று ஆகிவிட்டது. சாதரணமாக ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கினால் கூட இரண்டு ரூபாய் அதிகமாக கொடுத்து தெரிந்தே ஏமாறுகிறோம் அதற்காக எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமலே இருக்கிறோம்.நாம் வாங்கும்,விற்கும்  உணவுவகையிலாவது குறைந்தபட்சம் ஏமாற்றுவதை குறைப்பதற்கான சுய ஒழுக்க கட்டுப்பாடு இருக்கவேண்டாமா. சுய ஒழுக்க கட்டுப்பாடு இல்லாமல் நாட்டில் எந்தவிதமான மாற்றத்தையும் கொடுவரமுடியது.   

»

ஆபத்தான E-ரீசார்ஜ் வேண்டம் இனிமேல் அடக்கமான top-up அட்டையே போதும்

செல் பேசிகளுக்கு இப்போது e- ரீசார்ஜ் மூலம்தான் அனைவருமே நம் கட்டணங்களை மறு மதிப்பீட்டு கொள்கிறோம் இதில் ஒரு ஆபத்து மறைத்திருக்கிறது .e- ரீசார்ஜ் செய்யும் போது நம்முடைய என்னை ஒரு புத்தகத்திலே எழுத சொல்லுகிறார்கள் அதை பார்த்து நம்முடைய கணக்கிற்கு நாம் சொல்லும் தொகையை நம் எண்ணுக்கு அளிக்கிறார்கள். பெண்கள் e-ரீசார்ஜ் செய்யும் போதும் இதே முறைதான். இதைப்போல் e- ரீசார்ஜ் செய்ய வரும் பெண்களின் எங்களை தனியாக எடுத்து அவர்களுக்கு போன்செய்து தொல்லை கொடுப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது. இரவு வேளைகளில் அழைப்பது போன்ற செயல்களால் கணவனுக்கு மனைவிமேல் தவறான எங்ஙனம் வர வாய்ப்பிருக்கிறது. நமது செல்பேசி என்னை நாமே தெரியாத ஒரு நபருக்கு கொடுக்கும் இந்த e- ரீசார்ஜ் முறையை கைவிட்டு. top-up அட்டையை பயன்படுத்துவது சிறந்தது, பாதுகாப்பானது. இந்த கலியுகத்தில் நாமே ஏன் வினையை விலைகொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்.
»

வாக்குவங்கியும் தேர்தல் தோல்வியும்

மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தாகி விட்டது.தோல்வி அடைத்துவிட்ட அதிமுக படுதோல்வி அடைத்த பாமக மற்றும் மதிமுக அனைத்தும் தங்களுடைய வெற்றியை எதிரணியினர் தட்டிப்பரித்துவிடதாகவே நினைத்து அறிக்கைகளை விட்டுகொண்டிருக்கிறார்கள்.பணம் தான் இந்த தேர்தலை நிர்னைத்தது என்று குறை கூரிகொண்டிருக்கிறார்கள் பணம் மட்டுமே தேர்தலின் வெற்றி, தோல்வியை நிர்னைத்துவிட முடியுமா? நிச்சயமாய் முடியாது, இது ஒப்புக்கொள்ள முடியாத உண்மை பணம் வாங்கிய அனைவருமே பணம் கொடுத்தவருக்குதான் ஒட்டு போடவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை இதற்க்கு தேமுதிக,கொங்கு மண்டலத்தின் புதிய வரவு , தென்காசியில் புதியதமிழகம் கிருஷ்ணாசாமி வாங்கிய ஓட்டுக்கள் சாட்சியாக நிற்கின்றன மற்றும் மிகப்பெரிய பணக்கார வேட்ப்பாளர் பிரபுவினுடைய தோல்வி, வெற்றிக்கு பணம் பட்டுமே போதாது என்பதை நிருபிக்கின்றன. மேலேட்டமாக பார்த்தால் அதிமுக கூட்டணி பலம் பொருந்திய அணியாக தோன்றியது என்பது உண்மை உள்ளோட்டமாக பார்த்தால் அதிமுகவின் எம்ஜீஆர் வாக்கு வங்கியில் பிளவுபட்டு பிரிந்து கிடக்கிறது இதில் தேமுதிகாவின் பக்கம் ஒதுங்கியவை அதிகம்,அதைப்போல் பாமகவின் வாக்கு வங்கி என்பது திருமாவளவனையும் உள்ளடைக்கியதாகவே இருக்கின்றது இம்முறை திருமாவளவன் வெளியேற , தேமுதிக விளையாட பாமக தன்னுடைய சுயருபத்தை கட்டியது என்பதுதான் உண்மை. இதை புரிந்து கொண்டு செயல்படுவதுதான் வரும் தேர்தலில் நன்மையை தரும். பணம் கொடுத்து வெற்றிபெற்றார்கள் , மின்னணு வாக்குஎந்திரத்தில் தில்லு முல்லு செய்துவிட்டார்கள் என்று நமக்கு நாமே சொல்லிகொண்டால் வரும் தேர்தலிலும் பெரும் ஏமாற்றமே மிஞ்சும் .
»

இந்தியா செய்த தமிழ் துரோகம்

ஈழத் தமிழர் விவகாரத்தில் டென்மார்கிற்கு இருக்கின்ற அக்கறையில் சிறிது கூட இந்தியாவுக்கு இல்லை" என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' பிரபல வார இதழிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
"ஈழத் தமிழர்களுக்கு எதிரான வேலையை 1948 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது. அப்போது அங்கு தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்ட்டபோது, 'இலங்கை உள்நாட்டு பிரச்னையில் இந்தியா தலையிடாது' என்று நேரு ஒதுங்கிக் கொண்டார்.
சிறிமாவோவின் ஆட்சியில் தமிழர்கள் இன்னல்பட்டபோது அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோவுடன் ஒப்பந்தம் செய்த லால்பகதூர் சாஸ்திரி இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வழி செய்தார்.
ஈழத் தமிழர்களுக்காக இந்திரா காந்தி அக்கறை காட்டியதும், ராஜீவ் காந்தி நடவடிக்கை எடுக்க முனைந்ததும் மறுக்கமுடியாத உண்மைகள். இந்திரா காந்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக புலிகளை ஆதரித்தது உண்மை. ராஜீவ் காந்தி புலிகளை வற்புறுத்தி ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனவுடன் உருவாக்கினார். அந்த ஒப்பந்தம் இலங்கை அரசிற்கும் ஈழத் தமிழருக்கும் இடையில்தான் நடந்து இருக்கவேண்டும். அதிலேயும் தவறு.போனவையெல்லாம் போகட்டும்.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, ஐந்து மாதங்கள் தமிழ் இனத்தையே முற்றாக ஒழிப்பது என ராஜபக்ச அரசு தன் இராணுவத்தைக் கொண்டு ஒரு ஈவு இரக்கமற்ற போரை நடத்தியபோது மன்மோகன் சிங்கின் இந்திய அரசு அதற்குத் துணை நின்றது. இது எந்த வகையில் நியாயம்?
விடுதலைப் புலிகளுக்காகவோ, பிரபாகரனுக்காகவோ இந்திய அரசு போராடியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு அனைத்துலக போர் விதிகளும் மீறப்பட்டு, அரக்கத்தனமாக ஈழத் தமிழர்களை முற்றாக அழிக்க ராஜபக்ச முனைந்தபோது சோனியா காந்தியோ மன்மோகன் சிங்கோ ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசவில்லை. ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு போரை நிறுத்த வழி செய்யவில்லை.
ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள உகாண்டாவில் வணிகம் செய்யச் சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை நடந்த அடுத்த கணமே இந்திய அரசு துடித்தது. பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசில் வாழும் சீக்கியர்கள் தலைப்பாகைகள் அணியக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் அந்த ஆணையை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
இன்று வியன்னாவில் சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக செய்தி வந்து சேர்ந்த அந்தக் கணமே பஞ்சாப் எரியத் தொடங்கியது. ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்கள் போராட்டக் களமாக மாறின. உடனே பிரதமர் மன்மோகன் சிங் அமைதி காக்க வேண்டுமென்று சீக்கியர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கிறார். புதிதாக வெளிவிவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாக ஒஸ்திரியாவிலிருக்கும் இந்தியத் தூதரகத்தோடு தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை நடத்துகிறார்.
வியன்னாவில் ஒரு உயிர் பறிக்கப்பட்டது. 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அதற்கே மத்திய அரசு துடிதுடிக்கிறது.
ஆனால் தமிழகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இலங்கைத் தீவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உறுப்பு இழந்தார்கள். உறவு இழந்தார்கள். ஈழப் பகுதியே மயானம் ஆகிவிட்டது. எங்கும் தமிழர்களின் பிணக்குவியல். திசையெல்லாம் தமிழர்களின் மரண ஓலம். ஐக்கிய நாடுகளுடைய செயலாளர் பான் கீ மூன் நேரில் சென்று இலங்கை நிலவரங்களைக் கண்டு நெஞ்சம் துடித்தார். இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இன்றி மரணத்தோடு போராடுகிற நிலையையும், வன்னிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதையும் கருத்தில் கொண்டு இலங்கை அரசு போர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் மனித உரிமை அமைப்பின் சிறப்பு விவாதத்தில் கொண்டு வர வேண்டுமென்று பிரித்தானியாவும், டென்மார்க்கும் செயல்பட்டன. இந்த சிறப்பு விவாதத்தைத் தடுப்பதற்காக சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும், கியூபாவும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்கிறது இந்தியா. என்ன அநியாயம்?
நமது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காமல், ராஜபக்ச அரசுக்குத் துதி பாடுகிறது காங்கிரஸ் அரசு. மனித உரிமை சபையில் சிறப்பு விவாதம் நடக்க வேண்டுமென்றால் 16 நாடுகளின் ஆதரவு தேவை. இந்த ஆதரவைத் திரட்டுவதற்கு சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும் மனசாட்சி ஒன்று இருந்தால் காங்கிரஸ்காரர்களுக்கு தமிழ் இனத்தின் மீது பற்றும் பாசமும் இருந்திருந்தால் இந்த ஆதரவை இந்தியா முன்னின்று திரட்டியிருக்கவேண்டும்.
ஆனால், எங்கேயோ இருக்கும் டென்மார்க் தன் சொந்த முயற்சியால் பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டி சிறப்பு விவாதம் நடப்பதற்கு வழிவகுத்து இருக்கிறது. இதைத் தடுக்க இந்தியா எல்லா வகையிலும் பாகிஸ்தானோடு சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகிறது.
பெற்ற தாயாக நினைத்து காங்கிரஸை தமிழர்கள் நேசிக்கின்றனர். ஆனால் மாற்றான் தாயாக தமிழர்களை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது. தமிழக மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்'' என்று ஆவேசமாய் தெரிவித்தார் தமிழருவி மணியன்.

»

வைகோ ,மதிமுக, தமிழக வாக்காளர்கள்

வை.கோபாலசாமி என திமுக வில் அறியப்பட்ட வைகோ.திமுகவை விட்டு விலகி தனி இயக்கம் கண்டவுடன் இளைஞர் மத்தியில் ஒரு பரபரப்பும் தமிழகத்தில் ஒரு எதிர் பார்ப்பும் உருவானது இது மறுக்க முடியாத உண்மை. அவர் நடத்திய மகாநாடு தமிழ் நாட்டின் இருபெரும் கட்சிகளுக்குமே ஒருவித அச்சத்தையும் தன் தொண்டைகளை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் உண்டு பண்ணியது . அதை சரியாக பயன்படுத்தாமல் காற்றாட்டு வெள்ளம் போல் புறப்பட்டு நல்ல ஒரு மாற்று இயக்கமாக வளர்த்திருக்க வேண்டிய மதிமுக சென்று சேர்த்த இடம் அதிமுக. இதை அப்போதே யாரும் ரசிக்க வில்லை. அங்கே துவங்கியது மதிமுகவின் சரிவு பாதை. அது இன்றுவரை தொடர்கிறது, மற்ற அரசியல் கட்சிகளுக்கெல்லாம் சவால்விடுகிற இயக்கமாக வளர்த்திருக்க வேண்டிய மதிமுக இன்றைய நிலையில் தன்மானத்தை காப்பற்றியகவேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது . தமிழகத்தில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் தமிழகம் எதிர்கொள்ளும் தொலைநோக்கு பிரச்சனைகள் வரை தெரிந்த ஓரிரு தலைவர்களுள் வைகோவும் ஒருவர். தமிழக மக்கள் எதிர் பார்க்கும் நல்ல தலைவர்களின் பட்டியலில் வைகோவிற்க்கும் இடம் இருக்கின்றது. அரசியல் பற்றியே தெரியாத கத்துக்குட்டிகள் எல்லாம் இன்று சவால் விடுகின்றன.எந்த தொகுதியில் என்ன மக்கள் பிரச்சனையை இருக்கிறது அதை எவ்வாறு கையாளவேண்டும் என்ற தெரியாமல் யாராவது எழுதிகொடுத்ததை மேடைகளிலே பேசி என்னால் மட்டுமே தீர்க்க முடியும் என்று சவால்விடும் அளவிற்கு வளர்த்துவிட்ட இந்தகாலத்தில் .அரசியல் அறிவில் யாருக்கும் சற்றும் சளைக்காத வைகோ தொடங்கிய மதிமுக , அரசியலிலே முக்கிய திருப்பு முனையாக அறியப்பட்ட மதிமுக இன்று அடுத்த கட்ட முடிவிற்கு கூட காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் மதிமுக எடுக்க கூடிய முடிவு வருகின்ற சட்டசபை தேர்தலுக்கும் , மதிமுக எதிர்காலத்திற்கும் மிக மிக முக்கியமானது இதை மதிமுக பொது செயலாளர்,கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எவ்வாறு கையாளுகிறார்களோ அதை பின்னோற்றிதான் மதிமுக வின் எதிகாலம் இருக்கும்.தனிமனித எதிர்ப்பை கைவிட்டு மதிமுக எதிர் காலத்தை முன்னிறுத்தி முடிவை அறியப்பட்டால் எதிர் காலத்தில் மதிமுக தவிர்த்து தேர்தலை சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகும், காலம் கனியுமாயின் ஆழுமைதன்மையுடைய அளும்கட்சியாக வரும், மதிமுக விற்கும் அதன் பொது செயலாளர்க்கும் அந்த தகுதி இம்மி அளவும் குறைவில்லை முன்போலவே முடிவுகள் அறியப்பட்டால் மதிமுக பத்தோடு ஒன்றாக ஒரு அரசியல் கட்சியாக வலம் வரும் அதில் யாருக்கும் சந்தேகமில்லை.
»

லஞ்சம் என்னும் விபச்சாரம்

லஞ்சம் என்னும் வார்த்தை இப்போது எல்லோரிடமும் புகுந்து புறப்பட்டு கொண்டிருக்கிறது.லஞ்சம் வாங்குவது ஒரு அவமானமாக எந்த பணியாளர்களும் கருதுவதில்லை. யார் எப்படி போனால் என்ன தனக்கு ஏதாவது ஒருவழியில் வசதியான வாழ்கை வந்தால் மகிழ்ச்சி என்ற எண்ணத்தில் தான் இவர்கள் சிறிதேனும் கூசாமல்,வெட்கப்படாமல் ,மனசாட்சிக்கு மதிப்பளிக்காமல் தொடர்த்து லஞ்சத்தில் திளைக்கிறார்கள்.தன்னை தானே வருத்திக்கொண்டு பணம் சம்பாதிக்கும் விபச்சாரி இவர்களை விட எவ்வளவோ மேல்.அவள் தன் கற்ப்பை,மாண்பை விலை பேசுகிறாள .இவர்கள் தாய் நாட்டை கற்ப்பை விலை பேசுகிறார்கள்.வெட்கம், மானம்,பண்பு,மாண்பு,கற்ப்பு,இவற்றை விற்று செய்யும் தொழில் விபச்சாரம் என்னும் போது ,லஞ்சம் வாக்குபவர்களும் விபசாரர்கள்தான்.
»

மேதாவி பிட்சைகாரர்கள்

பிட்சை எடுப்பது தவறா ? இந்த கேள்வி என்னையே நான் பலமுறை கேட்டுகொண்டிருக்கிறேன்,இதன் நீட்சியாக சென்ற வாரம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி பயணமாகி கொண்டிருந்தேன் அப்போது பிட்சை கேட்டு ஒரு முதியவர் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்தார் என் எதிரில் அமர்ந்தவர் ஒரு ரூபாய் நாணயத்தை முதியவரின் கைகளில் கொடுத்தார்.இதை பார்த்த அவர் அருகில் இருந்தவர்,அவரின் நண்பர் என்று நினைக்கின்றேன் அவரை வாங்கு ,வாங்கு என்று திட்டி தீர்த்து விட்டார் எதிரில் இருந்தவரை பார்க்க பாவமாக இருந்தது, ஏன் பிட்சை கொடுப்பது என்ன உலகமாகாதவறா! நம்மில் யார் தான் பிட்சை எடுக்கவில்லை கடனில் வாங்கிய பொருள்களுக்கு தவணை தியதி அன்று பணம் கட்டமுடியவில்லை என்றால் நான்கு நாட்களுக்குள் செலுத்திவிடுகிறேன் என்று காலத்தையே யாசகமாக கேட்கவில்லையா அந்த நான்கு நாட்களும் பிட்சைதானே! தகுதியை மீறி பதவி உயர்விற்காக மேலதிகாரியிடம் பரிந்துரைக்க சொல்லுவதும் பரிந்துரையை பெற்றுக்கொள்வதும் பிட்சைதானே ? யாசகமாக பணம் கேட்டால் ஆயிரம் விளக்கங்களும் வியக்கியானங்களும் ஆனால் அதிகாரத்துடன் கேட்பவர்களுக்கு எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல் கொடுத்து விடுவார்கள் பிட்சை எடுப்பதை விருப்பி யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தான் சம்பாதித்த காலத்தில் நம்பி கெட்டவர்கள் நயவஞ்சக கூடத்தில் வாழ்கையை தொலைத்தவர்கள் இன்று தெருவில் தன்னால் உழைப்பதற்கும் உடம்பில் தெம்பும் இல்லை ஆனால் வயிறு இருக்கிறதே என்ன செய்ய முடியும் யாசகம் தான் ஒரே வழி முடித்தால் உதவி இல்லைஎன்றால் விலகி நிற்பதேமேல்! தங்களின் மேதாவிதனமான வார்த்தைகளால் புன்னகிபோன மனதை ரணமாக்காதீர்கள் தெருவுக்கு வந்தவர்களுக்குள்ளும் மனமிருக்கும் புரிந்து கொள்ளுங்கள்
»
நாடாளுமன்றம்ன்றத்திர்க்கான தேர்தல் அறிவிக்க பட்டுவிட்டது, இனிமேல் ஆரம்பமாகிவிடும் கூட்டணி பற்றிய பேச்சிவார்த்தைகள், தொகுதி பங்கீடு என்று அரசியல் கட்சிகள் தங்களுடைய பணியை சுறுசுறுப்புடன் தொடக்கி விடுவார்கள். அது மட்டுமா அரசியல் சார அன்பர்கள் கூட்டணியை பற்றி செய்தி தாள்களில் அலசுவார்கள். பழங்காலத்து அரசியல் உதாரணத்துடன் விளக்கி செய்திகள் வெளிவரும் வார, மாத, வாரமிருமுறை இதழ்களில் அதனுடனே கருத்து கணிப்பும் பக்கங்களை நிரப்பும். வாக்காளர்களின் பாடுதான் படுதிண்டட்டம் யாருடையா கருத்தைக்கொண்டு நாம் வாக்களிப்பது, எதை பின்பற்றி யாரை தேர்தெடுப்பது என்று, இம்முறை இலங்கை பிரச்சனையை மையமாக வைத்து தேர்தல் பிரசாரம் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும் இதில் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டியது திருவள்ளுவரின் குறள் "எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் பெய்பொருள் காண்பது அறிவு" இதை பின்பற்றி வாக்களித்தல் நலம் -நன்றி
»

பாவப்பட்ட தமிழன்

1 கருத்துரைகள்
சமீபத்தில் பெங்களூருவில் நடந்த சம்பவம் ஒன்று தமிழன் எந்தளவிற்கு பாதுகாப்பின்றி இருக்கிறன் என்பதை விளக்கும். இலங்கையை சேர்த்தவர்கள் படிப்பதற்காக பெங்களூருவிற்கு வந்த சிங்கள மாணவர்கள் தங்களுடைய சுதந்திர தினத்தை ஒரு அரங்கில் கொண்டாடுவதை தெரிந்து போராட தயாரானார்கள் பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள் இதை அறிந்து சிங்களர்கள் கொண்டாடும் சுதந்திரதின கொண்டாட்ட அரங்கிற்கு கர்நாடக அரசு பாதுகாப்பு கொடுத்தார்கள் அதையும் மீறி அரங்கில் நுழைத்த தமிழர்கள் இங்கே பாதுகாப்பாக உங்களின் சுதந்திரதினத்தை கொண்டாடுகின்றீர்களே உங்களது நாட்டில் எங்களுடைய உறவிற்காக குரல்கொடுக்க கூடாத என்ற கேள்வியை கேட்ட உடன் கேள்விகேட்ட தமிழனை சிங்கள மாணவர்கள் கண்மண் தெரியாமல் தாக்கி இருக்கிறார்கள்.இது வன்மையாக கண்டிக்கமட்டுமிலாமல் நடவடிக்கை எடுக்கவேண்டிய விஷயம் தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள் இல்லைஎன்றல் நாளை நம் நாட்டிலேயே நாம் அடிமையகிவிடவேண்டிய சூழ்நிலை உருவாகும்.இதை சரியாக புரிந்து கொண்டு ஒவொரு தமிழனும் போராடும் மனத்தை பெறவேண்டும்.
»