கடவுள் இன்லையா,இருக்கிறாரா.............................!

கடவுள்  இன்லையா,இருக்கிறாரா என்பது மிகப்பெரிய விவாதத்திற்கு உரிய ஒரு விஷயம்.பெரிய பெரிய ஞானிகளும், தத்துவமேதைகளும் கடவுள்இருக்கிறார் அது இயற்கையாகவோ,எல்லாவற்றிற்கும் மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்று வேறு வேறு கோணங்களில் நம்மை சிந்திக்க சொல்லுகிறார்கள். மிகப்பெரிய விஞ்ஞானிகள் அனைத்தையும் தாண்டிய ஒரு சக்தி இருபதாக சொல்லுகிறார்கள். பொது ஜனங்களின் மத்தியில் கடவுள் இருக்கிறார், இல்லை என்ற விவாதமும் , இல்லவே இல்லை என்று உறுதியாக ஒருசாராரும் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.பொதுவாக மக்கள் மத்தியிலே  அவரவருக்கு சாதகமாக நடைபெறும் சம்பவங்களுக்கு கடவுளின் அனுக்கிரகமாகவே நினைகிறார்கள்,எதிர் மறை சம்பவங்கள் நிகழ்த்து அது துன்பத்தை தரும் சமயம் கடவுள் இருக்கிறாரா என்ற சத்தேகத்தை எழுப்புகிறார்கள்,இவாறு மனிதன் இல்லை என்றும், இருக்கிறாரென்றும் மாறி மாறி தன்னுடைய என்னத்தை வெளிப்படுதிகொண்டே கடவுளின் பக்கமே  நிற்கிறார்கள் காரணம் தன்னுடைய வாழ்கையில் ஏதேனும் பெரிய பாதகம் நிகழ்துவிடுமோ என்கிற எண்ணம்.தன்னை முழுமையாக கடவுளை நம்பி தன்னுடைய வாழ்கையை ஒப்டைதவர்கள் மிக மிக மிக குறைவாகவே இருக்கிறார்கள், இன்றைய சூழ்நிலையில் அப்படி பட்ட மனிதரை பார்ப்பது என்பது மிக அரிது . இல்லவே இல்லை என்வபவர்கள் முழுமையாக இல்லை என்று சொல்லுவதற்கு எந்த முகாந்திரத்தையும் அவர்கள் சுட்டி கொடுப்பது இல்லை. இந்த போலி சாமியார்கள்தான் அவர்களின் இலக்கு அவர்களை வைத்து கொண்டு கடவுளை எடை போடுகிறார்கள்.அறிவியலர்கள் நாங்கள் கடவுளின் செயல்களை நாங்கள் நெருங்கி விட்டதாக சொல்லுகிறார்கள்.மனிதன் கடவுளை நெருங்கும் சம்பவம் நிகழ்த்து விடாதா என்று நாமில் எதிர்பர்த்டு கொண்டிருக்கிறோம். ஆனால் சமய ஆர்வலர்கள் இன்னமும் கடவுளின் பாதையில் ஒரு சதவிகிதமகூட பணிக்கவில்லை என்று ஒரு புறம் விவாதிக்கிறார்கள்.மனித உடலில் நிகழும் மாற்றங்களை. அறிவியல் நிகழ்த்தி இருக்கிறதா, "நாம் உண்ணும் உணவு, வெளிவரும் கழிவு" இது எவ்வாறு நடை பெறுகிறது என்பது நமக்கு தெரியும். இதைபோல் ஒரு அறிவியல் துணை கொண்ட ஒரு சாதனம் நிகழ்த்துமா என்பது மிகப்பெரிய கேள்வி. இருக்கிறது என்பவருக்கு "இருக்கிறது" என்பதே கடவுள் .... இல்லை என்பவருக்கு "இல்லை " என்பதே  கடவுள்.கடவுள் இருக்கிறது என்று சொல்லுவதிலும் "போலிகள்"இருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களிடமும் "போலிகள்" இருக்கிறார்கள்.கடவுள் நம்மையும் கடந்து சென்றிருக்கலாம்,நம்மை கடக்கும் வரை நாம் உணருவதில்லை